கடவுள் தீமையை அனுமதித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்
அதிகாரம் 7
கடவுள் தீமையை அனுமதித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்
வாழ்க்கையில் நமக்கு என்ன துன்பங்கள் வந்தாலும், நாம் பிறந்திருப்பது கடவுளுடைய பங்கில் அநியாயமாக இல்லை. அவர் முதல் மனிதரைப் பரிபூரணமாய் உண்டாக்கி, பரதீஸை அவர்களுடைய வீடாகக் கொடுத்தார். அவர்கள் கலகஞ்செய்த பின்பு அவர்கள் பேரில் உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றியிருந்தால், இப்பொழுது நாம் அறிந்திருக்கிறபடி நோயும், வறுமையும், பழிபாவமுமுள்ள மனிதகுலம் இருந்திராது. ஆதாமும் ஏவாளும் பிறப்பிக்கும் குடும்பம் அபூரணத்தைச் சுதந்தரிக்குமென்றாலும், அவர்கள் சாவதற்கு முன்பாக ஒரு குடும்பத்தைப் பிறப்பிக்கும்படி, யெகோவா இரக்கமாய் அனுமதித்தார். ஆதாமின் சந்ததியாரில் விசுவாசங் காட்டுகிறவர்கள் ஆதாம் இழந்ததை—அதாவது, வாழ்க்கையில் மிக அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூடியதாகச் செய்யும் சூழ்நிலைமைகளின் கீழ் நித்திய ஜீவனை—பெறுவதற்குக் கிறிஸ்துவின் மூலமாய் அவர் ஏற்பாடு செய்தார்.—உபா. 32:4, 5; யோவான் 10:10.
2 நம் ஒவ்வொருவருக்கும் இதனால் உண்டாகும் நன்மைகள் அளவிடமுடியாதவை. ஆனால் நம்முடைய சொந்த இரட்சிப்பைப் பார்க்கிலும் மிக அதிக முக்கிய கவனிப்புக்குரிய ஒன்று இதில் உட்பட்டிருந்ததென்று பைபிள் விவரப்பதிவிலிருந்து நாம் கற்றறிகிறோம்.
தம்முடைய மிக உயர்ந்த பெயரினிமித்தமாக
3 இந்தப் பூமியையும் மனிதவர்க்கத்தையும் குறித்த யெகோவாவின் நோக்கத்தின் நிறைவேற்றத்தில் அவருடைய பெயரும், ஈடற்ற
சர்வலோகப் பேரரசராகவும் சத்தியமுள்ள கடவுளாகவும் அவருடைய புகழும் உட்பட்டிருந்தது. யெகோவாவின் ஸ்தானத்தின் காரணமாக, சர்வலோகம் முழுவதிலும் சமாதானமும் சுகநலமும் இருப்பதற்கு அவருடைய பெயர், அதன் தகுதிக்குரிய முழு மதிப்பு கொடுக்கப்படுவதையும் எல்லாரும் அவருக்குக் கீழ்ப்படிந்திருப்பதையும் அவசியப்படுத்துகிறது.4 ஆதாமையும் ஏவாளையும் படைத்தப் பின்பு அவர்கள் நிறைவேற்றுவதற்கு ஒரு வேலையை அவர் குறிப்பிட்டுக் கொடுத்தார். பூமி முழுவதையும் கீழ்ப்படுத்தி அவ்வாறு பரதீஸின் எல்லைகளை விரிவாக்குவது மட்டுமல்லாமல், அந்த முதல் மனிதனும் மனுஷியுமான ஆதாம் ஏவாளின் சந்ததியாரால் அதைக் குடியேற்றவும் வேண்டுமென்பது தம்முடைய நோக்கமென அவர் தெளிவாகக் கூறினார். (ஆதி. 1:28) அவர்கள் பாவஞ்செய்ததன் காரணமாக இந்த நோக்கம் தோல்வியடைந்து, கடவுளுடைய பெயருக்கு நிந்தையைக் கொண்டு வருவதில் விளைவடையுமா?
5 ஆதாம் கீழ்ப்படியாமல் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிட்டால் அவன் சாப்பிடும் “நாளில்” சாகவே சாவான் என்று யெகோவா எச்சரித்திருந்தார். (ஆதி. 2:17) கடவுளுடைய வார்த்தைக்கு உண்மையாக, ஆதாம் பாவஞ்செய்த அதே நாளில், யெகோவா அந்த மீறுதல் செய்தவர்களை விசாரணைசெய்து மரண தண்டனைத் தீர்ப்பைக் கூறினார். இந்தத் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது. நியாயப்படி கடவுளுடைய நோக்குநிலையில், ஆதாமும் ஏவாளும் அதே நாளில் மரித்தார்கள். (லூக்கா 20:37, 38-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஆனால் பூமியைக் குடியேற்றுவிப்பதைக் குறித்துக் கூறின தம்முடைய சொந்த நோக்கத்தை நிறைவேற்றும்படி, அவர்கள் சொல்லர்த்தமாய்ச் சாவதற்கு முன்பாக ஒரு குடும்பத்தைப் பிறப்பிக்கும்படி யெகோவா அவர்களை அனுமதித்தார். இருந்தபோதிலும், 1,000 ஆண்டுகளை ஒரு நாளாகக் கருதும் கடவுளுடைய நோக்குநிலைப்படி 930 ஆண்டுகள் வாழ்ந்தப் பின்பு ஆதாமுடைய வாழ்க்கை முடிவடைந்த போது, அவன் அந்த ஒரே ‘நாளுக்குள்’ செத்தான் (ஆதி. 5:3-5; சங்கீதம் 90:4-ஐ ஒத்துப் பாருங்கள்; 2 பேதுரு 3:8) இவ்வாறாக, தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய காலத்தைக் குறித்ததில் யெகோவாவின் சொல் தவறாமை உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டது, மேலும் ஆதாமின் சந்ததியாரைக் கொண்டு இந்தப் பூமியைக் குடியேற்றுவிக்க வேண்டுமென்ற அவருடைய நோக்கமும் முறியடிக்கப்படவில்லை. ஆனால் பாவிகளான மனிதர், ஓரளவான காலத்துக்கு உயிர்வாழ்ந்திருக்கும்படி அனுமதித்ததை இது குறித்தது.
6 மோசேயின் நாட்களில் எகிப்தின் அரசனுக்கு யெகோவா சொன்ன வார்த்தைகள் ஓரளவான காலத்துக்கு அக்கிரமம் தொடர்ந்திருக்கும்படி கடவுள் அனுமதித்திருப்பதன் காரணத்தை மேலும் விளக்கமாகத் தெரிவிக்கின்றன. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டுப் போகும்படி அனுமதிக்கப் பார்வோன் மறுத்தபோது, யெகோவா அவனை உடனடியாகக் கொன்றுபோடவில்லை. யெகோவாவின் வல்லமையை வியக்கத்தக்க வண்ணமாய் பல்வேறு வழிகளில் மெய்ப்பித்துக் காட்டின பத்து வாதைகள் தேசத்தின் மேல் கொண்டுவரப்பட்டன. ஏழாவது வாதையைக் குறித்து எச்சரிக்கையில் தாம் வெகு எளிதாகப் பார்வோனையும் அவனுடைய ஜனத்தையும் பூமியிலிருந்து முற்றிலும் அழித்துப் போட்டிருக்கக் கூடுமென்று யெகோவா பார்வோனிடம் கூறினார். “ஆயினும் என் வல்லமையை உனக்குக் காண்பிக்கும் பொருட்டும் என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும் பொருட்டும், உன்னை நிலைநிறுத்தி வைத்தேன்,” என்று யெகோவா சொன்னார்.—யாத். 9:15, 16, தி.மொ.
7 யெகோவா இஸ்ரவேலை விடுவித்தபோது அவருடைய பெயர் நிச்சயமாகவே வெகு விரிவாக அறியப்படலாயிற்று அவர் அப்பொழுது செய்தது, இன்று, ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கப்பாலும், மறக்கப்படவில்லை. யெகோவா என்னும் அவருடைய தனிப்பட்ட பெயர் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அந்தப் பெயரைத் தாங்கியிருந்தவரைப் பற்றிய சத்தியமும் அவ்வாறே அறிவிக்கப்பட்டது. இது, யெகோவா தம்முடைய உடன்படிக்கைகளைக் கைக்கொள்ளுகிறவர், தம்முடைய ஊழியரின் சார்பாக நடவடிக்கை எடுக்கிற கடவுள் என அவருடைய கீர்த்தியை உறுதிப்படுத்திற்று. அவர் சர்வவல்ல சக்தியுடையவராக இருப்பதால் அவருடைய நோக்கத்தை எதுவும் தடை செய்ய முடியாதென்று இது நிரூபித்துக் காட்டியது. காணக்கூடியதும் காணக்கூடாததுமான இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை முழுவதற்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் அழிவு, இதைப் பார்க்கிலும் மிக அதிக ஆழமாய் இவற்றை மனதில் பதியவைக்கும். அவருடைய சர்வவல்ல சக்தியின் அந்த வெளிக்காட்டும், யெகோவாவின் பெயருக்கு அது கொண்டுவரப்போகிற மகிமையும் இப்பிரபஞ்சத்தின் சரித்திரத்தில் ஒருபோதும் மறந்துவிடப்படாது. அதன் நன்மைகளுக்கு முடிவிராது!—எசேக். 38:23; வெளி. 19:1, 2.
