Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்

எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்

எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்

எந்த மனிதனாவது எக்காலத்தில் வாழ்ந்தோரிலும் மிகப் பெரிய மனிதர் என்று கேள்விக்கிடமின்றி அழைக்கப்பட முடியுமா? ஒரு மனிதனின் மேன்மையை நீங்கள் எவ்வாறு அளவிடுகிறீர்கள்? அவனுடைய இராணுவத் திறமையைக் கொண்டா? அவனுடைய சரீர பலத்தைக் கொண்டா? அவனுடைய மன துணிச்சலைக் கொண்டா?

சரித்திர ஆசிரியன் H. G. வெல்ஸ், ஒரு மனிதனின் மேன்மை ‘பிற்காலத்தில் வளருவதற்காக அவர் விட்டுச் செல்வதைக் கொண்டும், மற்றவர்கள் புதிய ரீதியில் அவருக்குப் பிறகும்கூட, தொர்ந்து இருக்கக்கூடிய வீரியத்தோடு சிந்தனை செய்வதற்கு அவர் ஆரம்பித்து வைத்தாரா’ என்பதைக் கொண்டும் அளவிடப்படும் என்று சொன்னார். வெல்ஸ் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று உரிமைபாராட்டிக் கொள்ளாவிட்டாலும், “இப்பரீட்சையில் இயேசு முதலாவது நிற்கிறார்” என்று ஒப்புக்கொண்டார்.

மகா அலெக்சாந்தர், (தன்னுடைய சொந்த வாழ்நாட் காலத்திலேயே “மகா” என்றழைக்கப்பட்ட) சார்லிமேன், நெப்போலியன் போபார்ட் ஆகியோர் வல்லமை மிக்க ஆட்சியாளர்களாக இருந்தனர். தங்களுடைய வெல்லமுடியாத பிரசன்னத்தின் மூலம், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர்கள் மீது மிகப் பெரிய பாதிப்பை செலுத்தினர். என்றபோதிலும், நெப்போலியன் இவ்வாறு சொன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது: “காணக்கூடிய சரீர பிரசன்னம் இல்லாமலே இயேசு கிறிஸ்து தன் அடியார்கள் மீது செல்வாக்கு செலுத்தி கட்டுப்படுத்தியிருக்கிறார்.”

தமது ஆற்றல்வாய்ந்த போகங்களின் மூலமாகவும், அதற்கு இசைவாக தாம் வாழ்ந்த விதத்தின் மூலமாகவும், ஜனங்களின் வாழ்க்கையை இயேசு ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களாக பலமாக பாதித்திருக்கிறார். ஓர் எழுத்தாளர் பொருத்தமாகவே அதை பின்வருமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்: “அணிவகுத்துச் சென்ற எந்தப் படையும், கட்டப்பட்ட எந்தக் கப்பற்படையும், அமர்த்தப்பட்ட எந்தச் சட்ட மாமன்றமும், ஆட்சி செய்த எந்த அரசனும் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் வாழ்க்கையை இந்த அளவு பலமாக பாதிக்கவில்லை.”

சரித்திரப்பூர்வமான ஒரு நபர்

என்றபோதிலும், இயேசு ஒருபோதும் வாழ்ந்ததில்லை—உண்மையில் அவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சில மனிதர்களின் படைப்புஎன்று சிலர் சொல்வது விநோதமாக இருக்கிறது. அப்பேர்ப்பட்ட நம்பிக்கையற்றவர்களுக்கு பதிலளிப்பவராய் மதிப்புக்குரிய சரித்திர ஆசிரியன் வில் டூரன்ட் விவாதித்தார்: “ஒரு சில சாதாரண மனிதர்கள் ஒரு சந்ததிக்குள் அத்தனை வல்லமையும், கவர்ச்சியும் வாய்ந்த ஒரு நபரையும், அத்தனை உயர்ந்த ஒரு நன்னெறியையும், மானிட சகோதரத்துவத்தின் அத்தனை ஊக்கமூட்டும் ஒரு காட்சியையும் உருவாக்கிட முடியும் என்பது சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த அற்புதத்தைக் காட்டிலும் அதிக நம்ப முடியாததாய் இருக்கும்.”

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: எப்பொழுதுமே வாழ்ந்திராத ஒரு நபர் மானிட சரித்திரத்தை இவ்வளவு குறிப்பிடத்தக்க வகையில் பாதித்திருக்கக்கூடுமா? சரித்திர ஆசிரியர்களின் உலக சரித்திரம் என்ற ஆராய்ச்சி நூல் குறிப்பிட்டது: “உலகியல் சார்ந்த கண்டிப்பான நோக்குநிலையிலிருந்தும்கூட சரித்திரத்தில் இருந்த மற்ற எந்த ஆளின் வேலைகளைவிட இயேசுவின் வேலைகளின் சரித்திரப்பூர்வமான விளைவுகள் பெருஞ்சிறப்பு வாய்ந்தவையாக இருந்தன. உலகின் முக்கிய நாகரீகங்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு புதிய சகாப்தம் அவருடைய பிறப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது.”

ஆம், அதைக்குறித்து சிந்தியுங்கள். இன்றுள்ள நாட்காட்டிகளும்கூட இயேசு பிறந்ததாக கருதப்படுகின்ற வருடத்தை சார்ந்து இருக்கின்றன. “அந்த வருடத்துக்கு முன்னால் இருக்கும் தேதிகள் கி.மு. அல்லது கிறிஸ்துவுக்கு முன் என்றும், அந்த வருடத்துக்குப் பின்னால் இருக்கும் தேதிகள் கி.பி. அல்லது அன்னோ டோமினி (நம் கர்த்தரின் வருடத்தில்) என்றும் பட்டியலிடப்படுகின்றன” என்று உவேர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா விளக்குகிறது.

அப்படியிருந்தாலும், குறை காண்பவர்கள் இயேசுவைப் பற்றி உண்மையிலேயே நாம் அறிந்திருக்கும் எல்லாமே பைபிளில் தான் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். அவரைப் பற்றிய அதே காலத்துக்குரிய பதிவுகள் இல்லை என்பதாக அவர்கள் சொல்கின்றனர். H. G. வெல்ஸ்-ம்கூட எழுதினார்: “பண்டைய ரோம சரித்திராசிரியர்கள் இயேசுவை முழுவதுமாக புறக்கணித்தனர்; அவர் காலத்து சரித்திரப் பதிவுகளில் அவர் தனிச்சிறப்பான பதிவு எதையும் விட்டுச் செல்லவில்லை.” ஆனால் இது உண்மையா?

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆரம்ப கால உலகியல் சார்ந்த சரித்திராசிரியர்களின் மேற்கோள்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அப்பேர்ப்பட்ட மேற்கோள்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு மதிப்புக்குரிய முதல் நூற்றாண்டு ரோம சரித்திராசிரியன் கொர்நேலியஸ் டாசிட்டஸ் எழுதினார்: “[கிறிஸ்தவன்] என்ற இந்தப் பெயர் கிறிஸ்துவிலிருந்து வருகிறது, இவரை திபேரியு ராயன் அரசாண்ட காலத்தில் ரோம பேரரசின் மாகாண அதிகாரி பொந்தியு பிலாத்து தூக்கிலிட்டான்.” சுட்டோனியஸ், பிளைனி என்ற இளையவன் போன்ற அக்காலத்து மற்ற ரோம எழுத்தாளர்களும்கூட கிறிஸ்துவைப் பற்றி குறிப்பிட்டனர். கூடுதலாக, முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியன் பிளேவியஸ் ஜோஸிபஸ், யாக்கோபை “கிறிஸ்து என்றழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரன்” என்று அடையாளங் காட்டி எழுதினான்.

புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா இவ்வாறாக முடிக்கிறது: “இந்தத் தனிப்பட்ட நபர்களின் அறிக்கைகள், பண்டைய காலத்தில் கிறிஸ்தவத்தின் எதிரிகள்கூட, இயேசு சரித்திரப்பூர்வமான நபர் என்பதை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. இது முதல் தடவையாக போத ஆதாரங்களின் அடிப்படையில், 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில், 19-ம் நூற்றாண்டின் போது, 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டது.”

