Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு சமாரிய பெண்ணுக்குப் போதித்தல்

ஒரு சமாரிய பெண்ணுக்குப் போதித்தல்

அதிகாரம் 19

ஒரு சமாரிய பெண்ணுக்குப் போதித்தல்

யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குச் செல்லும் வழியில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் சமாரியா நாட்டின் வழியாகச் செல்கிறார்கள். பயணத்தில் அதிக களைப்படைந்தவர்களாக, மத்தியான வேளையில் அவர்கள் சீகார் என்னும் ஊரில் ஒரு கிணற்றருகே ஓய்வெடுக்க நிற்கிறார்கள். இந்தக் கிணறு நூற்றாண்டுகளுக்கு முன்பு யாக்கோபினால் தோண்டப்பட்டது. இது நவீன பட்டணமாகிய நாப்லஸ் அருகே இந்நாள் வரையாக இருக்கிறது.

இயேசு இவ்விடத்தில் ஓய்வெடுக்கையில், அவருடைய சீஷர்கள் உணவு வாங்க ஊருக்குள்ளே செல்கிறார்கள். தண்ணீர் இரைப்பதற்காக அங்கு வந்த ஒரு சமாரிய ஸ்திரீயிடம் இயேசு, ‘தாகத்துக்குத் தண்ணீர் கொடு’ என்று கேட்கிறார்.

தப்பெண்ணங்கள் ஆழமாக வேர் கொண்டிருந்ததினால், பொதுவாக யூதர்களும் சமாரியர்களும் ஒருவரோடொருவர் சம்பந்தம் கொள்ளாதவர்களாக இருந்தார்கள். எனவே அந்த ஸ்திரீ ஆச்சரியத்தோடு: “நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், ‘தாகத்துக்குத்தா’ என்று எப்படிக் கேட்கலாம்,” என்கிறாள்.

“தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

“ஆண்டவரே, மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத் தண்ணீர் உண்டாகும். இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருக ஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே” என்று பதிலளிக்கிறாள்.

“இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” என்று இயேசு அறிவித்தார்.

“எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டு கொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தர வேண்டும்” என்று அந்தப் பெண் பதிலளிக்கிறாள்.

இந்தச் சமயத்தில் இயேசு: “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்று கூறுகிறார்.

“எனக்குப் புருஷன் இல்லை” என்று அவள் பதிலளிக்கிறாள்.

இயேசு அவள் சொன்னதை ஒத்துக்கொள்கிறார். “எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல,” என்றார்.

“ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்,” என்று அந்த ஸ்திரீ ஆச்சரியத்தோடு சொல்கிறாள். அவளுடைய ஆவிக்குரிய அக்கறைகளை வெளிப்படுத்துகிறவளாக, சமாரியர்கள் “இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள் [அருகாமையில் இருக்கும் கெர்ஸிம்]; நீங்கள் [யூதர்கள்] எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே” என்று சொல்லுகிறாள்.

என்றாலும், வணக்கத்துக்குரிய இடம் முக்கியமானதல்ல என்று இயேசு சுட்டிக் காட்டுகிறார். “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்” என்றார்.

அவர் சொன்னது அவளில் ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டுபண்ணியது. “கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்,” என்றாள்.

“உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்று இயேசு அறிவிக்கிறார். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்! அந்தப் பட்டணத்திலுள்ள மற்றப் பெண்கள் அவளுடைய வாழ்க்கை முறையை இழிவாக கருதினதால் அவர்களோடு தொடர்பு கொள்வதைத் தவிர்க்க, மத்தியான வேளையில் தண்ணீர் எடுக்க வந்த இந்தப் பெண், அதிசயமான விதத்தில் இயேசுவால் தயவு காண்பிக்கப்பட்டாள். வேறு யாரிடமும் அறிக்கை செய்திராத ஒரு காரியத்தை அவளிடம் இயேசு வெளிப்படையாகச் சொல்லுகிறார். என்ன விளைவுகளோடு?

சமாரியர்கள் அநேகர் விசுவாசிக்கிறார்கள்

போஜனத்தோடு சீகாரிலிருந்து திரும்பி வந்த சீஷர்கள், இயேசுவை யாக்கோபின் கிணற்றருகே அவரை விட்டுச் சென்ற இடத்திலும் இப்பொழுது அங்கு அவர் ஒரு சமாரிய பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறதையும் காண்கிறார்கள். சீஷர்கள் வந்தபோது அவள் தன் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள் போகிறாள்.

