Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேறு எந்தப் புத்தகம்

வேறு எந்தப் புத்தகம்

வேறு எந்தப் புத்தகம்

உலகின் தலைசிறந்த கலையிலும் இலக்கியத்திலும் இசையிலும் அதிக செல்வாக்கு செலுத்தியிருக்கிறது; அதேசமயம், சட்டத்துறையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

பிரதிகளிலிருந்து பிரதிகளை மனிதன் எடுத்தும், ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலைத்திருக்கிறது, முக்கியமாக அது எழுதப்பட்ட விதமாகவே நம் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது?

அதனை மொழிபெயர்க்க, கஷ்டங்களை மட்டுமின்றி, தன் உயிரையும் கொடுக்க முன்வரும் அளவுக்கு ஒருவரின் உள்ளத்தில் தன்னலமற்ற மனப்பான்மையைத் தூண்டிவிட்டிருக்கிறது?

2,100-க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு கிடைக்கிறது?

பல நூற்றாண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை முன்கூட்டியே சொல்கிறது?

குலம், இனம், தேசம் என்று பல்வேறு பின்னணிகள் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட உதவிடும் கால வரம்பற்ற நியமங்கள் அடங்கியதாய் இருக்கிறது?

நிறைவேறிய தெள்ளத் தெளிவான முன்கணிப்புகளை கொண்டுள்ளது, வரலாற்று உண்மைகளும் அவற்றின் நிறைவேற்றத்தை உறுதிசெய்தன?

அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை ஆராய்ந்து பார்ப்பது தகுதியானது அல்லவா?