வணக்கத்தில் ஒற்றுமை—இது உங்களுக்கு எதைக் குறிக்க வேண்டும்?
அதிகாரம் 1
வணக்கத்தில் ஒற்றுமை—இது உங்களுக்கு எதைக் குறிக்க வேண்டும்?
வணக்க ஒற்றுமையை நோக்கி முன்னேறும் கிளர்ச்சியூட்டும் ஓர் இயக்கம் பூகோளம் சுற்றிலும் இருக்கிறது. இது எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களை ஒன்றுசேர இழுத்து வருகிறது. இவர்களுடைய ஒற்றுமை எவ்வாறாவது நம்பிக்கைகளில் விட்டுக்கொடுத்து இணங்கிப் போவதன் விளைவாய் உண்டானதல்ல. கடவுளுடைய வார்த்தையோடு முரண்படுகிற வாழ்க்கை நடைபாணிகளைக் கண்டிக்காமல் அவர்கள் தவிர்த்திருப்பதனால் அடையப்படவுமில்லை. அப்படியானால் இந்த ஒற்றுமைக்குக் காரணம் என்ன? எல்லாவகை வாழ்க்கை அனுபவபோக்கிலிருந்தும் வரும் மக்கள் யெகோவாவை ஒரே உண்மையான கடவுளென்று அறிந்து, தாங்களாக மனமுவந்து தங்கள் வாழ்க்கையை அவருடைய நீதியுள்ள வழிகளுக்கு இசைவாய் கொண்டுவருகிற இந்தக் கண்கூடான நிகழ்ச்சியே காரணமாயிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 15:3, 4-உடன் ஒத்துப் பாருங்கள்.
2 இது ஏறக்குறைய 2,700 ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசியாகிய மீகா எழுதி பதிவு செய்த ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நடைபெறுகிறது. ‘கடைசி நாட்களைக்’ குறித்து அவன் எழுதினதாவது: “பல ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் பர்வதத்துக்கும் யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.” (மீகா 4:1, 2, தி.மொ.) a இது நடந்தேறுவதை நீங்கள் காண்கிறீர்களா?
3 முழு ஜனமாக “ஜாதிகள்” எதுவும் யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தில் அவரை வணங்குவதற்குத் தங்களை முன்வந்து அளித்துக் கொண்டில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஜாதிகளிலிருந்து வரும் தனியாட்கள் அவ்வாறு செய்கிறார்கள். யெகோவா தேவனின் அன்புள்ள நோக்கத்தையும் கவர்ந்திழுக்கும் அவருடைய தனி சுபாவத்தையும் பற்றி அவர்கள் கற்றுவருகையில், அவர்களுடைய இருதயம் வெகுவாய்க் கனிந்து தூண்டுவிக்கப்படுகிறது. தாங்கள் என்ன செய்யும்படி கடவுள் விரும்புகிறார் என்பதைக் கண்டுபிடிக்க அவர்கள் மனத்தாழ்மையுடன் தேடுகின்றனர். அவர்களுடைய ஜெபம், பின்வருமாறு ஜெபித்த விசுவாசமுள்ள மனிதனாகிய தாவீதின் ஜெபத்திற்கு ஒப்பாயிருக்கிறது: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்”—4 யெகோவாவை வணங்குகிற திரள் கூட்டத்திற்குள் நீங்கள் உங்களைக் காண்கிறீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளும் போதனைக்கு உங்கள் பிரதிபலிப்பு, யெகோவாவே அதன் மூலக்காரணர் என்று நீங்கள் உண்மையில் மதித்துணருவதன் அத்தாட்சியைக் கொடுக்கிறதா? எந்த அளவுக்கு நீங்கள் ‘அவருடைய பாதைகளில் நடக்கிறீர்கள்?’
