கடவுளுடைய வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்
அதிகாரம் மூன்று
கடவுளுடைய வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று.” (யோசுவா 23:14-16) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறியபின் இஸ்ரவேலின் மூப்பர்களிடம் இதைத்தான் யோசுவா சொன்னார். சந்தேகமின்றி, யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் நம்பகமானவையாக நிரூபித்தன. “நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு” அந்தப் பதிவும் பைபிளிலுள்ள மற்ற பதிவுகளும் இன்றுவரை நமக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன.—ரோமர் 15:4.
2பைபிளை எழுதுவதற்கு சுமார் 40 மனிதர் பயன்படுத்தப்பட்ட போதிலும் யெகோவாவே அதன் நூலாசிரியர். அப்படியானால் அதிலுள்ள அனைத்தும் அவருடைய வழிநடத்துதலினாலேயே எழுதப்பட்டது என்றா அர்த்தம்? ஆம், அதில் சந்தேகமேயில்லை. அவர் தம்முடைய வல்லமை வாய்ந்த பரிசுத்த ஆவியால், அதாவது செயல் நடப்பிக்கும் சக்தியால் எழுதப்படும்படி செய்தார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி . . . வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் [“ஏவப்பட்டு,” NW] அருளப்பட்டிருக்கிறது.’ இதை உறுதியாக நம்புகிறவர்கள் அனைவரும் பைபிளுக்கு செவிசாய்க்கிறார்கள், இதற்கு இசைவாகவும் வாழ்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17; 1 தெசலோனிக்கேயர் 2:13.
மற்றவர்கள் மதித்துணர உதவுங்கள்
3பைபிள் கடவுளுடைய வார்த்தை என்ற நம் நம்பிக்கை, நாம் பிரசங்கிக்கும் அநேகரிடத்தில் இருப்பதில்லை. இவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம்? பைபிளைத் திறந்து, அதில் என்ன அடங்கியுள்ளது என்பதை காட்டுவதே சிறந்த வழி. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், . . . இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) “தேவனுடைய வார்த்தை” மடிந்து மண்ணுக்குள் போன சரித்திரம் அல்ல; அது உயிருள்ளது! பைபிளின் வாக்குறுதிகள் நிறைவேற்றமடைவதை யாருமே தடுத்து நிறுத்த முடியாது. நாம் தரும் உற்சாகத்தைவிட பைபிளின் செய்தி உள்ளத்தில் ஏற்படுத்தும் தூண்டுதல் அதிக சக்தி படைத்தது.
4கடவுளுடைய பெயரை பைபிளில் பார்த்த அநேகர் அதை ஆழமாக ஆராய தூண்டப்பட்டுள்ளனர். வாழ்க்கையின் நோக்கத்தை, துன்மார்க்கத்தை கடவுள் அனுமதித்திருப்பதற்குக் காரணத்தை, தற்கால சம்பவங்களின் முக்கியத்துவத்தை, அல்லது பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையை பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதையெல்லாம் காட்டியபோது அநேகர் அதைப் படிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். சில நாடுகளில், மத பழக்கவழக்கங்கள் மக்களை பொல்லாத ஆவிகளின் தொல்லைக்கு ஆளாக்கியிருக்கின்றன; இதற்கான காரணத்தையும், இதிலிருந்து விடுதலை பெறும் வழியையும் குறித்து பைபிள் தருகிற விளக்கம் அப்படி அவதிப்படுகிறவர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த விஷயங்கள் நல்மனமுடைய ஜனங்களை ஏன் கவருகின்றன? ஏனெனில் இப்படிப்பட்ட முக்கிய விஷயங்களுக்கு பைபிள் மட்டுமே நம்பகமான தகவலை கொடுக்கும் புத்தகமாக திகழ்கிறது.—சங்கீதம் 119:130.
5ஆனால் பைபிளில் நம்பிக்கை இல்லை என ஜனங்கள் நம்மிடம் சொல்கையில் என்ன செய்யலாம்? சம்பாஷணையை அத்துடன் மீகா 3:11, 12; மத்தேயு 15:7-9; யாக்கோபு 4:4.
