Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு ஆயிரக்கணக்கானோரை அற்புதமாகப் போஷிக்கிறா

இயேசு ஆயிரக்கணக்கானோரை அற்புதமாகப் போஷிக்கிறா

அதிகாரம் 52

இயேசு ஆயிரக்கணக்கானோரை அற்புதமாகப் போஷிக்கிறா

கலிலேயா முழுவதுமாக பிரசங்கம் செய்வதற்காக மேற்கொண்டிருந்த குறிப்பிடத்தக்க ஒரு பிரயாணத்தை 12 அப்போஸ்தலர்கள் அனுபவித்து மகிழ்ந்திருந்தார்கள். இப்பொழுது, யோவான் தூக்கிலிடப்பட்டப் பின்பு விரைவிலேயே அவர்கள் இயேசுவினிடம் திரும்பி வந்து தங்களுக்குக் கிடைத்த ஆச்சரியமான அனுபவங்களை அவருக்கு அறிவிக்கிறார்கள். அவர்கள் களைப்பாயிருப்பதையும், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம் பண்ணுகிறதற்கும்கூட அவர்களுக்குச் சமயம் இல்லாதிருப்பதை கண்டு இயேசு சொல்கிறார்: ‘வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம்.’

ஒருவேளை அவர்கள் கப்பர்நகூமுக்கு அருகே, ஒரு படவில் ஏறி, பெத்சாயிதாவுக்கு அப்பால் ஒருவேளை யோர்தானுக்குக் கிழக்கே ஒதுக்குப் புறமான ஓர் இடத்தை நோக்கிச் செல்கிறார்கள். என்றபோதிலும் அநேக ஆட்கள் இவர்கள் புறப்பட்டுப் போவதைப் பார்த்துவிடுகிறார்கள், மற்றவர்கள் இதைப் பற்றி கேள்விப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் கரையோரமாக ஓடி அவர்களுக்கு முன்னால் அவ்விடத்திற்குப் போய் படவு வந்துசேரும்போது அவர்களைச் சந்திக்க அங்கே இருக்கிறார்கள்.

படவிலிருந்து இறங்கி, திரளான ஜனங்களைக் கண்டபோது, இயேசு அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால் அவர்கள் மேல் மனதுருகுகிறார். ஆகவே அவர் அவர்களில் வியாதியாயிருந்தவர்களை சொஸ்தமாக்கி அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்குகிறார்.

நேரம் வேகமாகக் கடந்துபோகிறது, இயேசுவின் சீஷர்கள் அவரிடத்துக்கு வந்து, “இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று; . . . இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும்” என்கிறார்கள்.

என்றபோதிலும் இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: “நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்” என்றார். பின்னர், இயேசு தாம் செய்யப்போவதை ஏற்கெனவே அறிந்திருந்தபடியால் பிலிப்பினிடமாக, “இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம்?” என்பதாக அவனை சோதிக்கும்படியாகக் கேட்கிறார்.

பிலிப்புவின் நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் நிலைமையைச் சமாளிப்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. ஏன், அங்கே 5,000 புருஷர்களும், பெண்களையும் பிள்ளைகளையும்கூடச் சேர்த்தால் 10,000-க்கும் அதிகமானவர்களாக அவர்கள் இருக்கக்கூடும்! “இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து (ஒரு பணம் என்பது அப்போது ஒரு நாளின் கூலியாகும்) அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே” என்று பிலிப்பு பதிலளிக்கிறான்.

ஒருவேளை இத்தனை அநேகம்பேரைப் போஷிப்பது கூடாதக் காரியம் என்பதைக் காட்டுவதற்காக அந்திரேயா தானாக முன்வந்து, “இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?” என்கிறான்.

அது, பொ.ச. 32-ன் பஸ்காவிற்குச் சற்று முன்னான வசந்தகாலமாக இருப்பதால் அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருக்கிறது. ஆகவே இயேசு அவர்களை ஐம்பதைம்பதுபேராகவும் நூறு நூறுபேராகவும் பந்தியிருக்கச் சொல்லும்படி தம்முடைய சீஷர்களிடம் சொல்கிறார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதிக்கிறார். பின்னர் அவர் அப்பங்களைப் பிட்கவும், மீன்களை பங்கிடவும் ஆரம்பிக்கிறார். இவைகளைத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுக்கிறார், அவர்கள் ஜனங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஆச்சரியமுண்டாகும் வகையில், எல்லாரும் திருப்தியுண்டாகும் வரையில் சாப்பிடுகிறார்கள்!

அதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொல்லுகிறார்: “ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள்.” அவ்விதமாகச் செய்கையில், அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே 12 கூடைகளை நிரப்புகிறார்கள்! மத்தேயு 14:13–21; மாற்கு 6:30–44; லூக்கா 9:10–17; யோவான் 6:1–13.

▪ இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு தனிமையான ஓரிடத்தைத் தேடுவதற்குக் காரணம் என்ன?

▪ இயேசு தம்முடைய சீஷர்களை எங்கே அழைத்துச் செல்கிறார்? இளைப்பாறுவதற்கான அவர்களுடைய தேவை ஏன் நிறைவேறவில்லை?

▪ வெகுநேரமாகிவிட்ட போது சீஷர்கள் என்ன செய்ய துரிதப்படுத்துகிறார்கள்? ஆனால் இயேசு எவ்விதமாக ஜனங்களை அக்கறையுடன் கவனிக்கிறார்?