‘ஆ, கடவுளின் ஞானத்தின் ஆழம்!’
8 ரோமருக்கு எழுதின நிருபத்தில் அப்போஸ்தலனாகிய பவுல்: “கடவுளிடத்தில் அநீதி இருக்குமென்போமோ?” என்ற கோள்வியை எழுப்புகிறான். பின்பு கடவுளுடைய இரக்கத்தை அறிவுறுத்திக் கூறியும், யெகோவா பார்வோனிடம் சொன்னதைக் குறிப்பிட்டு பதிலளிக்கிறான். மேலும் மனிதராகிய நாம் குயவனின் கைகளிலுள்ள களிமண்ணுக்கு ஒப்பாக இருக்கிறோம் என்ற உண்மையையும் அவன் நினைப்பூட்டுகிறான். தான் எதற்கு உபயோகப்படுத்தப் படுகிறதென்பதைக் குறித்து அந்தக் களிமண் குறை கூறுகிறதா? பவுல் தொடர்ந்து கூறுகிறான்: “கடவுள் தமது கோபத்தைக் காண்பிக்கவும் தமது வல்லமையைத் தெரிவிக்கவும் அதோடுகூட தாம் மகிமைக்காக ஆயத்தமாக்கின இரக்கப் பாத்திரங்கள் மேல், அதாவது யூதரிலிருந்து மாத்திரமல்ல புறஜாதிகளிலிருந்தும் அவர் அழைத்த நம்மேல், தமது மகிமையின் ஐசுவரியத்தைத் தெரிவிக்கவும் சித்தங்கொண்டு அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாயிருந்தாரானாலென்ன?”—ரோமர் 9:14-24, தி.மொ.
9 ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசன அறிவிப்பை யெகோவா கூறின முதற்கொண்டே, சாத்தானும் அவனுடைய வித்தும் “அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்களாக” இருந்து வந்திருக்கின்றனர். இந்தக் காலமெல்லாம் யெகோவா நீடிய பொறுமையைப் பிரயோகித்து வந்திருக்கிறார். பொல்லாதவர்கள் அவருடைய வழிகளை ஏளனம் செய்தனர்; அவருடைய ஊழியர்களைத் துன்புறுத்தினர், அவருடைய குமாரனைக் கொல்லவும் செய்தனர். ஆனால் யெகோவா, தம்முடைய ஊழியருக்கு நிலையான நன்மையுண்டாக, மிகுந்த பொறுமையைக் காட்டியிருக்கிறார். கடவுளுக்கு விரோதமாக கலகத்தின் நாசமான விளைவுகளைக் காண சிருஷ்டி முழுவதற்கும் வாய்ப்புண்டாயிற்று. அதே சமயத்தில், இயேசுவின் மரணம் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை விடுதலை செய்வதற்கும் ‘பிசாசின் கிரியைகளை அழிப்பதற்கும்’ வழியை உண்டுபண்ணிற்று.—1 யோவான் 3:8; எபி. 2:14, 15.
10 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னான, கடந்த 1,900-த்துக்கு மேற்பட்ட காலத்தின்போது, யெகோவா மேலுமான “கோபாக்கினைப்
பாத்திரங்களை” பொறுமையோடு சகித்து, அவர்களுடைய அழிவை நிறுத்தி வைத்திருக்கிறார். ஏன்? ஏனென்றால் ஸ்திரீயின் வித்தின் உடன் இணைவான பாகத்தை, அதாவது, இயேசு கிறிஸ்துவின் பரலோக ராஜ்யத்தில் அவருடன் சேர்ந்திணைக்கப்படப் போகிறவர்களை யெகோவா ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். (கலாத். 3:29) எண்ணிக்கையில் 1,44,000 பேரான இவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டுப் பேசின “இரக்கப் பாத்திரங்கள்” முதலாவதாக இந்த வகுப்பை உண்டுபண்ண யூதருக்குள்ளிருந்து ஆட்கள் அழைப்பு கொடுக்கப்பட்டனர். பின்பு விருத்தசேதனஞ் செய்யப்பட்ட சமாரியர் சேர்க்கப்பட்டனர், கடைசியாக, புறஜாதி தேசங்களின் மக்கள் இணைக்கப்பட்டனர். மிகுந்த நீடிய பொறுமையுடன் யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றினார், தம்மைச் சேவிக்கும்படி அவர் ஒருவரையும் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் தம்முடைய அன்புள்ள ஏற்பாடுகளுக்கு நன்றி மதித்துணர்வுடன் பிரதிபலித்தவர்களின்பேரில் மகத்தான ஆசீர்வாதங்களைப் பொழிந்தார். இந்தப் பரலோக வகுப்பாரை ஆயத்தம் செய்வது இப்பொழுது அநேகமாய் முடிவடைந்துவிட்டது.11 ஆனால் பூமியில் குடியிருக்கப் போகிறவர்களைக் பற்றியதென்ன? கடவுளுடைய உரிய காலத்தில் கோடிக்கணக்கானோர் ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாக உயிர்த்தெழுப்பப்படுவர். மேலும், முக்கியமாய் பொ.ச. 1935 முதற்கொண்டு சகல தேசங்களிலிருந்தும் ஒரு “திரள்கூட்டம்” அவர்களுக்கு இரட்சிப்புண்டாகும் நோக்கத்துடன் ஒன்றாய்க் கூட்டப்படுவதை யெகோவாவின் நீடிய பொறுமை கூடியதாக்கிற்று.—வெளி. 7: 9, 10; யோவான் 10:16.
12 இந்த எல்லாவற்றிலும் ஏதாவது அநீதி இருந்திருக்கிறதா? நிச்சயமாகவே இல்லை. கடவுள் தம்முடைய நோக்கத்திற்கிசைவாக மற்றவர்களுக்கு இரக்கம் காண்பிக்கும்படி, ‘கோபாக்கினைப் பாத்திரங்களான’ பொல்லாதவர்களின் அழிவை நிறுத்தி வைத்திருக்கிறாரென்றால் எப்படி எவராவது சரியானபடி குறை கூறக்கூடும்? அதற்குப் பதிலாக, அவருடைய நோக்கம் படிப்படியாய் வெளிப்படுவதை நாம் கூர்ந்து கவனிக்கையில், யெகோவாவைப் பற்றித்தானே நாம் அதிகம் கற்றுக்கொள்ளுகிறோம் நமக்குத் தெளிவாகியிருக்கிற அவருடைய தனி சுபாவத்தன்மையின் அம்சங்களான—அவருடைய நீதி, இரக்கம், நீடியபொறுமை, அவருடைய பலவகைப்பட்ட ஞானம் ஆகியவற்றின்பேரில் நாம் வியப்படைகிறோம். ரோமர் 11:33.
இந்த விவாதத்தை யெகோவா கையாண்ட ஞானமான முறை, அவர் ஆளும் முறையே மிகச் சிறந்தது என்ற உண்மைக்கு அத்தாட்சியாக என்றென்றும் நிற்கும். அப்போஸ்தலனாகிய பவுலுடன் சேர்ந்து நாம் பின்வருமாறு சொல்லுகிறோம்: “ஆ, கடவுளின் ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவு பெரிது! அவர் நியாயத்தீர்ப்புகள் புத்திக் கெட்டாதவைகள், அவர் வழிகள் ஆராய்ச்சிக் கெட்டாதவைகள்”!—நம்முடைய பயபக்தியைக் காட்டுவதற்கான வாய்ப்பு
13 கடவுள் பொல்லாதவர்களை அழித்து முன்னறிவிக்கப்பட்ட திரும்பப் புதுப்பித்தலை மனிதவர்க்கத்துக்கு இன்னும் கொண்டு வந்திராததால், தனிப்பட்டவராய் ஒருவர் உண்மையில் துன்பப்படுவதை உட்படுத்தும் சூழ்நிலைமைகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் நம்முடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கிறது? யெகோவாவின் பெயரின் மேலுள்ள நிந்தையை நீக்குவதிலும் பிசாசானவனைப் பொய்யன் என்று நிரூபிப்பதிலும் பங்குகொள்ளும் நல்வாய்ப்புகளை நாம் அவற்றில் காண்கிறோமா? “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதி. 27:11) ஆட்கள் பொருள் சம்பந்தமான இழப்பை அனுபவித்தால் அல்லது உடல் சம்பந்தமாய்த் துன்பப்பட்டால் கடவுள்மேல் பழிசுமத்தி, அவரைச் சபிப்பார்கள் என்று, யெகோவாவை நிந்திக்கிறவனாகிய சாத்தான் சவால் விட்டான். (யோபு 1:9-11; 2:4, 5) துன்பங்களின் மத்தியிலும் நாம் கடவுளுக்கு உண்மைத் தவறாமல் நிலைத்திருப்பதன் மூலம், நம்முடைய காரியத்தில் சாத்தானின் சவால் உண்மையாக இல்லை என்று நாம் நிரூபித்துக் காட்டுகையில் யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம். யெகோவா தம்முடைய ஊழியரின் பேரில் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராக இருக்கிறார் என்றும், நாம் உண்மையுள்ளவர்களாக நிரூபித்தால் யோபின் காரியத்தில் செய்ததைப் போலவே ஏற்றக் காலத்தில் யெகோவா நமக்கு ஏராளமாய்ப் பலனளிப்பார் என்றும் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.—யாக். 5:11; யோபு 42:10-16.