நிறுத்திக்கொள்ள வேண்டுமா? அவர்கள் நியாயமாக யோசித்துப் பார்க்க விரும்பினால் சம்பாஷணையை நிறுத்த வேண்டியதில்லை. ஒருவேளை பைபிளை கிறிஸ்தவமண்டலத்தின் புத்தகமாக அவர்கள் கருதலாம். கிறிஸ்தவமண்டலத்தின் பாசாங்குத்தனம், அரசியல் ஈடுபாடு, அதோடுகூட ஓயாத பண வசூலிப்பு போன்ற செயல்கள், பைபிளை அவர்கள் மதிக்காததற்குக் காரணமாக இருக்கலாம். அப்படித்தானா என அவர்களிடமே கேட்டுப் பார்க்கலாம் அல்லவா? கிறிஸ்தவமண்டலத்தின் உலகப்பிரகாரமான போக்குகளை பைபிள் கண்டித்து பேசுவதையும், கிறிஸ்தவமண்டலத்திற்கும் உண்மையான கிறிஸ்தவத்திற்கும் இடையிலான வேறுபாடுகளையும் பற்றி எடுத்துக் காட்டினால் அவர்களுடைய ஆர்வம் தூண்டப்படலாம்.—6மற்றவர்களுக்கோ, பைபிள் கடவுளால் ஏவப்பட்டது என்பதற்கான அத்தாட்சிகளை குறித்து நேரடியாக கலந்து பேசுவது உதவியாக இருக்கலாம். பைபிள் உண்மையிலேயே யெகோவா தேவனிடமிருந்து வந்தது என்பதை எது உங்களுக்கு தெளிவாக நிரூபிக்கிறது? பைபிளின் ஊற்றுமூலத்தைப் பற்றி அதிலேயே தரப்பட்டிருக்கும் விளக்கமா? அல்லது எதிர்காலத்தைப் பற்றி விலாவாரியாக வெளிப்படுத்தும் எண்ணற்ற தீர்க்கதரிசனங்கள்—மனிதனுக்கு அப்பாற்பட்ட ஓர் ஊற்றுமூலத்திலிருந்து வந்திருக்க வேண்டிய தீர்க்கதரிசனங்கள்—பைபிளில் இருப்பதா? (2 பேதுரு 1:20, 21) சுமார் 1,600-க்கும் மேற்பட்ட ஆண்டு காலப்பகுதியில் 40 பேரால் எழுதப்பட்டதாக இருந்தாலும் பைபிளிலுள்ள அனைத்தும் அருமையாக, ஒன்றுக்கொன்று ஒத்திசைவுடன் இருப்பதா? அல்லது அன்றிருந்த மற்ற புத்தகங்களைப் போலல்லாமல், அது விஞ்ஞானப்பூர்வமாக திருத்தமாக இருப்பதா? அல்லது எழுத்தாளர்களின் நேர்மையா? அல்லது அதை அழிப்பதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டும் இன்று வரை அது பாதுகாக்கப்பட்டிருப்பதா? உங்களைக் கவர்ந்தது எதுவாயிருப்பினும் மற்றவர்களுக்கு உதவ அதை நீங்கள் பயன்படுத்தலாம். a
நமது பைபிள் வாசிப்பு
7பைபிளை நம்புவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, அதைத் தவறாமல் வாசிக்க முதலில் நாம் நேரம் செலவழிப்பது அவசியம். நீங்கள் அதைச் செய்கிறீர்களா? இதுவரை தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் எல்லாவற்றிலும் பைபிளே தலைசிறந்த படைப்பு. அதற்காக நாமே தனியாக பைபிளை வாசித்தால் போதும், வேறெதுவும் தேவையில்லை என சொல்ல முடியாது. நம்மை தனிமைப்படுத்திக் கொள்வதைக் குறித்து பைபிள் எச்சரிக்கிறது. எல்லாவற்றிற்கும் விடையை நாமே ஆராய்ந்து கண்டுபிடித்து விடலாம் என நினைக்கக் கூடாது. சமநிலையான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு தனிப்பட்ட படிப்பு மட்டுமல்ல, கடவுளுடைய மக்கள் கூடிவரும் கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதும் அவசியம்.—நீதிமொழிகள் 18:1; எபிரெயர் 10:24, 25.
