Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய வார்த்தையை விடாப்பிடியுடன் பற்றியிருங்கள்

கடவுளுடைய வார்த்தையை விடாப்பிடியுடன் பற்றியிருங்கள்

அதிகாரம் 3

கடவுளுடைய வார்த்தையை விடாப்பிடியுடன் பற்றியிருங்கள்

உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை பற்றிச் சொன்னவார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தயும்வறிப் போகவில்லை; இதைப் பற்றி உங்கள் இருதயத்திலும் மனதிலும் யாதொரு சந்தோகமுமில்லை; அவைகளெல்லாம் உங்கள் விஷயத்தில் நிறைவேறின; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போனதில்லை.” இஸ்ரவேலர், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறின பின்பு, யோசுவா, இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு இந்த நினைப்பூட்டுதலைக் கொடுத்தான். ஆனால் இதற்குப் பின் வந்த ஆண்டுகளில் அவர்கள் விடாதுதாடர்ந்து கடவுளுடைய வார்த்தையை இருதயத்தில் ஏற்று அதன்படி நடக்கவில்லை. இதன் விலைவென்ன? ஆசீர்வாதத்தைப் பற்றிய யெகோவாவின் வாக்குகள் நம்பத்தக்கவையாய் நிருபித்ததைப் போலவே, கீழ்ப்படியாமையின் விளைவுகளைக் குறித்து தாம் சொன்னவற்றையும் அவர் நிறைவேற்றினார். (யோசுவா 23:14-16)“ நம்பிக்கையை நாம் அடையும்படியும்,” இந்த நம்பிக்கையை நாம் இழப்பதில் விளைவடையும் எதையும் நாம் செய்யாதபடியும் இந்ச விவரப் பதிவு, பைபிளின் மற்ற எல்லா பாகமும் நம்முடைய போதனைக்காக பாதுகாத்து வைக்கப்பட்டன.-ரோமர் 15:4.

2. பைபிளைப் பதிவு செய்வதற்கு ஏறக்குறைய 40 மனிதர் “செயலாளராக” பயன்படுத்தப்பட்ட போதிலும், யெகோவாதாமே அதன் நூலாசிரியர். அப்படியானால் அதிலுள்ள எல்லாம் எழுதப்படுவதை அவர் தாமே செயல்பட்டு வழிநடத்தினார் என்று இது பொருள்படுகிறதா? ஆம், அப்போஸ்தலனாகிய பவுல் உண்மையாய்ச் சொன்ன பிரகாரம், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” இதில் முழு நம்பிக்கையுடன், நாம் செய்ய பிரயாசைப்படுவதைப் போலவே, எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களும் அதற்குச் செவிகொடுக்கும்படியும் அதில் அடங்கியுள்ளவற்றைச் சுற்றித் தங்கள் வாழ்கையைக் கட்டியெழுப்பவும் நாம் அவர்களைத் தூன்டியெழுப்புகிறோம்.-2 தீமோத்தேயு 3;16; 1தெச 2:13.

மற்றவர்கள் இதை மதித்துணர எது உதவி செய்யும்?

3. நிச்சயமாகவே நாம் பேசிவருகிற ஆட்களில் பலர், உண்மையில் பைபிள் கடவுளுடைய வார்த்தை என்ற நம்முடைய உறுதியான நம்பிக்கையில் பங்குகொள்வதில்லை. அவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்? அடிக்கடி, மிகச் சிறந்த பைபிளைத் திறந்து அதில் அடங்கியுள்ளவற்றை அவர்களுக்குக் காட்டுவதேயாகும். “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாயும்,... இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபி. 4:12) “தேவனுடைய வார்த்தை” பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தையாகும். இது கடந்து தீர்ந்த சரித்திரமல்ல, உயிர்ப்புடனும் நிறைவேற்றத்தைத் நோக்கித் தடுக்கமுடியாவண்ணம் விரைந்து கொண்டும் இருக்கிறது. அப்படிச் சென்று கொண்டிருக்கையில், அதன் நிபந்தனைகளை ஏற்பதைக் குறித்ததில். அதோடு நெருங்கிய தொடர்பில் கொண்டுவரப்படுகிற ஆட்களுடைய இருதயத்தின் உண்மையான நோக்கங்கள் வெளியாகின்றன. தனிப்பட்டவர்களாய் நாம் சொல்லக்கூடிய எதையும் பாக்கிலும் இதன் செல்வாக்கு மிக அதிக வல்லமை வாய்ந்தது.

