Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் வணக்கத்தார் அனுபவித்து மகிழும் சுயாதீனம்

யெகோவாவின் வணக்கத்தார் அனுபவித்து மகிழும் சுயாதீனம்

அதிகாரம் 5

யெகோவாவின் வணக்கத்தார் அனுபவித்து மகிழும் சுயாதீனம்

யெகோவா முதல் மனித ஜோடியைப் படைத்தபோது, இன்று மனிதருக்கு இருக்கும் எதர்க்கும் வெகுவாய் மேம்பட்ட சுயாதீனத்தை அவர்கள் அனுபவித்து மகிழ்ந்தார்கள். அவர்களுடைய வீடு பரதீஸாக இருந்தது. அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதை எந்த நோயும் கெடுக்கவில்லை. மரணம் அவர்களுக்காகக் காத்துக்கொண்டில்லை. ஆனால் இத்தகைய சுயாதீனத்தை அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பதற்குக் கடவுளுடைய சட்டங்களை மதிப்பது முக்கிய அம்சமாயிருந்து.

2. அந்தச் சட்டங்களில் சில ஒருவேளை வார்த்தைகளில் கூறப்படாதிருக்கலாம். ஆனால் ஆதாமும் ஏவாளும் அமைக்கப்பட்ட முறை, அவர்கள் அவற்றுற்குக் கீழ்ப்படிவதை இயல்பாக்கியிருந்தது. இவ்வாறு, பசி, சாப்பிடவேண்டுமென்றும்; தாகம், பானம் பண்ண வேண்டுமென்றும் தெரிவித்தது. சூரிய அஸ்தமனம், “தங்களுக்குத் தேவைப்பட்ட ஓய்வையும் தூக்கத்தையும் அடையும்படி அவர்களை தூண்டியது. மேலும் யெகோவா அவர்களிடம் பேசி அவர்களுக்கு வேலை நியமிப்பையும் கொடுத்தார். உண்மையில் அந்த நியமிப்பு ஒரு சட்டமாயிருந்தது, ஏனென்றால் அவர்களுடைய நடத்தைப் போக்கை ஆளும். ஆனால் அது எவ்வளவு தயவான, நன்மை பயக்கும் சட்டம்! அது அவர்கள் தங்கள் திறமைகளை முழுமையாய் ஆரோக்கியமான வழிகளில் பயன்படுத்தக்கூடிய முற்றிலும் திருப்தியளிக்கும் ஒரு வேலையை அவர்களுக்குத் தந்தது. அவர்கள் பிள்ளைகளைப் பிறப்பித்து, பூமியின் மிருக ஜீவன்கனின் மேல் ஆளுகை செலுத்தி, பரதீஸ் பூகோளத்தை முழுமையாய் மூடும் வரையில் அதன் எல்லைகளைப் படிப்படியாய் விரிவாக்க வேண்டும். (ஆதி. 1:28; 2:15) அவசியமில்லாத நுட்ப விவரங்களைக் கொண்டு கடவுள் அவர்களைத் தொல்லைக்காளாக்கவில்லை. அவர்கள் தீர்மானங்களைச் செய்வதற்குப்போதிய வசதியை அவர் அனுமதித்திருந்தார். இதற்கும் மேலாக ஒருவர் என்ன கேட்கக்கூடும்?