8இதன் சம்பந்தமாக, ஏசாயா தீர்க்கதரிசனத்தை வாசித்து கொண்டிருந்த ஓர் எத்தியோப்பிய அதிகாரியைக் குறித்து பைபிள் சொல்கிறது. “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” என அவரிடத்தில் கேட்கும்படி கிறிஸ்தவ சீஷனாகிய பிலிப்புவை ஒரு தேவதூதர் வழிநடத்தினார். அந்த எத்தியோப்பியன் பணிவுடன், “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” என பதிலளித்தார். அந்த வேத பகுதியின் அர்த்தத்தை சொல்லித் தரும்படி பிலிப்புவிடம் அவர் ஆவலுடன் கேட்டார். பிலிப்புவோ பைபிளை தனியாகவே வாசித்து வசனங்களுக்கு தன் சொந்த கருத்தை சொல்லவில்லை. அவர் கடவுளுடைய காணக்கூடிய அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இதனால், அந்த அமைப்பின் வாயிலாக யெகோவா கொடுத்து வந்த போதனைகளிலிருந்து பயனடைய அந்த எத்தியோப்பியனுக்கு அவரால் உதவ முடிந்தது. (அப்போஸ்தலர் 6:5, 6; 8:5, 26-35) அவ்வாறே இன்றும், சுயமாகவே யெகோவாவின் நோக்கங்களை யாராலும் சரிவர புரிந்துகொள்ள முடியாது. யெகோவா தமது காணக்கூடிய அமைப்பின் மூலம் அன்புடன் அளித்துவரும் உதவி நம் அனைவருக்கும் தேவை.
9பைபிளை புரிந்துகொள்வதற்கு உதவியாக, மிகச் சிறந்த வேதப்பூர்வ சங்கீதம் 1:1-3; 19:7, 8) பைபிளை தவறாமல் வாசிப்பதற்கென தனி முயற்சி எடுங்கள். எல்லாவற்றையும் உங்களால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் மொத்தத்தில் அது சொல்ல வருவதை புரிந்துகொள்வது மிகுந்த பயனளிக்கும். உதாரணமாக, ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பக்கங்களை வாசித்தாலே, சுமார் ஒரு வருடத்திற்குள் முழு பைபிளையும் நீங்கள் வாசித்து முடித்துவிடலாம்.
தகவல்களை பல்வேறு பிரசுரங்கள் வாயிலாக யெகோவாவின் அமைப்பு நமக்கு அளிக்கிறது. அதோடு தவறாமல் பைபிள் வாசிப்பதற்கு உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடத்தப்படும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியோடு சம்பந்தப்பட்ட அட்டவணையும் கொடுக்கப்படுகிறது. தனிப்பட்ட விதத்தில் பைபிள் வசனங்களை ஆராய்ந்து பார்க்கையில் நாம் அதிக நன்மை பெறலாம். (10நீங்கள் எப்பொழுது பைபிளை வாசிக்கலாம்? ஒரு நாளுக்கு 10 முதல் 15 நிமிடம் வரை ஒதுக்கினாலே அது உங்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும். இல்லையெனில், குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாசிப்பதற்கென நேரத்தை திட்டமிடுங்கள்; அதன்பின் திட்டமிட்ட நேரத்தில் தவறாமல் வாசியுங்கள். நீங்கள் திருமணமானவரானால், நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து சப்தமாக வாசித்து மகிழலாம். வாசிக்கிற வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி சப்தமாக வாசிக்கலாம். சாப்பிடுவதைப் போன்றே பைபிள் வாசிப்பதும் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டிய ஒரு பழக்கம். ஒருவர் சரிவர சாப்பிடாமல் இருந்தால் அது அவருடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அவ்வாறே நம் ஆவிக்குரிய ஆரோக்கியமும் அதன் மூலம் கிடைக்கும் நித்திய ஜீவனும், ‘தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும்’ தவறாமல் உட்கொள்வதையே பெரிதும் சார்ந்துள்ளது.—மத்தேயு 4:4.
நம் குறிக்கோள்
11நாம் என்ன குறிக்கோளுடன் பைபிளை வாசிக்க வேண்டும்? இத்தனை பக்கங்களை வாசித்துவிட வேண்டும் என்பது நம் இலக்காக இருக்கக் கூடாது. கடவுளைப் பற்றி நன்றாக அறிந்துகொள்வதே யோவான் 5:39-42) “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” என்று சொன்ன பைபிள் எழுத்தாளருடைய மனநிலையே நமக்கும் தேவை.—சங்கீதம் 25:4.
நம் நோக்கமாக இருக்க வேண்டும். அப்படி செய்கையில் அவர் மீதுள்ள நம் அன்பும் பெருகும், அவர் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் நம்மால் வணங்கவும் முடியும். (12யெகோவாவிடமிருந்து நாம் போதனைகளை பெற்றுக்கொள்கையில் ‘திருத்தமான அறிவை’ அடைவதே நம்முடைய ஆவலாக இருக்க வேண்டும். திருத்தமான அறிவைப் பெறாமல் கடவுளுடைய வார்த்தையை நம் வாழ்க்கையில் எப்படி சரிவர கடைப்பிடிக்க முடியும் அல்லது மற்றவர்களுக்கு சரியாக விளக்க முடியும்? (கொலோசெயர் 3:10, NW; 2 தீமோத்தேயு 2:15) திருத்தமான அறிவைப் பெற பைபிளை கவனமாக வாசிப்பது அவசியம். அதன் ஒரு பகுதி புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமாக இருந்தால் அதன் கருத்தை புரிந்துகொள்ளும் வரையில் திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டியிருக்கலாம். அந்த விஷயத்தின் பேரில் தியானித்து, வித்தியாசமான கோணங்களில் அதை சிந்தித்துப் பார்ப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதன் மூலமும் நாம் நன்மை அடையலாம். பகுத்தாராய்ந்து சிந்தனை செய்வதற்கு நான்கு முக்கியமான அம்சங்கள் 30-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கோணங்களில் ஒன்றை அல்லது சிலவற்றைப் பயன்படுத்தி வேதாகமத்தின் பல பகுதிகளை நன்மை தரும் விதத்தில் பகுத்தாராயலாம். பின்வரும் பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இதை எப்படி செய்யலாம் என அறிந்துகொள்வீர்கள்.
(1) நீங்கள் வாசிக்கிற வசனம் யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை பற்றிய சில விஷயங்களை பெரும்பாலும் உங்களுக்கு தெரியப்படுத்தலாம். உதாரணமாக, சங்கீதம் 139:13, 14-ல் பிறவாத குழந்தையிடம் கடவுள் காட்டும் கரிசனையை பற்றி நாம் கற்றுக்கொள்கிறோம்: “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” யெகோவாவின் படைப்புகள் எவ்வளவு அற்புதமானவை! மனிதரை படைத்திருக்கும் விதமே அவர் நம்மிடத்தில் வைத்திருக்கும் அன்புக்கு சான்று பகருகிறது.
யோவான் 14:9, 10-ன் அடிப்படையில், மற்றவர்களிடத்தில் இயேசு நடந்து கொண்ட விதத்தைப் பற்றி வாசிக்கும்போது யெகோவா எப்படி நடந்துகொள்வார் என்பதையே உண்மையில் காண்கிறோம். அதை மனதில் வைத்து, லூக்கா 5:12, 13 மற்றும் லூக்கா 7:11-15 வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களிலிருந்து யெகோவாவை குறித்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
(2) இந்தப் பதிவு பைபிளின் கருப்பொருளோடு, அதாவது வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாகிய இயேசு கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்பட்டு அவருடைய பெயர் பரிசுத்தமாக்கப்படுவதோடு எப்படி சம்பந்தப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள்.
