Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திராட்சத் தோட்டத்து வேலைக்காரர்

திராட்சத் தோட்டத்து வேலைக்காரர்

அதிகாரம் 97

திராட்சத் தோட்டத்து வேலைக்காரர்

முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள்” என்று இயேசு சற்றுமுன்பு தான் சொன்னார். இப்போது அவர் ஒரு கதையை சொல்வதன் மூலம் இதை விளக்கிக் காட்டுகிறார். “பரலோக ராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத் தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்” என்று அவர் ஆரம்பிக்கிறார்.

இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “[வீட்டெஜமான்] வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி பேசி, அவர்களைத் தன் திராட்சத் தோட்டத்துக்கு அனுப்பினான். மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப் போய், கடைத் தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: நீங்களும் திராட்சத் தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணி வேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான். பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத் தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக் கொள்வீர்கள்.”

வீட்டெஜமான் அல்லது திராட்சத் தோட்டத்தின் சொந்தக்காரர் யெகோவா தேவன், திராட்சத் தோட்டம் இஸ்ரவேல் தேசம். திராட்சத்தோட்டத்தில் இருக்கும் வேலையாட்கள், நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குள் கொண்டு வரப்படும் நபர்கள்; அவர்கள் குறிப்பாக அப்போஸ்தலர்களின் நாட்களில் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள். முழுநாள் வேலை செய்யும் வேலையாட்களோடு மட்டும் தான் ஒரு நாட்கூலிக்கான ஒப்பந்தம் செய்யப்படுகிறது. ஒரு நாள் வேலைக்கு கூலி ஒரு பணம். “மூன்றாம் மணி வேளை” காலை 9 மணியாக இருப்பதால், 3, 6, 9, 11-ம் மணிவேளைகளில் அழைக்கப்பட்டவர்கள் முறையே 9, 6, 3, 1 மணிநேரங்கள் மட்டுமே வேலை செய்கின்றனர்.

பன்னிரண்டு மணி நேர அல்லது முழு நாள் வேலையாட்கள், மத சம்பந்தமான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்த யூதத் தலைவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மீன்பிடிப்பது அல்லது மற்ற உலகப்பிரகாரமான வேலைகளை தங்கள் வாழ்க்கையில் அதிகமாகச் செய்த இயேசுவின் சீஷர்களைப் போல் அவர்கள் இல்லை. பொ.ச. 29-ன் இலையுதிர்க் காலத்தின் போது தான் தம்முடைய சீஷர்களாக இவர்களை கூட்டிச் சேர்ப்பதற்கு “வீட்டெஜமான்” இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். இவ்வாறு அவர்கள் “பிந்தினோராக” அல்லது பதினோராம் மணி வேளை திராட்சத் தோட்டத்து வேலையாட்களாக ஆனார்கள்.

இறுதியில், அடையாளப்பூர்வமான வேலை நாள் இயேசுவின் மரணத்தோடு முடிவடைகிறது, வேலையாட்களுக்கு கூலி கொடுக்கும் நேரம் வருகிறது. பிந்தி வந்தவர்களுக்கு முந்தி கூலி கொடுக்கும் அசாதாரணமான விதி கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு விளக்கப்படுகிறது: “சாயங்காலத்தில், திராட்சத் தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முந்தி வந்தவர்கள் வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான். பதினோராம் மணிவேளை வேலையாட்கள் வந்து ஆளுக்கு ஒரு பணம் பெற்றுக்கொண்டார்கள். ஆகையால், முந்தி வந்தவர்கள் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் என்று முடிவு செய்தனர்; ஆனால் அவர்களும் ஒரு பணம் என்ற வீதத்தில் கூலி பெற்றுக்கொண்டனர். அதைப் பெற்றுக்கொண்ட போது, வீட்டெஜமானுக்கு எதிராக முறுமுறுக்கத் தொடங்கி இவ்வாறு சொன்னார்கள்: பிந்தி வந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே. ஆனால் அவர்களில் ஒருவனை நோக்கி அவர் இவ்வாறு பதிலளித்தார், சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? உன்னுடையதை நீ வாங்கிக் கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா?” முடிவாக, இதற்கு முன் சொன்ன குறிப்பை மறுபடியும் இயேசு சொல்கிறார்: “இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்.”

பணத்தைப் பெற்றுக் கொள்வது இயேசுவின் மரணத்தின் போது நடக்கவில்லை, ஆனால் பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று “காரியகாரனாகிய” கிறிஸ்து தம்முடைய சீஷர்கள் மீது பரிசுத்த ஆவியை ஊற்றிய போது நடக்கிறது. இயேசுவின் இந்தச் சீஷர்கள் “பிந்தினோராக” அல்லது பதினோராம் மணி வேளை வேலையாட்களைப் போல் இருக்கின்றனர். அந்தப் பணம் பரிசுத்த ஆவியின் வரத்தை தானே பிரதிநிதித்துவம் செய்கிறதில்லை. அந்தப் பணம் சீஷர்கள் பூமியில் உபயோகப்படுத்துவதற்கான ஏதோவொன்று. இது அவர்களுடைய பிழைப்பை, அவர்களுடைய நித்திய ஜீவனை அர்த்தப்படுத்தும் ஏதோவொன்று. அது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்ட ஓர் ஆவிக்குரிய இஸ்ரவேலனாக இருக்கும் சிலாக்கியம்.

இயேசுவின் சீஷர்கள் கூலி பெற்றுக்கொண்டதை முதலாவது கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் விரைவில் கவனிக்கின்றனர், அடையாளப்பூர்வமான பணத்தை அவர்கள் உபயோகிப்பதை அவர்கள் காண்கின்றனர். பரிசுத்த ஆவியையும் அதன் சம்பந்தப்பட்ட ராஜ்ய சிலாக்கியங்களையும்விட இன்னும் அதிகமாக வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அவர்களுடைய முணுமுணுப்புகளும் எதிர்ப்புகளும் திராட்சத்தோட்டத்தில் “பிந்தினோராய்” இருக்கும் வேலையாட்களை, கிறிஸ்துவின் சீஷர்களை, துன்புறுத்தும் வடிவத்தை எடுக்கிறது.

அந்த முதல் நூற்றாண்டு நிறைவேற்றம் தான் இயேசுவின் உவமையின் ஒரே நிறைவேற்றமாய் இருக்கிறதா? இல்லை, கிறிஸ்தவமண்டல குருமார் இந்த 20-ம் நூற்றாண்டில், அவர்களுடைய ஸ்தானங்கள் மற்றும் உத்தரவாதங்களின் காரணமாக கடவுளுடைய அடையாளப்பூர்வமான திராட்சத்தோட்டத்தில் வேலை செய்வதற்கு கூலிக்கு அமர்த்தப்பட்ட “முந்தினோராக” இருக்கின்றனர். காவற்கோபுர பைபிள் மற்றும் துண்டுப்பிரதி சங்கத்தோடு கூட்டுறவுக் கொண்டிருந்த ஒப்புக்கொடுத்த பிரசங்கிப்பாளர்களை, கடவுளுடைய சேவையில் எந்தச் செல்லுபடியான நியமிப்பையும் பெற்றுக்கொள்வதற்கு “பிந்தினோராக” அவர்கள் கருதினர். ஆனால் உண்மையில் குருமார் இழிவாகக் கருதிய இப்பேர்ப்பட்ட நபர்களே பணத்தை—கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் அபிஷேகம் பண்ணப்பட்ட தூதுவர்களாக சேவை செய்யும் மதிப்பை—பெற்றுக்கொண்டனர். மத்தேயு 19:30–20:16.

▪ திராட்சத்தோட்டம் எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது? திராட்சத்தோட்டத்து எஜமான், 12 மணிநேர வேலையாட்கள், 1 மணி நேர வேலையாட்கள்—இவர்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்?

▪ அடையாளப்பூர்வமான வேலை நாள் எப்போது முடிவடைந்தது, கூலி எப்போது கொடுக்கப்பட்டது?

▪ பணம் கொடுக்கப்படுவது என்பது எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது?