Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடைசி தோற்றங்களும் பொ.ச. 33-ம் ஆண்டின் பெந்தெகொஸ்தேவும்

கடைசி தோற்றங்களும் பொ.ச. 33-ம் ஆண்டின் பெந்தெகொஸ்தேவும்

அதிகாரம் 131

கடைசி தோற்றங்களும் பொ.ச. 33-ம் ஆண்டின் பெந்தெகொஸ்தேவும்

கலிலேயாவில் இருக்கும் ஒரு மலையில் தம்முடைய 11 அப்போஸ்தலர்களும் தம்மை சந்திக்கும்படி ஏதோவொரு சமயத்தில் இயேசு ஏற்பாடுகளைச் செய்கிறார். மற்ற சீஷர்களும் இந்தக் கூட்டத்தைக் குறித்து சொல்லப்படுகின்றனர், 500-க்கும் மேலான ஆட்கள் ஒன்றுகூடி வருகின்றனர். இயேசு மறுபடியும் தோன்றி அவர்களுக்கு போதிக்க ஆரம்பித்த போது இது என்னே ஒரு சந்தோஷமான மாநாடாக நிரூபிக்கிறது!

மற்ற காரியங்களோடு சேர்த்து, பரலோகத்திலும் பூமியிலும் கடவுள் அவருக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் என்று அந்தப் பெரிய கூட்டத்துக்கு இயேசு விளக்குகிறார். “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”

அதை நினைத்துப் பாருங்கள்! ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எல்லாருமே சீஷராக்கும் வேலையில் பங்கு கொள்வதற்கு ஒரே பொறுப்பை பெற்றுக்கொள்கின்றனர். அவர்களுடைய பிரசங்க வேலையையும் கற்பிக்கும் வேலையையும் எதிராளிகள் நிறுத்துவற்கு முயற்சி செய்வர், ஆனால் இயேசு அவர்களை இவ்வாறு ஆறுதல்படுத்துகிறார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.” அவர்கள் தங்களுடைய ஊழியத்தை நிறைவேற்ற அவர்களுக்கு உதவி செய்வதற்கு பரிசுத்த ஆவியின் மூலம் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களோடு நிலைத்திருக்கிறார்.

மொத்தமாக, அவருடைய உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து 40 நாட்களுக்கு இயேசு தம்மை உயிரோடு தம்முடைய சீஷர்களுக்குக் காண்பிக்கிறார். இப்படிப்பட்ட தோற்றங்களின் போது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர் அவர்களுக்குப் போதிக்கிறார், அவருடைய சீஷர்களாக அவர்களுடைய உத்தரவாதங்கள் என்ன என்பதை அவர் அழுத்திக் காண்பிக்கிறார். ஒரு சமயம் அவர் தன் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபுக்கும்கூட தோற்றமளித்து, ஒரு சமயம் அவிசுவாசியாயிருந்த இவனுக்கு அவர் உண்மையிலேயே கிறிஸ்து என்று நம்பும்படி செய்கிறார்.

அப்போஸ்தலர்கள் இன்னும் கலிலேயாவிலேயே இருக்கையில், இயேசு அவர்களை எருசலேமுக்குத் திரும்பும்படி கட்டளையிடுகிறார். அங்கே அவர்களைச் சந்தித்த போது, அவர் அவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்.” “யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.”

பின்பு இயேசு மறுபடியும் தம் அப்போஸ்தலர்களைச் சந்தித்து, நகரத்துக்கு வெளியே ஒலிவ மலையின் கிழக்கத்திய சரிவில் அமைந்திருக்கும் பெத்தானியா வரை அவர்களை வழிநடத்திச் செல்கிறார். பரலோகத்துக்கு அவர் விரைவில் புறப்பட்டுச் செல்லப் போகிறார் என்பதைப் பற்றிய எல்லா காரியங்களையும் சொன்ன பின்பும்கூட ஆச்சரியமூட்டும் காரியம் என்னவெனில், அவருடைய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும் என்று அவர்கள் இன்னும் நம்புகின்றனர். ஆகையால் அவர்கள், “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” என்று அவரைக் கேட்கின்றனர்.

அவர்களுடைய தப்பெண்ணத்தை சரிசெய்ய மறுபடியும் முயற்சி செய்வதற்கு பதிலாக இயேசு வெறுமென இவ்வாறு பதிலளிக்கிறார்: “பிதாவானவர் தம்முடைய ஆதினத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.” பின்பு, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை மறுபடியும் அழுத்தியுரைத்து அவர் இவ்வாறு சொல்கிறார்: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”

அவர்கள் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கையில், இயேசு பரலோகத்தை நோக்கி எழ ஆரம்பிக்கிறார், அவர்களுடைய பார்வையிலிருந்து ஒரு மேகம் அவரை கண்களுக்குத் தெரியாமல் மறைத்து விடுகிறது. தம் மாம்ச உடல் உருவைக் களைந்த பின்பு, ஓர் ஆவி ஆளாக பரலோகத்துக்கு ஏறிச் செல்கிறார். அந்த 11 பேரும் தொடர்ந்து வானத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில், வெண்மையான வஸ்திரந்தரித்த 2 மனிதர்கள் அவர்கள் பக்கத்தில் தோன்றுகின்றனர். மனித உருவெடுத்த இந்தத் தூதர்கள் இவ்வாறு கேட்கின்றனர்: “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்.”

இயேசு பூமியை விட்டுச் சென்ற விதம் பொதுமக்கள் காணக்கூடிய ஆரவாரம் எதுவுமின்றி அவரை உண்மையாய் பின்பற்றினவர்கள் மட்டுமே காணும்படி இருந்தது. அவர் அதே விதத்தில் திரும்பி வருவார்—பொது மக்கள் காணக்கூடிய ஆரவாரம் எதுவுமின்றி அவர் திரும்பி வந்திருக்கிறார் என்பதையும் ராஜ்ய வல்லமையில் அவருடைய பிரசன்னத்தை ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் அவரை உண்மையாய் பின்பற்றுபவர்கள் மட்டுமே கண்டுணர்ந்து கொள்ளும் விதத்தில் இருக்கும்.

அப்போஸ்தலர்கள் இப்போது ஒலிவ மலையிலிருந்து இறங்கி, கெதரோன் பள்ளத்தாக்கை கடந்து, மறுபடியும் எருசலேமுக்குள் செல்கின்றனர். அங்கே அவர்கள் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருக்கின்றனர். பத்து நாட்களுக்குப் பின்பு, பொ.ச. 33-ன் யூத பண்டிகையாகிய பெந்தெகொஸ்தே நாளன்று, ஏறக்குறைய 120 சீஷர்கள் எருசலேமில் ஒரு மேலறையில் கூடுகின்றனர், பலத்த காற்று அடிக்கிற சப்தம் போல ஒரு சப்தம் திடீரென வீடு முழுவதையும் நிரப்புகிறது. அக்கினிமயமான நாவுகள் போல பல நாவுகள் காணப்பட்டு ஒவ்வொருவர் மேலும் ஒவ்வொன்று அமர்கிறது, எல்லா சீஷர்களும் வித்தியாசமான மொழிகளில் பேச ஆரம்பிக்கின்றனர். இதுவே இயேசு வாக்களித்த பரிசுத்த ஆவி ஊற்றப்படுதல் ஆகும்! மத்தேயு 28:16–20; லூக்கா 24:49–52; 1 கொரிந்தியர் 15:5–7; அப்போஸ்தலர் 1:3–15; 2:1–4.

▪ கலிலேயாவில் ஒரு மலையில் யாருக்கு இயேசு பிரிவுரை போதனைகள் கொடுக்கிறார்? அந்தப் போதனைகள் யாவை?

▪ இயேசு தம் சீஷர்களுக்கு என்ன ஆறுதல் கொடுக்கிறார்? அவர் எவ்வாறு அவர்களோடு இருப்பார்?

▪ இயேசு உயிர்த்தெழுந்த பிறகு எவ்வளவு காலம் கழித்து தம் சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார்? அவர் அவர்களுக்கு என்ன கற்பிக்கிறார்?

▪ இயேசுவின் மரணத்துக்கு முன்பு சீஷனாயில்லாத யாருக்கு இயேசு காட்சியளிக்கிறார்?

▪ என்ன இரண்டு இறுதி கூட்டங்களை இயேசு தம் அப்போஸ்தலர்களோடு கொண்டிருக்கிறார்? இந்தச் சமயங்களில் என்ன நடக்கிறது?

▪ இயேசு புறப்பட்டுச் சென்ற விதமாகவே எவ்வாறு திரும்பி வருவார்?

▪ பொ.ச. 33-ம் ஆண்டின் பெந்தெகொஸ்தே நாளன்று என்ன நடக்கிறது?