‘அவர்கள் உலகத்தின் பாகமல்ல’
அதிகாரம் பதினெட்டு
‘அவர்கள் உலகத்தின் பாகமல்ல’
இயேசு தாம் மரிப்பதற்கு முந்தின இரவு தமது சீஷர்களுக்காக ஜெபம் செய்தார். சாத்தான் பயங்கரமான அழுத்தங்களை அவர்களுக்கு கொண்டு வரப்போவதை அறிந்து, இயேசு தம் பிதாவினிடத்தில் இவ்வாறு கூறினார்: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்,” “நான் உலகத்தின் பாகமல்லாததுபோல, அவர்களும் உலகத்தின் பாகமல்ல.” (யோவான் 17:15, 16; NW) உலகத்திலிருந்து பிரிந்திருப்பது ஏன் முக்கியம்? ஏனெனில் இந்த உலகத்தை ஆளுபவன் சாத்தானே. அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த உலகத்தின் பாகமாக இருக்க கிறிஸ்தவர்கள் விரும்புவதில்லை.—லூக்கா 4:5-8; யோவான் 14:30; 1 யோவான் 5:19.
2இயேசு இந்த உலகத்தின் பாகமாக இல்லாததால் பிறரிடத்தில் அன்பற்றவராக இருந்தாரென அர்த்தப்படுத்தாது. மாறாக, சுகவீனரை சுகப்படுத்தினார், மரித்தோரை உயிர்த்தெழுப்பினார், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்பித்தார். மனிதருக்காக தம் உயிரையே கொடுத்தார். ஆனால், சாத்தானிய உலகத்தின் சிந்தையை வெளிப்படுத்துகிறவர்களின் தெய்வ பக்தியற்ற மனப்பான்மைகளையும் செயல்களையும் அவர் நேசிக்கவில்லை. ஆகவே, ஒழுக்கக்கேடான இச்சைகள், டாம்பீகமான வாழ்க்கை, பிரபலமடைய வேண்டுமென்ற ஆசை போன்றவற்றைக் குறித்து அவர் எச்சரித்தார். (மத்தேயு 5:27, 28; 6:19-21; லூக்கா 20:46, 47) அப்படியிருக்க இந்த உலகின் அரசியலில் அவர் தலையிட மறுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் யூதராக இருந்தபோதிலும், ரோமர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நிலவிய அரசியல் சச்சரவுகளில் அவர் எந்தப் பக்கமும் சாயவில்லை.
“என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல”
3யூத மதத் தலைவர்கள் இயேசுவை கைது செய்து ரோம தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவிடம் கொண்டுபோன போது என்ன நடந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். உண்மையில், அந்தத் தலைவர்களின் பாசாங்குத்தனத்தை இயேசு அம்பலப்படுத்தியதால் அவர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். அந்தத் தேசாதிபதி இயேசுவுக்கு எதிராக தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக “இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம்” என்று அவர்கள் பொய் குற்றம் சாட்டினார்கள். (லூக்கா 23:2) இது அப்பட்டமான பொய் என்பதில் சந்தேகமில்லை; ஏனெனில் ஒரு வருடத்திற்கு முன்பு ஜனங்கள் இயேசுவை ராஜாவாக்க விரும்பியபோது அவர் அதை மறுத்துவிட்டார். (யோவான் 6:15) எதிர்காலத்தில் தாம் பரலோக ராஜாவாக ஆகப்போவதை அவர் அறிந்திருந்தார். (லூக்கா 19:11, 12) அதோடு அவர் மனிதரால் அல்ல கடவுளால் முடிசூட்டப்படவிருந்தார்.
4இயேசு கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வரி செலுத்தும் விஷயத்தில் அவரை குற்றப்படுத்த பரிசேயர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் அவரோ, “ஒரு பணத்தை [ஒரு ரோம நாணயத்தை] எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது” என்று கேட்டார். “இராயனுடையது” என அவர்கள் சொன்னபோது, “அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்று அவர் பதிலளித்தார்.—லூக்கா 20:20-25.
