“ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்”
அதிகாரம் 17
“ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்”
யெகோவாவின் சாட்சிகளின் சபைக் கூட்டங்களுக்கு ஆட்கள் முதல் வருகையில் அங்கே காட்டப்படும் அன்பு அவர்கள் மனதை ஆழ்ந்து கவருகிறது. அன்பான தோழமையிலும் தங்களுக்குத் தனியே கொடுக்கப்படும் நல்வரவேற்பிலும் அவர்கள் இதைக் கவனிக்கிறார்கள்.
2 நம்முடைய மாநாடுகளுக்கு வரும் பெரும்பான்மையர் மிக நல்ல ஒழுங்கான முறையில் நடந்துகொள்வதையும் அதற்கு வரும் வெளியாட்கள் கவனிக்கிறார்கள். இத்தகைய ஒரு மாநாட்டைப் பற்றி செய்தி அறிவிப்பாளர் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: ‘மயக்கப் பொருள் அல்லது சாராய போதையில் ஒருவரும் இல்லை. கத்துவதும் கூச்சல் போடுவதும் இல்லை. இடித்துத் தள்ளுவது கிடையாது. நெருக்குவது கிடையாது. ஒருவரும் திட்டுவதும் சபிப்பதும் கிடையாது. அசுத்தமான கேலி பரியாசமோ கெட்ட வார்த்தைகள் பேசுதலோ கிடையாது. சிகரெட் புகை ஆகாயத்தை நிரப்பவில்லை. திருடுதல் கிடையாது. தகரக் கலங்களைப் புல்வெளிகளில் ஒருவரும் எரிகிறதில்லை. இது மெய்யாகவே அசாதாரணமாக இருந்தது!’ இதெல்லாம், ‘அயோக்கிமானதைச் செய்யாத, தனக்கானதை நாடாத’ வகையான அன்பின் அத்தாட்சியாகும்.—1 கொரி. 13:4-8, தி.மொ.
3 அன்பு, உண்மையான ஒவ்வொரு கிறிஸ்தவனையும் அடையாளங்காட்டும் பண்பாகும். (யோவான் 13:35) நாம் ஆவிக்குரிய பிரகாரமாய் வளருகையில் அன்பை மேலுமதிக முழுமையாய் வெளிப்படுத்த வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல், தன் சகோதரரின் அன்பு “இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகு”ம்படி ஜெபித்தான். (பிலிப். 1:9; 1 தெச. 3:12) மேலும் பேதுரு, ‘முழு சகோதரக் கூட்டத்தாரிலும்’ அன்புகூருவதற்குத் தங்கள் அன்பை விரிவாக்கும்படி உடன் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்தினான். (1 பேதுரு 2:17) தனியே நாம் தாமே அறிமுகமாகும்படி சிறிதும் முயற்சி எடுக்காமல் வெறுமென மற்றவர்களுடன் கூட்டங்களில் கூடிவருவதைப் பார்க்கிலும் அதிகம் செய்யும்படி நம்முடைய அன்பு நம்மைத் தூண்டி இயக்க வேண்டும். “எப்படியிருக்கிறீர்கள்?” என்று அவ்வப்போது அன்புடன் சொல்வதைப் பார்க்கிலும் அதிகம் உட்படவேண்டும். அது தன்னல தியாகஞ்செய்யும் அன்பாக இருக்க வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய யோவான் காட்டினான். அவன் பின்வருமாறு எழுதினான்: “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்.” (1 யோவான் 3:16; யோவான் 15:12, 13) நாம் இதை இன்னும் செய்யவில்லை. ஆனால் நம்முடைய சகோதரருக்காக நம்முடைய ஜீவனை நாம் உண்மையில் கொடுப்போமா? நமக்கு ஒருவேளை வசதியாயிராத போதிலும், நம்முடைய கஷ்டத்தைப் பாராமல் அவர்களுக்கு உதவிசெய்ய இப்பொழுது எவ்வளவு தூரம் செல்கிறோம்?
4 தன்னலத்தியாக ஆவியைப் பிரதிபலிக்கும் செயல்களோடுகூட, நம் சகோதரரிடம் உண்மையில் அன்புள்ள உணர்ச்சி நமக்கிருப்பதும் முக்கியம். “சகோதர அன்பில் ஒருவருக்கொருவர் கனிவான பாசமுள்ளவர்களாயிருங்கள்,” என்று கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்குவிக்கிறது. (ரோமர் 12:10, NW) நாமெல்லாரும் சிலரிடம் அவ்வாறு உணருகிறோம். இத்தகைய நேசபாசத்தை நாம் உணரும் ஆட்களடங்கிய தொகுதியில் இன்னுமதிகம் பேரை நாம் சேர்த்துக்கொள்ளக் கூடுமா? இந்தப் பழைய ஒழுங்கு முறையின் முடிவு நெருங்கி வருகையில், நம்முடைய கிறிஸ்தவ சகோதரரிடம் நாம் மேலும் மேலும் நெருங்கி வருவது நமக்கு இன்றியமையாததாகும். பைபிளில் இதைக் குறித்து நமக்கு எச்சரிப்பூட்டி, பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: “எல்லாவற்றிக்கும் முடிவு சமீபமாயிற்று, . . . எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; [ஏனென்றால்] அன்பு திரளான பாவங்களை மூடும்.”—1 பேதுரு 4:7, 8.
5 நிச்சயமாகவே, நாம் அபூரணராயிருக்கும் வரையில், சில சமயங்களில் மற்றவர்களுக்கு வருத்தமுண்டாக்கும், காரியங்களைச் செய்துவிடுவோம். அவர்களும் பற்பல வழிகளில் நமக்கு விரோதமாகப் பாவஞ்செய்துவிடலாம். (1 யோவான் 1:8) இத்தகைய சூழ்நிலைமையில் உங்களைக் கண்டால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பிரச்னைகள் எழும்புகையில் என்ன செய்வது
6 தேவைப்படும் வழிநடத்துதல் வேத எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை அபூரண மனிதராகிய நாம் செய்ய மனம் சாய்வதோடு ஒருவேளை ஒத்திராது. (ரோமர் 7:21-23) எனினும், அதை மேற்கொள்ள நாம் ஊக்கமாய் உழைப்பது, யெகோவாவைப் பிரியப்படுத்த நாம் உள்ளப்பூர்வமாய் விரும்புகிறோமென அத்தாட்சியளிக்கிறது, மேலும் அது மற்றவர்களிடம் நம்முடைய அன்பின் தன்மையைப் பெருக்குகிறது.
7 சில சமயங்களில் ஆட்கள் புண்படுத்தப்பட்டிருக்கையில், புண்படுத்தினவருக்குப் பழிக்குப்பழி செய்ய வழிவகைகளைத் தேடுகின்றனர். ஆனால், இது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்கிறது, பழிவாங்குதல் தேவைப்பட்டால், அதை நாம் கடவுளிடம் விட்டுவிட வேண்டும். (நீதி. 24:29; ரோமர் 12:17-21) மற்றும் சிலர், புண்படுத்தினவரிடம் எவ்விதத் தொடப்புமில்லாமல் அவரைத் தங்கள் வாழ்க்கையினின்றே தூர விலக்கிவைக்க முயற்சி செய்வர், ஆனால் நம்முடைய உடன் வணக்கத்தாருக்கு நாம் அவ்வாறு செய்ய முடியாது. நாம் நம்முடைய சகோதரரை நேசிப்பதன் பேரில் நம்முடைய வணக்கம் ஏற்கத்தகுந்ததாயிருப்பது ஓரளவு சார்ந்திருக்கிறது. (1 யோவான் 4:20) நாம் ஒருவரிடம் பேசாமலிருந்தால் அல்லது அவர் முன்னிலையில் இருப்பதுதானே நமக்குச் சங்கடத்தைக் கொடுத்தால் அவரை நாம் நேசிப்பதாக நேர்மையுடன் சொல்லக்கூடுமா? நாம் நம்முடைய உணர்ச்சிகளை அடக்கியாண்டு இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது அவசியம். எப்படி?
8 இந்தக் காரியத்தின் பேரில் அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “ஒருவரையொருவர் பொறுத்து ஒருவன் மேல் ஒருவனுக்குக் குறையுண்டானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; ஆண்டவர் [யெகோவா, NW] உங்களுக்கு மன்னித்ததுபோலவே நீங்களும் மன்னியுங்கள்.” (கொலோ. 3:13) நீங்கள் அப்படிச் செய்யக்கூடுமா? அந்த நபர் பற்பல வகைகளில் உங்களுக்கு விரோதமாகத் திரும்பத் திரும்பப் பாவஞ்செய்தால் என்ன செய்வீர்கள்?
9 அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கும் இதே கேள்வி எழும்பினது, அவன், தன் சகோதரனுக்கு ஒருவேளை ஏழுதடவைகள் மன்னிக்கத் மத். 18:21-35) நாம் மிகப்பல வழிகளில் ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறோம். சில சமயங்களில் தன்னல நடத்தையினாலும், அடிக்கடி நாம் சொல்லும் அல்லது சிந்திக்கும் காரியங்களாலும், அதோடுகூட நாம் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறுவதனாலும் பாவஞ்செய்கிறோம். நம்முடைய அறியாமையில், நாம் செய்த காரியங்களில் சில தவறு என்று நாம் உணராமலுங்கூட இருக்கலாம், அல்லது வாழ்க்கையின் மிக்க நெருக்கடியில், அந்தக் காரியத்தைப் பற்றிப் போதிய கவலையுடன் சிந்திக்காமலும் இருக்கலாம். நம்முடைய பாவங்களுக்கு ஈடாக நம்முடைய உயிரைச் செலுத்தும்படி கடவுள் கேட்கலாம். (ரோமர் 6:23) ஆனால் அவர் நம்மிடம் தொடர்ந்து இரக்கத்துடன் இருக்கிறார். (சங். 103:10-14) ஆகையால், நாம் ஒருவருக்கொருவர் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று அவர் கேட்பது எவ்வகையிலும் நியாயமற்றதாயில்லை. (மத். 6:14, 15; எபே. 4:1-3) வன்மத்தை மனதில் பேணி வைப்பதற்குப் பதிலாக நாம் மன்னித்து விடுகையில், “தீங்கை மனதில் வைத்துப் பேணாத” வகையான அன்பைப் பிரயாசப்பட்டு அடைந்திருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சியாயிருக்கிறது.—1 கொரி. 13:4, 5, NW; 1 பேதுரு 3:8, 9.
தான் பிரயாசப்பட வேண்டுமென குறிப்பாய்ச் சொன்னான். அதற்கு இயேசு: “ஏழுதரம் மாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும்,” என்று பதிலுரைத்தார். ஏன்? இயேசு ஓர் உவமையைக் கொண்டு இதை விளக்கினார், அது, எந்த மனிதனாவது நமக்குக் கடன்பட்டிருக்கும் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் கடவுளுக்குக் கடன்பட்டிருப்பது எவ்வளவு மிக அதிகம் என்பதை முனைப்பாக எடுத்துக் காட்டியது. (10 நம்முடைய சகோதரனிடம் நமக்கு எவ்விதக் கடினமான உணர்ச்சிகளும் கிடையாதென்று நாம் உணருகிற போதிலும் அவருக்கு நமக்கு விரோதமாக ஏதோவிருக்கிற சமயங்கள் இருக்கலாம். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? தாமதியாமல் உடனடியாக நாம் அவரிடம் பேசி அவருடன் சமாதான உறவுகளைத் திரும்ப நிலைநாட்ட முயற்சி செய்யவேண்டும். நாம்தாமே இந்த முயற்சியில் முந்திக் கொள்ளும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (மத். 5:23, 24) இதைச் செய்வது ஒருவேளை எளிதாயிராது. இதற்கு அன்போடுகூட மனத்தாழ்மையும் வேண்டும். பைபிளின் அறிவுரைப்படி நீங்கள் செய்வதற்கு இந்தப் பண்புகள் உங்களில் போதியளவு உறுதியாயிருக்கின்றனவா? இது, நாம் அடையும்படி முன்வைத்து உழைக்கவேண்டிய முக்கிய இலக்காகும்.
11 மறுபட்சத்தில் உங்களுக்கு—அநேகமாய் மற்றவர்களுக்குங்கூட—மன அமைதியைக் கெடுக்கும் காரியங்களை எவரோ செய்துகொண்டிருக்கலாம். யாக். 4:11, 12) எல்லா வகையான வளர்ப்பு சூழ்நிலைகளிலிருந்தும் வரும் ஆட்களை யெகோவா பட்சபாதமில்லாமல் ஏற்கிறார், அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் வளருகையில் அவர்களிடம் பொறுமையாயிருக்கிறார்.
எவராவது அவரிடம் பேசுவது நலமாயிருக்குமல்லவா? அப்படியென்றால், நீங்கள் தனிமையில் அன்பான முறையில் அந்தப் பிரச்னையை அவருக்கு விவரித்துக் கூறினால், இது நல்ல பலன்களைக் கொண்டுவரலாம். ஆனால் முதலாவது உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அவர் செய்யும் காரியங்கள் உண்மையில் வேதப்பூர்வமற்றவையா? அல்லது என் வளர்ப்பு சூழ்நிலையும் பயிற்றுவிப்பும் அவருடையதிலிருந்து வேறுபடுவதே பெரும்பாலும் பிரச்னையாக இருக்கிறதா? அப்படியானால், உங்கள் சொந்தத் தராதரங்களை ஏற்படுத்தி வைத்துக்கொண்டு, பின்பு அவற்றின் பிரகாரம் நியாயந்தீர்க்காதபடி எச்சரிக்கையாயிருங்கள். (12 என்றபோதிலும், சபையிலுள்ள எவராவது மோசமான தவறு செய்வதில் உட்பட்டால், இது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் யார் கவனிக்க வேண்டும்? பொதுவாய் மூப்பர்களே கவனிப்பர். எனினும், இது சகோதரர்களுக்கிடையில் வியாபார அலுவல் சம்பந்தப்பட்ட காரியமாக இருந்தால், அல்லது ஒருவேளை மற்றவருக்கு வினைமையான தீங்குண்டாக்கியிருக்கும் முறையில் நாவைத் தவறான பிரயோகம் செய்ததாக இருந்தால், அப்பொழுது, யாருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யப்பட்டதோ அவர், பாவஞ்செய்தவருக்கு உதவி செய்ய தனிமையில் முதல் பிரயாசப்பட வேண்டும். இது சிலருக்குக் கடினமாய்த் தோன்றலாம், ஆனால் இதைச் செய்யும்படியே இயேசு மத்தேயு 18:15-17-ல் அறிவுரை கொடுக்கிறார். தன் சகோதரன் பேரிலுள்ள அன்பும் அவரைச் சகோதரனாகத் தொடர்ந்திருக்கச்செய்ய வேண்டுமென்ற ஊக்கமான ஆவலும், கூடுமானால், தவறுசெய்தவரின் இருதயத்தைத் தொடும்வகையில் அதைச் செய்ய அவருக்கு உதவிசெய்யும்.—நீதி. 16:23.
13 சிறிய அல்லது பெரிய பிரச்னை ஏதாவது எழும்புகையில், யெகோவா அதை எப்படிக் கருதுகிறார் என்பதை விளங்கிக் கொள்ள நாம் பிரயாசப்படுவது நமக்கு உதவியாயிருக்கும். பாவத்தை எவ்வகையிலும் அவர் சம்மதிப்பதில்லை, என்றபோதிலும் அதை அவர் நம்மெல்லாரிலும் காண்கிறார். மனந்திரும்பாமல் பழக்கமாய்ப் பாவஞ்செய்து வருகிறவர்கள் அவருடைய உரிய காலத்தில் அவருடைய அமைப்பிலிருந்து அகற்றிப்போடப்படுகின்றனர். எபே. 5:1, 2.
ஆனால் மீதியான நம்மைப் பற்றியதென்ன? நாமெல்லாரும் அவருடைய நீடிய பொறுமைக்கும் இரக்கத்துக்கும் உட்பட்டவர்களாக இருக்கிறோம். நாம் பின்பற்றுவதற்கு அவர் முன்மாதிரியை வைக்கிறார். நாம் அப்படிச் செய்கையில், அவருடைய அன்பைப் பிரதிபலிக்கிறோம்.—‘விரிவாகுவதற்கு’ வழிகளைத் தேடுங்கள்
14 கிரீஸில் கொரிந்துவிலிருந்த சபையைக் கட்டியமைப்பதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் பல மாதங்கள் செலவிட்டான். அங்கிருந்த சகோதரருக்கு உதவிசெய்ய அவன் வெகு கடினமாக உழைத்தான். அவர்களை அவன் நேசித்தான். ஆனால் அவர்களில் சிலர் அவனிடம் அன்பு, உணர்ச்சியற்றிருந்தார்கள். அவர்கள் வெகுவாய்க் குற்றங்காண்பவர்களாக இருந்தார்கள். உருக்கமான அன்பைக் காட்டுவதில் ‘விரிவாகும்படி’ அவன் அவர்களை ஊக்குவித்தான். (2 கொரி. 6:11-13, NW; 12:15) நாம் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு அன்பு காட்டுகிறோமென்பதைச் சிந்தித்துப் பார்த்து ‘விரிவாகுவதற்கு’ வழிகளைத் தேடுவது நம்மெல்லாருக்கும் நல்லது.—1 யோவான் 3:14; 1 கொரி. 13:3.
15 சபையிலுள்ள சிலரிடம் நாம் நெருங்கி பழகுவதைக் கடினமாகக் காண்கிறோமா? அவர்கள் ஏதோ சிறிய பிழைகளைச் செய்துவிட்டால், அவர்கள் நமக்குச் செய்ய நாம் விரும்புவதுபோல், நம்முடைய தொந்தரவையும் கவனியாமல் அவற்றைப் பொருட்படுத்தாமல் மறந்துவிட நாம் முயற்சி செய்தால், நமக்கும் அவர்களுக்குமிடையே உறவு அனல்கொள்ள இது உதவிசெய்யும். (நீதி. 17:9; 19:11) அவர்களுடைய நல்ல பண்புகளை நாம் தேடி அவற்றின் பேரில் நம் மனதை ஊன்றவைத்தால் அவர்களிடம் நம்முடைய உணர்ச்சிகள் முன்னேற்றமடையும். இந்தச் சகோதரரை யெகோவா உபயோகிக்கும் வழிகளை நாம் உண்மையில் கவனித்திருக்கிறோமா? இது நிச்சயமாகவே அவர்கள்பேரில் நம்முடைய அன்பு வளரும்படி செய்விக்கும்.—லூக்கா 6:32, 33, 36.
16 நாம் மற்றவர்களுக்குச் செய்யக்கூடிய காரியங்களுக்கு மட்டளவுகள் இருக்கின்றனவென்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதே. நாம் ஒருவேளை ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொருவராக எல்லாரையும் சந்தித்துப் பேச முடியாது. நண்பர்களைச் சாப்பாட்டுக்கு அழைக்கையில் எல்லாரையும் அதில் உள்ளடக்க முடியாது. நம்மெல்லாருக்கும்
நெருங்கிய தோழர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் நாம் மற்றவர்களிடம் செலவிடுவதைப் பார்க்கிலும் அதிக நேரம் செலவிடுகிறோம். ஆனால் நாம் “விரிவாகக்” கூடுமா? நம்முடைய நெருங்கிய நண்பராயிராத, நம்முடைய சபையிலுள்ள எவருடனாவது இன்னும் நன்றாய் அறிமுகமாவதற்கு ஒவ்வொரு வாரமும் ஒருசில நிமிடங்கள் நாம் செலவிடக்கூடுமா? இவர்களில் ஒருவரை நம்முடன் வெளி ஊழியத்தில் வேலைசெய்யும்படி நாம் அவ்வப்போது அழைக்கக்கூடுமா? நாம் உண்மையில் ஒருவருக்கொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாக இருந்தால் அதைக் காட்ட நிச்சயமாகவே வழிகளைக் கண்டுபிடிப்போம்.17 நம்முடைய அன்பில் ‘விரிவாகுவதற்கு’ கிறிஸ்தவ மாநாடுகள் சிறந்த வாய்ப்புகளை அளிக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் அங்கிருக்கலாம். அவர்களெல்லாரையும் நாம் சந்தித்துப் பேச முடியாது. ஆனால் அவர்களை நாம் முன்னொருபோதும் சந்தித்திராதபோதிலும் நம்முடைய வசதிக்கு மேலாக அவர்களுடைய சுகநலத்தை வைக்கிறோமென்று, காட்டும் முறையில் நம்மை நாம் நடத்திக்கொள்ள முடியும். மேலும் கூட்ட இடைநேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள சிலரைச் சந்தித்துப் பேச நாம்தாமே முதல் முயற்சியெடுப்பதன் மூலம் தனிப்பட்ட அக்கறை காட்டலாம். ஒருநாள் பூமியில் வாழும் எல்லாரும் சகோதரர் சகோதரிகளாக எல்லாருடைய கடவுளும் தகப்பனுமானவரை வணங்குவதில் ஒற்றுமைப்பட்டிருப்பார்கள். அவர்களுடைய பல்வேறு வகைப்பட்ட பல பண்புகளுடன் அவர்களெல்லாருடனும் அறிமுகமாவது எத்தகைய மகிழ்ச்சியாயிருக்கும்! அவர்கள் பேரிலுள்ள ஊக்கமான அன்பு அதைச் செய்ய விரும்பும்படி நம்மைத் தூண்டுவிக்கும். அதை இப்பொழுதே தொடங்கலாமல்லவா?
மறு கலந்தாலோசிப்பு
● சகோதரர் அல்லது சகோதரிகளுக்கிடையே பிரச்னைகள் எழும்புகையில், அவை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும்? ஏன்?
● நாம் ஆவிக்குரிய பிரகாரமாய் வளருகையில், நம்முடைய அன்பும் என்ன வழிகளில் வளரவேண்டும்?
● நெருங்கிய நண்பர்களுக்கிடையில் மட்டுமல்லாமல் மேலுமதிக விரிவாய் ஊக்கமான அன்பை எப்படிக் காட்ட முடியும்?
[கேள்விகள்]
1, 2. (எ) யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களில் புதியவர்களுடைய மனதை அடிக்கடி கவருவது எது? (பி) நம்முடைய மாநாடுகளில் இந்தப் பண்பின் வேறு என்ன அத்தாட்சியை அவர்கள் கவனிக்கிறார்கள்?
3. (எ) நாம் இந்த அன்பைக் காட்டுவது காலப்போக்கில் எப்படி வெளியாக வேண்டும்? (பி) கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி என்ன வகையான அன்பை நாம் வளர்க்க வேண்டும்?
4. (எ) வேறு எந்த முறையில் நாம் அன்பை மேலும் நிறைவாய் வெளிப்படுத்தக் கூடும்? (பி) ஒருவருக்கொருவர் ஊக்கமான அன்பைக் கொண்டிருப்பது ஏன் இன்றியமையாதது?
5. சபையின் உறுப்பினருக்கிடையே பிரச்னைகள் எழும்பாதென்று எதிர்பார்ப்பது ஏன் தவறு?
6. (எ) பைபிளின் அறிவுரை ஏன் நம்முடைய மனச்சாய்வுகளுடன் எல்லா சமயங்களிலும் ஒத்திராது? (பி) ஆனால் அதை நாம் பொருத்திப் பிரயோகித்தால் என்ன பயனுண்டாகும்?
7. (எ) எவராவது நம்மைப் புண்படுத்துகையில், நாம் ஏன் பழிக்குப் பழி செய்யக்கூடாது? (பி) நம்மைப் புண்படுத்துகிற சகோதரனிடம் தொடர்பறுத்துக்கொண்டு அவரைத் தவிர்ப்பதும் ஏன் கூடாது?
8, 9. (எ) ஒரு சகோதரனுக்கு விரோதமாகக் குறைசொல்ல நமக்குக் காரணமிருந்தால் நாம் செய்யவேண்டிய சரியான காரியம் என்ன? (பி) ஆனால் அவர் நமக்கு விரோதமாகத் திரும்பத் திரும்ப பாவஞ்செய்திருந்தால் என்ன செய்வது? (சி) இந்தக் காரியத்தை நாம் ஏன் இம்முறையில் கையாளவேண்டும், அப்படிச் செய்ய எது நமக்கு உதவி செய்யும்?
10. நமக்கு விரோதமாக ஒரு சகோதரனுக்கு ஏதாவதிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
11. ஒரு சகோதரன் நம் மன அமைதியைக் கெடுக்கும் காரியங்களைச் செய்துகொண்டிருந்தால், என்ன செய்ய வேண்டும்?
12. (எ) சபையில் மோசமான தவறு செய்தல் நடந்தால் அதை யார் கவனிப்பர்? (பி) ஆனால் யாருக்கு விரோதமாகப் பாவஞ்செய்யப்பட்டதோ அவர், எந்தச் சந்தர்ப்பங்களில் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்புள்ளவர்? என்ன நோக்கத்துடன்?
13. நமக்கும் மற்றொரு சகோதரனுக்கும் இடையில் ஒரு பிரச்னை எழும்பினால், அந்தக் காரியத்தைச் சரியான முறையில் கருத எது நமக்கு உதவிசெய்யும்?
14. (எ) “விரிவாகும்படி” பவுல் ஏன் கொரிந்தியரை ஊக்கப்படுத்தினான்? (பி) இதைப் பற்றி நாமெல்லாரும் சிந்திப்பது நல்லதென்று இங்கே இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்கள் எப்படிக் காட்டுகின்றன?
15. எவரிடமாவது நம் மனதில் அன்புணர்ச்சி இல்லையென்றால் அவரிடம் அன்பில் வளருவதற்கு எது நமக்கு உதவிசெய்யும்?
16. நம்முடைய சபையிலுள்ளவர்களுக்கு அன்பு காட்டுவதில் நடைமுறையில் நாம் எப்படி “விரிவாகலாம்”?
17. நாம் முன்னொருபோதும் சந்தித்திராத சகோதரர் மத்தியில் இருக்கையில், அவர்களிடமும் நமக்கு ஊக்கமான அன்பு இருக்கிறதாவென எது காட்டும்?