Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 6

இயேசுவின் பிறப்பிலிருந்து மரணம் வரை

இயேசுவின் பிறப்பிலிருந்து மரணம் வரை

ஒரு நல்ல பெண்ணாகிய மரியாளிடம் காபிரியேல் தூதன் அனுப்பப்பட்டார். அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று அந்தத் தூதன் அறிவித்தார். அந்தக் குழந்தை பிற்பாடு என்றென்றும் ராஜாவாக ஆளும் என்றும் சொன்னார். இயேசு ஒரு குழந்தையாக தொழுவத்தில் பிறந்தார், மேய்ப்பர்கள் அவரை அங்கே போய்ப் பார்த்தார்கள். பிற்பாடு ஒரு நட்சத்திரம் கிழக்கிலிருந்த சில ஆட்களை இந்த இளம் பிள்ளையிடம் அழைத்து வந்தது. இந்த நட்சத்திரத்தை அனுப்பியது யார், இயேசுவைக் கொல்வதற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன, அவர் எப்படிக் காப்பாற்றப்பட்டார் என்பதையெல்லாம் நாம் அறிந்துகொள்வோம்.

அடுத்து, இயேசு 12 வயதாக இருக்கையில் போதகர்களுடன் ஆலயத்திலே பேசிக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு முழுக்காட்டப்பட்டார். அந்தச் சமயத்திலிருந்து ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கித்து, கற்பிக்கிற வேலையைச் செய்ய ஆரம்பித்தார், இதற்காகவே அவரை இந்தப் பூமிக்கு கடவுள் அனுப்பி வைத்திருந்தார். இந்த வேலையில் தமக்கு உதவி செய்ய 12 ஆட்களை இயேசு தேர்ந்தெடுத்தார், அவர்களைத் தமது அப்போஸ்தலராக்கினார்.

இயேசு நிறைய அற்புதங்களையும் செய்தார். சில மீன்களையும் ரொட்டிகளையும் மாத்திரமே வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு உணவளித்தார். நோயுற்றவர்களைச் சுகப்படுத்தினார், செத்துப் போனவர்களையும்கூட உயிர்த்தெழுப்பினார். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு அவருக்கு என்னவெல்லாம் நடந்தது, அவர் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதைப் பற்றி இறுதியில் நாம் வாசிப்போம். ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் இயேசு பிரசங்கம் செய்தார். ஆக, 34 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலப்பகுதியில் நடந்தவற்றையே பகுதி 6 விவரிக்கிறது.

 

இந்தப் பகுதியில்