5இந்த உலகின் அதிகாரிகளுக்கு எதிராக கலகம் செய்யும்படி இயேசு கற்பிக்கவில்லை. போர்ச்சேவகரும் மற்றவர்களும் இயேசுவை கைது செய்ய வந்தபோது, பேதுரு பட்டயத்தை உருவி அவர்களில் ஒருவருடைய காதை வெட்டினார். ஆனால் இயேசுவோ, மத்தேயு 26:51, 52) மறுநாள் இயேசு தம் நடவடிக்கைகளைப் பற்றி பிலாத்துவிடம் சொல்லுகையில், “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே” என்றார். (யோவான் 18:36) இயேசுவுக்கு எதிரான ‘குற்றங்களுக்கு எவ்வித ஆதாரமுமில்லை’ என்பதை பிலாத்து ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தக் கூட்டத்தாரின் வற்புறுத்துதலுக்கு பிலாத்து இணங்கி, இயேசுவை கழுமரத்தில் அறைய தீர்ப்பளித்தார்.—லூக்கா 23:13-15, NW; யோவான் 19:12-16.
“உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்று சொன்னார். (சீஷர்கள் இயேசுவின் வழிநடத்துதலை பின்பற்றுகிறார்கள்
6இவ்வுலகத்தின் பாகமாக இல்லாதிருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை இப்படியாக இயேசுவின் சீஷர்கள் அறிந்துகொண்டார்கள். இந்த உலகின் தெய்வ பக்தியற்ற மனப்பான்மைகளையும் செயல்களையும் தவிர்ப்பதை இது அர்த்தப்படுத்தியது; ரோமர்களின் அரங்கில் அல்லது கொட்டகையில் நடைபெற்ற கொடூரமான, ஒழுக்கங்கெட்ட பொழுதுபோக்குகளை தவிர்ப்பதும் இதில் உட்பட்டிருந்தது. இதன் காரணமாக சீஷர்கள் மனிதரை பகைப்பவர்கள் என அழைக்கப்பட்டனர். ஆனால் சக மனிதரை பகைப்பதற்கு பதிலாக, இரட்சிப்படைவதற்கு கடவுள் செய்துள்ள ஏற்பாடுகளிலிருந்து அவர்கள் நன்மையடையவே சீஷர்கள் கடுமையாக உழைத்தார்கள்.
7இயேசுவைப் போலவே அவரைப் பின்பற்றியவர்களும் பெரும்பாலும் வதந்திகளை நம்பிய அரசியல் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டனர். ஆனாலும் அப்போஸ்தலனாகிய பவுல் சுமார் பொ.ச. 56-ல் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், ‘மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் [அரசியல் ஆட்சியாளர்களுக்குக்ரோமர் 13:1-7; தீத்து 3:1, 2.
] கீழ்ப்படியுங்கள்; ஏனென்றால் தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை’ என அறிவுறுத்தினார். உலக அரசாங்கங்களை யெகோவா ஏற்படுத்துகிறார் என்று அர்த்தமல்ல, ஆனால் தமது ராஜ்யமே முழு பூமியையும் ஆட்சி செய்யும் வரையில் அவற்றை அவர் அனுமதிக்கிறார் என்றே அர்த்தம். ஆகவே அரசியல் அதிகாரிகளுக்கு மரியாதை காட்டும்படியும் வரி செலுத்தும்படியும் கிறிஸ்தவர்களை பவுல் அறிவுறுத்தியது பொருத்தமானதே.—8என்றாலும், அரசியல் ஆட்சியாளர்களுக்கு முழுமையான கீழ்ப்படிதலை அல்ல, ஆனால் சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலையே காட்ட வேண்டும். யெகோவாவின் சட்டங்களுக்கும் மனிதரின் சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகையில் யெகோவாவை சேவிப்பவர்கள் அவருடைய சட்டங்களுக்கே கீழ்ப்படிய வேண்டும். நாகரிக முன்னேற்றம்—ஓர் உலக சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் பற்றி சொல்வதை கவனியுங்கள்: “கிறிஸ்தவர்கள் ரோம குடிமக்கள் செய்து வந்த பணிகளில் சிலவற்றை செய்ய மறுத்தார்கள். இராணுவத்தில் சேர்வது தங்களுடைய விசுவாசத்திற்கு விரோதமானது என . . . கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் அரசியலில் பொறுப்பேற்கவில்லை. மன்னரை வணங்கவில்லை.” பிரசங்கிக்கக் கூடாதென யூத உயர்நீதி மன்றம் சீஷர்களுக்கு ‘உறுதியாய்க் கட்டளையிட்ட’ போது, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என அவர்கள் பதிலளித்தார்கள்.—அப்போஸ்தலர் 5:27-29.
