Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 8

பைபிள் முன்னறிவிப்பது உண்மையாய் நடக்கிறது

பைபிள் முன்னறிவிப்பது உண்மையாய் நடக்கிறது

பைபிள், கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றிய உண்மை கதைகளைச் சொல்வதோடு, எதிர்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியும் சொல்கிறது. ஆனால் மனிதர்களால் எதிர்காலத்தைப் பற்றி சொல்ல முடியாது. அதனால்தான் பைபிள் கடவுளால் கொடுக்கப்பட்டதென்று நாம் தெரிந்துகொள்கிறோம். எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

கடவுளுடைய ஒரு பெரிய போரைப் பற்றி அது சொல்கிறது. இந்தப் போரின்போது பூமியிலிருந்து எல்லாக் கெட்ட காரியங்களையும் கெட்ட ஜனங்களையும் கடவுள் நீக்கிப்போடுவார், தம்மைச் சேவிக்கிறவர்களையோ அவர் பாதுகாப்பார். கடவுளுடைய ஊழியர்கள் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்குமாறு ராஜாவான இயேசு கிறிஸ்து பார்த்துக்கொள்வார்; அதுமட்டுமல்ல, இனி அவர்களுக்கு எந்த வியாதியோ மரணமோ வராதபடியும் பார்த்துக்கொள்வார்.

இந்தப் பூமியைக் கடவுள் ஒரு புதிய பரதீஸாக மாற்றப் போகிறார் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் இல்லையா? ஆனால் இந்தப் பரதீஸில் நாம் வாழ வேண்டுமானால் நாம் ஏதோவொன்றைச் செய்ய வேண்டும். இந்தப் புத்தகத்தின் கடைசி கதையில், கடவுள் தம்மைச் சேவிக்கிறவர்களுக்கு வைத்திருக்கிற அந்த அதிசயமான காரியங்களை அனுபவித்து மகிழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வோம். அதனால் பகுதி 8-ஐ வாசித்து எதிர்காலத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்.