Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து தைரியமாக பேசுங்கள்

கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து தைரியமாக பேசுங்கள்

அதிகாரம் பத்தொன்பது

கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து தைரியமாக பேசுங்கள்

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்து பூமி முழுவதையும் ஆளும் வருங்கால அரசராக அபிஷேகம் செய்யப்பட்டார். மத விரோதிகளின் தூண்டுதலால் கொலை செய்யப்பட்டாலும் யெகோவா அவரை உயிர்த்தெழுப்பினார். இயேசுவின் மூலம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கான வழி அப்போது பிறந்தது. எனினும், இந்த நற்செய்தியை இயேசுவின் சீஷர்கள் வெளியரங்கமாக பிரசங்கித்தபோது துன்புறுத்துதல் தலைதூக்கியது. அவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; அடிக்கப்பட்டு இயேசுவைக் குறித்து பிரசங்கிக்கக்கூடாது எனவும் கட்டளையிடப்பட்டனர். (அப்போஸ்தலர் 4:1-3, 17; 5:17, 18, 40) இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? தொடர்ந்து தைரியமாக சாட்சி கொடுத்திருப்பீர்களா?

2கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவான இயேசு கிறிஸ்து “சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்”வதற்கு 1914-⁠ல் முடிசூட்டப்பட்டார். (சங்கீதம் 110:2) அடுத்து, சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 12:1-5, 7-12) அப்போதிலிருந்து தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் கடைசி நாட்கள் ஆரம்பமாயின. இக்காலப்பகுதி முடிவடைகையில், இந்த சாத்தானிய ஒழுங்குமுறை முழுவதையும் கடவுள் நொறுக்கிப் போடுவார். (தானியேல் 2:44; மத்தேயு 24:21) அதிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு, பரதீஸாக மாறப்போகும் பூமியில் நித்தியமாக வாழும் எதிர்பார்ப்பு இருக்கும். இந்த நற்செய்தியை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், அதை மற்றவர்களுக்கு அறிவிக்க விரும்புவீர்கள். (மத்தேயு 24:14) ஆனால் என்ன பிரதிபலிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்?

3ராஜ்ய நற்செய்தியை நீங்கள் அறிவிக்கையில் சிலர் அதற்கு செவிசாய்க்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அதற்கு செவிசாய்க்க மாட்டார்கள். (மத்தேயு 24:37-39) சிலர் உங்களை கேலி செய்யலாம் அல்லது எதிர்க்கலாம். உங்களுடைய சொந்த பந்தங்களிடமிருந்தே எதிர்ப்பு வரலாம் என இயேசு எச்சரித்தார். (லூக்கா 21:16-19) வேலை செய்யுமிடத்திலிருந்தும் பள்ளியிலிருந்தும் உங்களுக்கு எதிர்ப்பு வரலாம். பூமியின் சில பாகங்களில் யெகோவாவின் சாட்சிகள் அரசாங்க தடையுத்தரவின் கீழும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை நீங்கள் எதிர்ப்படுகையில் ‘விசுவாசத்தில் நிலைத்திருந்து’ தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையை தைரியமாக பிரசங்கிப்பீர்களா?​—1 கொரிந்தியர் 16:13.

சொந்த பலத்தில் சார்ந்திராமல்

4யெகோவாவின் ஏற்பாடுகளை சார்ந்திருப்பதே அவருடைய உண்மை ஊழியரிடம் எதிர்பார்க்கப்படும் அடிப்படை அம்சம். அந்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் சபைக் கூட்டங்கள். அவற்றை அசட்டை செய்யாதிருக்கும்படி வேத வசனங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. (எபிரெயர் 10:23-25) யெகோவாவுக்கு தொடர்ந்து உண்மையுடன் இருக்கிற சாட்சிகள் சக வணக்கத்தாருடன் கூட்டங்களில் தவறாமல் கூடிவர கடினமாக முயற்சி செய்துள்ளார்கள். கூட்டங்களுக்கு செல்கையில் வேதவசனங்களைப் பற்றிய அறிவு அதிகமாகிறது. அதோடு, நன்கு அறிந்த சத்தியங்களைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதலும் அதிகரிக்கிறது, அவற்றை கடைப்பிடிக்கும் வழிகளைப் பற்றிய விழிப்புணர்வும் மேம்படுகிறது. ஒன்றுபட்ட வணக்கத்தில் நம் கிறிஸ்தவ சகோதரர்களுடன் நாம் இன்னும் அதிகமாய் நெருங்கி வருகிறோம், கடவுளுடைய சித்தத்தை செய்வதற்கும் பலப்படுத்தப்படுகிறோம். சபையின் வாயிலாக யெகோவாவுடைய ஆவி வழிநடத்துதலை அளிக்கிறது; அந்த ஆவியின் மூலம் இயேசு நம் மத்தியில் இருக்கிறார்.​—மத்தேயு 18:20; வெளிப்படுத்துதல் 3:6.

