Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் முழுக்காட்டுதல் குறிப்பது

உங்கள் முழுக்காட்டுதல் குறிப்பது

அதிகாரம் 12

உங்கள் முழுக்காட்டுதல் குறிப்பது

இயேசு யோர்தான் நதியில் பொ.ச. 29-ம் ஆண்டில் முழுக்காட்டப்பட்டார். யெகோவா தாமே அதைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்து தம்முடைய அங்கீகாரத்தை வெளிப்படுத்திக் கூறினார். (மத். 3:16, 17) மூன்றரை ஆண்டுகளுக்கப்பால், அவருடைய உயிர்த்தெழுதலைப் பின் தொடர்ந்து இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பின்வருமாறு கட்டளைகளைக் கொடுத்தார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுங்கள் [முழுக்காட்டுங்கள், NW]”. (மத். 28:18, 19) இயேசு அங்கே கட்டளையிட்டதற்கிணங்க நீங்கள் முழுக்காட்டப்பட்டிருக்கிறீர்களா? அல்லது அப்படிச் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறீர்களா?

2 எப்படியிருந்தாலும் முழுக்காட்டுதலைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்வது முக்கியம். கவனிக்க வேண்டிய கேள்விகளில் பின்வருபவையும் அடங்கியிருக்கின்றன: இன்று கிறிஸ்தவர்களின் முழுக்காட்டுதல் இயேசுவின் முழுக்காட்டுதல் குறித்த அதையே குறிக்கிறதா? முழுக்காட்டுதலைப் பற்றி பைபிள் சொல்லுகிற எல்லாம் உங்களுக்குப் பொருந்துகிறதா? கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டு குறித்துக் காட்டுவதற்கு இணங்க வாழ்வதில் என்ன உட்பட்டிருக்கிறது?

யோவான் நடப்பித்த முழுக்காட்டுதல்கள்

3 இயேசு முழுக்காட்டப்பட்டதற்கு ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு முன்பு, முழுக்காட்டும் யோவான் யூதேயாவின் வனாந்தரத்துக்குள் சென்று: “மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்று பிரசங்கித்தான். (மத். 3:1, 2) அந்தப் பிரதேசம் முழுவதிலுமிருந்த ஜனங்கள் யோவான் சொன்னதைக் கேட்டு, வெளிப்படையாய்த் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தானில் அவனால் முழுக்காட்டப்பட்டார்கள். இந்த முழுக்காட்டுதல் யூதருக்குரியது.—அப். 13:23, 24; லூக்கா 1:13-16.

4 அந்த யூதர்கள் உடனடியாக மனந்திரும்புவது அவசியமாயிருந்தது. பொ.ச.மு. 1513-ம் ஆண்டில் சீனாய் மலையில் அவர்களுடைய முன்னோர்கள் யெகோவா தேவனுடைய ஒரு தேசீய உடன்படிக்கைக்குள் பிரவேசித்திருந்தார்கள். ஆனால் அந்த உடன்படிக்கையின்கீழ் தங்களுடைய உத்தரவாதங்களின்படி அவர்கள் வாழவில்லை, ஆகவே பாவிகளாக அதால் கண்டனம் செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் நெருக்கடியான தீர்வுகட்ட நிலையில் இருந்தார்கள். மல்கியா முன்னறிவித்த “யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள்” சமீபித்திருந்தது, மேலும் பொ.ச. 70-ல் அது எருசலேமின் மேல் திடீர் அழிவைக் கொண்டுவந்தது. எலியா கொண்டிருந்ததைப் போல் உண்மையான வணக்கத்துக்காக வைராக்கியங்கொண்டிருந்த முழுக்காட்டும் யோவான், அந்த அழிவுக்கு முன்பாக, “கர்த்தருக்குத் [யெகோவாவுக்கு, NW] தகுதியான ஒரு ஜனத்தை அவருக்கு ஆயத்தப்படுத்து”ம்படி அனுப்பப்பட்டான். அவர்கள் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு விரோதமாகச் செய்தத் தங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி, யெகோவா அவர்களுக்கு அனுப்பும் கடவுளுடைய குமாரனை ஏற்பதற்கு இருதயத்திலும் மனதிலும் ஆயத்தமாயிருக்க வேண்டும். (மல்கியா 4:4-6; லூக்கா 1:17; அப். 19:4) யோவான் விளக்கிக் கூறினபடி கடவுளுடைய குமாரன் பரிசுத்த ஆவியினால் முழுக்காட்டுவார். (இந்த முழுக்காட்டுதலை உண்மையுள்ள சீஷர்கள் முதலாவது பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளின் போது அனுபவித்தார்கள்), அக்கினியினாலும் முழுக்காட்டுவார் (மனந்திரும்பாதவர்கள் மேல் இது பொ.ச. 70-ல் அழிவாக வந்தது). (லூக்கா 3:16) ‘அக்கினியினால் முழுக்காட்டப்படும்’ அனுபவத்தை அவர்கள் ஒவ்வொருவரும் தவிர்க்க அந்த முதல் நூற்றாண்டு யூதர்கள் தங்கள் மனந்திரும்புதலின் அடையாளமாகத் தண்ணீரில் முழுக்காட்டப்படுவது அவசியமாயிருந்தது, மேலும் வாய்ப்பு திறக்கப்படுகையில் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷராக வேண்டும்.