3. தீர்மானங்களைச் செய்யும் சிலாக்கியம் ஆதாமுக்கு அளித்தபோது, அவன் செய்யும் எந்தத் தீர்மாமனமும், அது என்னவாயினும், நல்ல பலன்களை விளைவிக்குமென நிச்சயமாகவே அர்த்தங்கொள்ளவில்லை. தீர்மானங்களைச் செய்வதற்கு அவனுக்கிறுந்த சுயாதீனம் உத்தரவாதத்தைக் குறிப்பாக உணர்த்தியது. தன்னபடைய பரலோகத் தகப்பனுக்குச் செவிக்கொடுத்துச் கேட்பதன் மூலமும் அவன் கற்றுக்கொள்ளலாம், மேலும் தான் கற்றவற்றைப் பொருத்திப் பிரயோகிக்கக்கூடிய அறிவு திறமையையும் கடவுள் ஆதாமுக்குக் கொடுத்திருந்தார். ஆதாம் ‘கடவுளின் சாயலில்’ படைக்கப்பட்டிருந்ததனால், அவனுடைய இல்பான மனச்சாய்வு, தீர்மானங்களைச் செய்கையில் கடவுளுடைய பண்புகளைப் பிரதிபலிப்பதாயிருக்கும். கடவுள் தனக்குச் செய்திருந்தவற்றை அவன் உண்மையில் நன்றியோடு, மதித்துணர்ந்து கடவுளைப் பிரியப்படுத்த விரும்பியிருந்தால் அவ்வாறு செய்ய அவன் நிச்சயமாகவே கவனமாயிருப்பான்.-ஆதி. 1:26, 27; யோவான் 8:29- ஐ ஒத்துப் பாருங்கள்.

4. மனிதன், தன் சிருஷ்டிகருக்கு உயிரளிப்பவருமாகிய யெகோவாவின் பேரில் சார்ந்திருப்பதை அவனுக்கு நினைப்பூட்டுவதற்கு, யெகோவா பின்வரும் இந்தக் கட்டளையை அவனுக்குக்கொடுத்தார். “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதி.2:16, 17) இந்தச் சட்டம் மனிதனுக்குச் சுயாதீனம் இல்லாமற்போகச் செய்ததா? நிச்சயமாகவே இல்லை. கீழ்படிய அல்லது கீழ்படியாமற்போக ஆதாமுக்குச் சுயாதீனமிருந்தது. இந்தத் தடையுத்தரவு எந்தப் பாரத்தையும் சுமத்தவில்லை. அந்த ஒரே மரத்தைத் தொடாமல் சாப்பிடுவதற்கு அவனுக்கு ஏராளமாக இருந்தது. எனினும், தான் வாழும் பூமி, கடவுளுக்கு உரியதென்று, சிருஷ்டிகராகக் கடவுளே தம்முடைய சிருஷ்டிப்பின் மேல் நியாயப்படி உரிமையுள்ள அரசர் என்றும் அவன் ஒப்புக்கொள்வது தகுதியாயிருந்தது.-சங். 24:1, 10.

5. ஆனால் என்ன நடந்தது? தன்னல நோக்கத்தால் தூண்டப்பட்டு, ஒரு தூதன் உண்மையான வழிக்காட்டியைப்போல் பாவனை செய்து, கடவுளுடைய சித்தத்துக்கு எதிர்மாறான ஒன்றை ஏவாளுக்கு உறுதியளித்து அவளை ஏமாற்றினான், ஆதாம், தன்னுடைய தகப்பனுக்குக் கீழ்ப்படிவதற்கு மாறாக மீறுதலில் ஏவாளைச் சேர்ந்து கொண்டான். தங்களுக்கு உரியதாயிராத ஒன்றைப் பற்றிக்கொள்ள முயன்று ஆதாமும் ஏவாளும் தங்களுக்கு இருந்த மகிமையான சுயாதீனத்தை இழந்தார்கள். பாவம் அவர்களுடைய எஜமான் ஆயிற்று, மேலும், கடவுள் அவர்களை எச்சரித்ததன் பிரகாரம், மரணம் அவர்களுக்காக நிச்சயமாய்க் காத்திருந்தது. இதன் விளைவாக, அவர்களுடைய சந்ததிக்குப் பரம்பரை உடைமையாக என்ன கடத்தப்பட்டது? பாவம் கடத்தப்பட்டது, இது, தவறு செய்ய நாடும் இயல்பான போக்கிலும், நோயால் பாதிக்கப்படக்கூடிய பலவீனங்களிலும், வயோதிபத்தினால் முடிவில் உடல் கேடடைவதிலும் வெளிப்படுகிறது. மரணமும் கடத்தப்பட்டது. தவறுசெய்வதை நோக்கிச் சாயும் இந்தச் சுதந்தரித்த மனச்சாய்வு, சாத்தானுடைய செல்வாக்கினால் மேலும் மிகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை அபாயகரமாக்கியிருக்கும் ஒரு சமுதாயத்தை உண்டுபண்ணியிருக்கிறது. தொடக்கத்தில் மனிதவர்க்கத்துக்குக் கடவுள் கொடுத்த அந்தச் சுயாதீனத்துக்கு எவ்வளவு எதிர்மாறாயிற்று!-ரோமர் 5:12; யோபு 14:1; வெளி 12:9