5எல்லா கூட்டங்களிலும் நீங்கள் தவறாமல் கலந்து கொள்கிறீர்களா? அங்கு கேட்ட விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுகிறீர்களா? சில சமயங்களில் யெகோவாவின் சாட்சிகள் தடையுத்தரவின்கீழ் இருக்கும்போது வீடுகளில் சிறு சிறு தொகுதிகளாக கூட்டங்களை நடத்துவது அவசியமாகிறது. கூட்டம் நடக்கும் இடங்களும் நேரமும் மாறுபடலாம்; அது எல்லாருக்கும் எப்போதுமே வசதியாக இல்லாதிருக்கலாம்; ஏனெனில் சில கூட்டங்கள் இரவில் மிகவும் காலந்தாழ்த்தி நடத்தப்படுகின்றன. ஆனால் அசௌகரியமோ ஆபத்தோ இருந்தாலும், உண்மையுள்ள சகோதர சகோதரிகள் ஒவ்வொரு கூட்டங்களிலும் ஆஜராவதற்கு ஊக்கமாக முயலுகிறார்கள்.

6கடவுளுடைய உதவி நமக்கு தேவை என்பதை உணர்ந்து, தவறாமல் யெகோவாவிடம் இருதயப்பூர்வமாக ஜெபம் செய்வதன் வாயிலாக நாம் அவரையே அண்டியிருக்க கற்றுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் ஜெபிக்கிறீர்களா? இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது அடிக்கடி ஜெபம் செய்தார். (லூக்கா 3:21; 6:12, 13; 22:39-44) கழுமரத்தில் அறையப்படுவதற்கு முந்தின இரவில் “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” என தம் சீஷர்களை ஊக்குவித்தார். (மாற்கு 14:38) ராஜ்ய செய்திக்கு யாருமே செவிசாய்க்காதபோது ஊழியத்தில் சோர்ந்து போகும் சோதனைக்கு நாம் உட்படலாம். ஜனங்கள் கேலி செய்கையிலோ துன்புறுத்துகையிலோ அப்பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு பிரசங்கிப்பதை நிறுத்திவிட வேண்டுமென்ற தூண்டுதல் ஏற்படுவது நமக்கு சோதனையாக அமையலாம். ஆனால் தொடர்ந்து தைரியமாக பேசுவதற்கு கடவுளின் ஆவியைக் கேட்டு ஊக்கமாக ஜெபிக்கையில் அப்படிப்பட்ட சோதனைகளுக்கு இடமளிப்பதிலிருந்து பாதுகாக்கப்படுவோம்.​—லூக்கா 11:13; எபேசியர் 6:18-20.

தைரியமாக சாட்சி பகர்ந்தவர்களைப் பற்றிய ஒரு பதிவு

7அப்போஸ்தலர் புத்தகத்திலுள்ள பதிவு நம் எல்லாருக்கும் விசேஷித்த அக்கறைக்குரியது. நம்மைப் போன்ற உணர்வுகளுள்ள அப்போஸ்தலர்களும் ஆரம்ப கால சீஷர்களும் எவ்வாறு தடைகளை சமாளித்து யெகோவாவின் உண்மையும் தைரியமுமுள்ள சாட்சிகளாக நிரூபித்தார்கள் என அது சொல்கிறது. பின்வரும் கேள்விகளையும் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களையும் பயன்படுத்தி அந்தப் பதிவின் ஒரு பகுதியை நாம் ஆராயலாம். அவ்வாறு செய்கையில் வாசிப்பவற்றிலிருந்து நீங்கள் எவ்வாறு தனிப்பட்ட விதமாக பயன்பெறலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அப்போஸ்தலர்கள் உயர் கல்வி கற்றவர்களா? அவர்கள் இயல்பாகவே எதற்கும் பயப்படாதவர்களா? (யோவான் 18:17, 25-27; 20:19; அப்போஸ்தலர் 4:13)