9அரசியல், இராணுவ சச்சரவுகளில் சீஷர்கள் தங்களுடைய நடுநிலைமையை உறுதியாக காத்துக் கொண்டனர். பொ.ச. 66-ல் யூதேயாவிலிருந்த யூதர்கள் ராயனுக்கு விரோதமாக கலகம் செய்தனர். ரோம சேனை விரைவில் எருசலேமை சூழ்ந்துகொண்டது. அந்த நகரத்திலிருந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்தனர்? நகரத்தைவிட்டு வெளியேறும்படி இயேசு கொடுத்த அறிவுரையை அவர்கள் லூக்கா 21:20-24) அவர்களுடைய நடுநிலை வகிப்பு பின்னாளைய உண்மை கிறிஸ்தவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
நினைவுகூர்ந்தனர். ரோமர்கள் சிறிது காலத்திற்கு பின்வாங்கியபோது அந்தக் கிறிஸ்தவர்கள் யோர்தான் நதியைக் கடந்து பெல்லா மலைப் பகுதிக்கு ஓடிப்போயினர். (இந்தக் கடைசி நாட்களில் கிறிஸ்தவ நடுநிலைமை
10இந்தக் கடைசி நாட்களில், ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் பின்பற்றி நடுநிலைமையை உறுதியுடன் காத்துக்கொண்ட ஏதேனும் வகுப்பாரைப் பற்றி சரித்திரப் பதிவு காட்டுகிறதா? ஆம், யெகோவாவின் சாட்சிகள் அதைக் காத்து வந்திருக்கிறார்கள். நீதியை நேசிப்போர் நிலையான சமாதானத்தையும் செழுமையையும் மகிழ்ச்சியையும் பெறுவதற்கு ஒரே வழி கடவுளுடைய ராஜ்யமே என அவர்கள் இந்தக் காலப்பகுதி முழுவதிலும் தொடர்ந்து பிரசங்கித்து வந்திருக்கிறார்கள். (மத்தேயு 24:14) அதுமட்டுமல்ல, தேசங்களுக்கு இடையிலான சண்டை சச்சரவுகளில் அவர்கள் உறுதியான நடுநிலைமையை காத்துவந்திருக்கிறார்கள்.
11இதற்கு முற்றிலும் மாறாக இந்த உலக மதத் தலைவர்கள் அரசியல் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சில நாடுகளில் வேட்பாளர்கள் சார்பாகவோ எதிராகவோ மும்முரமாக பிரச்சாரம் செய்திருக்கின்றனர். கிறிஸ்தவ குருமார் சிலர் அரசியலிலும் பதவி வகிக்கின்றனர். இன்னும் சிலரோ குருமார் ஒப்புதல் தெரிவிக்கிற திட்டங்களுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு காட்டும்படி கோரியுள்ளனர். ஆனால் யெகோவாவின் சாட்சிகளோ அரசியலில் எவ்விதத்திலும் ஈடுபடுவது இல்லை. அரசியல் கட்சியில் சேருவது, அரசியல் பதவியை நாடுவது, அல்லது ஓட்டு போடுவது போன்றவற்றில் ஈடுபடுகிறவர்களின் விஷயத்தில் அவர்கள் தலையிடுவதும் இல்லை. தம் சீஷர்கள் உலகத்தின் பாகமாயிருப்பதில்லை என இயேசு சொல்லியிருப்பதால், யெகோவாவின் சாட்சிகள் அரசியலில் பங்கு கொள்வதில்லை.
