Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் பிறப்பு—எங்கே? எப்பொழுது?

இயேசுவின் பிறப்பு—எங்கே? எப்பொழுது?

அதிகாரம் 5

இயேசுவின் பிறப்பு—எங்கே? எப்பொழுது?

ரோம பேரரசின் பேரரசரான அகுஸ்துராயன், பதிவு செய்வதற்காக ஒவ்வொருவரும் தன் பிறப்பிடத்திற்கு திரும்பி செல்ல வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். எனவே யோசேப்பு தன்னுடைய பிறப்பிடமாகிய பெத்லகேம் நகரத்துக்குப் பயணம் செய்கிறான்.

பதிவு செய்வதற்கு அநேகர் பெத்லகேமில் இருக்கின்றனர். யோசேப்பும் மரியாளும் தங்குவதற்கு ஒரு தொழுவம் மட்டுமே இருக்கிறது. கழுதைகளும் மற்ற பிராணிகளும் இருக்கும் இந்த இடத்தில்தானே இயேசு பிறக்கிறார். மரியாள் அவரை துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்துகிறாள், விலங்கினங்களுக்கு சாப்பாடு வைக்கும் இடமாக அது இருக்கிறது.

நிச்சயமாக கடவுளுடைய வழிநடத்துதலினால் தானே, அகுஸ்துராயன் பதிவு செய்ய வேண்டுமென்ற தன்னுடைய சட்டத்தை பிறப்பித்தான். இயேசு பெத்லகேமில் பிறப்பதை இது கூடிய காரியமாக்கிற்று, இந்த நகரம் வெகு காலங்களுக்கு முன்பே வாக்குப்பண்ணப்பட்ட அரசரின் பிறப்பிடம் என்று வேதவசனங்கள் முன்னறிவித்தது.

இது என்னே ஒரு முக்கியமான இரவு! வெளியே வயல் வெளிகளில், மேய்ப்பர்கள் கூட்டத்தைச் சுற்றி ஒரு பிரகாசமான வெளிச்சம் மின்னுகிறது. அது யெகோவாவின் மகிமை! யெகோவாவின் தூதன் அவர்களிடம் சொல்கிறார்: “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.” திடீரென்று அநேக தேவதூதர்கள் தோன்றி: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று பாடுகின்றனர்.

தேவதூதர்கள் சென்றவுடன், மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள்: “நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் [யெகோவாவால், NW] நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள்.” அவர்கள் வேகமாக சென்று தேவதூதன் சொன்னவிதமாகவே இயேசுவை பார்க்கிறார்கள். மேய்ப்பர்கள் தேவதூதன் கூறினதை எடுத்துரைத்த போது, அதைக் குறித்துக் கேட்ட அனைவரும் வியப்படைகின்றனர். மரியாள் அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து போற்றுகிறாள்.

இயேசு டிசம்பர் 25-ம் தேதி பிறந்தார் என்று அநேகர் நம்புகிறார்கள். ஆனால் பெத்லகேமில் டிசம்பர் மாதம் மழையும் குளிருமான காலமாக இருக்கிறது. வருடத்தின் அந்தக் காலப் பகுதியில் இரவில் மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளோடு வயல் வெளிகளில் இருக்க மாட்டார்கள். மேலும் ரோம இராயன், ஏற்கெனவே தனக்கு விரோதமாக எழும்பின ஜனங்களை அதிக கடுமையான பனி காலத்தின் போது பதிவு செய்யும்படி கேட்டிருக்கமாட்டான். இயேசு அந்த வருடத்தின் வசந்த கால ஆரம்பத்தில் பிறந்திருக்க வேண்டும். லூக்கா 2:1-20; மீகா 5:2.

▪ யோசேப்பும் மரியாளும் ஏன் பெத்லகேமுக்கு பயணம் செய்கிறார்கள்?

▪ இயேசு பிறந்த அந்த இரவன்று என்ன ஆச்சரியமான காரியம் நிகழ்கிறது?

▪ இயேசு டிசம்பர் 25-ம் தேதி பிறக்கவில்லையென்று நமக்கு எப்படி தெரியும்?