சுயாதீனத்தை எங்கே கண்டடையலாம்

6. இன்றைய நிலைமைகளைக் கருதுகையில், மக்கள் தங்களுக்கு இருப்பதைப் பார்க்கிலும் அதிகமான சுயாதீனத்தை ஆவலோடு நாடுவது வியப்புக்குரியதாயில்லை. ஆனால் உண்மையான சுயைதீனத்தை எங்கே கண்டடையலாம்? இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:31, 32) இது, ஒரு அரசியல் அதிபதியை அல்லது அரசாங்க முறையை வேண்டாமென்று தள்ளி மற்றொன்றை ஆதரிக்கையில் மனிதர் அடைய நம்புகிற மட்டுப்பட்ட வகையான சுயாதீனம் அல்ல. அதற்கு மாறாக, இது மனிதரின் பிரச்சனைகளின் மூல காரணத்தையே தாக்குகிறது. இயேசு விவாதித்துப் பேசினது பாவத்திலிருந்து, பாவ அடிமைத்தனக் கட்டிலிருந்து விடுதலையாகும். (யோவான் 8:24, 34-36-ஐப் பாருங்கள்.) இவ்வாறு, ஒருவன் இயேசு கிறிஸ்துவின் மெய்யான சீஷனாகையில், இது அவனுடைய வாழ்க்கையில் கவனிக்கத்தக்க மாற்றத்தில், ஒரு விடுதலையில் பலனடைகிறது.

7. இந்த தற்போது, மெய்க்கிறிஸ்தவன், பாவ நடத்தையை நோக்கிச் சாயும் இயல் போக்கின் பாதிப்புகளை இனிமேலும் உணருகிறதில்லையென பொருள்படுகிறதில்லை. அதற்கு மாறாக, அதினிமித்தம் அவர்களுக்கு ஒரு போராட்டம் இருக்கிறது. (ரோமர் 7:21-25) ஆனால் ஒருவன் இயேசுவின் போதகங்களுக்கிசைய உண்மையில் வாழ்க்கை நடத்தினால், அவன் இனிமேலும் பாவத்துக்கு இழிவான அடிமையாயிரான். பாவம் அவனைக் கீழ்ப்படிய வைக்கும் கட்டளைகளைக் கொடுக்கும் ஓர் அரசனைப்போல் அவனுக்கு இனிமேலும் இராது. அமைதிக் குலைந்த மனச்சாட்சியுடன் அவனை விடும் நோக்கமற்ற ஒரு வாழ்க்கை முறையில் அவன் இனிமேலும் அகப்படுத்திவைக்கப்படுவதில்லை. கிறிஸ்துவின் பலியில் கொண்டுள்ள அவனுடைய விசுவாசத்தின் ஆதாரத்தின்பேரில் அவனுடைய கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவன் கடவுளுக்கு முன்பாகச் சுத்தமான மனசாட்சியை அனபவித்து மகிழ்வான். பாவ மனச்சாய்வுகள் தங்களை வலியுறுத்த முயற்சி செய்யக்கூடும், ஆனால் கிறிஸ்துவின் சுத்தமான போதகங்களை நினைவுக்குக் கொண்டுவருவதனால், அவற்றிற்கு இணங்கி நடக்க அவன் மறுக்கையில் பவம் தனக்கு எஜமானனாக இல்லை என்று காட்டுவான்-ரோமர் 6:12-17.

