பெற்றோருக்கு...
உங்கள் குழந்தைகளுக்கு உங்களால் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த பரிசு என்ன? அன்பு, ஆலோசனை, பாதுகாப்பு என எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், யெகோவாவைப் பற்றியும் பைபிள் சத்தியங்களைப் பற்றியும் சொல்லித் தருவதுதான் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்க முடிந்த விலையுயர்ந்த பரிசு. (யோவான் 17:3) இப்படிச் சொல்லிக் கொடுக்கும்போது யெகோவாவை ஆழமாக நேசிக்கவும், முழு இருதயத்தோடு சேவிக்கவும் பிஞ்சு வயதிலேயே உங்கள் குழந்தைகளுக்கு உதவ முடியும்.—மத்தேயு 21:16.
சின்ன சின்ன பாடங்கள்தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்று நிறையப் பெற்றோர் சொல்கிறார்கள். எனவே, என் பைபிள் பாடங்கள் என்ற புதிய பிரசுரத்தை வெளியிடுவதில் நாங்கள் அதிக சந்தோஷமடைகிறோம். இதில், ஒவ்வொரு பாடமும் எளிய முறையில் சொல்லிக்கொடுக்கும் விதமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. படங்களும் அதிலுள்ள குறிப்புகளும் மூன்று வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்காகவே விசேஷமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் “சொல்லிக்கொடுங்கள்” என்ற பகுதியை உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து செய்யுங்கள். இந்தப் பிரசுரம் விளையாட்டுப் பொருள் அல்ல. பிள்ளைகளோடு சேர்ந்து வாசிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படிச் செய்யும்போது உங்களால் பிள்ளைகளோடு பேச்சுத் தொடர்பை வளர்க்க முடியும்.
“சிசுப் பருவத்திலிருந்தே” பைபிள் சத்தியங்களை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க இப்பிரசுரம் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.—2 தீமோத்தேயு 3:14, 15.
உங்கள் சகோதரர்கள்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு