Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு ஏற்ற ஒரு புத்தகமா?

உங்களுக்கு ஏற்ற ஒரு புத்தகமா?

உங்களுக்கு ஏற்ற ஒரு புத்தகமா?

“அநேகம் புத்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை” என்று சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பே சாலொமோன் சொல்லிவிட்டார். (பிரசங்கி 12:12) அது எவ்வளவு உண்மை என்பதை என்றும் இல்லாத அளவில் இன்று நாம் கண்கூடாக காண்கிறோம். தரமான இலக்கிய புத்தகங்களைத் தவிர, ஆயிரக்கணக்கில் புத்தம் புதிய புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் அச்சிடப்படுகின்றன. தேர்ந்தெடுக்க இத்தனை ஏராளமான புத்தகங்கள் இருக்கும்போது, நீங்கள் எதற்காக பைபிளை படிக்க வேண்டும்?

நேக மக்கள் பொழுதுபோக்கிற்காக அல்லது அறிவுக்காக புத்தகங்களைப் படிக்கிறார்கள். அல்லது இவ்விரண்டு காரணங்களுக்காகவும் படிக்கிறார்கள். பைபிளை படிப்பதற்கும் இதே காரணங்கள் பொருந்துகின்றன. ஆன்மீக தரத்தை உயர்த்தவும், மனதுக்கு இன்பம் அளிக்கவும் இதனை படிக்கலாம். ஆனால், பைபிளில் இதைக் காட்டிலும் இன்னும் அதிகம் இருக்கிறது. இது அரியதோர் அறிவுக் கருவூலமாக திகழ்கிறது.—பிரசங்கி 12:9, 10.

மனிதர்கள் நீண்டகாலமாக சிந்தித்துக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு, அதாவது நம்முடைய கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு பைபிள் பதிலளிக்கிறது. பலரும் இவ்வாறு வியக்கிறார்கள்: நாம் எங்கிருந்து வந்தோம்? வாழ்க்கையின் நோக்கம் என்ன? வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண்பது எப்படி? பூமியில் வாழ்க்கை எப்போதும் இருக்குமா? எதிர்காலத்தில் நமக்கு என்ன இருக்கிறது?

இங்கே ஒட்டுமொத்தமாக கொடுக்கப்பட்டுள்ள எல்லா நிரூபணங்களும் பைபிள் திருத்தமானது, நம்பகமானது என்பதை தெளிவாக உறுதிசெய்கின்றன. அதனுடைய நடைமுறையான ஆலோசனை எப்படி ஒரு அர்த்தமுள்ள, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நமக்கு உதவுகிறது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். நிகழ்காலத்தைப் பற்றி அது தந்துள்ள பதில்கள் திருப்திகரமாக இருப்பதால், கடந்த காலத்தைப் பற்றிய அதனுடைய பதில்களும், எதிர்காலத்தைப் பற்றிய அதனுடைய தீர்க்கதரிசனங்களும் கவனமாக சிந்திக்கப்பட தகுதியானவையே.

எவ்விதம் அதிக நன்மை அடையலாம்

மக்கள் பலர் பைபிளை படிக்க ஆரம்பித்திருப்பார்கள், ஆனால் புரிந்துகொள்ள கஷ்டமான பகுதிகள் வந்தவுடன் படிப்பதை நிறுத்திவிட்டிருப்பார்கள். உங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டிருந்தால், இதோ உங்களுக்கு உதவிடும் சில ஆலோசனைகள்.

பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு a (ஆங்கிலம்) போன்ற நவீன மொழிநடையில் இருக்கும் ஒரு நம்பகமான மொழிபெயர்ப்பை எடுத்துக்கொள்ளுங்கள். சிலர் சுவிசேஷ விவரப்பதிவுகளில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டுள்ள பகுதிகளை வாசிப்பதன் மூலம் ஆரம்பிப்பார்கள். மலைப் பிரசங்கம் போன்ற இயேசுவின் ஞானமான போதனைகள், மனித இயல்பைக் குறித்து ஆழமான விழிப்புணர்வை காட்டுகின்றன. மேலும் நம் வாழ்க்கை முறையை எவ்வாறு முன்னேற்றுவிக்கலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றன.—மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்கள் வரை காண்க.

பைபிளை அப்படியே வாசிப்பதோடுகூட, ஒவ்வொரு விஷயமாக, தலைப்புகளின் அடிப்படையில் படித்தால் இன்னும் கூடுதலான தகவல் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை பகுத்து பார்ப்பதை இது உட்படுத்துகிறது. ஆத்துமா, பரலோகம், பூமி, உயிர், மரணம் போன்ற தலைப்புகளைப் பற்றி பைபிள் உண்மையில் என்ன சொல்கிறது என்பதையும், கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன, அது என்ன சாதிக்க போகிறது என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்ளும்போது ஆச்சரியம் அடைவீர்கள். b தலைப்புகளின் அடிப்படையில் பைபிளை படிக்க ஓர் இலவச திட்டத்தை யெகோவாவின் சாட்சிகள் வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி நீங்கள் விசாரிக்க வேண்டுமென்றால், பக்கம் 2-ல் கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களைப் பயன்படுத்தி பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.

நிரூபணத்தை ஆராய்ந்து பார்த்தப்பின், பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம் என்ற முடிவுக்கு மக்கள் பலர் வந்துள்ளனர். அந்த கடவுள் ‘யெகோவாவே’ என்று வேதவசனங்கள் அடையாளம் காட்டுகின்றன. (சங்கீதம் 83:17) பைபிள் தெய்வீக மூலத்திலிருந்து வருகிறது என்று ஒருவேளை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால், அதை நீங்களாகவே ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? பைபிளை படிப்படியாக கற்றுக்கொண்ட பிறகு, தியானம் செய்த பிறகு, அதன் காலவரையறை இல்லாத ஞானத்தின் நடைமுறையான மதிப்பை நீங்களாகவே அனுபவித்தப் பிறகு, ஆக, உண்மையில், பைபிள் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் மாத்திரம் அல்ல, இது உங்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்தான் என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.

b நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம், தலைப்புகளின் அடிப்படையில் பைபிளை படிக்க பலருக்கு உதவியிருக்கிறது. இப்புத்தகம் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.