மத்தேயு 24:3, 6, 7) மதத் தலைவர்கள் பெரும்பாலும் எல்லா சமயங்களிலும் ஒரு தேசத்திற்கோ பிரிவுக்கோ எதிராக மற்றொன்றை ஆதரித்துள்ளனர்; தங்கள் மதத்தவரையும் அப்படியே செய்யும்படி உந்துவித்திருக்கின்றனர். அதன் விளைவு? தேசம், இனம் போன்ற வேறுபாடுகளின் காரணமாக ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்கின்றனர். இது கடவுளுடைய சித்தத்திற்கு முரணானது.—1 யோவான் 3:10-12; 4:8, 20.
12இயேசு முன்னறிவித்த விதமாக தேசங்கள் எப்போதுமே யுத்தத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. தேசங்களுக்குள் இருக்கும் பல்வேறு பிரிவுகளும்கூட ஒன்றுக்கொன்று சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கின்றன. (13இருந்தாலும், எல்லா சண்டை சச்சரவுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலைமையை உறுதியுடன் காத்து வருகிறார்கள். நவம்பர் 1, 1939 ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு குறிப்பிட்டது: “தேசங்கள் போர் தொடுக்கையில், கர்த்தரின் பாகமாக இருக்கும் அனைவரும் நடுநிலை வகிப்பார்கள்.” எல்லா தேசங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் இந்த நிலையையே தொடர்ந்து காத்து வருகிறார்கள். ஒற்றுமையைக் குலைக்கும் இவ்வுலக அரசியலிலும் போர்களிலும் ஈடுபடுவதன் மூலம் தங்களுடைய சர்வதேச சகோதரத்துவத்தை முறிக்க அவர்கள் இடங்கொடுப்பதில்லை. அவர்கள் ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிக்கிறார்கள்.’ நடுநிலை வகிப்பதால், அவர்கள் யுத்தத்தை கற்பதுமில்லை.—ஏசாயா 2:3, 4; 2 கொரிந்தியர் 10:3, 4.
14அவர்கள் நடுநிலை வகிப்பதால் ஏற்படும் ஒரு விளைவு என்ன? “நீங்கள் உலகத்தின் பாகமாக இராதபடி[யால்] . . . உலகம் உங்களை பகைக்கிறது” என இயேசு சொன்னார். (யோவான் 15:19, NW) கடவுளின் ஊழியராக இருப்பதால் யெகோவாவின் சாட்சிகள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு சம்பவித்தது போலவே சிலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள், கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் “இப்பிரபஞ்சத்தின் தேவனான” சாத்தான், அதன் பாகமல்லாத யெகோவாவின் ஊழியர்களை துன்புறுத்துகிறான்.—2 கொரிந்தியர் 4:4; வெளிப்படுத்துதல் 12:12.
15யெகோவாவின் ஊழியர்கள் இந்த உலகத்தின் பாகமாய் இல்லாதிருப்பதற்காக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்; ஏனெனில் உலக தேசங்கள் அனைத்தும் அர்மகெதோனில் நிகழப்போகும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11-21) நாம் இந்த உலகத்திலிருந்து பிரிந்திருப்பதால் இந்த அழிவிலிருந்து தப்பித்துக் கொள்வோம். உலகளவில் ஐக்கியப்பட்ட ஜனங்களாக, நாம் கடவுளுடைய பரலோக ராஜ்யத்திற்கு உண்மைத்தவறாமல் இருக்கிறோம். உலகத்தின் பாகமாக இராததால் நாம் கேலிக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகிறோம் என்பது உண்மையே. இருந்தாலும் அவை சீக்கிரத்தில் முடிவுக்கு வரும்; ஏனெனில் சாத்தானிய அதிகாரத்திலுள்ள இந்தத் தற்போதைய பொல்லாத உலகம் நித்தியமாக அழிக்கப்படும். மறுபட்சத்தில், யெகோவாவை சேவிப்போர் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் நீதியுள்ள புதிய உலகில் என்றென்றும் வாழ்வர்.—2 பேதுரு 3:10-13; 1 யோவான் 2:15-17.
மறுபார்வை
• ‘உலகத்தின் பாகமல்லாதிருப்பது’ எதைக் குறிக்கிறது என்பதை இயேசு எப்படி காட்டினார்?
• பின்வருவனவற்றை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதினார்கள் என சொல்க: (அ) இந்த உலக சிந்தை, (ஆ) உலக ஆட்சியாளர்கள் (இ) வரி செலுத்துதல்.
• கிறிஸ்தவ நடுநிலை வகிப்புக்கு இன்று யெகோவாவின் சாட்சிகள் என்ன விதங்களில் அத்தாட்சி அளித்திருக்கிறார்கள்?
[கேள்விகள்]
1. (அ) இயேசு தமது மரணத்திற்கு முன்பு சீஷர்களுக்காக என்ன வேண்டிக் கொண்டார்? (ஆ) ‘உலகத்தின் பாகமல்லாதிருப்பது’ ஏன் மிக முக்கியம்?
2. என்ன வழிகளில் இயேசு இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருந்தார்?
3. (அ) இயேசுவைப் பற்றி பிலாத்துவிடம் யூத மதத் தலைவர்கள் என்ன குற்றம் சாட்டினார்கள், ஏன்? (ஆ) மானிட ராஜாவாக இருக்க இயேசு விரும்பவில்லை என எது காட்டுகிறது?
4. வரி செலுத்தும் விஷயத்தில் இயேசு என்ன மனப்பான்மையைக் காட்டினார்?
5. (அ) தாம் கைது செய்யப்பட்ட சமயத்தில் சீஷர்களுக்கு இயேசு என்ன பாடத்தை கற்பித்தார்? (ஆ) தம் நடவடிக்கைகளுக்கான காரணத்தை இயேசு எப்படி விளக்கினார்? (இ) அந்த விசாரணையின் முடிவு என்ன?
6. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் உலகத்தின் மனப்பான்மையை தவிர்த்ததையும் ஜனங்களை நேசித்ததையும் எப்படி காண்பித்தார்கள்?
7. (அ) இந்த உலகத்தின் பாகமாக இராததால் ஆரம்பகால சீஷர்களுக்கு என்ன நேரிட்டது? (ஆ) அரசியல் ஆட்சியாளர்களையும் வரி செலுத்துவதையும் அவர்கள் எவ்வாறு கருதினார்கள், ஏன்?
8. (அ) மேலான அதிகாரங்களுக்கு கிறிஸ்தவர்கள் எந்தளவுக்குக் கீழ்ப்படிதலை காட்ட வேண்டும்? (ஆ) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவின் முன்மாதிரியை எப்படி பின்பற்றினார்கள்?
9. (அ) எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் பொ.ச. 66-ல் ஏன் நகரத்தை விட்டு வெளியேறினார்கள்? (ஆ) எந்த விதத்தில் அது சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது?
10. (அ) யெகோவாவின் சாட்சிகள் என்ன வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள், ஏன்? (ஆ) எதன் சம்பந்தமாக நடுநிலையை காத்துவருகிறார்கள்?
11. (அ) யெகோவாவின் சாட்சிகளுடைய நடுநிலைமை வகிப்பு கிறிஸ்தவ குருமாருடைய நடவடிக்கைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? (ஆ) மற்றவர்கள் அரசியலில் ஈடுபடுவது சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளின் கருத்து என்ன?
12. இந்த உலகின் மதங்கள் நடுநிலை வகிக்காததால் என்ன ஏற்பட்டிருக்கிறது?
13. யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகிப்பதைப் பற்றி அத்தாட்சிகள் என்ன காட்டுகின்றன?
14. இந்த உலகிலிருந்து பிரிந்திருப்பதால் யெகோவாவின் சாட்சிகள் எதை அனுபவித்திருக்கிறார்கள்?
15. (அ) தேசங்கள் அனைத்தும் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன, எதிலிருந்து தப்பித்துக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் கவனமாக இருக்கிறார்கள்? (ஆ) உலகிலிருந்து பிரிந்திருப்பது ஏன் மிக முக்கியம்?
[பக்கம் 165-ன் படம்]
தாமும் தம்மை பின்பற்றுகிறவர்களும் “உலகத்தின் பாகமல்ல” என இயேசு கூறினார்