4. கடவுளுடைய பெயரை வெறுமென பைபிளில் காண்பதே பலருடைய வாழ்க்கையில் ஒரு திரும்பு கட்டமாக இருந்திருக்கிறது. மற்றவர்கள் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியோ கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதிக்கிறார், தற்காநிகழ்ச்சிகளின் அர்த்தம் அல்லது கடவுளுடைய ராஜ்யத்தின்பேரில் வைக்கப்படும் நம்பிக்கையின் உண்மையான தன்மை ஆகிய இவற்றிலொன்றைப் பற்றியோ பைபிளில் சொல்லப்பட்டிருப்பவற்றை எடுத்துக் காட்டின போது பைபிளைப் படிக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். மத பழக்க வழக்கங்கள் மக்களைப் பொல்லாத ஆவிகளின் மிகுந்தத் தொல்லைக்கு உட்படுத்தியிருக்கிற நாடுகளில், அதன் காரணத்தையும் அதிலிருந்து விடுதலையடைவது எப்படி என்பதையும் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் அக்கறையைத் தூண்டியெழுப்பியிருக்கிறது. இதற்குக் குறிப்புகள் ஏன் அவர்கள் உள்ளத்தை அவ்வளவாய்க் கவர்ந்திழுக்கின்றன? ஏனென்றால். இந்த இன்றியமையாதக் காரியங்களின் பேரில் பைபிள் மாத்திரமே நம்பத்தக்கத் தகவலைக் கொண்ட ஒரே ஊற்றுமூலமாக இருக்கிறது.-சங்கீதம் 119: 130.

5. எனினும், தனக்கு பைபிளில் நம்பிக்கை இல்லை என்று ஒருவர் நேரடியாக நம்மிடம் சொன்னால் என்ன செய்வது? அது நம்முடைய உரையாடலை நிறுத்திவிடவேண்டடுமா? அவர் நியாயப்படி விவாதித்துப் பேச மனமுள்ளவராயிருந்தால் அப்படி நிறுத்த வேண்டியதில்லை. கடவுளுடைய வார்தையின் சார்பாகத் திட நம்பிக்கையுடன் பேச வேண்டிய பொறுப்பை நாம் உணரவேண்டும். ஒருவேளை அவர், பைபிளைக் கிறிஸ்தவ மண்டல புத்தகமெனக் கருதலாம். கிறிஸ்தவ மண்டலத்தின் மாய்மாலத் தன்மையையும் அது அரசியில் தலையிடுவதையும் பற்றிய பதிவும், பணத்துக்காக இடைவிடாமல் அது வற்புறுத்தி வேண்டுவதும், அவர் பைபிளிடமாக நம்பிக்கையற்ற மனப்பான்பையைப் பிரதிபலிப்பதற்குக் காரணமாயிருக்கலாம். அப்படித்தானவென்று அவரைக் கேட்கலாமல்லவா? கிறிஸ்தவ மண்டலத்தினின் உலகப்பிரகாரமான போக்குகளைப் பைபிள் கண்டனம் செய்வதையும் கிறிஸ்தவ மண்டலத்துக்கும், உண்மையான கிறிஸ்தவத்துக்குமுள்ள வேறுபாட்டுக்குறிப்புகளையும் எடுத்துக்காட்டுவது அவருடைய அக்கறையைத் தூண்டலாம்.-மத்தேயு15:7-9; யாக்கோபு 4:4;மீகா 3:11,12.

6. மற்றவர்களுக்கு, பைபிள் தேவாவியால் ஏவப்பட்டதென நிருபிக்கும் அத்தாட்சிகளை நேர்முகமாய்க் கலந்தாலோசிப்பது உதவியாயிருக்கும். பைபிள் கடவுளிடமிருந்து வந்ததென்று உங்களுக்கு எது தெளிவாய் நிருபிக்கிறது, அதன் தொடக்கத்தைப் பற்றி பைபிளில்தானே சொல்லப்பட்டிருப்பதா? (2 தீமோ 3:16, 17; வெளி 1:1) எதிர்காலத்தைப் பற்றி மிக நுட்பமான அறிவை வெளிப்படுத்தும் ஏராளமான தீர்க்கதரிசனங்கள் கட்டாயமாக மனிதரை விட மேம்பட்ட ஒரு மூலக்காரணத்திலிருந்தே வந்திருக்கவேண்டும் என்பதா? (2 பேதுரு 1:20,21; ஏசயா. 42:9) ஒருவேளை, 1,610 ஆண்டுகளடங்கிய ஒரு காலப் பகுதியினூடே பல ஆண்டுகள் பைபிளை எழுதி வைத்தப்போதிலும் அதன் உட்பொருள் முரண்படாமல் ஒத்திசைந்திருப்பதா? அல்லது அக்காலங்களிலிருந்த மற்ற எழுத்துக்களுக்கு நேர்மாறாக, விஞ்ஞானப்படி அது திருத்தமாய் இருப்பதா? அல்லது அதன் எழுத்தாளர்களின் நேர்மையா? அல்லது அதை அழிக்கும்படி எடுக்கப்பட்ட கொடிய முயற்சிகளுக்கெதிரில் அது பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதா? உங்கள் மனதை ஆழமாய்த் தொட்டவற்றை மற்றவர்களுக்கும் உதவி செய்ய நீங்கள் பயன்படுத்தலாம்.

நம்முடைய தனிப்பட்ட பைபிள் வாசிப்பு

7. பைபிளை நம்பும்படி மற்றவர்களுக்கு உதவி செயிவதோடுகூட நாம் தானேயும் அதைத் தவறாமல் வாசித்துவர நேரமெடுக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்கிறீர்களா? உண்டுபண்னப்பட்ட எல்லா புத்தகங்களிலும், இதுவே மிக அதிக முக்கியமான புத்தகம். இது, நாம் அதை வாசித்தால் வேறு எதையும் வாசிக்க வேண்டியதில்லை என்று நிச்சயமாகவே பொருள்படாது. எல்லாவற்றையும் தனிமையில் ஆராய்ச்சி செய்து நாமே விளங்கிக்கொள்ளலாம் என்று எண்ணி, நம்மைத் தனியே பிரித்து வைத்துக் கொள்வதற்கு எதிராக வேத எழுத்துக்கள் எச்சரிக்கை செய்தின்றன. நாம் சமநிலையுள்ள கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டுமென்றால் தனிப்பட்ட படிப்பும் தவறாமல் கூட்டங்களுக்கு வருவதுமான இவ்விரண்டும் தேவைப்படுகின்றனர்.-நீதி. 18:1; எபிரே 10:24, 25.

