நாம் அனைவரும் எதிர்ப்படும் விவாதம்
அதிகாரம் ஆறு
நாம் அனைவரும் எதிர்ப்படும் விவாதம்
மனிதகுலம் இதுவரை எதிர்ப்பட்டிருக்கிற விவாதத்திலேயே மிக முக்கியமான விவாதத்தில் நீங்கள் உட்பட்டிருக்கிறீர்கள். இந்த விவாதத்தில் நீங்கள் எடுக்கும் நிலைநிற்கை உங்கள் நித்திய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஏதேனில் கலகம் தலைதூக்கியபோது இந்த விவாதம் எழும்பியது. அந்த சமயத்தில் ஏவாளிடம் சாத்தான், “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” என கேட்டான். அதற்கு ஏவாள் ஒரு மரத்திலுள்ள கனியைக் குறித்து, “நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்க . . . வேண்டாம்” என கடவுள் சொன்னார் என்று பதிலளித்தாள். அடுத்து, ஏவாளோ ஆதாமோ உயிர்வாழ்வது கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதன் பேரில் சார்ந்தில்லை என பொய் சொன்னான்; அதன் மூலம் யெகோவாவை சாத்தான் நேரடியாக குற்றப்படுத்தினான். கடவுள் தம்முடைய படைப்புகளுக்கு நன்மையான ஒன்றை, அதாவது, தங்களுக்குத் தாங்களே தராதரங்களை வகுத்துக்கொள்ளும் திறமையை கொடுக்க மறுக்கிறார் என சாத்தான் கூறினான். “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என சாத்தான் ஆணித்தரமாக சொன்னான்.—ஆதியாகமம் 3:1-5.
2சுருங்கச் சொன்னால், கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் சுயமாக தீர்மானம் எடுக்கையில் மனிதர்கள் மேம்பட்ட நிலையை அடைவர் என சாத்தான் கூறினான். இவ்வாறு கடவுள் ஆட்சி செய்யும் முறையையே கேள்விக்கிடமாக்கினான். இது கடவுளுடைய சர்வலோக அரசதிகாரத்தை, அதாவது அவரது ஆட்சி உரிமையை குறித்த மிக முக்கியமான விவாதத்தை எழுப்பியது. எழுப்பப்பட்ட கேள்வியானது: மனிதருக்கு மிகச் சிறந்தது எது, யெகோவாவின் ஆட்சி முறையா அல்லது அவருடைய உதவியின்றி
சுயமாக ஆட்சி நடத்துவதா? இப்போது ஆதாம் ஏவாளை யெகோவா உடனடியாக அழித்திருக்க முடியும், ஆனால் அரசதிகாரத்தைக் குறித்த விவாதத்திற்கு அது திருப்திகரமாக பதிலை அளித்திருக்காது. ஆகவே மனித சமுதாயம் தழைக்க போதுமான காலத்தை கடவுள் அனுமதிப்பதன் மூலம் தம்மையும் தமது சட்டங்களையும் பின்பற்றாமல் சுதந்திரமாக செயல்படுவது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவரால் தெள்ளத் தெளிவாக நிரூபித்துக்காட்ட முடியும்.3யெகோவாவின் ஆட்சி உரிமையை சாத்தான் தாக்கியது ஏதேனில் நடந்த சம்பவத்தோடு முடிந்துவிடவில்லை. கடவுளிடம் மற்றவர்கள் உண்மைப் பற்றுறுதியை காட்டுவார்களா என்பதையும் அவன் கேள்விக்கிடமாக்கினான். இது முந்தின விவாதத்தோடு நெருங்கிய சம்பந்தமுடைய இரண்டாம் விவாதமாயிற்று. அவனுடைய குற்றச்சாட்டு, ஆதாம் ஏவாளுடைய சந்ததியாரையும் கடவுளுடைய ஆவி குமாரர் அனைவரையும், ஏன் யெகோவாவின் முதற்பேறான அருமை குமாரனையும்கூட உட்படுத்தியது. உதாரணமாக, யோபுவின் நாட்களில், யெகோவாவை சேவிப்பவர்கள் அவரை நேசிப்பதாலும் அல்ல அவர் ஆட்சி செய்யும் முறையினாலும் அல்ல, ஆனால் சொந்த ஆதாயத்திற்காகவே அவரை சேவிப்பதாக சாத்தான் வாதாடினான். நெருக்கடி நிலையை சந்திக்கையில் அவர்கள் எல்லாரும் தன்னல விருப்பங்களுக்கு இணங்கிவிடுவார்கள் என அவன் விவாதித்தான்.—யோபு 2:1-6; வெளிப்படுத்துதல் 12:10.
சரித்திரம் எதை நிரூபித்திருக்கிறது
4அரசதிகாரத்தைப் பற்றிய இந்த விவாதத்தின் முக்கிய குறிப்பே இதுதான்: தம்முடைய ஆட்சியை சார்ந்திராமல் சுயேச்சையாக வாழ்ந்து வெற்றி காணும் விதத்தில் கடவுள் மனிதரை படைக்கவில்லை. அவர்களுடைய நன்மைக்காக, தம்முடைய நீதியான சட்டங்களை சார்ந்து வாழும்படியே உண்டாக்கினார். எரேமியா தீர்க்கதரிசி இதை ஒப்புக்கொண்டார்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன். கர்த்தாவே, என்னைத் எரேமியா 10:23, 24) ஆகவே “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” என கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துகிறது. (நீதிமொழிகள் 3:5) உயிர் வாழ தாம் ஏற்படுத்திய இயற்கை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழும்படி மனிதனை கடவுள் படைத்தது போலவே ஒழுக்கநெறி சட்டங்களையும் அவர் ஏற்படுத்தியிருக்கிறார்; அதற்குக் கீழ்ப்படிந்தால் ஓர் ஒற்றுமையான சமுதாயம் உருவாகும்.
தண்டியும் [“திருத்தியருளும்,” பொ.மொ.].” (5தம்முடைய ஆட்சியின்றி மனித குடும்பம் ஒருபோதும் தன்னைத்தானே வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை கடவுள் அறிந்திருந்தார் என்பது தெளிவு. கடவுளுடைய ஆட்சியை தவிர்த்து சுயமாக ஆளும் வீணான முயற்சியில், பலதரப்பட்ட அரசியல், பொருளாதார, மத அமைப்புகளை மனிதர் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேறுபாடுகளால் மக்கள் சதா சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்; இதனால் வன்முறை, போர், மரணம் போன்றவை விளைவடைந்திருக்கின்றன. ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டிருக்கிறான்.’ (பிரசங்கி 8:9) அதுவே மனித சரித்திரம் முழுவதிலும் நிகழ்ந்திருக்கிறது. கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்த விதமாக, பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் தொடர்ந்து ‘மேன்மேலும் கேடுள்ளவர்களாகி’ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:13) 20-ம் நூற்றாண்டில், மனிதகுலம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வெற்றி சிகரத்தை அடைந்தபோதிலும், என்றுமில்லாத அளவுக்கு பெரும் நாசமோசங்களை அனுபவித்தது. எரேமியா 10:23-லுள்ள வார்த்தைகள், அதாவது மனிதர் தாங்களாகவே தங்கள் நடைகளை நடத்துவதற்காக படைக்கப்படவில்லை என்பது முழுமையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
6கடவுளிடமிருந்து விலகியதால் ஏற்பட்டிருக்கும் வருத்தகரமான நீண்ட கால பாதிப்புகள், மனிதருடைய ஆட்சி வெற்றியே அடையாது என்பதை நித்தியத்துக்கும் நிரூபித்துவிட்டன. மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் ஆரோக்கியத்திற்கும் ஜீவனுக்கும் ஒரே வழி கடவுளுடைய ஆட்சியே. மனிதருடைய சுயேச்சையான ஆட்சியை யெகோவா இவ்வளவு காலம் சகித்திருப்பது சீக்கிரத்தில் முடிவுக்கு வரவிருப்பதை அவருடைய வார்த்தை காட்டுகிறது. (மத்தேயு 24:3-14; 2 தீமோத்தேயு 3:1-5) சீக்கிரத்தில், அவர் பூமியை ஆளுவதற்கான தம் உரிமையை நிரூபித்துக்காட்ட மனித விவகாரங்களில் தலையிடுவார். பைபிள் தீர்க்கதரிசனம் இவ்வாறு கூறுகிறது: “அந்த ராஜாக்களின் [இப்போதிருக்கும் அரசாங்கங்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை [இந்த பூமியை மறுபடியும் மனிதர் ஆளப்போவதே இல்லை]; . . . அது அந்த [தற்போதைய] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
கடவுளுடைய புதிய உலகுக்குள் தப்பிப்பிழைத்தல்
7கடவுளுடைய ஆட்சி மனித ஆட்சிக்கு முடிவுகட்டுகையில், யார் தப்பிப்பிழைப்பர்? பைபிள் இவ்வாறு பதிலளிக்கிறது: “செவ்வையானவர்கள் [கடவுளுடைய ஆட்சியுரிமையை ஆதரிப்பவர்கள்] பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ [கடவுளுடைய ஆட்சியுரிமையை ஆதரிக்காதவர்கள்] பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்.” (நீதிமொழிகள் 2:21, 22) அதேவிதமாகவே, “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என சங்கீதக்காரனும் குறிப்பிட்டார்.—சங்கீதம் 37:10, 29.
8சாத்தானின் ஒழுங்குமுறை அழிக்கப்பட்ட பிறகு கடவுள் புதிய உலகை ஸ்தாபிப்பார்; அப்போது, நாசத்தை விளைவிக்கிற வன்முறை, போர், வறுமை, துன்பம், வியாதி, மரணம் போன்றவற்றின் உடும்பு பிடியில் ஆயிரக்கணக்கான வருடங்களாக சிக்கித் தவித்த மனித குலம் அவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபடும். கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு காத்திருக்கிற ஆசீர்வாதங்களை பைபிள் அழகாக விவரிக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) கிறிஸ்துவால் ஆளப்படும் பரலோக ராஜ்ய அரசாங்கத்தின் மூலம் கடவுள் நம்முடைய உன்னத பேரரசராக, அதாவது ஆட்சியாளராக இருப்பதற்கான தம் உரிமையை முழுமையாக நிரூபிப்பார்.—ரோமர் 16:20; 2 பேதுரு 3:10-13; வெளிப்படுத்துதல் 20:1-6.
விவாதத்திற்கு எப்படி பிரதிபலித்திருக்கிறார்கள்
9சரித்திரம் முழுவதிலும் உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் உன்னத பேரரசராக யெகோவாவுக்கு தங்கள் உண்மைப் பற்றுறுதியை நிரூபித்திருக்கிறார்கள். அவருக்கு செவிகொடுத்து கீழ்ப்படிவதிலேயே தங்களது வாழ்க்கை சார்ந்திருந்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் நோவாவும் ஒருவர். ஆகவே நோவாவிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; . . . நீ . . . உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு.” நோவாவும் யெகோவாவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்தார். அன்றைய ஜனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட போதிலும், வழக்கத்திற்கு மாறாக எதுவும் நடக்கப்போவதில்லை என்ற நினைப்பில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் நோவாவோ, பிரமாண்டமான ஒரு பேழையைக் கட்டுவதிலும், யெகோவாவின் நீதியான வழிகளைக் குறித்து மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார். பதிவு தொடர்ந்து சொல்வதாவது: “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.”—ஆதியாகமம் 6:13-22; எபிரெயர் 11:7; 2 பேதுரு 2:5.
10யெகோவா கட்டளையிட்ட அனைத்திற்கும் கீழ்ப்படிந்து, அவருடைய அரசதிகாரத்தை ஆதரித்தவர்களில் ஆபிரகாமும் சாராளும் சிறந்த முன்மாதிரிகளாய் திகழ்ந்தார்கள். ஊர் என்கிற கல்தேயருடைய வளமிக்க பட்டணத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், முன்பின் தெரியாத ஒரு தேசத்திற்குப் போகும்படி சொல்லப்பட்டபோது, ‘யெகோவா சொன்னபடியே ஆபிரகாம் புறப்பட்டுப் ஆதியாகமம் 11:31–12:4; அப்போஸ்தலர் 7:2-4.