8. கிறிஸ்தவர்களாக நாம் மேலுமதிக சுயாதீனத்தை அனுபவித்து மகிழ்கிறோம். பொய் மதங்களின் பாதிப்புகளிலிருந்தும், குருட்டுப் பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டிருப்பதிலிருந்தும் பாவத்துக்கு அடிமைப்பட்டிருப்பதிலிருந்தும் நாம் விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். மரித்தோரின் நிலையையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய மென்மையான சத்தியங்கள், மனிதர் தங்கள் மனச்சாட்சியை அடக்கிக் கொள்ளும்படி செய்விக்கிற வன்முறை மரணத்துக்குப் பயப்படும் நியாயமற்றப் பயத்திலிருந்து நம்மை விடுதலையாக்கியிருக்கின்றனர். அபூரண மனிதர் அரசாங்கங்களின் இடத்தைக் கடவுளுடைய நீதியுள்ள ராஜ்யம் எடுத்துக் கொள்ளும் என்ற அறுவு நம்பிக்கையற்றத் தன்மையிலிருந்து நம்மை விடுதலையாக்குகிறது. ஆனால் இப்படிப்பட்ட சுயாதீனம் சீக்கிரத்தில் இந்தப் பழைய ஒழுங்குமுறை ஒழிந்து போய்விடும் என்ற விவாதத்தின்பேரில் சட்டத்தை மதியாதிருப்பதை அல்லது அரசியல் அதிபதிகளை அவமதிப்பதைச் சரியாக்குவதில்லை.-1 பேதுரு 2:16,17; தீத்து 3:1, 2

9. மிகச்சிறந்த வாழ்க்கை முறை என்னவென்பதை முயற்சி செய்வதும் தவறுவதுமான இவ்வகையில் கண்டுபிடிக்கும்படி யெகோவா நம்மை விடுகிறதில்லை. நாம் எவ்வாறு உண்டாக்கப்பட்டிருக்கிறோம், எது நமக்கு உண்மையான திருப்தியையும் தனிப்பட்ட மதிப்புணர்ச்சியையும் கொண்டுவரும், எது நமக்கு நிலையான நன்மை பயக்கும் என்பவற்றை அவர் அறிந்திருக்கிறார். மேலும் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான தம்முடைய சொந்தக் காலத்திட்டத்தை அவர் அறிந்திருப்பதால், நாம் ஈடுபட வேண்டிய மிக அதிகத் தகுதியான வேலைகள் எவை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அவ்வாறே ஒருவனை இழிவுபடுத்தக்கூடிய அல்லது மற்றவர்களோடு அவனுடைய உறவுகளை கெடுக்கக் கூடிய மற்றும் கடவளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அடையாதபடி அவனைத் தடுக்கக்கூடிய எண்ணங்களையும் நடத்தையையும் அவர் தெரிந்திருக்கிறார். (கலாத். 5: 19-23; மாற்கு 13: 10; 1தீமோத்தேயு 1: 12, 13-ஐ ஒத்துப் பாருங்கள்.) பின்பு கடவுள் கொடுத்துள்ள தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தைப் பயன்படுத்தி நாம் பிரதிபலிக்கப் போவதைத் தீர்மானிப்பது நம்மைப் பொருத்தது, தொடக்கத்தில் மனிதவர்க்கத்திற்குக் கொடுக்கப்பட்ட சுயாதீனத்தை ஆதாம் இழந்ததைப் பற்றி பைபிளில் நமக்குச் சொல்லப்பட்டிருப்பதை நாம் இருதயத்தில் ஏற்றிருந்தால், இந்தத் தீர்மானங்களை ஞானமாய்ச் செய்வோம். யெகோவாவிடம் நல்ல உறவைக் கொண்டிருப்பதே வாழ்க்கையில் நம்முடைய முதன்மையான அக்கறை என்று காண்பிப்போம்.