என்றபோதிலும், அடிப்படையாக இயேசுவைப் பற்றி அறியப்பட்டிருக்கும் எல்லாமே முதல் நூற்றாண்டில் அவரைப் பின்பற்றியவர்களால் பதிவு செய்யப்பட்டது. அவர்களுடைய அறிக்கைகள் சுவிசேஷங்களில்—மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோனால் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்களில்—பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இயேசு யார் என்பதைப் பற்றி இந்த அறிக்கைகள் என்ன சொல்லுகின்றன?

உண்மையில், அவர் யார்?

இயேசுவின் முதல் நூற்றாண்டு கூட்டாளிகள் அந்தக் கேள்வியை தீர எண்ணிப் பார்த்தனர். இயேசு பலத்த காற்றால் கொந்தளித்த கடலை அதட்டி, அற்புதகரமாய் அமைதிப்படுத்தியதை பார்த்தபோது, அவர்கள் வியப்பால் அதிசயப்பட்டனர்: “இவர் யாரோ?” பின்னர், மற்றொரு சமயத்தில் இயேசு தன் அப்போஸ்தலர்களை கேட்டார்: “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?”—மாற்கு 4:41; மத்தேயு 16:15.

அந்தக் கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால், நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? இயேசு உண்மையில் கடவுளாக இருந்தாரா? அநேகர் இன்று அவர் அவ்வாறாக இருந்ததாக சொல்கின்றனர். என்றபோதிலும், அவருடைய கூட்டாளிகள் அவர் கடவுள் என்பதாக ஒருபோதும் நம்பவில்லை. இயேசுவின் கேள்விக்கு அப்போஸ்தலனாகிய பேதுருவின் பிரதிபலிப்பு: “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றிருந்தது.—மத்தேயு 16:16.

இயேசு தம்மை கடவுளாக ஒருபோதும் உரிமை பாராட்டவில்லை. ஆனால் அவர் தன்னை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக அல்லது கிறிஸ்துவாக ஒப்புக்கொண்டார். அவர் தம்மை கடவுளாக அல்ல, “தேவனுடைய குமாரன்” என்பதாகவும் சொன்னார். (யோவான் 4:25, 26; 10:36) என்றபோதிலும் பைபிள் இயேசுவை மற்ற மனிதர்களைப் போன்ற ஒரு மனிதன் என்பதாக சொல்லுகிறதில்லை. அவர் மிகவும் ஒரு விசேஷித்த நபராக இருக்கிறார். ஏனென்றால் மற்ற எல்லா காரியங்களுக்கும் முன்பாக கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டார். (கொலோசெயர் 1:15) எண்ணற்ற கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்தச் சடப்பொருளாலான பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே, இயேசு ஓர் ஆவி ஆளாக பரலோகத்தில் வாழ்ந்தார். மேலும் மகத்தான சிருஷ்டிகராகிய தம் தகப்பன் யெகோவா தேவனோடு நெருக்கமான கூட்டுறவை அனுபவித்தார்.—நீதிமொழிகள் 8:22, 27–31.

பின்பு ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, கடவுள் தம் குமாரனின் ஜீவனை ஒரு பெண்ணின் கருப்பைக்கு மாற்றினார், இயேசு கடவுளின் ஒரு மானிட குமாரனாக ஆனார். ஒரு பெண்ணின் மூலமாக இயல்பான முறையில் பிறந்தார். (கலாத்தியர் 4:4) இயேசு கருப்பையில் உருவாகும் போதும், ஒரு பையனாக வளரும் போதும், தம்முடைய பூமிக்குரிய பெற்றோர்களாக கடவுள் தேர்ந்தெடுத்தவர்களின் பேரில் சார்ந்திருந்தார். இறுதியில் இயேசு முழு வளர்ச்சி பருவம் அடைந்தார். பரலோகத்தில் கடவுளோடு தமக்கு முன்பிருந்த கூட்டுறவின் முழு நினைவாற்றல் அவருக்கு அளிக்கப்பட்டது.—யோவான் 8:23; 17:5.