போனார்.’ வீடு வாசல், உற்றார் உறவினர் என சாராளும் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்ந்து வந்தாள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனாலும் கானான் தேசத்தில் என்னென்ன சூழ்நிலைகளை எதிர்ப்படுவாள் என்பதை அறியாதபோதிலும், யெகோவாவுக்கும் தன் கணவருக்கும் கீழ்ப்படிந்து அவளும் புறப்பட்டுச் சென்றாள்.—11யெகோவாவின் அரசதிகாரத்திற்கு ஆதரவு காண்பித்த மற்றொருவர் மோசே. எகிப்தில் பார்வோனை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த பெரும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவ்வாறு ஆதரவு காண்பித்தார். மோசே தன்னம்பிக்கை மிக்கவராக இருந்தார் என சொல்ல முடியாது. மாறாக, அவருடைய பேச்சுத் திறமையில் அவருக்கே நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார். யெகோவாவுடைய ஆதரவோடும் தன் சகோதரன் ஆரோனுடைய உதவியோடும் மோசே அந்தப் பிடிவாதமான பார்வோனிடம் யெகோவாவின் வார்த்தையை திரும்பத் திரும்ப சொன்னார். இஸ்ரவேலரில் சிலரும்கூட மோசேயைக் கடுமையாக சாடினார்கள். ஆனாலும், யெகோவா கட்டளையிட்டபடி அனைத்தையும் மோசே உண்மையோடு செய்தார், அவர் மூலமாகவே இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.—யாத்திராகமம் 7:6; 12:50, 51; எபிரெயர் 11:24-27.
12யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியோடு இருந்தவர்கள், கடவுள் எழுத்தில் வடித்திருந்தவற்றிற்கு மட்டுமே கீழ்ப்படிந்தால் போதும் என நினைக்கவில்லை. விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக யோசேப்பை போத்திபாரின் மனைவி வசீகரிக்க முயன்றபோது, விபச்சாரத்திற்கு எதிராக கடவுள் கொடுத்த எந்த எழுதப்பட்ட கட்டளையும் அப்போது இருக்கவில்லை. என்றாலும், ஏதேனில் யெகோவா ஏற்படுத்திய திருமண ஏற்பாட்டைக் குறித்து யோசேப்பு அறிந்திருந்தார். மற்றொருவரின் மனைவியோடு பாலுறவு கொள்வது கடவுளுக்குப் பிடிக்காது என்பதை அவர் அறிந்திருந்தார். எகிப்தியரைப் போல வாழ கடவுள் எந்தளவுக்கு இடமளிப்பார் என்பதை ஆதியாகமம் 39:7-12; சங்கீதம் 77:11, 12.
சோதித்துப் பார்க்க யோசேப்பு துளியும் விரும்பவில்லை. மனிதகுலத்திடம் கடவுள் நடந்துகொண்ட விதத்தை தியானிப்பதன் மூலமும் கடவுளுடைய சித்தம் எதுவென புரிந்துகொண்டாரோ அதை மனசாட்சியுடன் கடைப்பிடிப்பதன் மூலமும் யெகோவாவின் வழிகளுக்கு உயர்ந்த மதிப்பை காட்டினார்.—13யெகோவாவை உண்மையில் அறிந்தவர்கள் கடும் சோதனையை எதிர்ப்படுகையிலும் அவரை விட்டு விலகுவதில்லை. யெகோவா யாரைப் பற்றி உயர்வாக பேசினாரோ அந்த யோபுவே தன்னுடைய சொத்தை அல்லது ஆரோக்கியத்தை இழந்தால் அவரை விட்டு விலகிவிடுவார் என சாத்தான் குற்றம் சாட்டினான். இந்தப் பெருந்துயரங்கள் தனக்கு ஏன் சம்பவித்தன என்பதை யோபு அறிந்திராதபோதிலும் பிசாசை பொய்யனாக நிரூபித்தார். (யோபு 2:9, 10) பல நூற்றாண்டுகளுக்குப் பின்பும் சாத்தான் தன்னுடைய குறிப்பை நிரூபிக்கும் முயற்சியில், சீற்றமிக்க பாபிலோன் ராஜாவை பயன்படுத்தினான். தான் நிறுத்திய சிலைக்கு முன்பாக தாழவிழுந்து பணியாவிடில் எரிகிற அக்கினிச் சூளையிலே போடப் போவதாக மூன்று எபிரெய வாலிபர்களை அந்த ராஜா பயமுறுத்தினார். ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதா அல்லது விக்கிரகாராதனையைக் குறித்த யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதா என தீர்மானிக்க வேண்டிய கட்டம் வந்தபோது அவர்கள் யெகோவாவை சேவிப்பதையும் அவரே தங்களுடைய உன்னத பேரரசர் என்பதையும் உறுதியாக தெரியப்படுத்தினார்கள். உயிரைவிட கடவுளுக்கு உண்மையோடு நடப்பதையே அதிக மதிப்புள்ளதாக கருதினார்கள்.—தானியேல் 3:14-18.