மற்றொரு வகையான சுயாதீனத்தை இச்சித்தல்

10. யெகோவாவின் சாட்சிகளாக வளர்க்கப்பட்ட இளைஞர் சிலரும், அவ்வளவு இளைஞராயிராத மற்றவர்களும், தங்களுக்கு வேறொரு வகையான சுயாதீனம் வேண்டுமென்ற உணர்ச்சியைச் சில சமயங்களில் அடைகிறார்கள். இந்த உலகம் மிகச் கவர்ச்சிகரமாய்த் தோன்றலாம், அதைப் பற்றி அவர்கள் எவ்வளவு அதிகமாய்ச் சிந்திக்கிறார்களோ எவ்வளவு அதிகமாய்ச் சிந்திக்கிறார்களோ அவ்வளவு அதிகமாய், இவ்வுலக ஜனங்கள் செய்யும் காரியங்களைத் தாங்களும் செய்ய வேண்டுமென்று அவர்கள் ஆசையும் பெறுகுகிறது. கிளர்ச்சிமிக்க நிலையை அடையும் வண்ணம் போதை பொருட்களை உட்கொள்ளவேண்டுமென்றோ, வெறிக்கக் குடிக்க வேண்டுமென்றோ, வேசித்தனம் செய்ய வேண்டுமென்றோ அவர்கள் ஒருவேளை திட்டமிடமாட்டார்கள். ஆனால் பள்ளி முடிந்த பின்பு அல்லது வேலை நேரங்கள் முடிந்த பின்பு உலகப்பிரகாரமான கூட்டாளிகளுடன் நேரத்தைச் செலவிட தொடங்குகிறார்கள். நிச்சயமாகவே, தங்கள் புதிய கூட்டாளிகளால் தாங்கள் ஏற்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள், ஆகவே அவர்களுடைய பேச்சையும் அவர்களுடைய நடத்தையையும் பின்பற்றத் தொடங்குகிறார்கள்.-3 யோவான் 11.

11. சில சமயங்களில், உலகப்பிரகாரமான நடத்தையில் மனம்போன போக்கில் ஈடுபடும்படி கவர்ச்சியூட்டுவது, யெகோவாவைச் சேவிப்பதாக உரிமைபாராட்டும் மற்றவரிடமிருந்து வருகிறது. ஏதேனில் சாத்தான் ஏவாளைக் குற்றஞ்செய்ய தூண்டினபோதும், பின்பு ஏவாள் ஆதாமைத் தன்னோடு சேர்ந்து கொள்ள துரிதப்படுத்தின போதும் இதுவே நடந்தது. பூர்வ கிறிஸ்தவர்களுக்குள்ளும் இவ்வாறு நடந்தது, நம்முடைய நாளிலும் இதே காரியம் நடக்கிறது. இத்தகைய ஆட்கள் அடிக்கடி உணர்ச்சி கிளர்ச்சியை நாடுகிறார்கள், மேலும் மிதமீறிய இன்பத்தைக் கொண்டுவரும் காரியங்களை இச்சிக்கிறார்கள். ‘கொஞ்சம் விளையாட்டு மகிழ்ச்சி’யடையும்படி அவர்கள் மற்றவர்களைத் தூண்டுகிறார்கள். “தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறாக்கள்.”-2 பேதுரு 2: 18,19.

