Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓய்வுநாளில் நற்காரியங்களைச் செய்தல்

ஓய்வுநாளில் நற்காரியங்களைச் செய்தல்

அதிகாரம் 29

ஓய்வுநாளில் நற்காரியங்களைச் செய்தல்

அது பொ.ச. 31-ன் வசந்த காலம் யூதேயாவிலிருந்து ககிலேயாவுக்குப் போகும் வழியில் சமாரியாவில் உள்ள கிணற்றருகே ஒரு பெண்ணிடம் இயேசு பேசியதற்கு பிறகு சில மாதங்கள் கடந்து விட்டிருக்கின்றன.

இப்பொழுது, கலிலேயா முழுவதும் விரிவாக கற்பித்த பின்னர், இயேசு மறுபடியும் யூதேயாவுக்கு புறப்பட்டு, அங்குள்ள ஜெபாலயங்கலில் பிரசங்கிக்கிறார். அவருடைய கலிலேய ஊழியத்தைப் பற்றி பைபிள் கொடுக்கும் கவனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த யூதேய விஜயத்தின் போதும், முந்தின பஸ்காவைத் தொடர்ந்து அவர் இங்கே செலவிட்ட மாதங்களின் போதும் யூதேயாவில் இயேசுவின் வேலைகளைப் பற்றி கொஞ்சம் தான் சொல்கிறது. அவருடைய ஊழியம் கலிலேயாவில் இருந்ததைப் போல் அவ்வளவு சாதகமான பிரதிபலிப்பை யூதேயாவில் பெறவில்லை என்பது தெளிவாக இருக்கிறது.

விரைவில் பொ.ச. 31-ன் பஸ்காவுக்காக இயேசு யூதேயாவில் முக்கிய பட்டணமாகிய எருசலேமுக்குச் சென்று கொண்டிருக்கிறார். இங்கு பட்டணத்து ஆட்டு வாசலினருகே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் இருக்கிறது. அங்கு வியாதியாயிருப்பவர்களும், குருடர்களும், சப்பாணிகளும் வருகின்றனர். குளத்தின் தண்ணீர் கலங்கும் போது அதற்குள் இறங்கினால் ஜனங்கள் குணமடைவார்கள் என்று அவர்கள் நம்புகின்றனர்

அது ஓய்வு நாள், இயேசு 38 வருடங்களாக வியாதியாயிருந்த ஒரு மனிதனை குளத்தின் அருகே காண்கிறார். அந்த மனிதனின் வியாதியின் நீண்ட காலத் தன்மையை அறிந்தவராய். இயேசு கேட்கிறார்:“சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?”

அவன் இயேசுவுக்கு பதிலளிக்கிறான்: “ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும் போது என்னைக் குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான்.”

இயேசு அவனிடம் சொல்லுகிறார்: “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட.” உடனடியாக அந்த மனிதனின் உடல் பூரண சுகமடைகிறது, அவன் தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான்!

ஆனால் அந்த மனிதனைக் கண்டபோது. யூதர்கள் சொல்கின்றனர்: இது ஓய்வு நாளாயிருக்கிறதே. படுக்கையை எடுத்துக் கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல.”

அந்த மனிதன் அவர்களுக்குப் பதிலளிக்கிறான்: ‘என்னைச் சொஸ்தமாக்கினவர், என் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார்.’

“உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட வென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.” ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார், சொஸ்தமாக்கப்பட்டவனுக்கு இயேசுவின் பெயர் தெரியவில்லை. என்றபோதிலும், பின்னர், இயேசுவும் அந்த மனிதனும் தேவாலயத்திலே சந்திக்கின்றனர், அவனை சொஸ்தமாக்கினவர் யார் என்பதை அந்த மனிதன் அறிந்து கொள்கிறான்.

ஆகையால் சொஸ்தமாக்கப்பட்ட மனிதன் யூதர்களைக் கண்டு பிடித்து தன்னை குணப்படுத்தியது இயேசுவே என்று அவர்களிடம் சொல்லுகிறான். இதை அறிந்தும், யூதர்கள் இயேசுவிடம் செல்கின்றனர். என்ன காரணத்துக்காக? எதைக் கொண்டு அவர் இந்த அதிசயமான காரியங்களை செய்கிறார் என்பதை கற்றறியவா? இல்லை, ஆனால் அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்கே. ஏனென்றால் அவர் இப்பேர்ப்பட்ட நல்ல காரியங்களை ஓய்வு நாளில் செய்கிறார். அவர்கள் அவரைத் துன்புறுத்தவும்கூட ஆரம்பிக்கின்றனர்! லூக்கா 4:44; யோவான் 5:1-16.

இயேசு கடைசியாக யூதேயாவுக்கு விஜயம் செய்ததிலிருந்து ஏறக்குறைய எழ்வளவு காலம் கடந்திருக்கிறது?

பெதஸ்தா என்றழைக்கப்பட்ட குளம் ஏன் அவ்வளவு பிரபலமான இடமாக இருக்கிறது?

குளத்தருகே இயேசு என்ன அற்புதத்தைச் செய்கிறார், யூதர்களின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கிறது?