“என்னைப் பின்பற்றி வா”

இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய முழு விவரத்தையும் சொல்வது இந்தப் புத்தகத்தின் நோக்கம் அல்ல. அதற்கு பதிலாக, அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதை இது கற்றுக்கொடுக்கிறது.

முகவுரை

இயேசுமீது இன்னும் அதிகமாக அன்பை வளர்த்துக்கொண்டு அவரை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் யெகோவாவுடைய மனதை இன்றும் என்றும் சந்தோஷப்படுத்துவீர்கள்.

அதிகாரம் 1

“என்னைப் பின்பற்றி வா”​—⁠என்ன அர்த்தத்தில்?

இயேசுவை உண்மையிலேயே பின்பற்றுகிறோம் என்பதை வெறுமனே வாயளவில் சொன்னாலோ மனதளவில் நினைத்தாலோ போதாது. அதற்கும்மேல் செய்ய வேண்டும்.

அதிகாரம் 2

‘நானே வழி, சத்தியம், வாழ்வு’

இயேசு மூலமாக மட்டும்தான் யெகோவாவை அணுக முடியும். யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசு முக்கிய பங்கு வகிக்கிறார்.

அதிகாரம் 3

‘நான் மனத்தாழ்மையாக இருக்கிறேன்’

ஆரம்பம் முதல் முடிவு வரை இயேசு மனத்தாழ்மையாகவே ஊழியம் செய்தார்.

அதிகாரம் 4

‘இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கம்’

சிங்கம் போன்ற தைரியத்தை இயேசு மூன்று விதங்களில் காட்டினார்: சத்தியத்தின் பக்கம் உறுதியாக நின்றபோது, நியாயத்தை செய்தபோது, எதிர்ப்பை சகித்தபோது.

அதிகாரம் 5

‘ஞானம் எனும் பொக்கிஷங்களெல்லாம். . . ’

அபாரமான ஞானத்தை இயேசு அவருடைய சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் காட்டினார்.

அதிகாரம் 6

‘அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்’

இயேசு அவருடைய அப்பாவுக்கு ஏற்கெனவே முழுமையாக கீழ்ப்படிந்தபோதுகூட எந்த அர்த்தத்தில் இயேசு “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்”, ‘பரிபூரணமாக்கப்பட்டார்’ என்று சொல்கிறோம்?

அதிகாரம் 7

‘சகித்திருந்தவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள்’

சகிப்புத்தன்மையை இயேசு முழுமையாகக் காட்டினார். சகித்திருக்க எது அவருக்கு உதவியது? சகிப்புத்தன்மையைக் காட்டுவதில் அவருடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

அதிகாரம் 8

“இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”

இயேசு ஏன் பிரசங்கித்தார், எதைப் பற்றி பிரசங்கித்தார், பூமியில் இருந்தபோது அவருக்கு இருந்த நியமிப்பைப் பற்றி அவர் என்ன நினைத்தார் என்று பாருங்கள்.

அதிகாரம் 9

‘புறப்படுங்கள் . . . சீஷர்களாக்குங்கள்’

சீஷர்களாக்கும்படி இயேசு கொடுத்த கட்டளை அவரை உண்மையாகப் பின்பற்றுகிற ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கும்.

அதிகாரம் 10

“எழுதப்பட்டிருக்கிறது”

இயேசு சத்தியத்தைச் சொல்லிக்கொடுத்தபோது, கடவுளுடைய வார்த்தையிலிருந்து மேற்கோள் காட்டி பேசினார், ஆதரித்துப் பேசினார், விளக்கிக் காட்டினார். நாமும் அவரை மாதிரியே மற்றவர்களுக்கு சத்தியத்தை சொல்லிக்கொடுக்கலாம்.

அதிகாரம் 11

“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”

இயேசு பயன்படுத்திய மூன்று கற்பிக்கும் முறைகளைப் பற்றிப் பாருங்கள். அதை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்றும் பாருங்கள்.

அதிகாரம் 12

“உவமைகளைப் பயன்படுத்தாமல் . . . அவர் பேசியதே இல்லை”

இயேசு உதாரணங்களைப் பயன்படுத்தியதற்கான இரண்டு முக்கியமான காரணங்களை பைபிள் சொல்கிறது.

அதிகாரம் 13

“தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்”

யெகோவாமேல் பலமான அன்பை வளர்த்துக்கொள்ள இயேசுவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

அதிகாரம் 14

“மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வந்தார்கள்”

பிள்ளைகள் உட்பட, மக்கள் எல்லாரும் கூட்டம் கூட்டமாக இயேசுவிடம் தயக்கமில்லாமல் வந்தார்கள். இயேசுவால் எப்படி இவ்வளவு அணுகத்தக்கவராக இருக்க முடிந்தது?

அதிகாரம் 15

‘மனம் உருகினார்’

மற்றவர்களிடம் இரக்கம் அல்லது கரிசனை காட்டுவதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது ஏன் ரொம்ப முக்கியம்?

அதிகாரம் 16

‘இயேசு . . . முடிவுவரை அவர்கள்மீது அன்பு காட்டினார்’

இயேசு ஊழியம் செய்த காலம் முழுவதும், தன்னுடைய சீஷர்கள்மீது அன்பு வைத்திருந்ததை நிரூபித்தார். நாம் எப்படி இயேசுவைப் போல் மற்றவர்கள்மீது அன்பு காட்டலாம்?

அதிகாரம் 17

‘இந்த அன்பைவிட மேலான அன்பு வேறு இல்லை’

இயேசுவைப் போல் நாம் எப்படி சுயதியாக அன்பைக் காட்டலாம்?

அதிகாரம் 18

“என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா”

ஒவ்வொரு நாளும் நாம் இயேசுவைத் தொடர்ந்து பின்பற்றி நடந்தால், நமக்கு சுத்தமான மனசாட்சியும் நல்ல எதிர்கால நம்பிக்கையும் கிடைக்கும்.