5 முழுக்காட்டப்படும்படி யோவானிடம் வந்தவர்களுக்குள் இயேசுதாமேயும் இருந்தார். அனால் ஏன்? அறிக்கையிடுவதற்குப் பாவங்கள் எதுவும் இயேசுவுக்கு இல்லையென்று யோவான் அறிந்திருந்தான், ஆகவே அவன்: “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற [முழுக்காட்டப்பட] வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா,” என்று சொன்னான். ஆனால் இயேசுவின் முழுக்காட்டுதல் வேறுபட்ட ஒன்றை அடையாளப்படுத்தப் போவதாக இருந்தது. ஆகவே அவர்: “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது,” என்று பதிலுரைத்தார். (மத். 3:13-15) இயேசு முழுக்காட்டப்படுவது பாவத்திலிருந்து மனந்திரும்புதலை அடையாளப்படுத்த முடியாது; அவர் கடவுளுக்குத் தம்மை ஒப்புக்கொடுக்கவும் வேண்டியதில்லை, ஏனென்றால் அவர் ஏற்கெனவே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்த ஜனத்தின் ஓர் உறுப்பினராக இருந்தார். அதற்கு மாறாக, யூதக்கருத்தின்படி 30 வயதில் முழுவளர்ச்சி பருவத்தை அடைந்தபோது அவர் முழுக்காட்டப்பட்டது, தம்முடைய பரம தகப்பனின் மேலுமான சித்தத்தைச் செய்வதற்குத் தம்மை அவருக்கு அளிப்பதை அடையாளப்படுத்திற்று. “மனுஷனாகிய கிறிஸ்து இயேசு”வுக்கான கடவுளுடைய சித்தம், ராஜ்யம் சம்பந்தப்பட்ட நடவடிக்கை உட்பட்டதாயிருந்தது, மேலும் மீட்பின் கிரயமாகவும் புதிய உடன்படிக்கைக்கு ஆதாரமாகவும் தம்முடைய பரிபூரண மனித உயிரைப் பலிசெலுத்துவதும் அதில் அடங்கியிருந்தது. (லூக்கா 8:1; 17:20, 21; எபி. 10:5-10; மத். 20:28; 26:28; 1 தீமோ. 2:5, 7) தம்முடைய தண்ணீர் முழுக்காட்டு அடையாளப்படுத்தினதை இயேசு மிகமுக்கிய கவனத்துக்குரியதாக ஏற்றார். மற்ற அக்கறைகளுக்குத் தம் கவனம் திருப்பப்பட அவர் அனுமதிக்கவில்லை. தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவு வரையாக அவர் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதிலேயே உறுதியாக நிலைத்திருந்தார்.—யோவான் 4:34.

மரணத்துக்குள் முழுக்காட்டப்படுதல்

6 தண்ணீரில் இயேசு முழுக்காட்டப்பட்டது அடையாளப்படுத்தினதற்கு ஒத்திசைய, அவர் மற்றொரு முழுக்காட்டையும் அனுபவித்தார். தனக்குக் கடவுள் நியமித்த வேலை தன்னுடைய மனித உயிரைப் பலியாக செலுத்துவதற்கு வழிநடத்துமென்றும் ஆனால் மூன்றாம் நாளில் தான் ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பப்படுவார் என்றும் அவர் அறிந்திருந்தார். இதை அவர் ஒரு “முழுக்காட்டாகக்” குறிப்பிட்டுப் பேசினார். இந்த முழுக்காட்டு பொ.ச. 29-ல் தொடங்கினது, ஆனால் அவர் உண்மையில் மரித்து உயிர்த்தெழுப்பப்படும் வரையில் அது முடியவில்லை. ஆகவே அவருடைய தண்ணீர் முழுக்காட்டுக்கு ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் சரியாகவே பின்வருமாறு சொல்ல முடிந்தது: “நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு [முழுக்காட்டுதல் உண்டு], அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.”—லூக்கா 12:50.