எது அவரை மிகப்பெரியவராக்கியது

அவர் கவனமாக தம் பரலோக தகப்பனை பின்பற்றினதன் காரணமாக, இயேசு எக்காலத்தில் வாழ்ந்தோரிலும் மிகப் பெரிய மனிதராக இருந்தார். உண்மையுள்ள ஒரு மகனாக, இயேசு தம் தகப்பனை அவ்வளவு மிக நுட்பமாக பார்த்துப் பின்பற்றியதால், தம்மை பின்பற்றியவர்களிடம் அவர் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.” (யோவான் 14:9, 10) இங்கு பூமியில் ஒவ்வொரு சூழ்நிலையிலும், தம் தகப்பனாகிய சர்வ வல்லமையுள்ள கடவுள் என்ன செய்திருப்பாரோ அதையே அவர் செய்தார். “நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்” என்று இயேசு விளக்கினார். (யோவான் 8:28) ஆகையால் நாம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை படிக்கையில், உண்மையில் நாம் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி ஒரு தெளிவான படத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு, அப்போஸ்தலனாகிய யோன் “தேவனை ஒருவனும் . . . கண்டதில்லை” என்று ஒப்புக்கொண்டாலும், “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று எழுத முடிந்தது. (யோவான் 1:18; 1 யோவான் 4:8) யோன் இதைச் செய்ய முடிந்தது, ஏனென்றால் தம் தகப்பனின் பரிபூரண பிரதிபலிப்பாக இருந்த இயேசுவில் என்ன கண்டாரோ, அதன் மூலம் யோன் கடவுளின் அன்பை அறிந்திருந்தார். இயேசு இரக்கமுள்ளவராகவும், தயவுள்ளவராகவும், தாழ்மையானவராகவும். எல்லாரும் அணுகக்கூடியவராகவும் இருந்தார். பலவீனரும், ஒடுக்கப்பட்டவர்களும், எல்லாவிதமான ஜனங்களும்—ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், பணக்காரர், ஏழைகள், வல்லமை வாய்ந்தவர்கள், படுமோசமான பாவிகளும்கூட—அவரோடுகூட இருப்பதில் எவ்வித தயக்கத்தையும் உணரவில்லை. பொல்லாத இருதயங்களை உடையவர்கள் மட்டுமே அவரை விரும்பவில்லை.

உண்மையிலேயே, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று கற்பித்தது மட்டுமல்லாமல், அவர்கள் அதை எவ்வாறு செய்யவேண்டும் என்றும் காண்பித்தார். “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோநீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் [அன்பாயிருக்க வேண்டும்],” என்று சொன்னார். (யோவான் 13:34) “கிறிஸ்துவின் அன்பை அறிந்திருப்பது,” “அறிவுக்கும் மேம்பட்டதாயிருக்கிறது” என்று அவருடைய அப்போஸ்தலர்களில் ஒருவர் விளக்கினார். (எபேசியர் 3:19, NW) ஆம், கிறிஸ்து வெளிக்காட்டின அன்பு, கல்வி அறிவைவிட உயர்ந்து செல்கிறது. அதற்கு பிரதிபலிக்கும்படி மற்றவர்களை “வற்புறுத்துகிறது.” (2 கொரிந்தியர் 5:14, NW) ஆக, குறிப்பாக, இயேசுவின் மிக மேம்பட்ட அன்பான முன்மாதிரி தான் அவரை எக்காலத்தில் வாழ்ந்தோரிலும் மிகப் பெரிய மனிதராக்கியது. நூற்றாண்டுகளாக அவருடைய அன்பு லட்சக்கணக்கானோரின் இருதயங்களை தொட்டு, அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது.