இதை அடைவது எப்படி
5 ஒருவரும் பொய்ம்மையால் தவறாக வழி நடத்தப்படாமலும், வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கண்டுபிடிக்கத் தவறுவதனால் இருளில் தடுமாறிக்கொண்டிராமலும், அறிவுள்ள சிருஷ்டிகள் யாவரும் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்பதே யெகோவாவின் நோக்கம். உயிரோடிருக்கும் யாவரும் ஒரே உண்மையான கடவுளைத் துதிக்கப் போகும் அந்த நாளுக்காக நாம் எவ்வளவு ஆவலாய்க் காத்திருக்கிறோம்! (சங் 103:19-22) அது நடப்பதற்கு முன்பு தம்முடைய அன்புள்ள அரசாட்சியை அலட்சியம் செய்து மற்றவர்களின் வாழ்க்கையைக் கெடுப்பதில் விடாப்பிடியாயிருப்பவர்களை யெகோவா நீக்கி தம்முடைய சிருஷ்டிப்பைச் சுத்திகரிக்க வேண்டும். தாம் செய்யப்போவதைப் பற்றி அவர் இரக்கமாய் முன்னெச்சரிக்கை கொடுக்கிறார். தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு தம்முடைய சொந்த நாளில் பின்வரும் இந்த அவசர அழைப்பு உலகமெங்கும் கொடுக்கப்படுகிறது: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமிமையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” (வெளி. 14:6, 7) இந்த அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களா? அப்படியானால், மற்றவர்களும் அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு உதவிசெய்ய யெகோவாவின் அமைப்புடன் உழைக்கும் சிலாக்கியம் உங்களுக்கு இப்பொழுது இருக்கிறது.
6 தாங்கள் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பரதீஸில் வாழ்வதற்கு விரும்புவதாகவும் வெறுமென சொல்லிக் கொண்டு, ஆனால் அதே சமயத்தில் தங்கள் சொந்தத் தன்னல அக்கறைகளையே தொடர்ந்து நாடித்தேடும் ஆட்களைத் தம்முடைய அமைப்புக்குள் கொண்டுவருவது கடவுளுடைய நோக்கமல்ல. ஆட்கள் “அவருடைய சித்தத்தை அறிகிற முற்றறிவை [திருத்தமான அறிவை, NW]” அடையவும், அதைத் தங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்திக் காட்டவும் வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (கொலோ. 1:9, 10, தி.மொ.) நன்றி மதித்துணர்வுள்ள ஆட்கள் பைபிளின் அடிப்படை போதகங்களைக் கற்ற பின்பு, கிறிஸ்தவ முதிர்ச்சியை நோக்கி முன்னேற விரும்புகின்றனர். யெகோவாவை மிக நெருங்கிய வண்ணம் அறிந்து கொள்ளவும், அவருடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளும் தங்கள் தெளிந்துணர்வை விரிவாக்கவும் ஆழமாக்கவும், அதைத் தங்கள் வாழ்க்கையில் இன்னுமதிக முழுமையான முறையில் பொருத்திப் பிரயோகிக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். தங்கள் பரலோகத் தகப்பனின் பண்புகளைத் தங்களில் வெளிப்படுத்தி காரியங்களை அவர் கருதுவதைப்போல் கருதி, அவரைப் போலிருக்க அவர்கள் நாடுகின்றனர். இது, நம்முடைய நாளில் பூமியில் செய்யப்படும்படி அவர் நியமித்திருக்கிற அந்த வேலையில் தங்களால் கூடியவரை முழுமையாய்ப் பங்குகொள்ள வழி வகைகளை நாடித் தேடுவதற்கு அவர்களைத் தூண்டுவிக்கிறது. இதையே நீங்களும் செய்கிறீர்களா?—எபே. 5:1; எபி. 5:12-6:3; 1 தீமோ. 4:15.
7 யெகோவாவைச் சேவிக்கிறவர்கள் ஒன்றுபட்ட ஜனமாக இருக்க வேண்டுமென்று பைபிள் காட்டுகிறது. (எபே. 4:1-3) பிளவுபட்ட ஓர் உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டும் நம்முடைய சொந்த அபூரணங்களுடன் இன்னும் போராடிக்கொண்டும் இருக்கிற போதிலும், இந்த ஒற்றுமை இப்பொழுது இருக்க வேண்டும். இயேசு, தம்முடைய சீஷர்களெல்லாரும் ஒருமித்து, உண்மையான ஒற்றுமையை அனுபவித்து மகிழவேண்டுமென்று ஊக்கமாய் ஜெபித்தார். இது எதைக் குறிக்கும்? முதலாவது, யெகோவாவுடனும் அவருடைய குமாரனுடனும் அவர்களுக்கு நல்ல உறவு இருப்பதைக் குறிக்கும். மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமைப்பட்டிருப்பார்கள். (யோவான் 17:20, 21) அவர்கள் யெகோவாவின் “ஆலயத்தில்” பெற்றுவரும் போதனையைப் பொருத்திப் பிரயோகித்து வருகையில் இந்த ஒற்றுமையை இப்பொழுது அடைந்திருக்கிறார்கள்.
