Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் முதல் அற்புதம்

இயேசுவின் முதல் அற்புதம்

அதிகாரம் 15

இயேசுவின் முதல் அற்புதம்

அந்திரேயா, பேதுரு, யோவான், பிலிப்பு, நாத்தான்வேல் ஆகியோரும் ஒருவேளை யாக்கோபும் இயேசுவின் முதல் சீஷர்களாகி ஓரிரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும். இவர்கள் தங்கள் சொந்த ஊரான கலிலேயா மாவட்டத்திலிருக்கும் தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மலைகளில் அமைந்திருந்த நாத்தான்வேலின் சொந்த ஊராகிய கானா ஊருக்கு வந்து சேர வேண்டியதாயிருக்கிறது, இது இயேசு தாமே வளர்ந்து வந்த நாசரேத்துக்கு அருகாமையில் இருக்கிறது. இவர்கள் கானாவில் ஒரு விவாக விருந்துக்கு அழைப்பை பெற்றிருக்கின்றனர்.

இயேசுவின் தாயாருங்கூட விவாகத்திற்கு வந்திருக்கிறாள். விவாகமாக போகிறவர்களின் குடும்பத்தாரின் ஒரு சிநேகிதியாக, வந்திருக்கும் அநேக விருந்தாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மரியாள் ஈடுபட்டிருக்கிறாள். எனவே ஏற்பட்ட ஒரு குறைபாட்டை அவள் உடனடியாக கவனித்து இயேசுவிடம்: “அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை,” என்று அறிக்கை செய்கிறாள்.

திராட்சரச குறைபாட்டைக் குறித்து இயேசு ஏதாவது செய்ய வேண்டும் என்று மரியாள் யோசனை கூறியபோது, இயேசு முதலில் தயங்கினார். “எனக்கும் உனக்கும் என்ன?” என்று கேட்கிறார். கடவுளுடைய நியமிக்கப்பட்ட ராஜாவாக, தம்முடைய செயல்கள் தம்முடைய குடும்பத்தினராலோ அல்லது நண்பர்களாலோ வழிநடத்தப்படுவதற்கில்லை. எனவே மரியாள் ஞானத்தோடு அந்தக் காரியத்தை தன்னுடைய மகனின் கைகளில் விட்டுவிடுகிறாள், பணிவிடை செய்பவர்களை நோக்கி வெறுமென: “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்,” என்கிறாள்.

நாற்பதுக்கும் மேற்பட்ட லிட்டர்கள் தண்ணீரை கொள்ளும் ஆறு பெரிய தண்ணீர் கல் ஜாடிகள் இருந்தன. பணிவிடை செய்பவர்களை நோக்கி இயேசு: “ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள்” என்று கட்டளையிடுகிறார். பணிவிடைகாரர் தண்ணீரை மேல் வரை நிரப்புகின்றனர். பிறகு இயேசு அவர்களிடம்: “இப்பொழுது மொண்டு, பந்தி விசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள்,” என்கிறார்.

பந்திவிசாரிப்புக்காரன் இந்தத் திராட்சரசத்தின் நேர்த்தியான சுவையைப் பார்த்து ஆச்சரியப்படுகிறான், அது அற்புதமான விதத்தில் செய்யப்பட்டது என்பதை அவன் அறியவில்லை. மணவாளனை அழைத்து அவன் சொல்கிறான்: “எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்த பின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே.”

இதுதானே இயேசுவின் முதல் அற்புதம். இதைப் பார்த்த அவருடைய புதிய சீஷர்களின் விசுவாசம் பலப்படுகிறது. அதற்கு பின்பு அவர்கள் அவருடைய தாயாரோடும் ஒன்றுவிட்ட சகோதரரோடும் கலிலேயா கடலுக்கு அருகேயிருக்கும் கப்பர்நகூமுக்குப் பிரயாணம் செய்கின்றனர். யோவான் 2:1-12.

▪ இயேசுவின் ஊழியத்தின் எச்சமயத்தில் கானா ஊர் கலியாணம் நடைபெறுகிறது?

▪ இயேசு ஏன் தம்முடைய தாயாரின் ஆலோசனையை மறுக்கிறார்?

▪ இயேசு என்ன அற்புதத்தை செய்கிறார்? இது மற்றவர்கள் மேல் என்ன பாதிப்பை உடையதாயிருக்கிறது?