14இந்த உதாரணங்களை வைத்து பார்க்கையில், யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதற்கு ஒருவர் பரிபூரணராக இருக்க வேண்டும் என்றோ, ஒருமுறை தவறு செய்பவர் முற்றிலும் தவறிவிடுகிறார் என்றோ அர்த்தமாகுமா? நிச்சயமாக இல்லை! மோசேயும்கூட சில சமயங்களில் தவறு செய்ததாக பைபிள் சொல்கிறது. அது யெகோவாவுக்கு பிரியமில்லாத காரியமாக இருந்தபோதும் ஆமோஸ் 5:15; அப்போஸ்தலர் 3:20; எபிரெயர் 9:14.
அவர் மோசேயை புறக்கணிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கும் பலவீனங்கள் இருந்தன. நம்முடைய சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தை யெகோவா கவனத்தில் கொள்வதால், நாம் வேண்டுமென்றே அவருடைய சித்தத்தை எவ்விதத்திலும் அசட்டை செய்யாத வரையில் அவர் மகிழ்ச்சியடைகிறார். என்றாலும் நம்முடைய பலவீனத்தின் காரணமாக ஏதாவது தவறான காரியத்தில் ஈடுபட்டுவிட்டால் உள்ளப்பூர்வமாக மனம் வருந்தி அந்தத் தவறை தொடர்ந்து செய்யாதிருக்க முயல வேண்டும். இவ்வாறு செய்கையில் யெகோவா சொல்கிற நல்ல காரியங்களை உண்மையில் நேசிக்கிறோம் என்பதையும் அவர் வெறுக்கும் கெட்ட காரியங்களை உண்மையில் வெறுக்கிறோம் என்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகிறோம். பாவநிவிர்த்தி செய்யும் இயேசுவின் பலியில் விசுவாசத்தை காட்டும்போது கடவுளுக்கு முன்பாக நாம் சுத்தமான நிலைநிற்கையை அனுபவிக்கிறோம்.—15இருந்தாலும், யெகோவாவின் உன்னத அரசதிகாரத்திற்கு பரிபூரண கீழ்ப்படிதலை காட்டுவது மனிதருக்கு ஒருவேளை முடியாத காரியமா? இதற்கான பதில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு ஒரு ‘பரிசுத்த இரகசியமாகவே’ இருந்தது. (1 தீமோத்தேயு 3:16, NW) ஆதாம் பரிபூரணமாக படைக்கப்பட்ட போதிலும், தேவபக்திக்கு அவன் பரிபூரண முன்மாதிரியை வைக்கவில்லை. அப்படியிருக்கையில் யாரால்தான் முடியும்? பாவத்தில் பிறந்த அவனுடைய சந்ததியார் யாராலும் நிச்சயமாக முடியாது. அதை செய்ய முடிந்த ஒரே மனிதர் இயேசு கிறிஸ்துவே. (எபிரெயர் 4:15) இயேசு பரிபூரண உத்தமத்தன்மையை காட்டியது, ஆதாமும் விரும்பியிருந்தால் அதைக் காட்டியிருக்க முடியும் என்பதை நிரூபித்தது; அதுவும் இயேசுவைவிட ஆதாமுக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தன. கடவுளுடைய படைப்பில் எந்தத் தவறும் ஏற்படவில்லை. ஆகவே, கடவுளுடைய சட்டத்திற்கு கீழ்ப்படிவதில் மட்டுமல்லாமல் சர்வலோக பேரரசராகிய யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை காட்டுவதிலும் நாம் பின்பற்றுவதற்கு இயேசு கிறிஸ்து சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்.—உபாகமம் 32:4, 5.
நமது பதில் என்ன?