இயேசு சொன்ன காரியங்களில் வெகுவாக அக்கறைக் கொண்டவளாய் அவள் ஊருக்குள்ளே இருந்த மனிதர்களிடம்: “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள்” என்று சொல்கிறாள். பின்பு அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் வகையில், “அவர் கிறிஸ்துதானோ” என்று கேட்கிறாள். இந்தக் கேள்வி அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது—அந்த மனிதர்கள் நேரில் காண அவர் இருக்கும் இடத்துக்குப் போகிறார்கள்.

இதற்கிடையில் சீஷர்கள் ஊரிலிருந்து தாங்கள் கொண்டுவந்த போஜனத்தைப் புசிக்கும்படியாக அவரை வற்புறுத்துகிறார்கள். ஆனால் அவரோ “நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு” என்று பதிலளிக்கிறார்.

அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து “யாராவது அவருக்குப் போஜனம் கொண்டு வந்திருப்பானோ” என்று கேட்டுக் கொள்கிறார்கள். இயேசு விளக்குகிறார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலு மாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா?” ஆனால் ஆவிக்குரிய அறுவடையைச் சுட்டிக் காண்பித்து இயேசு, “இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள். விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்” என்றார்.

சமாரியப் பெண் சாட்சி கொடுத்ததன் விளைவாக—அநேகர் தம்மில் விசுவாசம் வைப்பதை—அதன் மகத்தான பாதிப்பை அவரால் ஏற்கெனவே பார்க்க முடிகிறது. “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்” என்று ஊர் ஜனங்களிடம் சாட்சி கொடுக்கிறாள். ஆகையால் சீகார் ஊரார் கிணற்றருகே அவரிடமாக வந்தபோது தங்களிடம் அதிகம் பேசுவதற்காகத் தங்கவேண்டுமென்று அவரை கேட்டுக் கொள்கிறார்கள். இயேசு அழைப்பை ஏற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறார்.

சமாரியர்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்கையில் இன்னும் அநேகர் விசுவாசிக்கிறார்கள். பின்பு அவர்கள் ஸ்திரீயிடம்: “உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக ரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்” என்கிறார்கள். கேட்பவர்கள் கூடுதலாக ஆராய்வதற்காக, அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டி எழுப்புவதன் மூலம் நாம் எவ்விதமாக கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சி கொடுக்கலாம் என்பதற்குச் சமாரியப் பெண் நிச்சயமாகவே ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறாள்!

இது அறுவடைக்கு—பலஸ்தீனாவில் வசந்த காலத்தில் நடைபெறும் வாற்கோதுமை அறுவடைக்கு—நான்கு மாதங்களுக்கு முன்பு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆகவே இப்பொழுது ஒருவேளை நவம்பர் அல்லது டிசம்பர் மாதமாக இருக்கிறது. அப்படியென்றால், பொ.ச. 30-ன் பஸ்காவைத் தொடர்ந்து இயேசுவும் அவருடைய சீஷர்களும் உபதேசித்துக் கொண்டும் முழுக்காட்டுதல் கொடுத்துக் கொண்டும் யூதேயாவில் எட்டு மாதங்கள் போல் செலவிட்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. இப்பொழுது அவர்கள் தங்களுடைய சொந்த ஊராகிய கலிலேயாவுக்குப் புறப்படுகிறார்கள். அவர்களுக்கு அங்கு காத்துக்கொண்டிருப்பது என்ன? யோவான் 4:3–43.

▪ இயேசு தம்மிடம் பேசியதைக் குறித்து அந்தச் சமாரிய பெண் ஏன் ஆச்சரியமடைகிறாள்?

▪ ஜீவத் தண்ணீரைக் குறித்தும், எங்கே வணங்க வேண்டும் என்பதைக் குறித்தும் இயேசு அவளுக்கு என்ன கற்பிக்கிறார்?

▪ தாம் யார் என்பதை இயேசு அவளுக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? வெளிப்படுத்திய இந்தக் காரியம் ஏன் அதிசயிக்கத்தக்கதாயிருக்கிறது?

▪ சமாரியப் பெண் என்ன சாட்சி கொடுக்கிறாள்? என்ன விளைவுகளோடு?

▪ இயேசுவின் உணவு எவ்விதமாக அறுவடையோடு சம்பந்தப்பட்டதாயிருக்கிறது?

▪ பொ.ச. 30-ன் பஸ்காவைத் தொடர்ந்து யூதேயாவில் இயேசுவின் ஊழிய காலத்தை நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம்?