Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 4

இஸ்ரவேலின் முதல் ராஜாவிலிருந்து பாபிலோன் சிறையிருப்பு வரை

இஸ்ரவேலின் முதல் ராஜாவிலிருந்து பாபிலோன் சிறையிருப்பு வரை

சவுல் இஸ்ரவேலின் முதல் ராஜாவாக ஆனார். ஆனால் யெகோவா அவரை பதவியிலிருந்து நீக்கிப்போட்டார், அவருக்குப் பதிலாக தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீதைப் பற்றி பல காரியங்களை நாம் தெரிந்துகொள்வோம். இளைஞராய் இருக்கையில் கோலியாத் என்ற இராட்சதனை எதிர்த்து சண்டையிட்டார். பிற்பாடு, பொறாமைபிடித்த ராஜாவான சவுலிடமிருந்து தப்பியோடினார். பின்பு முட்டாள்தனமான ஒரு காரியத்தைச் செய்யவிருந்தார், அப்போது அபிகாயில் என்ற ஓர் அழகிய பெண் அவரைத் தடுத்து நிறுத்தினாள்.

அடுத்து, தாவீதின் மகன் சாலொமோனைப் பற்றிய பல காரியங்களை நாம் படிப்போம். அவர் தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலின் ராஜாவாக ஆனார். இஸ்ரவேலின் முதல் மூன்று ராஜாக்கள் ஒவ்வொருவரும் 40 ஆண்டுகளுக்கு அரசாண்டார்கள். சாலொமோனின் மரணத்திற்குப் பின், இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று வட ராஜ்யம், மற்றொன்று தென் ராஜ்யம்.

அந்தப் பத்துக் கோத்திர வட ராஜ்யம் 257 ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தது, பிறகு அசீரியரால் அழிக்கப்பட்டது. இரண்டு கோத்திர தென் ராஜ்யமோ 133 ஆண்டுகளுக்குப் பிறகு அழிக்கப்பட்டது. இந்தச் சமயத்தில் இஸ்ரவேலர் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டு போனார்கள். ஆக, பகுதி நான்கு 510 ஆண்டுகளின் சரித்திரத்தைச் சொல்கிறது, இந்தக் காலப் பகுதியில் நடந்த பரபரப்பூட்டும் பல நிகழ்ச்சிகளை நாம் பார்க்கப் போகிறோம்.

 

இந்தப் பகுதியில்