16சர்வலோக பேரரசுரிமையைக் குறித்த விவாதத்தை நாம் ஒவ்வொருவருமே எதிர்ப்பட வேண்டியுள்ளது. நாம் யெகோவாவின் பட்சத்தில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிக்கையில் சாத்தான் நம்மை குறி வைக்கிறான். எல்லா திக்குகளிலிருந்தும் அழுத்தங்களைக் கொண்டுவருகிறான்; அவனது பொல்லாத ஒழுங்குமுறைக்கு முடிவு வரும் வரையில் அவ்வாறு செய்துகொண்டிருப்பான். ஆகவே நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். (1 பேதுரு 5:8) யெகோவாவின் பேரரசுரிமையைக் குறித்த பிரதான விவாதத்திலும், சோதனையின் மத்தியில் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்வதைக் குறித்த இரண்டாம் விவாதத்திலும் நம் நிலை என்ன என்பதை நமது நடத்தை காட்டுகிறது. விசுவாசமற்ற நடத்தை இவ்வுலகில் சர்வ சாதாரணமாக காணப்படுகிறது என்பதற்காக அதை அற்ப விஷயமாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கு, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவாவின் நீதியான வழிகளைக் கடைப்பிடிக்க முயலுவது அவசியம்.
17உதாரணமாக, “பொய்க்குப் பிதா”வாகிய சாத்தானை நாம் பின்பற்ற முடியாது. (யோவான் 8:44) நம்முடைய செயல்கள் அனைத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த சாத்தானிய உலகில் பெற்றோரிடத்தில் இளைஞர்கள் அடிக்கடி பொய் சொல்வது வழக்கம். ஆனால் கிறிஸ்தவ இளைஞர்களோ இதைத் தவிர்க்கிறார்கள்; இவ்வாறு, சோதனையின்கீழ் கடவுளுடைய ஜனங்கள் உத்தமத்தை காத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற சாத்தானின் குற்றச்சாட்டை பொய்யென நிரூபிக்கிறார்கள். (யோபு 1:9-11; நீதிமொழிகள் 6:16-19) சில வியாபார பழக்கவழக்கங்களும்கூட ஒருவரை மெய்க் கடவுளின் பட்சத்தில் இருப்பவராக அல்லாமல், “பொய்க்கு பிதா”வின் பட்சத்தில் இருப்பவராக அடையாளம் காட்டலாம். அத்தகைய வியாபார பழக்கவழக்கங்களை நாம் தவிர்க்கிறோம். (மீகா 6:11, 12) திருடுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, வறுமையின் காரணமாக திருடினாலும் பெரும் பணக்காரர் என்ற காரணத்தால் ஒருவரிடமிருந்து திருடினாலும் திருடுதல் தவறு. (நீதிமொழிகள் 6:30, 31; 1 பேதுரு 4:15) நாம் வாழும் பகுதியில் திருடுவது சாதாரண பழக்கமாக இருந்தாலும் அல்லது எடுத்த பொருள் மிக அற்பமானதாக, சிறியதாக இருந்தாலும் திருடுதல் கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமானது.—லூக்கா 16:10; ரோமர் 12:2; எபேசியர் 4:28.
18கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின்போது சாத்தானும் அவனுடைய பேய்களும் அபிஸிற்குள் தள்ளப்படுவார்கள்; அச்சமயத்தில் அவர்களால் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்க முடியாது. அது எப்பேர்ப்பட்ட விடுதலை! ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு அவர்கள் சிறிது காலத்திற்கு விடுவிக்கப்படுவார்கள். அப்போது சாத்தானும் அவனைப் பின்பற்றுகிறவர்களும் கடவுளுக்கு உத்தமத்தை காட்டுகிற, மீண்டும் நிலைநாட்டப்பட்ட மனிதகுலத்தின்மீது அழுத்தத்தைக் கொண்டுவருவார்கள். (வெளிப்படுத்துதல் 20:7-10) அத்தருணத்தில் உயிருடன் இருக்கும் பாக்கியத்தை நாம் பெற்றோமென்றால், சர்வலோக பேரரரசுரிமை சம்பந்தப்பட்ட விவாதத்தில் எப்படி நடந்துகொள்வோம்? அப்போது அனைவரும் பரிபூரணராக இருப்பார்கள் என்பதால் உண்மைப்பற்றுறுதியற்ற எந்தவொரு செயலும் வேண்டுமென்றே செய்யப்படுவதாயிருக்கும், அதன் விளைவு நித்திய அழிவு. ஆகவே யெகோவா தமது வார்த்தை அல்லது அமைப்பு வாயிலாக அளிக்கிற போதனைகள் எதுவாயினும் அவற்றிற்கு கீழ்ப்படிய இப்போதே பழகிக் கொள்வது எவ்வளவு முக்கியம்! அவ்வாறு செய்கையில், சர்வலோக பேரரசராக அவருக்கு நாம் உண்மையான பக்தியைக் காட்டுவோம்.