14 கடுந்துன்பப் பரீட்சைகளை அனுபவிக்கையில் நாம் யெகோவாவில் உறுதியாய் நம்பிக்கை வைத்திருந்தால் விலைமதியா உயர் பண்புகளை நம்மில் வளர்ப்போம். இயேசு, தாம் பட்ட பாடுகளின் எபி. 5:8, 9; 12:11; யாக். 1:2-4.
பலனாக, முன்னொருபோதும் தாம் அறிந்திராத முறையில் ‘கீழ்படிதலைக் கற்றுக்கொண்டார்’ நாமும்—நீடிய பொறுமையையும் சகிப்புத்தன்மையையும், யெகோவாவின் நீதியுள்ள வழிகளுக்கு ஆழ்ந்த மதித்துணர்வையும் வளர்ப்பதற்கு—கற்றுக் கொள்ளலாம். இந்தப் பயிற்றுவிப்பை நாம் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வோமா?—15 நாம் செய்வதை மற்றவர்கள் கவனிப்பார்கள். நீதியை நேசிப்பதனிமித்தம் நாம் அனுபவிக்கும் துன்பத்தைக் கண்டு காலப்போக்கில் அவர்களில் சிலர், இன்று கிறிஸ்துவின் “சகோதரர்” உண்மையில் யாவர் என்பதை மதித்துணருவார்கள், மேலும் அவருடைய “சகோதரருடன்” வணக்கத்தில் ஒன்றுபடுவதன் முலம் அவர்கள், நித்திய ஜீவனின் ஆசிர்வாதங்களை அடையும் வழியில் வரக்கூடும். (மத். 25:34-36, 40, 46) இந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்படி யெகோவாவும் அவருடைய குமாரனும் விரும்புகிறார்கள் நாம் அவ்வாறு விரும்புகிறோமா? இது சாத்தியமாகும்படி துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள மனங்கொள்கிறோமா?
16 வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைமைகளையுங்கூட இவ்வாறு யெகோவாவுக்கு நம்முடைய பயபக்தியைக் காட்டுவதற்கும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் பங்குகொள்வதற்கும் வாய்ப்புகளாக நாம் கருதுகையில் எவ்வளவு சிறந்ததாயிருக்கிறது! இப்படி நாம் செய்வது, மெய்க் கிறிஸ்தவர்கள் எல்லாருடைய சார்பாகவும் இயேசு ஜெபித்த, கடவுளுடனும் கிறிஸ்துவுடனும் ஒற்றுமைப்படுவதை நோக்கி நாம் நிச்சயமாவே முன்னேறுகிறோம் என்பதற்கு அத்தாட்சியைக் கொடுக்கிறது.—யோவான் 17:20, 21.
மறு கலந்தாலோசிப்பு
● தீமையை அனுமதிக்கையில், யெகோவா எப்படித் தம்முடைய சொந்தப் பெயருக்கு பெரும் மதிப்பைக் காட்டினார்?
● கடவுள் “கோபாக்கினையின் பாத்திரங்களைப்” பொறுமையோடு சகித்து வந்திருப்பது அவருடைய இரக்கம் எப்படி நம் வரையாகவும் எட்டக் கூடியதாக்கியது?