எசேக்கியேலும் தானியேலும் பைபிளின் கருப்பொருளை எப்படி வலியுறுத்திக் காட்டினர்? (எசேக்கியேல் 38:21-23; தானியேல் 2:44; 4:17; 7:9-14)
இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட வித்து என பைபிள் எப்படி தெளிவாக அடையாளம் காட்டுகிறது? (கலாத்தியர் 3:16, NW)
ராஜ்யம் என்ற கருப்பொருளின் மகத்தான உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துதல் புத்தகம் எவ்வாறு விவரிக்கிறது? (வெளிப்படுத்துதல் 11:15; 12:7-10; 17:16-18; 19:11-16; 20:1-3; 21:1-5)
(3) நீங்கள் வாசிப்பவற்றை எப்படி கடைப்பிடிக்கலாம் என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். உதாரணமாக, யாத்திராகமம் முதல் உபாகமம் வரையுள்ள பகுதியில் இஸ்ரவேலரின் ஒழுக்கக்கேட்டையும், கலகத்தனத்தையும் பற்றி நாம் வாசிக்கிறோம். அவர்களுடைய மனப்பான்மைகளும் செயல்களும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தின என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். ஆகவே, இஸ்ரவேலரின் கெட்ட மாதிரியைப் பின்பற்றாமல் 1 கொரிந்தியர் 10:11.
யெகோவாவை பிரியப்படுத்த அது நம்மை தூண்ட வேண்டும். “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.”—ஆபேலை காயீன் கொலை செய்ததைப் பற்றிய பதிவு நமக்கு என்ன பாடத்தைக் கற்பிக்கிறது? (ஆதியாகமம் 4:3-12; எபிரெயர் 11:4; 1 யோவான் 3:10-15; 4:20, 21)
பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கு பைபிள் தரும் அறிவுரை பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உடையவர்களுக்கும் பொருந்துகிறதா? (எண்ணாகமம் 15:16; யோவான் 10:16)
கிறிஸ்தவ சபையில் நல்ல நிலைநிற்கையுடன் இருந்தாலும் நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிற பைபிள் அறிவுரையை இன்னும் முழுமையாக கடைப்பிடிப்பதைப் பற்றி ஏன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்? (2 கொரிந்தியர் 13:5; 1 தெசலோனிக்கேயர் 4:1)
(4) நீங்கள் வாசிக்கிற விஷயங்களை மற்றவர்களுக்கு உதவும் விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு கவனம் செலுத்துங்கள். மத்தேயு 15:30.
எல்லாருக்குமே உடல்நல பிரச்சினைகளைக் குறித்த கவலை உண்டு. ஆகவே, கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக இயேசு பெரிய அளவில் என்ன செய்யவிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு அவர் பூமியில் என்ன செய்தார் என்பதை அவர்களுக்கு வாசித்து காட்டலாம்: “சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்[தார்கள்], . . . அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.”—யவீருவின் மகள் உயிர்த்தெழுப்பப்பட்டதைப் பற்றிய பதிவு யாருக்கு உதவியாய் இருக்கும்? (லூக்கா 8:41, 42, 49-56)
13மேற்குறிப்பிடப்பட்ட நான்கு குறிப்புகளையும் ஆலோசிக்கையில் பைபிள் வாசிப்பு எவ்வளவு பலன்தருவதாக இருக்கிறது! பைபிளை வாசிப்பது ஒரு சவால் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வாழ்நாள் முழுவதும் நன்மை விளைவிக்கலாம்; ஏனெனில் பைபிளை வாசிக்க வாசிக்க ஆவிக்குரிய விஷயங்களில் நாம் முன்னேறுவோம். தவறாமல் பைபிளை வாசிப்பது நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிடமும் நம் கிறிஸ்தவ சகோதரர்களிடமும் நெருங்கி வரச் செய்யும். ‘ஜீவவசனத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்’ என்ற அறிவுரைக்கு செவிசாய்க்க இது நமக்கு உதவும்.—பிலிப்பியர் 2:16, NW.
[அடிக்குறிப்பு]
a ஆழ்ந்து கவனம் செலுத்துவதற்கு ஏன் பைபிள் தகுந்த புத்தகம் என்பதை அறிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டைக் காண்க.
மறுபார்வை
• பைபிள் ஏன் எழுதப்பட்டு நம்முடைய நாள் வரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது?
• மற்றவர்கள் பைபிளை மதித்துணருவதற்கு நாம் எப்படி உதவலாம்?
• பைபிளை தனிப்பட்ட விதமாக தவறாமல் வாசிப்பது ஏன் பயனுள்ளது, என்ன நான்கு கருத்துக்கோணங்களைப் பயன்படுத்தி நாம் வாசித்தவற்றை நன்மைதரும் வண்ணம் பகுத்தாராயலாம்?
[கேள்விகள்]
1. (அ) கடவுளுடைய வார்த்தை நம்பகமானது என்பதை பூர்வ இஸ்ரவேலர் எப்படி அனுபவத்தில் கண்டறிந்தார்கள்? (ஆ) இது நமக்கு ஏன் அக்கறைக்குரியது?
2. (அ) என்ன கருத்தில் பைபிள் ‘தேவ ஆவியினால் ஏவப்பட்டது’? (ஆ) பைபிள் கடவுளால் ஏவப்பட்டது என்பதை அறிந்திருக்கும் நமக்கு என்ன கடமை இருக்கிறது?
3. பைபிள் கடவுளுடைய வார்த்தை என நம்பாத அநேகருக்கு உதவ எது சிறந்த வழி?
4. பைபிள் சத்தியத்தின் என்ன விளக்கங்கள் பைபிளை பற்றிய சிலருடைய எண்ணத்தை மாற்றியிருக்கின்றன, ஏன்?
5. (அ) பைபிளில் நம்பிக்கை இல்லை என ஆட்கள் சொல்கையில் அதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம்? (ஆ) அப்படிப்பட்டவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
6. (அ) பைபிள் கடவுளுடைய வார்த்தை என எது உங்களை நம்ப வைக்கிறது? (ஆ) பைபிள் உண்மையில் கடவுளிடமிருந்து வந்தது என்பதை ஜனங்கள் மதித்துணருவதற்கு வேறு என்ன நியாய விவாதங்களை நீங்கள் உபயோகிக்கலாம்?
7, 8. (அ) நாம் ஒவ்வொருவரும் பைபிளை என்ன செய்ய வேண்டும்? (ஆ) தனிப்பட்ட பைபிள் வாசிப்புடன் வேறு எதுவும் நமக்குத் தேவை? (இ) யெகோவாவின் நோக்கங்களை நீங்கள் எப்படி புரிந்துகொண்டீர்கள்?
9. எந்த பைபிள் வாசிப்பு திட்டத்திலிருந்து நாம் எல்லாருமே நன்மையடையலாம்?
10. (அ) நீங்கள் பைபிளை எப்பொழுது வாசிக்கிறீர்கள்? (ஆ) பைபிள் வாசிப்பில் யாரையும் சேர்த்துக்கொள்ளலாம், தவறாமல் வாசிப்பது ஏன் முக்கியம்?
11. என்ன குறிக்கோளுடன் நாம் பைபிளை வாசிக்க வேண்டும்?
12. (அ) ‘திருத்தமான அறிவை’ பெறுவது ஏன் முக்கியம், அந்த அறிவை பெறும் நோக்குடன் வாசிக்கையில் என்ன முயற்சி தேவைப்படலாம்? (ஆ) எந்த நான்கு கருத்துக்கோணங்களை பயன்படுத்தி பைபிளில் வாசிக்கும் பகுதியை நன்மை பயக்கும் வண்ணம் பகுத்தாராயலாம்? (பக்கம் 30-லுள்ள பெட்டியைக் காண்க.) (இ) இந்தப் பாராவில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் இந்தக் குறிப்புகளை உதாரணத்தோடு விளக்குங்கள். மேற்கோள் காட்டப்படாத வசனங்களை எடுத்துப் பாருங்கள்.
13. யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து பைபிள் வாசிப்பு அட்டவணையையும் படிப்புத் திட்டத்தையும் தவறாமல் பின்பற்றுவதால் நாம் என்ன பலன்களை எதிர்பார்க்கலாம்?
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
பைபிளின் ஒரு பகுதியை வாசிக்கையில் பின்வருபவற்றை ஆலோசியுங்கள்
ஒரு நபராக யெகோவாவை பற்றி அது என்ன சொல்கிறது
பைபிளின் பொதுவான கருப்பொருளுடன் அது எப்படி சம்பந்தப்பட்டுள்ளது
உங்களுடைய வாழ்க்கையை அது எப்படி பாதிக்க வேண்டும்
மற்றவர்களுக்கு உதவ அதை எப்படி பயன்படுத்தலாம்