மறுபார்வை
• நாம் அனைவரும் எதிர்ப்படும் முக்கிய விவாதம் என்ன? அதில் நாம் எப்படி உட்பட்டோம்?
• பூர்வ கால ஆண்களும் பெண்களும் யெகோவாவுக்கு தங்கள் உத்தமத்தை நிரூபித்துக் காட்டிய வழிகள் ஏன் கவனிக்கத்தக்கவை?
• ஒவ்வொரு நாளும் நம் நடத்தையினால் யெகோவாவுக்கு கனத்தைக் கொண்டுவருவது ஏன் முக்கியம்?
[கேள்விகள்]
1, 2. (அ) ஏதேனில் சாத்தான் என்ன விவாதத்தை எழுப்பினான்? (ஆ) அவனுடைய பதில் அந்த விவாதத்தை எப்படி சுட்டிக்காட்டியது?
3. என்ன இரண்டாம் விவாதத்தை சாத்தான் எழுப்பினான்?
4, 5. மனிதன் தன் நடைகளை நடத்துவதைப் பற்றி சரித்திரம் எதை நிரூபித்திருக்கிறது?
6. மனிதரின் சுயேச்சையான ஆட்சிக்கு கடவுள் எப்படி சீக்கிரத்தில் முடிவு கட்டுவார்?
7. கடவுளுடைய ஆட்சி மனித ஆட்சிக்கு முடிவுகட்டுகையில் யார் தப்பிப்பிழைப்பர்?
8. கடவுள் தம்முடைய பேரரசுரிமையை எப்படி முழுமையாக நிரூபிப்பார்?
9. (அ) யெகோவாவிடத்தில் உண்மையோடு நிலைத்திருந்தவர்கள் அவருடைய வார்த்தையை எப்படி கருதினார்கள்? (ஆ) நோவா தன்னுடைய உண்மைப் பற்றுறுதியை எப்படி நிரூபித்தார், அவருடைய மாதிரியிலிருந்து நாம் எவ்வாறு நன்மையடையலாம்?
10. (அ) யெகோவாவின் பேரரசுரிமைக்கு ஆபிரகாமும் சாராளும் எப்படி ஆதரவு காட்டினார்கள்? (ஆ) ஆபிரகாம், சாராளின் மாதிரிகளிலிருந்து நாம் என்ன வழியில் பயனடையலாம்?
11. (அ) எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மோசே யெகோவாவின் பேரரசுரிமைக்கு ஆதரவு காட்டினார்? (ஆ) மோசேயின் உதாரணம் நமக்கு எப்படி உதவலாம்?
12. (அ) யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதற்கு கடவுள் எழுத்தில் வடித்திருந்தவற்றை மட்டும் செய்தால் போதாது என்பதை எது காட்டுகிறது? (ஆ) இத்தகைய உண்மைப் பற்றுறுதியை புரிந்துகொள்வது, 1 யோவான் 2:15-ஐக் கடைப்பிடிப்பதற்கு நமக்கு எப்படி உதவலாம்?
13. (அ) யோபுவின் விஷயத்தில் (ஆ) மூன்று எபிரெயர்களின் விஷயத்தில் சாத்தான் எவ்வாறு பொய்யனாக நிரூபிக்கப்பட்டான்?
14. அபூரண மனிதர்களாக நாம் யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியோடு இருப்பதை எப்படி நிரூபிக்க முடியும்?
15. (அ) மனிதரில் யார் மட்டுமே கடவுளுக்கு பரிபூரண உத்தமத்தன்மையைக் காட்டினார், இது எதை நிரூபித்தது? (ஆ) இயேசு செய்த நன்மையிலிருந்து நாம் எப்படி பயனடைகிறோம்?
16. யெகோவாவின் பேரரசுரிமையிடமாக நம்முடைய மனப்பான்மையைக் குறித்ததில் நாம் ஏன் எப்போதுமே விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்?
17. பொய் சொல்லுதல், திருடுதல் ஆகியவற்றின் தொடக்கத்தைப் பற்றிய என்ன விஷயம் நாம் அவற்றை தவிர்க்கும்படி செய்ய வேண்டும்?
18. (அ) கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின் முடிவில் மனிதகுலம் என்ன சோதனையை சந்திக்கும்? (ஆ) என்ன பழக்கத்தை நாம் இப்போதே வளர்க்க வேண்டும்?