● தனிப்பட்டவராய் நாம் துன்பம் அனுபவிப்பதை உட்படுத்தும் சூழ்நிலைமைகளில் எதைக் காண பிரயாசப்பட வேண்டும்?
[கேள்விகள்]
1. (எ) ஏதேனில் அந்தக் கலகக்காரரின் மீது யெகோவா உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றியிருந்தால் அது நம்மை எப்படிப் பாதித்திருக்கும்? (பி) அதற்குப் பதிலாக யெகோவா எந்த அன்புள்ள ஏற்பாடுகள் நமக்குக் கிடைக்கக்கூடியதாகச் செய்திருக்கிறார்?
2. இதெல்லாம் நம்முடைய இரட்சிப்புக்காக மாத்திரமே செய்யப்பட்டதா?
3. பூமியையும் மனிதவர்க்கத்தையுங் குறித்த யெகோவாவின் நோக்கத்தின் நிறைவேற்றம் சம்பந்தப்பட்டதில் எது விவாத நிலையில் இருந்தது?
4. திருத்தமாக அந்த நோக்கத்தில் என்ன உட்பட்டிருந்தது?
5. (எ) ஆதியாகமம் 2:17-ன் பிரகாரம் நன்மைத் தீமை அறியத்தக்க மரத்தின் கனியை எவனாவது புசித்தால் அவன் எப்பொழுது சாவான்? (பி) பூமியைக் குடியேற்றுவிப்பதைக் குறித்தத் தம்முடைய நோக்கத்தையும் மதித்து அதே சமயத்தில் யெகோவா இதை எப்படி நிறைவேற்றினார்?
6, 7. (எ) பொல்லாதவர்கள் ஓரளவான காலத்துக்குத் தொடர்ந்திருக்கும்படி யெகோவா அனுமதித்திருப்பதன் காரணம் என்னவென்பதை யாத்திராகமம் 9:15, 16 எவ்வாறு காட்டுகிறது? (பி) பார்வோனின் காரியத்தில், யெகோவாவின் வல்லமை எப்படிக் காட்டப்பட்டது, அவருடைய பெயர் எப்படி விரிவாக அறிவிக்கப்பட்டது? (சி) ஆகவே, தற்போதைய பொல்லாத ஒழுங்கு முறையின் முடிவில் என்ன நடக்கும்?
8. மேலும் என்ன காரணங்களைக் கவனிக்கும்படி பவுல் நம்மை ஊக்கப்படுத்துகிறான்?
9. (எ) “அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்” யார்? (பி) இவர்களுடைய பகைமைக்கு எதிரிலும் யெகோவா ஏன் மிகுந்த நீடியபொறுமையைக் காட்டியிருக்கிறார்? கடைசி முடிவு எப்படி தம்மை நேசிக்கிறவர்களின் நன்மைக்காக இருக்கும்?
10. கடந்த 1,900 ஆண்டுகளின் போது யெகோவா ஏன் பொல்லாதவர்களைத் தொடர்ந்து பொறுமையோடு சகித்தார்?
11. யெகோவாவின் நீடியபொறுமையிலிருந்து வேறு எந்த வகுப்பாரும் இப்பொழுது பலனடைகிறார்கள்?
12. (எ) இதன் பலனாக, யெகோவாவைப் பற்றி நாம் என்ன கற்றிருக்கிறோம்? (பி) இந்தக் காரியங்களை யெகோவா கையாண்ட முறையைக் கவனிக்கையில் நாம் எப்படிப் பிரதிபலிக்கிறோம்?
13. (எ) நாம் தனிப்பட்டவராய்த் துன்பப்படுகையில் என்ன வாய்ப்பு நமக்கு அளிக்கப்படுகிறது? (பி) ஞானமாய்ப் பிரதிபலிக்க எது நமக்கு உதவி செய்யும்?
14. பரீட்சைகளை அனுபவிக்கையில் நாம் யெகோவாவில் முழு நம்பிக்கை வைத்திருந்தால், வேறு என்ன நன்மைகளும் நமக்கு உண்டாகும்?
15. நாம் துன்பத்தைப் பொறுமையுடன் சகிக்கையில் மற்றவர்கள் எப்படி நன்மையடைவார்கள்?
16. நாம் படும் இத்தகைய துன்பத்தை நாம் கருதும் முறை எப்படி ஒற்றுமைக்குரிய காரியத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?