12. இதன் விளைவோ இன்பமாக இல்லை. தவறான பாலுறவு உணர்ச்சிவச கலவரத்தை உண்டுபண்ணுவதில் விளைவடைகிறது. மேலும் இது நோய்க்கும், வேண்டாதக் கருத்தரித்தலுக்கும் ஒருவேளை திருமண முடிவுக்குங்கூட வழிநடத்தலாம். (நீதி 6:32-35; 1 கொரிந்தியர் 6:18;: 1 தெசலோ. 4 :3-8 போதை பொருட்களின் துர்பிரயோகம் எரிச்சலுணர்ச்சியையும், வாய்க்குளரிய பேச்சையும், மங்கலான பார்வையையும், தலை சுற்றலையும், சுவாசிக்கும் திறமையைக் குறைப்பதையும், மாயக்காட்சிகளையும், மரணத்தையும் உண்டுபண்ணக்கூடும். (நீதிமொழிகள் 23:29-35-ஐ ஒத்துப் பாருங்கள். இது கெட்டப் பழக்கத்துக்கு அடிமையாவதில் விளைவடையளாம். இந்தப் பழக்கத்தை ஆதரிக்க பெருங்குற்றச் செயல்களை நடப்பிக்கும்படியும் இது வழி நடத்தலாம், பொதுவாய் இப்படிப்பட்ட நடத்தையில் ஈடுபடுகிறவவர்கள் அதன் விளைவு என்னவாகலாமெனவும் அறிந்திருக்கிறார்கள். என்றாலும் உனர்ச்சிக் கிளர்ச்சியையும் சிற்றின்பத்தையும் நாடும் மீறிய இச்சை இந்த விளைவுகளுக்குத் தங்கள் மனதை மூடிக்கொள்ளும்படி அவர்களைச் செய்விக்கிறது. இது சுயாதீனம் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொல்கிறார்கள், ஆனால் பின்போ, வெகு பிந்திவிட்டபின், தாங்கள் பாவத்துக்கு அடிமைகளாயிருப்பதையும், பாவம் எப்பேர்பட்ட கொடுமையான எஜமான் என்பதையும் கண்டறிகிறார்கள்! இந்தக் காரியத்தின்பேரில் இப்பொழுதே சிந்தனை செய்து முடிவுக்கு வருவது அத்தகைய அனுபவத்திற்கெதிராக நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவிசெய்யும்.-கலாத். 6:7, 8.

பிரச்சனைகள் எங்கே தொடங்குகின்றன

13. இந்தப் பிரச்சனாகள் எங்கே அடிக்கடி தொடங்குகின்றன என்பதைப் பற்றிச் சற்று நின்று சிந்தித்துப் பாருங்கள் பைபிள் பின்வருமாறு விளக்குகிறது: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது, மரணத்த்பை பிறப்பிக்கும்.” (யாக். 1:14 15) ஆனால் இந்த இச்சைகள் எப்படித் தூண்டிவிடப்படுகின்றன? மனதுக்குள் செல்லும் காரியங்களாலேயே, இது பைபிள் நியமங்களைப் பொருத்தி பிரயோகியாத ஆட்களுடன் சகவாசம் வைத்துக்கொள்வதன் விளைவாக அடிக்கடி ஏற்படுகிறது. நிச்சயமாகவே, “துர்ச்சகவாசங்களைத்” தவிர்க்க வேண்டும்மென்று நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம். ஆனால் கேள்வி என்னவென்றால், எந்தச் சகவாசங்கள் கெட்டவை? இந்தக் காரியத்தை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? பின்வரும் கேள்விகளையும் வேதவசங்களையும் சிந்தித்தாராய்வது சரியான முடிவுகளுக்கு வர நமக்கு உதவி செய்யும்.

சில ஆட்கள் மதிப்புள்ளவர்களாகத் தோன்றுவது அவர்கள் நல்ல கூட்டாளிகலாக இருப்பார்களென பொருள்படுகிறதா? (ஆதியாகமம் 34: 1, 2, 18, 19-ஒத்துப் பாருங்கள்)

அவர்களுடைய உரையாடல், ஒருவேளை அவர்களுடைய கேலிப்பேச்சுகள், அவர்களோடுநாம் நெருங்கிய தோழமையில் இருக்கிறோமா இல்லையாவென சுட்டிக்காட்டக் கூடுமா? (எபேசி 5:3, 5)

கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி நாம் நம்புகிற அதே காரியங்களை அவர்கள் நம்புகிறதில்லையென்றால் நாம் கவலைகொள்வதற்கு ஏதாவது காரணமிருக்கிறதா? (1 கொரிந்தியர் 15: 12, 32, 33-ஐ ஒத்துப் பாருங்கள்.)