8. ஒர் எத்தியோப்பிய அதிகாரி ஏசயாவின் தீர்க்கதரிசனத்திலிருந்து வாசித்துக்கொண்டிருந்தபோது, தேவதூதன், கிறிஸ்தவ சுவிசேஷகனாகிய பிலிப்புவை அந்த அதிகாரியைச் சந்திக்கும்படி வழிநடத்தினதைப் பற்றி பைபிளில் நம்முடைய நன்மைக்காகவே எழுதிவைக்கப்பட்டிருக்கிறது: பிலிப்பு அந்த மனிதனிடம்: “ நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா”? என்று கேட்டான். அந்த எத்தியோப்பியன் மனத்தாழ்மையுடன்: “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்”? என்று பதில் சொன்னான். அந்த வேதவசனப் பகுதியை விளக்கும்படி அவன் பிலிப்புவை வேண்டிக்கொண்டான். பிலிப்பு தன் சொந்தமாய் பைபிள் வாசித்துத் தனித்தியங்கி அங்கே அந்த வேதவசனங்களின் பேரில் தன் சொந்த அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்லவில்லை இல்லை; அவன், எருசலேமின் சபையிலிருந்த அப்போஸ்தலருடன் நெருங்கிய தொடர்பைக் காத்து வைத்திருந்தான் என்றும் செகோவாவின் காணக்கூடிய அமைப்பின் ஓர் உறுப்பினனாக இருந்தான் என்றும் பதிவு காட்டுகிறது. ஆகவே, அந்த அமைப்பின் மூலமாய் யெகோவா அருளிச் செய்துகொண்டிருந்த போதனையிலிருந்து நன்மையடைய அவன் அந்த எத்தியோப்பியனுக்கு உதவி செய்ய முடிந்தது. (அப். 6:5, 6; 8: 5, 14, 26-35) அதைப்போல் இன்றும் நம்மில் எவராவது தனியே தன் சொந்தமாய் யெகோவாவின் நோக்கங்களைப்பற்றித் தெளிவாகவும் திருத்தமாகவும் புரிந்து கொண்டதுண்டா? அதற்கு மாறாக, யெகோவா தம்முடைய காணக்கூடிய அமைப்பின் மூலமாய் அன்புடன் அருளிச் செய்கிற உதவி நமக்குத் தேவைப்பட்டது, தொடர்ந்து தேவைப்படுகிறது.

9. பைபிளைப் பயன்படுத்தவும் விளங்கிக்கொள்ளவும் நமக்கு உதவி செய்ய யெகோவாவின் அமைப்பு, காவற்போபுரத்திலும் அதோடு சம்பந்தப்பட்ட பிரசுரங்களிலும் மிகச் சிறந்த வேதப்பூர்வ தகவல்களை நமக்குக் கொடுத்து வருகிறது. கூடுதலாக, யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் நடத்தப்படும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் சம்பந்தமாக ஒழுங்கான பைபிள் வாசிப்பு திட்டம் ஒன்று நமக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதோடுகூட யெகோவாவின் சாட்சிகளில் சிலர் முதலிலிருந்து தொடர்ச்சியாகவும் பைபிளை வாசித்து வருகிறார்கள். பரிசுத்த வேத எழுத்துக்களை ஆராய்வதில் நேரம் செலவிடுவதனால் மிகுந்த நன்மை உண்டாகும். (சங். 1:1-3; 19:7,8) நீங்கள் தனியே பைபிள் முழுவதையும் வாசித்திருக்கிறீர்களா? இல்லையென்றால், அப்படிச் செய்ய விசேஷித்த முயற்சி எடுங்கள் எல்லாவற்றையும் திட்டவட்டமாய் நீங்கள் விளங்கிக் கொள்ளாவிடினும் முழுமையாய் அதைப் பற்றிய ஒரு பொதுவான கருத்து உங்களுக்கு இருப்பது மிகுந்த பயனுள்ளதாயிருக்கும். ஒரு நாளுக்கு நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் மாத்திரமே நீங்கள் வாசித்தாலும், ஏறக்குறைய ஓர் ஆண்டுகள் பைபிள் முழுவதையும் வாசித்து முடித்துவிடுவீர்கள்.