ஒற்றுமைக்கு உதவிசெய்யும் காரியங்கள் யாவை?
8 இந்த ஒற்றுமைக்கு உதவிசெய்யும் இன்றியமையாதக் காரியங்கள் சில கீழே இலக்கமிட்டுக் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பின் தொடரும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கொடுக்கையில், அந்த ஒவ்வொன்றும் யெகோவாவுடனும், உடன் தோழரான கிறிஸ்தவர்களுடனும் உங்கள் சொந்த உறவை எவ்வாறு பாதிக்கிறதென்பதற்குச் சிந்தனை செலுத்துங்கள். இடம் குறித்துள்ள வேத வசனங்களின் உதவியைக் கொண்டு இந்தக் குறிப்புகளின் பேரில் பகுத்தாராய்வது, நம்மெல்லாருக்கும் தேவைப்படும் பண்புகளாகிய, கடவுள் கொடுத்த யோசிக்கும் திறமையையும் தெளிந்துணர்வையும் அபிவிருத்தி செய்ய உங்களுக்கு உதவிசெய்யும். (நீதி. 5:1, 2; பிலிப். 1:9-11) ஆகவே பின்வரும் இந்தக் காரியங்களைத் தனியே ஒவ்வொன்றாக ஆழ்ந்து ஆலோசியுங்கள்:
(1) நாமெல்லரும் யெகோவாவை வணங்குகிறோம், நம்மை தீமையைப் பற்றியதில் தராதரத்தை வைக்கும் அவருடைய உரிமையை ஒப்புக் கொள்ளுகிறோம்.
நமக்கு அற்பமாகத் தோன்றின ஒரு காரியத்தின் பேரில் யெகோவாவின் அறிவுரையை நாம் வேண்டுமென்றே அசட்டை செய்தால் அவர் அதை எவ்வாறு கருதுவார்? (லூக்கா 16:10; மல்கியா 1:6-8-ஐ ஒத்துப் பாருங்கள்.)
நாம் எப்பொழுதாவது யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிடில் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்களா? (ரோமர் 5:12; யோசுவா 7:20-26; 1 இராஜாக்கள் 14:16, ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.)
(2) உலகத்தில் நாம் எங்கிருந்தாலும், நம்மை வழிநடத்தக் கடவுளுடைய வார்த்தை நமக்கு இருக்கிறது.
தீர்மானங்களைச் செய்கையில், சரியென்று நாம் வெறுமென “உணருவதை” செய்வதில் என்ன அபாயம் இருக்கிறது? (எரே. 17:9; நீதி. 14:12)
ஒரு குறிப்பிட்ட காரியத்தின் பேரில் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை என்னவென்று நமக்குத் தெரியவில்லையென்றால், என்ன செய்ய வேண்டும்? (நீதி. 2:3-5)
(3) ஒரே ஆவிக்குரிய உணவூட்டும் திட்டத்திலிருந்து நாமெல்லாரும் பயனடைகிறோம்.
ஆவிக்குரிய உணவூட்டுவதற்கான யெகோவாவின் ஏற்பாடுகளை நன்றியோடு மதித்துணராதவர்களுக்குள் என்ன நிலைமைகள் இருந்து வருகின்றன? (ஏசாயா 1:3; 9:16; 65:14 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.)
(4) எந்த மனிதனுமல்ல, இயேசு கிறிஸ்துவே நம்முடைய தலைவர், அவர் மூலமாகவே நாமெல்லாரும் வணக்கத்தில் யெகோவாவை அணுகுகிறோம்.
ஆட்களாக நாம் மற்றவர்களைப் பார்க்கிலும் மேம்பட்டவர்கள் என்று நம்புவதற்கு நம்மில் எவருக்காவது நியாயப்படியான காரணம் இருக்கிறதா? (ரோமர் 3:23, 24; 12:3; மத். 23:8-10)
(5) நாம் எங்கு வாழ்ந்தாலும், கடவுளுடைய ராஜ்யத்தையே மனிதவர்க்கத்துக்குரிய ஒரே நம்பிக்கையென நோக்குகிறோம்.
இது எப்படி நம்மை, பிரிவினையுண்டாக்கும் செல்வாக்குகளுக்கு எதிராகப் பாதுகாக்கிறது? (மத். 6:9, 10; மீகா 4:3)
(6) கிறிஸ்தவ ஒற்றுமைக்கு மிக முக்கியமான பண்புகளைப் பரிசுத்த ஆவி, யெகோவாவை வணங்குகிறவர்களில் விளைவிக்கிறது.
கடவுளுடைய ஆவி நம்மில் அதன் கனிகளை விளைவிப்பதற்கு நாம் எப்படி வழியைத் திறந்து வைக்கிறோம்? (சங். 1:2; நீதி. 22:4; வெளி. 3:6; அப். 5:32)
ஆவியின் கனிகளை நாம் கொண்டிருப்பது நம்முடைய உறவை எப்படிப் பாதிக்கிறது: யெகோவாவுடன்? நம்முடைய சகோதரருடன்? (கலாத். 5:22, 23)
(7) கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய பொறுப்பு நம்மெல்லாருக்கும் உண்டு.
நம்முடைய உடன் தோழரான கிறிஸ்தவர்களுடன் இந்தப் பிரசங்க வேலையில் நாம் சுறுசுறுப்பாய்ப் பங்கு கொண்டுவருவது அவர்களைப் பற்றி நமக்குண்டாகும் உணர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது? (கொலோசெயர் 4:7, 11-ஐ ஒத்துப் பாருங்கள்.)
9இந்த உண்மைகளை ஒப்புக் கொள்வது ஒரு காரியம். இவற்றிற்குப் பொருந்த வாழ்வதற்கோ மிக அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் நாம் அப்படிச் செய்கையில், யெகோவாவிடம் நெருங்க இழுக்கப்படுகிறோம். உடன் கூடிய விசுவாசிகளுடனும் நம்முடைய கூட்டுறவு ஊக்கமூட்டும் ஊற்றுமூலமாகிறது. சங். 133:1 சொல்லுகிற பிரகாரம்: “இதோ சகோதரர் ஒருமித்து வசிப்பது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது!” (தி.மொ.) இந்த உலகத்தையும் அதன் எல்லா தன்னலத்தையும் விட்டு விலகி, யெகோவாவை உண்மையில் நேசிக்கும் மற்றவர்களோடு கூட்டங்களில் இருப்பது அளிக்கும் உயிர்ப்பூட்டும் அனுபவத்தை நீங்கள் தாமே அடைந்திருக்கிறீர்களல்லவா?
பிரிவினையுண்டாக்கும் செல்வாக்குகளைத் தவிர்த்திருங்கள்
10 இந்த விலைமதியா ஒற்றுமையைக் கெடுக்காதபடி பிரிவினையுண்டாக்கும் செல்வாக்குகளை நாம் தவிர்க்க வேண்டும். இவற்றில் முதன்மையான ஒன்று சுதந்தர மனப்பான்மை (அல்லது ஆவி) ஆகும். இதைத் தொடங்கி வைத்தவன் பிசாசான சாத்தான் என்பதை வெளிப்படுத்திக் காட்டி, இதைத் தவிர்த்திருக்க யெகோவா நமக்கு உதவி செய்கிறார். கடவுள் சொன்னதை அசட்டை செய்து, தன் சொந்தத் தீர்மானங்களைச் செய்வதே தன்னுடைய அனுகூலத்திற்கு ஏதுவானதென்று எண்ணும்படி ஏவாளை வஞ்சித்தவன் அவனே. இந்தக் கலகத்தனமான போக்கில் ஆதாம் அவளுடன் சேர்ந்து கொண்டான். இது அவர்களுக்கும் நமக்கும் இக்கட்டில் விளைவடைந்தது. (ஆதி. 2:16, 17; 3:1-6, 17-19) சுதந்தர மனப்பான்மை நிறைந்திருக்கிற ஓர் உலகத்தில் நாம் வாழ்கிறோம், ஆகவே இந்த மனப்பான்மை நம்மில் எழும்பாதபடி நாம் தடுத்து வைக்க வேண்டியதிருந்தால் அது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்க வேண்டியதில்லை. அப்படிச் செய்வதற்கு யெகோவா, தம்முடைய அமைப்பின் மூலம் அறிவுரை கொடுத்து நமக்கு அன்புடன் உதவி செய்கிறார்.
11 இந்தத் தற்போதைய சூழ்நிலைமையை நீக்கி, அதனிடத்தை “நீதி வாசமாயிருக்கும்” புதிய வானங்களாலும் புதிய பூமியாலும் நிரப்பப் போவதாகக் கூறும் யெகோவாவின் மேன்மையான வாக்குத்தத்தத்தை இந்த அமைப்பின் மூலமே நாம் கற்றறிந்தோம். (2 பேதுரு 3:13) சீக்கிரத்தில் இந்தப் பொல்லாத உலகம் போய்விடும், இந்தப் பூமி பரதீஸாக மாற்றப்படும் என்ற இந்த எதிர்பார்ப்பில் நாம் ஊக்க உணர்ச்சியூட்டப்படுகிறோம். என்றாலும், நீதியே எங்கும் நடைமுறை பழக்கமாக நிலவியிருக்கப் போகிற ஓர் உலகில் வாழ்வதற்கு உள்ளப்பூர்வமாய் நம்மை ஆயத்தம் செய்கிறோமென்று நம்முடைய சொந்த வாழ்க்கை மாதிரி காட்டுகிறதா? “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை,” என்று பைபிளில் நமக்குத் தெளிவாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. (1 யோவான் 2:15) மெய்யாகவே, இந்த உலகத்தைக் குறித்தப் பல காரியங்களை நம்மில் எவரும் விரும்புகிறதில்லை. ஆனால் தம்முடைய சொந்த உடனடியான வாழ்க்கை அனுபவிப்புக்கு இடையூறாக இருக்கிற உலகத்தின் அந்த அம்சங்களையே நாம் முக்கியமாய் வெறுக்கிறோமா? அல்லது அதன் ஆவியை—அதன் சுதந்தர மனப்பான்மையை, அதன் மிதமீறிய தன்னல அக்கறையை நாம் வெறுத்து விலகியிருக்கிறோமா? மாம்சத்தின் எதிர்மாறான சாய்வுகள் என்னவாயிருந்தாலும், யெகோவாவுக்குச் செவிகொடுப்பதையும் நம் இருதயப்பூர்வமாய் அவருக்குக் கீழ்ப்படிவதையும் நம்முடைய உள்ளப்பூர்வ பழக்கமாக்கி வருகிறோமா? நம்முடைய முழு வாழ்க்கைப் போக்கும்—நாம் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி—நம்முடைய சிந்தனையும் நம்முடைய உள்நோக்கங்களும் கடவுளில் தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும்.—நீதி. 3:5, 6.
12 இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையையும் அதன் வழிகளை நேசிக்கிற எல்லாரையும் அழிப்பதற்குரிய யெகோவாவின் நியமிக்கப்பட்ட நேரம் வருகையில், அவர் தாமதிக்கமாட்டார். இந்த உலகத்தைப் பற்றிக்கொண்டிருக்க இன்னும் பிரயாசப்படுகிறவர்களுக்கும், கடவுளுடைய சித்தத்தைக் கற்றறிவதையும் அதைச் செய்வதையும் பற்றி அரைமனதாகவே இருக்கிறவர்களுக்கும் இடமளிக்கும்படி அவர் அந்த நேரத்தைத் தள்ளிவைக்கப் போவதுமில்லை அல்லது தம்முடைய தராதரங்களை மாற்றப் போவதுமில்லை. இப்பொழுதே நடவடிக்கை எடுப்பதற்கு நேரம்! (லூக்கா 13:23, 24; 17:32; 21:34-36) ஆகவே, இந்த அருமையான வாய்ப்பைப் பற்றிக்கொண்டு, தம்முடைய அன்புள்ள அமைப்பின் மூலம் யெகோவா அளிக்கிற போதனையை ஆவலோடு நாடித்தேடி, பின்பு ஒற்றுமையுடன் அவருடைய பாதைகளில் நடக்கிற இந்தத் “திரள் கூட்டமான” ஆட்களைக் காண்பது இருதயத்துக்கு எவ்வளவு மகிழ்ச்சியூட்டுகிறது!
