Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 3

எகிப்திலிருந்து விடுதலை முதல் இஸ்ரவேலின் முதல் ராஜா வரை

எகிப்திலிருந்து விடுதலை முதல் இஸ்ரவேலின் முதல் ராஜா வரை

இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து சீனாய் மலைக்கு மோசே வழிநடத்தி வந்தார். அங்கே கடவுள் அவர்களுக்குச் சட்டங்கள் கொடுத்தார். பிற்பாடு, கானான் தேசத்தை வேவு பார்க்க மோசே 12 பேரை அனுப்பினார். ஆனால் அவர்களில் 10 பேர் கெட்ட செய்தியோடு வந்தார்கள். எகிப்துக்குத் திரும்பிப் போகும் எண்ணத்தை அந்த ஜனங்கள் மனதில் விதைத்தார்கள். இஸ்ரவேலருடைய அவநம்பிக்கை காரணமாக அவர்களைக் கடவுள் தண்டித்தார், ஆம் அந்த வனாந்தரத்தில் அவர்களை 40 ஆண்டுகளுக்கு அலைந்து திரியும்படி விட்டுவிட்டார்.

கடைசியில், இஸ்ரவேலரை கானான் தேசத்திற்குள் வழிநடத்த யோசுவா தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேசத்தை அவர்கள் கைப்பற்ற யெகோவா பல அற்புதங்களை நடப்பித்தார். யோர்தான் நதியை ஓடாமல் நிற்கச் செய்தார், எரிகோவின் மதில்களை விழப் பண்ணினார், அதோடு ஒரு நாள் பூராவும் சூரியனை அசையாது நிற்கச் செய்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் அந்தத் தேசம் கானானியரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

இஸ்ரவேல் தேசத்தின் முதல் நியாயாதிபதியாக யோசுவா இருந்தார்; அதன் பிறகு 356 ஆண்டுகளுக்கு வெவ்வேறு நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆண்டார்கள். பாராக், கிதியோன், யெப்தா, சிம்சோன், சாமுவேல் ஆகியோரையும் இன்னும் பலரையும் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். அதோடு, ராகாப், தெபொராள், யாகேல், ரூத், நகோமி, தெலீலாள் போன்ற பெண்களைப் பற்றியும் நாம் வாசிப்போம். ஆக, பகுதி மூன்று 396 ஆண்டுகளின் சரித்திரத்தைப் பற்றி சொல்கிறது.

 

இந்தப் பகுதியில்