10. நீங்கள் தனிமையில் வாசிப்பதற்கு எந்த நேரத்தை ஒழூங்குபடுத்திக் கொள்ளலாம்? ஒரு நாளுக்கு 10 அல்லது 15 நிமிடங்கள் மாத்திரமே நீங்கள் ஒதுக்கி வைக்கக் கூடுமானாலும், அது எவ்வளவு நன்மை பயக்குவதாயிருக்கும்! இல்லையென்றால், அதற்காக ஒவ்வோரு வாரமும் திட்டமான நேரங்களைக் கால அட்டவணையில் குறிப்பிட்டு, அதைத் தவறாமல் கைக்கொள்ளுங்கள். பைபிள் வாசிப்பது, உணவு உண்பதைப்போல், வாழ்நாளெல்லாம் நீடிக்கும் ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவனின் சாப்பிடும் பழக்கங்கள் குறைபாடுடையதானால் அவனுடைய சுக ஆரோக்கியம் கெடும் என்று நீற்கள் தெரிந்திருக்கிறீர்கள். நம்முடைய ஆவிக்குரிய சுகநிலையைப் பற்றியதிலும் அவ்வாறே இருக்கிறது. ‘யெகோவாவின் வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும்’ நாம் ஒழுங்கு தவறாமல் உட்கொண்டு வருவதில் நம்முடைய உயிர் சார்ந்திருக்கிறது.-மத். 4;4.

11. பைபிளை வாசிப்பதில் நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? அது வெறுமென அன்றைக்குரிய பகுதியின் பக்கங்களை நாம் வாசித்து முடிப்பதாக அல்லது நித்திய ஜீவனை அடைய வேண்டுமென்பதாக மாத்திரமே இருக்கிறதென்றால் தவறாகும். நிலையான நன்மையடைய, நம்முடைய நோக்கங்களை அவற்றைப் பார்க்கிலும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும்-கடவுள் பேரிலுள்ள, அன்பு, அவரை மேலும் நன்றாய் அறியவேண்டும், அவருடைய சித்தத்தைத் தெளிவாக உணர்ந்து அவர் ஏற்கத்தகுந்த முறையில் அவரை வணங்க வேண்டும் என்ற ஆவல் நம்முடைய நோக்கங்களாக இருக்க வேண்டும். (யோவான் 5:39-42) நம்முடைய மனப்பான்மை, பின்வருமாறு சொன்ன பைபிள் எழுத்தாளனுடையதைப் போல் இருக்க வேண்டும்: “மெய்யாகவே, உமது வழிகளை எனக்குக் காட்டியருளும். உமது பாதைகளை எனக்குப் போதித்தருளும்.”-சங். 25:4,, தி.மொ.

12. இந்தப் போதகத்தை நாம் பெறுகையில் “திருத்தமான அறிவை” அடைய வேண்டுமென்பது ஆவலாக இருக்க வேண்டும். அதில்லாமல், நாம் எப்படி, கடவுளுடைய வார்த்தையைச் சரியானபடி நம்முடைய சொந்த வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்க அல்லது அதை மற்றவர்களுக்குத் திருத்தமாய் விளக்கிக் கூறமுடியும்? (கொலோ. 3:10; 2 தீமோ. 2:15) திருத்தமான அறிவை அடைய நாம் கவனமாய் வாசிக்க வேண்டும். ஒரு பகுதி ஆழ்ந்தக் கருத்துடையததாக இருந்தால் அதன் கருத்தை விளங்கிக் கொள்வதற்கு நாம் அதை ஒருவேளை ஒரு சில தடவைகள் திரும்ப வாசிக்க வேண்டியிருக்கலாம். மேலும் அந்தப் பொருளின்பேரில் ஆழ்ந்து சிந்திக்க, வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதைப் பற்றிச் சிந்தனை செய்ய நாம் நேரம் செலவிட்டாலும் பயனடைவோம். இந்தப் புத்தகத்தின் 27-ம் பக்கத்தில், ஆழ்ந்து ஆராய்வதற்குச் சிந்தனை செய்யக்கூடிய ஐந்து மிகப் பயனுள்ள வழிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றை அல்லது ஒரு சிலவற்றைப் பயன்படுத்தி வேதாகமத்தின் பல பகுதிகளை நன்மை பயக்கும் வண்ணம் பகுத்தாராயலாம். பின்வரும் பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுகையில் அவ்வாறு இருப்பதைக் காண்பீர்கள்.

(1) நீங்கள் வாசிக்கும் வேதாகமப் பகுதி யெகோவா எவ்வகை பண்புவாய்ந்த ஆள் என்பதைப் பற்றி அடிக்கடி ஏதாவது தெரிவிக்கிறது.

யெகோவாவின் படைப்பு செயல்களைப் பற்றி பைபிள் நமக்குச் சொல்வதை நன்றி மதித்துணர்வோடு நாம் ஆழ்ந்து சிந்தனை செய்கையில், அது, அவரிடம் நம் மனப்பான்மையை எப்படிப் பாதிக்கிது? (சங். 139:13,14; யோபு 38-42 அதிகாரங்கள் முக்கியமாய் 38:1,2; 40:2,8; பின்பு 42:1-6 ஆகியவற்றைக் கவனியுங்கள்)

யோவான் 14:9, 10-ல் இயேசுசொன்னதைக் கவனிக்கையில், லூக்கா 5:12, 13-ல் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் போன்ற சம்பவங்களிலிருந்து யெகோவாவைப்பற்றி நாம் என்ன முடிவுக்கு வருகிறோம்?

(2) வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய இயேசு கிறிஸ்துவின் கீழுள்ள ராஜ்யம் யெகோவாவின் பெயரை நியாயம் மெய்பித்துக் காட்டுவதான, பைபிளின் இந்த மூலப்பொருள் படிப்படியாய் வெளிப்படுத்தப்படுவதன் சம்பந்தமாக இந்த விவரம் எப்படி உடனுதவி அளிக்கிறதென்பதைக் கவனியுங்கள்.

எகிப்தின் வாதைகள் இந்த மூலப்பொருளுடன் எப்படிச் சம்பந்தப்படுகின்றன? யாத்திராகமம் 5:2; 9:16;12:12 -ஐப் பாருங்கள்)

மோவாபிய பெண்ணாகிய ரூத்தைப் பற்றிய இருதயத்தைக் கவரும் இந்த விவரத்தைக் குறித்ததென்ன? (ரூத்4:13-17; மத்தே.1:1, 5)

இயேசுவின் பிறப்பைப்பற்றி மரியாளுக்குத் தெரிவித்த காபிரியேல் தூதனின் அறிவிப்பு எப்படி இதில் பொருந்துகிறது? (லூக்கா 1:26-33)

பெந்தகொஸ்தே நாளில் இயேசுவின் சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகஞ் செய்யப்பட்டது ஏன் தனி கவனிப்புக்குரியதாக இருக்கிறது? (அப் 2:1-4; 1 பேதுரு 2:4, 5, 9; 2 பேதுரு 1: 10,1 1)

(3) தனிப்பட்ட வசனங்களின் கருத்தை விளங்கிக்கொள்ள சூழமைவு உதவியாயிருக்கிறது.

ரோமர் 5:1-லும் 8:16-லும் சொல்லப்பட்டிருப்பவை யாரை நோக்கிப் பேசப்படுகிறது? (ரோமர்1:7ஐப் பாருங்கள்.)

1 கொரிந்தியர் 2:9-ல் பூமியில் கடவுளுடைய புதிய ஒழுங்கில் இருக்கப் போகிற வாழ்க்கையைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறதென்று சூழமைவு காட்டுகிறதா? 6-8 வசனங்களில் காட்டியிருக்கிறபடி, பவுல் எழுதின காரியங்களைப் பற்றி யாருடைய கண்களும் செவிகளும் புரிந்துகொள்ளவில்லை?

(4) நீங்கள் படிப்பதை உங்களுக்குத்தானே எப்படிப் பொருத்திப் பிரயோகித்துக் கொள்வதென உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

காயீன் ஆபேலைக் கொன்றதைப் பற்றிய பதிவு வெறுமென சரித்திர சம்பந்த அக்கறையுடையதா அல்லது அதில் நமக்கு அறிவுரை இருக்கிறதா? (ஆதி 4:3-12; 1யோவான் 3:10:-115; எபி. 11:4)

வனாந்தரத்தில் இஸ்ரவேலரின் அனுபவங்களைப் பற்றி (யாத்திராகமத்திலுருந்து உபாகமம் வரையாக) நாம் வாசிக்கையில், நமக்கு எவற்ரைப் பொருத்திப் பயன்படுத்த வேண்டும்? (1கொரிந். 10:6-11)

நடத்தையின் பேரில், அபிஷேகஞ் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட அறிவுரைகள், பூமியில் நித்திய ஜீவனடையும் நம்பிக்கையைடைய ஆட்களுக்குப் பொருந்துகின்றனவா? (எண்ணாகமம் 15:16; யோவான் 10:16-ஐ ஒத்துப் பாருங்கள்.)

கிறிஸ்தவ சபையோடு நாம் நல்ல நிலைநிற்கையில் இருக்கிறபோதிலும், நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிற பைபிள் அறிவுரைகளை மேலுமதிக முழுமையாய்ப் பொருத்திப் பிரயோகிக்கக் கூடிய வழிகளை ஆலோசிப்பதற்கு அவசியம் இருக்கிறதா? (2 கொரி. 13:5 1தெசலோ. 4:1.

(5) நாங்கள் வாசிப்பதை மற்றவர்களுக்கு உதவி செய்ய எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்குச் சிந்தனை செலுத்துங்கள். 

யவீருவின் மகள் உயிர்த்தெழுப்பப்பட்ட விவரத்தைக் கொண்டு யாருக்கு உதவிசெய்யலாம்? (லூக்கா8:41, 42, 49-56)

13. பைபிள் வாசிப்பை இந்த முறையில் செய்கையில் எவ்வளவு நிறைவான பலன் உண்டாகிறது! நிச்சயமாகவே, பைபிளை வாசிப்பது ஒரு சவாலாயிருக்கிறது-வாழ்நாளெள்லாம் நன்மை பயக்கும் வண்ணமாய் உழைக்கக்கூடிய செயல்முறை திட்டமாக இருக்கிறது ஆனால் நாம் இதைச் செய்கையில் ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பலப்பட்டு வளருவோம். இது, நம்முடைய அன்புள்ள தகப்பனாகிய, யெகோவாவிடமும் நம்முடைய கிறிஸ்தவ சகோதரரிடமும் மேலும் நெருங்கும்படி நம்மை இழுக்கும். ‘ஜீவ வார்த்தையை விடாப்பிடியாய்’ பற்றியிருக்கும்படி கூறும் அறிவுறைக்குச் செவிகொடுக்க இது நமக்கு உதவி செய்யும்-பிலிப். 2:16, NW; 2:14, தமிழ் uv.

மறு கலந்தாலோசிப்பு

● பைபிள் ஏன் எழுதப்பட்டு நம்முடைய நாள் வரையிலும் பாதுகாத்து வைக்கப்பட்டது?

● அதை மதித்துணர மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?

● தனிமையில் பைபிள் வாசிப்பதைக் தவறாமல் செய்து வருவது ஏன் நன்மை பயக்குகிறது? நாம் வாசிப்பதை எந்த ஐந்து நோக்கு நிலைகளிலிருந்து நாம் பயனுள்ள முறையில் பகுத்தாராயலாம்?

[கேள்விகள்]

1. (எ) பூர்வ இஸ்ரவேலர் கடவுளுடைய வார்த்தையின் உண்மையான தன்மையை எப்படி அனுபவித்தார்கள்? (பி) அது நமக்கு ஏன் அக்கறைக்குரியதாக இருக்கிறது?

2. (எ) எந்தக் கருத்தில் பைபிள் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது“ (பி) இதை அறிந்திருக்கிற நமக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?

3. பைபிள் கடவுளுடைய வார்த்தை என்ற நம்பிக்கை இராத பலருக்கு உதவி செய்ய மிகச் சிறந்த முறை என்ன?

4. பைபிள் சத்தியங்களைப் பற்றிய எந்த எளிதான விளக்கங்கள் பைபிளிடமாகச் சில ஆட்களின் மனப்பான்மையை மாற்றியிருக்கிறது? ஏன்?

5. தனக்கு பைபிளில் நம்பிக்கை இல்லை என்று ஒருவர் சொல்கையில் காரணம் என்னவாக இருக்கலாம்? நாம் அவருக்கு எப்படி உதவிசெய்யலாம்?

6. (எ) பைபிள் கடவுளுடைய வார்த்தை என்று உங்களை நம்பவைப்பது எது? (பி) பைபிள் உண்மையில் கடவுளால் அருளப்பட்டதென்று மதித்துணரும்படி ஆட்களுக்கு உதவிசெய்ய வேறு என்ன நியாயவிவாத வழிகளைப் பயன்படுத்தலாம்?

7, 8. தனித்தனியே நாம்தாமே பைபிளை என்ன செய்துவர வேண்டும்? (பி) தனிமையில் பைபிளை வாசிப்பதோடு வேறு எதுவும் நமக்குத் தேவைப்படுகிறது, பைபிள் தானேயும் இதை எப்படிக் காட்டுகிறது? (சி) யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய தெளிந்த அறிவை நீங்கள் தாமே எப்படி அடைந்தீர்கள்?

9. என்ன பைபிள் வாசிப்பு திட்டங்கள் நம்மெல்லோருக்கும் நன்மை பயக்கும்?

10. நீங்கள் எப்பொழுது பைபிள் வாசிக்கிறீர்கள்? (பி) தவறாமல் அப்படிச் செய்வது ஏன் முக்கியமானது?

11. பைபிள் வாசிப்பதில் நம்முடைய நோக்கம் என்னவாக இருக்கவேண்டும்?

12. “திருத்தமான அறிவை” அடைவது ஏன் அவசியம்? அதை அடைவதற்கு, பைபிள் வாசிக்கையில் என்ன முயற்சி எடுக்க வேண்டும்? (பி) பக்கம் 27-ல் காட்டப்பட்டிருக்கிறபடி, நாம் பைபிள் வாசிப்பதை என்ன நோக்கு நிலையிலிருந்து நன்மை பயக்கும் முறையில் பகுத்தாராயலாம்? (சி) இந்தப் பகுதியின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் ஒவ்வொன்றாக இந்த ஐந்து குறிப்புகளையும் விளக்குங்கள். பைபிளைப் பயன்படுத்தத் தவறவேண்டாம்?

13. விடாது தொடரும் பைபிள் வாசிப்பு திட்டத்திலிருந்தும் யெகோவாவின் அமைப்புடன் படிப்பதிலிருந்தும் என்ன பலன்களை நாம் எதிர்பார்க்கலாம்?

[பக்கம் 27-ன் பெட்டி/படம்]

நீங்கள் பைபிள் வாசிக்கையில் சிந்தியுங்கள்-

ஓர் ஆளாக யெகோவாவைப்பற்றி ஒவ்வொரு பகுதியும் உங்களுக்கு என்ன சொல்லுகிறது

பைபிளின் மூலப் பொருளுடன் அது எப்படிச் சம்பந்தப்படுகிறது

சூழமைவு எப்படிக் கருத்தைப் பாதிக்கிறது

உங்கள் சொந்த வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்க வேண்டும்

மற்றவர்களுக்கு உதவி செய்ய அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்