[அடிக்குறிப்புகள்]
a மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிக்கப்படாத வசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.
மறு கலந்தாலோசிப்பு
● வணக்கத்தைக் குறித்ததில் யெகோவாவின் நோக்கமென்ன?
● பைபிளின் அடிப்படையான போதகங்களைக் கற்றறிந்தபின், மேலும் என்ன முன்னேற்றத்தைச் செய்ய நாம் ஊக்கமாய் நாடித் தேட வேண்டும்?
● நாம் கலந்தாராய்ந்த ஒற்றுமைப்படுத்தும் காரியங்கள் நம் வாழ்க்கையைப் பாதிக்க வேண்டிய பிரகாரம் செல்வாக்குச் செலுத்த நாம் அவரவர் என்ன செய்யவேண்டும்?
[கேள்விகள்]
1, 2. (எ) எந்த அடிப்படையின்பேரில் உண்மையான வணக்க ஒற்றுமை நம்முடைய நாளில் கொண்டுவரப்படுகிறது? (பி) நடந்தேறிக் கொண்டிருப்பதை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?
3, 4. (எ) “ஜாதிகள்” யெகோவாவிடம் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எப்படி உண்மையாயிருக்கிறது? (பி) நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
5. (எ) கடைசியாக வணக்க ஒற்றுமை எந்த அளவுக்கு அடையபெறும்? (பி) இப்பொழுதே யெகோவாவை வணங்குகிறவர்களாவது ஏன் மிக அவசரமாயிருக்கிறது, இதைச் செய்யும்படி மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?
6. பைபிளின் அடிப்படை போதகங்களைக் கற்றறிந்த பின்பு மேலும் என்ன முன்னேற்றத்தைச் செய்ய நாம் ஊக்கமாய்ப் பிரயாசப்பட வேண்டும்?
7. எவ்வகைகளில் உண்மையான ஒற்றுமை இப்பொழுது கூடியதாயிருக்கிறது இதை எப்படி அடையலாம்?
8. (எ) நம்மைப் பாதிக்கும் கேள்விகளுக்குப் பதில்களைப் பகுத்தாராய நாம் அவரவர் பைபிளைப் பயன்படுத்துகையில் எவற்றை அபிவிருத்தி செய்கிறோம்? (பி) மேலே வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கிற கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம், கிறிஸ்தவ ஒற்றுமைக்கு உதவி செய்யும் காரியங்களைப் பகுத்தாராயுங்கள்.
9. இந்தச் சத்தியங்களை நம்முடைய வாழ்க்கையில் நாம் உண்மையில் பொருத்திப் பிரயோகிக்கையில் உண்டாகும் பலன் என்ன?
10. சுதந்தர மனப்பான்மையைத் தவிர்க்கும்படி நாம் ஏன் கவனமாயிருக்கவேண்டும்?
11. கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்கில் வாழ்வதற்கு நாம் உள்ளப் பூர்வமாய் ஆயத்தம் செய்கிறோமாவென எது காட்டும்?
12. (எ) யெகோவாவின் வழிகளைக் கற்று அவற்றை நம் வாழ்க்கையில் பின்பற்றுவதற்கான வாய்ப்பை விடாமல் இப்பொழுதே பயன்படுத்திக் கொள்வது ஏன் முக்கியம்? (பி) இந்தப் பத்தியில் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்கள் நம் ஒவ்வொருவருக்கும் எதைக் குறிக்கின்றன?
[பக்கம் 4-ன் முழுபடம்]