Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிக்கவேண்டிய ஒரு புத்தகம்

படிக்கவேண்டிய ஒரு புத்தகம்

படிக்கவேண்டிய ஒரு புத்தகம்

“பைபிளை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் வெளிப்படையாக பேசிய ஓர் இளம் பெண்ணிடம் கூறினார்.

“நீங்கள் பைபிளை எப்போதாவது படித்திருக்கிறீர்களா?” என்று அந்தப் பெண் கேட்டார்

தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்ட அந்தப் பேராசிரியர், தான் படிக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

“நீங்கள் படித்து பார்க்காத ஒரு புத்தகத்தைப் பற்றி எப்படி உங்களால் ஒரு கருத்தை ஆணித்தரமாகச் சொல்ல முடியும்?”

அந்தப் பெண் கேட்டதில் அர்த்தம் இருந்தது. தான் பைபிளை படித்தபிறகே அதைப் பற்றி கருத்து கணிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

அறுபத்தாறு புத்தகங்கள் அடங்கிய பைபிள், “மனித வரலாற்றிலேயே அநேகமாக பெரும் செல்வாக்கு செலுத்துகிற புத்தகத் தொகுப்பு” என்று விவரிக்கப்படுகிறது. 1உண்மையில் சொல்லப்போனால், அது உலகின் தலைசிறந்த கலையிலும் இலக்கியத்திலும் இசையிலும் அதிக செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. அது சட்டத்துறையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலக்கிய நயத்திற்காக அது மிகவும் போற்றப்படுகிறது, நிறைய படித்த பலராலும் அது மிக உயர்வாக மதிக்கப்படுகிறது. குறிப்பாக, பலதரப்பட்ட சமுதாய அந்தஸ்திலுள்ள மக்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் மாற்றம் ஆழமானது. வியப்பூட்டும் அளவில், அதை வாசிப்பவர் பலரில் உண்மைத்தன்மையை ஊற்றெடுக்க வைக்கிறது. வெறுமனே அதை வாசிப்பதற்காக தங்கள் உயிரையே சிலர் பணையம் வைத்திருக்கிறார்கள்.

ஒரு புறம் இப்படியிருக்க, மறுபுறம் பைபிளின் பேரில் சந்தேகமும் நிலவுகிறது. பைபிளை சிலர் ஒருபோதும் தொட்டுக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதன் பேரில் ஒரு கருத்தை உருவாக்கி, தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று மிகவும் பிடிவாதமாக நிற்கிறார்கள். பைபிளின் இலக்கிய நயத்தையோ வரலாற்று மதிப்பையோ அவர்கள் ஒருவேளை ஒத்துக்கொள்வார்கள், ஆனால் அவர்களுக்கு இருக்கும் வியப்பு என்னவென்றால்: பல்லாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட ஒரு புத்தகம், எப்படி இந்த நவீன உலகில் நடைமுறைக்கு ஒத்துவரும்? நாம் வாழ்ந்துகொண்டிருப்பதோ “தகவல் யுகம்” (“information age”). நிகழ்ச்சிகளைப் பற்றியும் தொழில்நுட்பத்தைப் பற்றியும் நமக்கு சுடச்சுட தகவல் கிடைத்து விடுகிறது. நவீன வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்கு, கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் “தலைசிறந்த” ஆலோசனை தயாராக கிடைக்கிறது. இன்று நடைமுறைக்கு ஒத்துவரும் தகவல் உண்மையில் பைபிளில் அடங்கியிருக்கிறதா?

இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவே இந்தச் சிற்றேடு முயல்கிறது. மத கருத்துக்களையோ மத நம்பிக்கைகளையோ உங்கள்மீது திணிப்பதற்காக இது வடிவமைக்கப்படவில்லை. ஆனால், வரலாற்று ரீதியில் செல்வாக்குச் செலுத்திய இந்தப் புத்தகமாகிய பைபிள், நீங்கள் கருத்தூன்றிப் பார்க்க தகுதியான ஒரு புத்தகமே என்பதை உங்களுக்கு காட்டுவதற்காகவே இந்தச் சிற்றேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தோடு பைபிள் அப்படியே ஒன்றிவிட்டதால், “ஒருவர் விசுவாசியாக இருந்தாலும் சரி அவிசுவாசியாக இருந்தாலும் சரி, அவருக்கு பைபிள் போதனைகளும் விவரப்பதிவுகளும் தெரியவில்லையென்றால், கலாச்சார ரீதியில் அவர் கல்வி அறிவு இல்லாதவரே” என்று சில கல்விமான்கள் திடமாக நம்புவதை 1994-ல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை குறிப்பிட்டது.

2ஒருவேளை, இதில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் தகவலை வாசித்தப்பிறகு, ஒருவர் மதப்பற்றுள்ளவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கண்டிப்பாக படித்துப் பார்க்கவேண்டிய ஒரு புத்தகம் பைபிள் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்.

[பக்கம் 3-ன் படம்]

“ஒரு புத்தகத்தை நான் படித்தேன். உண்மையில், அதைப் படித்ததால் எனக்கு ஆன்மீக அறிவொளி கிடைத்தது.—ஒரு புத்தகமா? ஆம், அது பழமையான, போலிப்பகட்டு இல்லாத, எளிமையான, வெளியுலக செல்வாக்கு இல்லாத ஒரு புத்தகம் . . . அந்தப் புத்தகத்தின் பெயரை வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், அதுதான் பைபிள்.”—ஹைன்ரிக் ஹைனி, 19-ம் நூற்றாண்டு ஜெர்மன் எழுத்தாளர்.3