தம்மை நேசிக்காத ஆட்களின் சகவாசத்தை நாம் தெரிந்து கொண்டால் யெகோவா எவ்வாறு உணருவார்? (2 நாளாகமம் 19: 1, 2)

அவிசுவாசிகளோடு நாம் வேலை செய்தாலும் அல்லது அவர்களோடு பள்ளிக்குச் சென்றாலும் அவர்களைக் கூட்டாளிகளாக நாம் தெரிந்து கொள்வதில்லையென நாம் எப்படிக் காட்டலாம்? (1 பேதுரு 4: 3, 4)

டெலிவிஷன் பார்ப்பதும், புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் முதலியவற்றை வாசிப்பதுங்கூட மற்றவர்களோடு சகவாசம் வைப்பதற்கான வழிகள். இந்தச் செய்திமூலங்களிலிருந்து வரும் என்ன வகையான தகவல்களுக்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்நாட்களில் முக்கிய தேவை இருக்கிறது? (நீதி. 3: 31; ஏசயா. 8: 19; எபே. 4: 17-19)

கூட்டாளிகளைப் பற்றியதில் நாம் செய்யும் தெரிவு, நம்மைப் பற்றி எவ்வகையான ஆட்களென யெகோவாவுக்குத் தெரிவிக்கிறது? (சங். 26:1, 4, 5; 97:10)

14. கடவுளுடைய புதிய ஒழுங்கு நமக்கு முன்னால் மிக நெருங்கியுள்ளது. அவருடைய மற்றும் அவனுடைய அடிமைப் படுத்தும் பொல்லாதக்காரிய ஒழுங்குமுறை முழுவதினுடைய செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். படிப்படியாய் பாவத்தின் எல்லா விளைவுகளும் மனிதவர்க்கத்திலிருந்து நீக்கப்படும். பரதீசில் நித்திய ஜீவனோடிருப்பது அவர்களுக்கு முன்னாலிருக்கும். “யெகோவாவின் ஆவியோடு” முழுவதும் ஒத்திசைந்திருக்கும் சுயாதீனத்தைக் கடைசியாக எல்லா சிருஷ்டிப்பும் அனுபவித்து மகிழும். (2 கொரிந்தியர் 3:17) கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையை இப்பொழுது அற்பமாகக் கருதி நடப்பதன் காரணமாக இந்த எல்லாவற்றையும் இழக்கும் ஆபத்துக்குள்ளாவது அறிவாகுமா? நாம் உண்மையில் விரும்புவது “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனம்” என்பதை, இன்று நம்முடைய கிறிஸ்தவ சுயாதீனத்தைப் பிரயோகிக்கும் முறையில் நாமெல்லாரும் தெளிவாய்க் காட்டடுவோமாக.-ரோமர் 8:20.

மறு கலந்தாலோசிப்பு

● முதல் மனித ஜோடி என்ன வகையான சுயாதீனத்தை அனுபவித்து மகிழ்ந்தார்கள்? இப்பொழுது மனிதவர்க்கம் அனுபவிக்கிறதோடு அதை ஒத்துப் பார்த்தால் எவ்வாறு இருக்கிறது?

● இந்த உலகத்துக் நேர்மாறாக, உண்மையான கிறிஸ்தவர்களுக்கு என்ன சுயாதீனம், இருக்கிறது? இது எப்படிக் கூடியதாயிருக்கிறது?

● இந்த உலகம் கொண்டிருக்கும் வகையான சுயாதீனத்தைத் தேடுகிறவர்கள் என்ன துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்?

● துர்சகவாசத்தைத் தவிர்ப்பது ஏன் முக்கியமானது? ஆதாமைப் போலிராமல், எது தீமை என்பதில் யாருடைய தீர்மானங்களை நாம் ஏற்கிறோம்?

[கேள்விகள்]

1, 2, (எ) முதல் மனித ஜோடிக்கு என்ன வகையான சுயாதீனத்தைக் கடவுள் கொடுத்தார்? (பி) அவர்களுடைய நடவடிக்கைகளை ஆண்ட சட்டங்கள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.

3. தீர்மானங்களைச் செய்ய தன் சுயாதீனத்தை ஞானமாய்ப் பயன்படுத்த ஆதாம் எப்படி உதவி செய்யப்பட்டான்?

4. (எ) ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தடையுத்தரவு அவன் சுயாதீனத்தை இழக்கச்செய்தார்? (பி) அது ஏன் தகுதியான கட்டளையாயிருந்தது?

5. ஆதாமும் ஏவாளும் தங்களுக்கிருந்த அந்த மகிமையான சுயாதீனத்தை எப்படி இழந்தார்கள்? (பி) என்ன நடந்தது, நாம் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்?

6. (எ) உண்மையான சுயாதீனத்தை எங்கே கண்டடையலாம்? (பி) யோவான் 8:31, 32-ல் என்ன வகையான சுயாதீனத்தைப் பற்றி இயேசு பேசினார்?

7. (எ) அப்படியானால், என்ன கருத்தில், நாம் இப்பொழுது பாவத்திலிருந்து விடுதலையாகி இருக்கலாம்? (பி) இந்தச் சுயாதீனத்தை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்?

8. (எ) இன்னும் என்ன சுயாதீனத்தை உண்மையான கிறிஸ்தவம் நமக்குக் கொடுக்கிறது? (பி) இது உலகப்பிரகாரமான அதிபதியிடம் நம்முடைய மனப்பான்மையை எப்படிப் பாதிக்க வேண்டும்

9. (எ) இப்பொழுது மனிதருக்குக் கூடியதாயிருக்கிற சுயாதீனத்தை மிக அதிக அளவில் நாம் அனுபவித்து மகிழ யெகோவா எப்படி அன்புடன் நமக்கு உதவிசெய்கிறார்? (பி) தீர்மானங்களைச் செய்கையில் நாம், ஆதாம் தன் சுயாதீனத்தை தவறாக பயன்படுத்தினதனால் விளைந்ததைத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறோமென்று எப்படிக் காட்டலாம்?

10. கிறிஸ்தவர்களென உரிமைப்பாராட்டுபவர்களும் என்ன வகையான சுயாதீனத்தை நாடித் தேடியிருக்கிறார்கள்

11. இந்தக் கவர்ச்சியூட்டுதல் சில சமயங்களில் எங்கிருந்து வருகிறது?

12. (எ) உலகப்பிரகாரமான நடத்தையின் விசனகரமான விளைவுகள் யாவை? (பி) அதில் உட்படுகிறவர்கள் இந்த விளைவுகளை அறிந்திருந்தும், அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதில் ஏன் பிடிவாதமாயிருக்கிறார்கள்?

13. (எ) இந்தப் பிரச்சனைகளுக்கு வழிநடத்துகிற இச்சைகள் எப்படித் தூண்டிவிடப்படுகின்றன? (பி) “துர்ச் சகவாசங்கள்” எவை எவை என்பதை விளங்கிக் கொள்ள, யாருடைய நோக்குநிலை நமக்குத் தேவை? (சி) பத்தியின் முடிவிலுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கையில், யெகோவாவின் நோக்கு நிலையை அழுத்திக் காட்டுங்கள். கேள்விகளை ஒவ்வொன்றாகத் தனித்தனியே ஆலோசித்துக் குறிப்புச் சொல்லுங்கள்.

14. கடவுளுடைய வார்த்தியின் அறிவுரையை இப்பொழுது உண்மையுடன் பொருத்திப் பிரயோகித்து வருகிறவர்களுக்கு என்ன மேன்மையான சுயாதீனம் எதிர்காலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது?