Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரலோகத்திலிருந்து செய்திகள்

பரலோகத்திலிருந்து செய்திகள்

அதிகாரம் 1

பரலோகத்திலிருந்து செய்திகள்

ண்மையில் முழு பைபிளும் பரலோகத்திலிருந்து வந்த ஒரு செய்தியாகும். இது நம் போனைக்காக நமது பரலோக தகப்பனால் அளிக்கப்பட்டது. என்றபோதிலும், “கடவுளுக்கு அருகில் அவருக்கு முன்பாக நிற்கும்” ஒரு தேவதூதனால் ஏறக்குறைய 2,000 வருடங்களுக்கு முன்பு இரண்டு விசேஷ செய்திகள் வழங்கப்பட்டன. அவருடைய பெயர் காபிரியேல். பூமிக்கு அவர் வருகை தந்த இந்த இரண்டு முக்கிய சந்தர்ப்பங்களின் சூழ்நிலைகளை நாம் ஆராயலாம்.

அந்த வருடம் பொ.ச.மு. 3. எருசலேமுக்கு ஒருவேளை சமீபத்திலுள்ள யூதேய மலைகளில், சகரியா என்ற பெயருடைய யெகோவாவின் ஆசாரியன் வாழ்ந்து வருகிறார். அவரும் அவருடைய மனைவி எலிசபெத்தும் வயது சென்றவர்களாய் இருக்கின்றனர். அவர்களுக்கோ பிள்ளைகள் இல்லை. எருசலேமிலுள்ள தேவாலயத்தில் ஆசாரிய ஊழியத்தின் தன் முறையை சகரியா செய்துகொண்டிருக்கிறார். திடீரென காபிரியேல் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே தோன்றுகிறார்.

சகரியா அதிக பயமடைகிறார். ஆனால் காபிரியேல் அவருடைய பயங்களை அமைதிப்படுத்தி, “சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோன் என்று பேரிடுவாயாக” என்று சொல்கிறார். அவன் “யெகோவாவுக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான்” என்றும் “உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] ஆயத்தப்படுத்துவான்” என்றும் காபிரியேல் தொர்ந்து அறிவிக்கிறார்.

எனினும் சகரியாவினால் அதை நம்பமுடியவில்லை. அவருக்கும் எலிசபெத்துக்கும் அவர்களிருக்கும் வயதில் ஒரு பிள்ளையை பெறுவது என்பது நடக்கமுடியாததாய் தோன்றுகிறது. ஆகையால் காபிரியேல் அவரிடம் சொல்கிறார்: “நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய்.”

இதற்கிடையில், ஆலயத்தில் சகரியா ஏன் இவ்வளவு நீண்டநேரம் எடுத்துக்கொள்கிறார் என்று வெளியே இருக்கும் ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர் இறுதியில் வெளியே வந்த போது, அவரால் பேச முடியவில்லை, தன் கைகளினால் சைகை மட்டுமே செய்ய முடிகிறது, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றை அவர் கண்டிருக்கிறார் என்று அவர்கள் உணருகின்றனர்.

சகரியா தன் ஆலய ஊழிய காலப்பகுதி முடிந்த பிறகு, தன் வீட்டுக்குத் திரும்புகிறார். அதற்குப் பிறகு விரைவில் அது உண்மையிலேயே நிகழ்கிறது—எலிசபெத்து கர்ப்பவதியாகிறாள்! குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கையில், எலிசபெத்து ஜனங்களிடமிருந்து பிரிந்து, ஐந்து மாதங்கள் வீட்டிலே தங்குகிறாள்.

பின்னர் காபிரியேல் மறுபடியும் தோன்றுகிறார். அவர் யாரிடம் பேசுகிறார்? நாசரேத்து பட்டணத்திலிருந்து வந்த மரியாள் என்னும் பெயருடைய திருமணமாகாத இளம் பெண்ணிடம். இச்சமயம் என்ன செய்தியை அவர் வழங்குகிறார்? கவனியுங்கள்! “நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்” என்று காபிரியேல் மரியாளிடம் சொல்கிறார். “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.” காபிரியேல் கூடுதலாக சொல்கிறார்: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; . . . அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.”

இந்த இரண்டு செய்திகள் வழங்குவதை காபிரியேல் சிலாக்கியமாக உணருகிறார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். யோனையும், இயேசுவையும் பற்றி நாம் அதிகமாக வாசிக்கையில், பரலோகத்திலிருந்து வந்த இந்தச் செய்திகள் ஏன் அவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் அதிக தெளிவாக காண்போம். 2 தீமோத்தேயு 3:16; லூக்கா 1:5–33.

▪ பரலோகத்திலிருந்து என்ன இரண்டு முக்கிய செய்திகள் வழங்கப்படுகின்றன?

▪ செய்திகளை வழங்குவது யார், எவருக்கு அவைகள் வழங்கப்படுகின்றன?

▪ செய்திகள் நம்புவதற்கு ஏன் அவ்வளவு கடினமாயிருக்கின்றன?