7 தம்முடைய பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் ஆளப் போகிறவர்களும் அவ்வாறே மரணத்துக்குள் முழுக்காட்டப்பட வேண்டும். (மாற்கு 10:37-40; கொலோ. 2:12) தங்களுடைய மரணத்தின்போது அவர்கள், இயேசு செய்ததைப் போல், தங்கள் மனித உயிரை என்றுமாகத் துறந்துவிடுகிறார்கள். தங்களுடைய உயிர்த்தெழுதலின்போது பரலோக ஆளுகையில் அவரைச் சேர்ந்துகொள்ளுகிறார்கள். இந்த முழுக்காட்டை, எந்த மனிதனுமல்ல, கடவுளே தம்முடைய பரலோகக் குமாரன் மூலமாய் நடப்பிக்கிறார்.

8 இயேசுவின் மரணத்துக்குள் முழுக்காட்டப்படுகிறவர்கள் “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற [முழுக்காட்டப்பட்ட]”தாகச் சொல்லப்படுகிறார்கள். ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட அவருடைய சபையின் உறுப்பினராயிருக்கிற அவர்கள் அவருடைய சரீரமாகத் தங்கள் தலையாகிய கிறிஸ்துவுடன், அவர் மூலமாய் வருகிற பரிசுத்த ஆவியினால் ஒன்றாக இணைக்கப்படுகிறார்கள். அந்த ஆவி, கிறிஸ்துவின் உயர்வான சுபாவத் தன்மையைப் பிரதிபலிக்கும்படி அவர்களுக்கு உதவிசெய்வதால், அவர்கள் எல்லாரும் ‘கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே ஆளாகிறார்கள்’ என்று அவர்களைக் குறித்துச் சொல்லலாம்.—ரோமர் 6:3-5; 1 கொரி. 12:13; கலாத். 3:27, 28, NW; அப். 2:32, 33.

கிறிஸ்தவ சீஷரின் தண்ணீர் முழுக்காட்டு

9 இயேசுவின் முதல் சீஷர்களை யோவான் தண்ணீரில் முழுக்காட்டி, பின்பு, இயேசுவின் ஆவிக்குரிய மணவாட்டியின் எதிர்கால உறுப்பினராக அவர்களை இயேசுவினிடம் வழி நடத்தினான். (யோவான் 3:25-30) இயேசுவின் வழிநடத்துதலின்கீழ் அவர்களுங்கூட சிலரை முழுக்காட்டினார்கள், இது யோவான் முழுக்காட்டின அதே உட்கருத்தைக் கொண்டிருந்தது. (யோவான் 4:1-3) என்றபோதிலும், பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாள் தொடங்கி அவர்கள், “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டும்படியான அதிகாரக் கட்டளையை நிறைவேற்றத் தொடங்கினார்கள். (மத். 28:19) இது குறிப்பதைப் பின்வரும் கேள்விகளுடன் இடக்குறிப்பு கொடுத்திருக்கும் வேத வசனங்களின் உதவியைக் கொண்டு திரும்பக் கவனித்துப் பார்ப்பது மிகவும் நன்மை பயக்குவதாக நீங்கள் காண்பீர்கள்:

‘பிதாவின் நாமத்தில்’ முழுக்காட்டப்படுவதற்கு ஒருவன் பிதாவைக் குறித்து எதை அறிந்து ஒப்புக்கொள்ள வேண்டும்? (2 இரா. 19:15; சங். 3:8; 73:28; ஏசா. 6:3; ரோமர் 15:6; எபி. 12:9; யாக். 1:17)

“குமாரன்” நாமத்தில் முழுக்காட்டப்படுவதற்கு எதை அறிந்து ஒப்புக்கொள்ள வேண்டும்? (மத். 16:16, 24; பிலிப். 2:9-11; எபி. 5:9, 10)

“பரிசுத்த ஆவியின்” நாமத்தில் முழுக்காட்டப்படும்படி ஒருவன் எதை நம்பவேண்டும்? (லூக்கா 11:13; யோவான் 14:16, 17; அப். 1:8; 10:38; கலாத். 5:22, 23; 2 பேதுரு 1:21)

10 இயேசு கொடுத்த அந்தக் கட்டளைகளின்படி முதன்முதல் முழுக்காட்டப்பட்டவர்கள் யூதர்களே (யூத மதத்தைத் தழுவினவர்களுங்கூட), இவர்கள் ஒரு ஜனமாக ஏற்கெனவே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்தார்கள், பொ.ச. 36 வரையில் அவர் அவர்களுக்குத் தனிப்பட்ட சலுகை காட்டினார். என்றபோதிலும், கிறிஸ்தவ சீஷராகும் சிலாக்கியம் சமாரியருக்கும் புறஜாதியாருக்கும் நீட்டப்பட்டபோது, அவர்கள் முழுக்காட்டப்படுவதற்கு முன்பு, யெகோவாவை அவருடைய குமாரனின் சீஷர்களாகச் சேவிப்பதற்கு, அவரவர் தனித்தனியே யெகோவாவுக்கு நிபந்தனையில்லாமல் முழுமையாய் ஒப்புக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. தொடர்ந்து நம்முடைய நாள் வரை, யூதர்கள் உட்பட எல்லாருக்கும், இதுவே கிறிஸ்தவ தண்ணீர்-முழுக்காட்டின் உட்கருத்து. இந்த “ஒரே முழுக்காட்டு” உண்மையான கிறிஸ்தவர்களாகிற எல்லாருக்கும் பொருந்துகிறது. இவ்வாறு அவர்கள் யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளாகின்றனர், கடவுளுடைய நியமிக்கப்பட்ட ஊழியராகின்றனர்.—எபே. 4:5; 2 கொரி. 6:3, 4.

11 இப்படிப்பட்ட முழுக்காட்டுதல் கடவுளுடைய பார்வையில் மிகுந்த மதிப்புள்ளது. நோவா பேழையைக் கட்டினதையும் அதில் அவனும் அவனுடைய குடும்பமும் ஜலப்பிரளயத்தினூடே பாதுகாக்கப்பட்டதையும் குறிப்பிட்ட பின்பு, அப்போஸ்தலனாகிய பேதுரு இதற்குக் கவனத்தை இழுத்தான். அவன் எழுதினதாவது: “அது ஒப்பனையாகக் குறிக்கும் ஞானஸ்நானமானது [முழுக்காட்டானது] இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் உங்களையும் இரட்சிக்கிறது. அது மாம்ச அழுக்கை நீக்குவதல்ல, நல் மனச் சாட்சியைக் கடவுளினிடம் நாடி வேண்டிக்கொள்வதே யாம்”. (1 பேதுரு 3:21) நோவா கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்ததற்கும் கடவுள் கொடுத்த வேலையைப் பின்பு உண்மையுடன் செய்ததற்கும் அந்தப் பேழை தெளிவாக உணரக்கூடிய அத்தாட்சியாக இருந்தது. இது அவனுடைய பாதுகாப்புக்கு வழிநடத்தினது. அதற்கு ஒப்பான முறையில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவில் வைக்கும் விசுவாசத்தின் ஆதாரத்தின்பேரில் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக் கொடுத்து, அதன் அடையாளமாக முழுக்காட்டப்பட்டு, பின்பு நம்முடைய, நாளிலுள்ள தம்முடைய ஊழியருக்கான கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்கிறவர்கள் இந்தத் தற்போதைய பொல்லாத உலகத்திலிருந்து காக்கப்படுகிறார்கள். (கலாத். 1:3, 4) அவர்கள் இனிமேலும், இந்த உலகத்தின் மற்ற எல்லாருடனும் அழிவை நோக்கிச் சென்று கொண்டில்லை. அவர்கள் அதிலிருந்து காக்கப்பட்டிருக்கிறார்கள், கடவுள் அவர்களுக்கு நல் மனச்சாட்சியைக் கொடுத்திருக்கிறார்.

நம்முடைய பொறுப்புகளை நடைமுறை வாழ்க்கையில் நிறைவேற்றுதல்

12 முழுக்காட்டப்பட்டிருப்பது தானே இரட்சிப்பின் உறுதியளிப்பு என்ற முடிவுக்கு வருவது தவறு. ஒருவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் யெகோவாவுக்குத் தன்னை உண்மையில் ஒப்புக் கொடுத்து அதன் பின் கடவுளுடைய சித்தத்தை முடிவு வரை உண்மையுடன் நிறைவேற்றினால் மாத்திரமே அதற்கு மதிப்பு உண்டு.—மத். 24:13.

13 இயேசுவுக்கான கடவுளுடைய சித்தத்தில் அவர், மனிதனாகத் தம்முடைய உயிரை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பதும் அடங்கியிருந்தது. அவருடைய மனித உயிர் மரணத்தில் பலியாகச் செலுத்தப்பட வேண்டும். நம்முடைய காரியத்தில், நம்முடைய உடல் தன்னலத் தியாகஞ்செய்யும் வாழ்க்கையை நடத்த கடவுளுக்கு அளிக்கப்படவேண்டும். அதைத் தனிப்பட்ட வண்ணமாய்க் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கே பயன்படுத்த வேண்டும். (ரோமர் 12:1, 2) எப்போதாவது ஒரு சமயம் என்றாலுஞ்சரி, நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகத்தைப் போல் நாம் நம்மை வேண்டுமென்றே நடத்திக் கொண்டால் அல்லது பெயரளவுக்கே ஏதோ சேவை கடவுளுக்குச் செய்துவிட்டு தன்னல நாட்டங்களைச் சுற்றி நம்முடைய வாழ்க்கையைக் கட்டினால் நிச்சயமாகவே கடவுளுடைய சித்தத்தைத் தனிப்பட செய்கிறவர்களாக நாம் இல்லை. (1 பேதுரு 4:1-3; 1 யோவான் 2:15-17) நித்திய ஜீவனை அடைவதற்குத் தான் என்ன செய்ய வேண்டுமென்று ஒரு யூதன் கேட்ட போது, ஒழுக்கமுறைப்படி சுத்தமான வாழ்க்கை நடத்துவதன் முக்கியத்துவத்தைக் குறித்து இயேசு அவனுக்கு நினைப்பூட்டினார், பின்பு, கிறிஸ்தவ சீஷனாயிருப்பதை, அதாவது இயேசுவைப் பின்பற்றுவதை வாழ்க்கையில் முதல் முக்கிய காரியமாக்க வேண்டுமென்று அவனுக்குக் குறிப்பிட்டுக் காட்டினார். பொருள் சம்பந்தமானவற்றை நாடித் தொடருவதை முதல் வைத்து இதை இரண்டாவது இடத்தில் வைக்க முடியாது.—மத். 19:16-21.

14 மேலும் இயேசுவைக் குறித்தக் கடவுளுடைய சித்தத்தில், ராஜ்யம் சம்பந்தப்பட்ட இன்றியமையாத வேலையும் உட்பட்டிருந்ததென்பதை நினைவில் வைக்கவேண்டும். இயேசு தாமேயும் அரசராக அபிஷேகஞ்செய்யப்பட்டார். ஆனால் பூமியில் இருக்கையில் அவர் அந்த ராஜ்யத்தைக் குறித்து அறிவிக்கும் ஆர்வமுள்ள சாட்சியாகவும் இருந்தார். அதே வகையான சாட்சிபகரும் வேலை நமக்கு இருக்கிறது. அதில் முழு இருதயத்துடனும் ஈடுபடுவதற்கு எல்லாக் காரணமும் நமக்கு உண்டு. அப்படிச் செய்வதன் மூலம் நாம், யெகோவாவின் அரசாட்சிக்கு நம்முடைய மதித்துணர்வையும், உடன் தோழரான மனிதருக்கு நம்முடைய அன்பையும் நிரூபித்துக்காட்டுகிறோம். மேலும் அனைவரும் ராஜ்ய சாட்சிகளாயிருக்கிற உலகமெங்குமுள்ள நம்முடைய உடன் வணக்கத்தாருடன், ராஜ்ய ஆட்சி எல்லையில் நித்திய ஜீவனை அடையும் இலக்கை நோக்கி முன்னேறுவதில் ஒற்றுமைப்பட்டிருப்பதையும் காட்டுகிறோம்.

மறு கலந்தாலோசிப்பு

● இயேசுவின் முழுக்காட்டுதலுக்கும் இன்றைய தண்ணீர் முழுக்காட்டுதலுக்குமுள்ள ஒருமைப்பாடுகளும் வேறுபாடுகளும் யாவை?

● யோவானின் முழுக்காட்டு யாருக்குக் கருதப்பட்டது? யார் மரணத்துக்குள் முழுக்காட்டப்படுகிறார்கள்? யார் “கிறிஸ்து இயேசுவுக்குள் முழுக்காட்டப்படுகிறார்கள்”?

● கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டுதலின் பொறுப்புகளை நடைமுறை வாழ்க்கையில் நிறைவேற்றுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?

[கேள்விகள்]

1, 2. (எ) தண்ணீர் முழுக்காட்டுதல் ஏன் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும்? (பி) பத்தி 2-ல் குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு எப்படிச் சுருக்கமாய்ப் பதிலளிப்பீர்கள்?

3. யோவானின் முழுக்காட்டுதல் யாருக்கு மாத்திரமே உரியதாயிருந்தது?

4. (எ) யூதர்கள் ஏன் உடனடியாக மனந்திரும்புவது அவசியமாயிருந்தது? (பி) தாங்கள் ‘அக்கினியினால் முழுக்காட்டப்படுவதைத்’ தவிர்க்க அவர்கள் என்ன செய்ய வேண்டியதாயிருந்தது?

5. (எ) இயேசு முழுக்காட்டப்படும்படி வந்தபோது யோவான் ஏன் தடைக் கூறினான்? (பி) தண்ணீரில் இயேசுவின் முழுக்காட்டு எதை அடையாளப்படுத்திற்று? (சி) தம்மைக் குறித்தக் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் இயேசு எவ்வளவு முக்கிய கவனம் செலுத்தினார்?

6. வேறு என்ன முழுக்காட்டுதலுக்கு இயேசு உட்பட்டார்? அது எவ்வளவு காலம் நீடித்தது?

7. (எ) வேறு எவரும் மரணத்துக்குள் முழுக்காட்டப்பட்டார்கள்? (பி) இந்த முழுக்காட்டுதலை யார் நடப்பிக்கிறார்?

8. அவர்கள் ‘கிறிஸ்து இயேசுவுக்குள் முழுக்காட்டப்படுவது’ எதைக் குறித்தது?

9. (எ) மத்தேயு 28:19-ல் கட்டளையிடப்பட்ட முறையான முழுக்காட்டுதல் எப்பொழுது முதல் நடந்தேறிற்று? (பி) இந்தப் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளையும் வேதவசனங்களையும் உபயோகித்து, முழுக்காட்டப்பட வருகிறவர்கள் எதை அறிந்து ஒப்புக்கொள்ள வேண்டுமென்று இயேசு குறிப்பிட்டதைப் பகுத்தாராய்ந்து பாருங்கள்.

10. (எ) இன்று கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டு எதை அடையாளப்படுத்துகிறது? (பி) இது எப்படி இயேசுவின் சொந்த முழுக்காட்டிலிருந்து வேறுபடுகிறது? (சி) வேத எழுத்துக்களின்படி தகுதிபெற்ற ஆட்கள் முழுக்காட்டப்படுகையில், அவர்கள் என்னவாகிறார்கள்?

11. (எ) கிறிஸ்தவ தண்ணீர்-முழுக்காட்டு எதற்கு ஒப்பாயிருக்கிறது, எப்படி? (பி) இவ்வாறு கிறிஸ்தவன் எதிலிருந்து காக்கப்படுகிறான்?

12. ஒருவன் முழுக்காட்டப்படுவது தானே ஏன் அவனுக்கு இரட்சிப்பை உறுதியளித்து விடுவதில்லை?

13. (எ) முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வகையில் பயன்படுத்த வேண்டுமென்பது கடவுளுடைய சித்தம்? (பி) கிறிஸ்தவ சீஷனாயிருப்பது நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாயிருக்க வேண்டும்?

14. (எ) ராஜ்யம் சம்பந்தமாக எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிற பொறுப்பு என்ன? (பி) 101-ம் பக்கத்தில் படமாக விளக்கிக் காட்டியிருக்கிறபடி, இந்த வேலையைச் செய்வதற்குப் பலன்தரத்தக்க வழிகள் சில யாவை? (சி) இந்த வேலையில் நாம் உண்மையில் முழு இருதயத்துடனும் பங்கு கொள்வது, எதற்கு அத்தாட்சியாக இருக்கிறது?

[பக்கம் 101-ன் பெட்டி/படங்கள்]

என்ன வழிகளில் ராஜ்யத்தைப் பிரஸ்தாபிக்கிறீர்கள்?

வீடு வீடாக

அக்கறை காட்டுவோரைச் சந்திக்கத் திரும்பச் செல்வதன் மூலம்

வீட்டு பைபிள் படிப்புகளில்

வீதிகளில்

பள்ளித் தோழருக்கு

உடன் வேலையாளருக்கு