கடவுளுடைய சொந்த குமாரனுக்கு மரணத்தீர்ப்பளித்த அதே யூத நீதிமன்றத்திற்கு முன்பு தைரியமாக பேச பேதுருவுக்கு எது உதவியது? (மத்தேயு 10:19, 20; அப்போஸ்தலர் 4:8)

நியாய சங்கத்திற்கு கொண்டுவரப்படுவதற்கு முந்தின வாரங்களில் அப்போஸ்தலர்கள் என்ன செய்து வந்தார்கள்? (அப்போஸ்தலர் 1:14; 2:1, 42)

இயேசுவின் பெயரில் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி அப்போஸ்தலர்களுக்கு அதிகாரிகள் கட்டளையிட்ட போது பேதுருவும் யோவானும் என்ன சொன்னார்கள்? (அப்போஸ்தலர் 4:19, 20)

அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்பு யாருடைய உதவியை மீண்டும் எதிர்பார்த்தார்கள்? துன்புறுத்துதல் முடிவடையும்படி அவர்கள் ஜெபித்தார்களா அல்லது எதற்காக ஜெபித்தார்கள்? (அப்போஸ்தலர் 4:24-31)

பிரசங்க வேலையை நிறுத்துவதற்கு விரோதிகள் முயன்றபோது யெகோவா எவ்வாறு உதவினார்? (அப்போஸ்தலர் 5:17-20)

தாங்கள் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிந்திருந்ததை அப்போஸ்தலர்கள் எப்படி காட்டினார்கள்? (அப்போஸ்தலர் 5:21, 41, 42)

துன்புறுத்துதலின் நிமித்தம் சீஷர்கள் பலர் சிதறிப்போன சமயத்திலும் அவர்கள் எதைத் தொடர்ந்து செய்தார்கள்? (அப்போஸ்தலர் 8:3, 4; 11:19-21)

8நற்செய்தியை பிரசங்கித்தது பலனளிக்காமல் போகவில்லை. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று சுமார் 3,000 சீஷர்கள் முழுக்காட்டப்பட்டார்கள். “திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.” (அப்போஸ்தலர் 2:41; 4:4; 5:14) கடவுளுடைய ஜனங்களை வெறித்தனமாக துன்புறுத்திய தர்சு பட்டணத்து சவுலும் காலப்போக்கில் கிறிஸ்தவராகி சத்தியத்தைக் குறித்து தைரியமாக சாட்சி கொடுக்க ஆரம்பித்தார். அவர் அப்போஸ்தலனாகிய பவுல் என அறியப்படலானார். (கலாத்தியர் 1:22-24) முதல் நூற்றாண்டில் ஆரம்பமான அந்த ஊழியம் இன்னும் முடியவில்லை. இந்தக் கடைசி நாட்களில் அது மிக மும்முரமாகி, பூமியின் எல்லாப் பகுதிகளையும் எட்டியுள்ளது. இதில் கலந்துகொள்ளும் பாக்கியம் நமக்கும் உள்ளது; அவ்வாறு கலந்துகொள்கையில் நமக்கு முன்பு ஊழியம் செய்த உண்மையுள்ள சாட்சிகளின் முன்மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.

9இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை பவுல் கற்றுக்கொண்டபோது அவர் என்ன செய்தார்? ‘தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று . . . பிரசங்கித்தார்.’ (அப்போஸ்தலர் 9:20) தனக்கு கடவுள் காண்பித்த தகுதியற்ற தயவிற்கு அவர் அதிக மதித்துணர்வைக் காட்டினார்; தான் பெற்ற நற்செய்தியை அனைவரும் பெற வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்தார். பவுல் ஒரு யூதராக இருந்ததால் அந்நாளைய வழக்கத்தின்படி ஜெப ஆலயங்களுக்கு சாட்சி கொடுக்கச் சென்றார். அவர் வீடு வீடாகவும் பிரசங்கித்து, சந்தைவெளியில் சந்தித்தவர்களிடம் நியாயங்காட்டி பேசினார். புதிய பிராந்தியங்களுக்குச் சென்று நற்செய்தியை பிரசங்கிக்கவும் மனமுள்ளவராக இருந்தார்.​—அப்போஸ்தலர் 17:17; 20:20; ரோமர் 15:23, 24.

10பவுலும் தைரியமிக்கவராக அதே சமயத்தில் விவேகமுள்ளவராக இருந்தார்; நாமும் அவ்வாறே இருக்க வேண்டும். யூதர்களிடத்தில் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் பேசினார். கிரேக்கரிடத்தில் அவர்களுக்கு நன்கு பழக்கமான விஷயங்களின் அடிப்படையில் பேசினார். சில சமயங்களில் சத்தியத்தை தான் எப்படி கற்றார் என்ற அனுபவத்தையே சாட்சி கொடுப்பதற்கு அவர் பயன்படுத்தினார். “சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்” என அவர் சொன்னார்.​—1 கொரிந்தியர் 9:20-23; அப்போஸ்தலர் 22:3-21.

11துன்புறுத்துதலின் காரணமாக சிறிது காலத்திற்கு வேறு பிராந்தியத்தில் பிரசங்கிப்பதே சிறந்தது என பவுலுக்கு தோன்றியபோது அவ்வாறே செய்தார்; சத்துருக்களை மீண்டும் மீண்டும் எதிர்ப்பட்டு வலிய பிரச்சினைகளை தேடிக்கொள்ளவில்லை. (அப்போஸ்தலர் 14:5-7; 18:5-7; ரோமர் 12:18) ஆனால் அவர் நற்செய்தியைக் குறித்து ஒருபோதும் வெட்கப்படவில்லை. (ரோமர் 1:16) விரோதிகள் துடுக்குத்தனமாக​—⁠கொடூரமாகவும்கூட​—⁠நடத்தியது பவுலுக்கு வேதனையளித்தாலும் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு அவர் ‘தேவனுக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்.’ “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காக . . . என்னைப் பலப்படுத்தினார்” என்று அவர் சொன்னார். (1 தெசலோனிக்கேயர் 2:2, NW; 2 தீமோத்தேயு 4:17) சபையின் தலைவராகிய இயேசு நம் நாளில் செய்யப்பட வேண்டிய வேலையைக் குறித்து முன்னறிவித்தார்; அதைச் செய்வதற்கு அவர் தொடர்ந்து பலத்தை அருளுகிறார்.​—மாற்கு 13:10.

12இயேசுவும் முதல் நூற்றாண்டிலிருந்த கடவுளுடைய மற்ற உண்மையுள்ள ஊழியர்களும் செய்ததைப் போல கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து தைரியமாக பேசுவதற்கு நமக்கு எல்லா காரணமும் உள்ளது. செய்தியை கேட்க விரும்பாதவர்களிடம் கரிசனையின்றி நடந்துகொள்வதையோ கேட்கும்படி வற்புறுத்துவதையோ இது அர்த்தப்படுத்தாது. ஆனால் ஜனங்களுக்கு கேட்க விருப்பமில்லை என்பதற்காக நாம் இந்த ஊழியத்தை நிறுத்தி விடுவதில்லை; துன்புறுத்துதலின் காரணமாக பேசாமல் இருந்துவிடுவதுமில்லை. இயேசுவைப் போல, பூமி முழுவதற்கும் தகுதியான அரசாங்கம் கடவுளுடைய ராஜ்யமே என நாமும் அறிவிக்கிறோம். சர்வலோக பேரரசராகிய யெகோவாவுக்கு நாம் பிரதிநிதிகளாக இருப்பதாலும் நம்முடைய செய்தியை அல்ல ஆனால் அவருடைய செய்தியையே அறிவிப்பதாலும் திடநம்பிக்கையோடு பேசுகிறோம். யெகோவாவைப் போற்றுவதற்கு அவரிடமுள்ள நம் அன்பே பலமான தூண்டுகோலாக இருக்க வேண்டும்.​—பிலிப்பியர் 1:27, 28; 1 தெசலோனிக்கேயர் 2:13.

மறுபார்வை

• முடிந்தவரை எல்லாரிடத்திலும் ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பது ஏன் மிக முக்கியம், ஆனால் என்ன விளைவுகளை நாம் எதிர்பார்க்கலாம்?

• யெகோவாவை சேவிப்பதற்கு நம்முடைய சொந்த பலத்தின் மீது சார்ந்திருப்பதில்லை என்பதை நாம் எப்படி காட்டலாம்?

• அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து என்ன மதிப்புள்ள பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?

[கேள்விகள்]

1. (அ) இயேசுவின் சீஷர்கள் என்ன நற்செய்தியை அறிவித்தார்கள், ஆனால் அதைக் கேட்ட யூதர்கள் சிலர் எப்படி பிரதிபலித்தார்கள்? (ஆ) நாம் என்ன கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்?

2. (அ) நம் நாளில் என்ன அருமையான செய்தி அறிவிக்கப்பட வேண்டும்? (ஆ) நற்செய்தியை பிரசங்கிப்பது யாருடைய கடமை?