என்றபோதிலும், சிலர் ஒருவேளை பின்வருமாறு மறுப்புக் கூறலாம்: ‘கிறிஸ்துவின் பெயரில் செய்யப்பட்ட எல்லா குற்றச் செயல்களையும்—சிலுவைப் போர்கள், முரண் சமயக் கோட்பாடுகளை ஒடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள், கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்ளும் கோடிக்கணக்கானோர் போர்க்களங்களில் ஒருவரையொருவர் கொன்றிருக்கும் போர்கள்—பாருங்கள்.’ ஆனால் உண்மையென்னவெனில், இந்த ஜனங்கள் இயேசுவை பின்பற்றுகிறோம் என்ற தங்கள் உரிமை பாராட்டலை பொய்யென காட்டுகின்றனர். அவருடைய போனைகளும், வாழ்க்கை முறையும் அவர்களுடைய செயல்களை கண்டனம் செய்கின்றன. ஓர் இந்துவான மோன்தாஸ் காந்திகூட இவ்வாறாக சொல்லும்படி தூண்டப்பட்டார்: ‘நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன். ஆனால் நான் கிறிஸ்தவர்களை வெறுக்கிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்து வாழ்ந்தது போவாழ்கிறதில்லை.’

அவரைப் பற்றி கற்றறிவதன் மூலம் பயனடையுங்கள்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், ஊழியத்தையும் பற்றி படிப்பதை விட வேறெந்த படிப்பும் இன்று அதிக முக்கியத்துவமுள்ளதாய் இருக்காது. “இயேசுவை உற்று நோக்குங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்குவித்தார், “உண்மையிலேயே அவரை நெருக்கமாக சிந்தித்துப் பாருங்கள்.” கடவுள் தம் குமாரனைக் குறித்து: “இவருக்குச் செவி கொடுங்கள்” என்று கட்டளையிட்டார். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற இப்புத்தகம் இதைத் தான் செய்ய உங்களுக்கு உதவும்.—எபிரெயர் 12:2, 3, NW; மத்தேயு 17:5.

அவர் கொடுத்த பேச்சுகள், உதாரணங்கள் மற்றும் அற்புதங்கள் உட்பட நான்கு சுவிசேஷங்களிலும் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவத்தையும் அளிக்க ஒரு முயற்சி செய்யப்பட்டுள்ளது. கூடுமானவரை, எல்லா காரியங்களும் அது நிகழ்ந்த கால வரிசையிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும், அந்த அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட பைபிள் வசனங்களின் பட்டியல் இருக்கிறது. இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்படியும், கொடுக்கப்பட்டிருக்கும் விமர்சனக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்படியும் உற்சாகப்படுத்தப்படுகிறீர்கள்.

சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் அறிஞர் சமீபத்தில் இவ்வாறாக உரிமை பாராட்டிக் கொண்டார்: “கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளைக் காட்டிலும், கடந்த இருபது ஆண்டுகளில் இயேசுவைக் குறித்து அதிகம் எழுதப்பட்டிருக்கிறது.” என்றபோதிலும், சுவிசேஷ பதிவுகளை தனிப்பட்ட விதமாக சிந்திப்பதற்கான ஒரு முக்கிய தேவை இருக்கிறது. ஏனென்றால் என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா குறிப்பிட்டது: “இயேசுவைக் குறித்தும் அவருடைய சுவிசேஷங்களைக் குறித்தும் முரண்படும் கருத்துக் கோட்பாடுகளிலேயே அநேக நவீன கால மாணவர்கள் ஆழ்ந்துவிடுவதால், இந்த அடிப்படை ஊற்றுமூலங்களை அவர்களாகவே படிக்க புறக்கணித்து விடுகின்றனர்.”

சுவிசேஷ பதிவுகளை நெருக்கமான, தப்பெண்ணமற்ற விதத்தில் சிந்தித்த பிறகு, நம் சார்பாக தம் ஜீவனையே கொடுக்கும் பொருட்டு, ரோம ஆட்சியின் அகுஸ்துராயன் காலத்தில் நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசு பூமியில் தோன்றிய சம்பவம், மனித சரித்திரத்திலேயே நடந்த எல்லா சம்பவங்களிலும் மிகப் பெரிய சம்பவம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நாங்கள் உணருகிறோம்.