3. (அ) ராஜ்ய செய்திக்கு ஜனங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்? (ஆ) என்ன கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?

4. (அ) நம்மை கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களாக நிரூபிப்பதற்கு தேவைப்படும் அடிப்படை அம்சம் எது? (ஆ) கிறிஸ்தவ கூட்டங்கள் ஏன் மிக முக்கியமானவை?

5. தடையுத்தரவின்கீழ் யெகோவாவின் சாட்சிகள் கூட்டங்களை எப்படி நடத்துகிறார்கள்?

6. யெகோவாவின்மீது சார்ந்திருப்பதை நாம் எப்படி காட்டலாம், தொடர்ந்து தைரியமாக பேசுவதற்கு இது நமக்கு எப்படி உதவலாம்?

7. (அ) அப்போஸ்தலர் புத்தகத்தின் பதிவு ஏன் நமக்கு விசேஷித்த அக்கறைக்குரியது? (ஆ) இந்தப் பாராவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்து, அவ்விஷயம் நமக்கு எப்படி பயனளிக்கலாம் என்பதை வலியுறுத்தவும்.

8. ஆரம்ப கால சீஷர்களின் ஊழியத்தால் விளைந்த பூரிப்பளிக்கும் பலன்கள் யாவை, நாம் எப்படி இதில் கலந்துகொள்கிறோம்?

9. (அ) சாட்சி கொடுப்பதற்கு எந்த சந்தர்ப்பங்களையெல்லாம் பவுல் பயன்படுத்தினார்? (ஆ) எந்தெந்த வழிகளில் நீங்கள் ராஜ்ய செய்தியை பிறருக்கு அறிவிக்கிறீர்கள்?

10. (அ) பவுல் தைரியமாக இருந்தாலும் சாட்சி கொடுப்பதில் விவேகத்தையும் எப்படி வெளிக்காட்டினார்? (ஆ) உறவினர்கள், சக பணியாட்கள், அல்லது பள்ளித் தோழர்கள் ஆகியோரிடம் பேசுகையில் பவுலின் பண்புகளை நாம் எப்படி வெளிக்காட்டலாம்?

11. (அ) சத்துருக்களை மீண்டும் மீண்டும் எதிர்ப்படுவதை தவிர்ப்பதற்கு பவுல் என்ன செய்தார்? (ஆ) எப்போது நாமும் பவுலின் முன்மாதிரியை ஞானமாக பின்பற்றலாம், எப்படி? (இ) தொடர்ந்து தைரியமாக பேசுவதற்கு பலம் எங்கிருந்து கிடைக்கிறது?

12. கிறிஸ்தவர்களின் தைரியத்திற்கு எது அத்தாட்சி அளிக்கிறது, அதற்கு எது ஆதாரமாக இருக்கிறது?

மறுபார்வை

• முடிந்தவரை எல்லாரிடத்திலும் ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பது ஏன் மிக முக்கியம், ஆனால் என்ன விளைவுகளை நாம் எதிர்பார்க்கலாம்?

• யெகோவாவை சேவிப்பதற்கு நம்முடைய சொந்த பலத்தின் மீது சார்ந்திருப்பதில்லை என்பதை நாம் எப்படி காட்டலாம்?

• அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து என்ன மதிப்புள்ள பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?

மறுபார்வை

• முடிந்தவரை எல்லாரிடத்திலும் ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பது ஏன் மிக முக்கியம், ஆனால் என்ன விளைவுகளை நாம் எதிர்பார்க்கலாம்?

• யெகோவாவை சேவிப்பதற்கு நம்முடைய சொந்த பலத்தின் மீது சார்ந்திருப்பதில்லை என்பதை நாம் எப்படி காட்டலாம்?

• அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து என்ன மதிப்புள்ள பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?

மறுபார்வை

• முடிந்தவரை எல்லாரிடத்திலும் ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பது ஏன் மிக முக்கியம், ஆனால் என்ன விளைவுகளை நாம் எதிர்பார்க்கலாம்?

• யெகோவாவை சேவிப்பதற்கு நம்முடைய சொந்த பலத்தின் மீது சார்ந்திருப்பதில்லை என்பதை நாம் எப்படி காட்டலாம்?

• அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து என்ன மதிப்புள்ள பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?

[பக்கம் 173-ன் படங்கள்]

கடந்த காலத்தைப் போலவே இன்றும் யெகோவாவின் ஊழியர்கள் கடவுளுடைய வார்த்தையை தைரியமாக பேசுகிறார்கள்