முழுக்காட்டுதலின் அர்த்தம்
அதிகாரம் பன்னிரண்டு
முழுக்காட்டுதலின் அர்த்தம்
இயேசு பொ.ச. 29-ல் முழுக்காட்டுபவனாகிய யோவானால் யோர்தான் நதியில் முழுக்காட்டப்பட்டார். யெகோவா தாமே அதை கவனித்து, அதற்கு தம் அங்கீகாரத்தையும் தெரிவித்தார். (மத்தேயு 3:16, 17) இவ்வாறு தமது சீஷர்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு இயேசு ஒரு மாதிரியை வைத்தார். மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்திமதியை இயேசு தமது சீஷர்களுக்குக் கொடுத்தார்: ‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் [“முழுக்காட்டுதல்,” NW] கொடுங்கள்.’ (மத்தேயு 28:18, 19) இங்கு இயேசு கட்டளையிட்டிருப்பதற்கு இணங்க நீங்கள் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறீர்களா? இல்லையெனில் அவ்வாறு செய்வதற்கு தயாராகிறீர்களா?
2முழுக்காட்டுதல் பெற்றவராக இருந்தாலும் சரி அதற்கு தயாராகிறவராக இருந்தாலும் சரி, யெகோவாவை சேவிக்கவும் அவருடைய நீதியுள்ள புதிய உலகில் வாழவும் விரும்புகிற ஒவ்வொருவரும் முழுக்காட்டுதலை பற்றி தெளிவாக புரிந்துகொள்வது மிக முக்கியம். பதில் தேவைப்படும் கேள்விகளில் இவையும் அடங்கும்: இயேசுவின் முழுக்காட்டுதலும் இன்றைய கிறிஸ்தவ முழுக்காட்டுதலும் ஒரே அர்த்தமுடையவையா? “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுவது என்பதன் அர்த்தம் என்ன? கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டுதலின் அர்த்தத்திற்கு ஏற்ப வாழ்வதில் என்ன உட்பட்டுள்ளது?
யோவான் கொடுத்த முழுக்காட்டுதல்கள்
3இயேசு முழுக்காட்டுதல் பெறுவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு மத்தேயு 3:1, 2) யோவான் சொன்னதை ஜனங்கள் கேட்டு அந்த அறிவுரைக்கு செவிசாய்த்தார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை வெளிப்படையாக அறிக்கையிட்டு, மனந்திரும்பி, அதற்குப்பின் யோர்தான் நதியில் முழுக்காட்டுதல் பெற யோவானிடத்திற்கு வந்தார்கள். யூதர்களுக்கு மட்டுமே அந்த முழுக்காட்டுதல் கொடுக்கப்பட்டது.—லூக்கா 1:13-16; அப்போஸ்தலர் 13:23, 24.
முன்பு முழுக்காட்டுபவனாகிய யோவான், “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என யூதேயா வனாந்தரத்தில் பிரசங்கம் செய்து வந்தார். (4அந்த யூதர்கள் உடனடியாக மனந்திரும்புவது அவசியமாய் இருந்தது. பொ.ச.மு. 1513-ல் சீனாய் மலையில் அவர்களுடைய முற்பிதாக்கள் யெகோவா தேவனுடன் முறைப்படி தேசிய உடன்படிக்கை செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் வெளிப்படையாக பாவங்கள் செய்ததால் அந்த உடன்படிக்கைக்கு இசைய நடக்கவில்லை; ஆகவே அது அவர்களை குற்றவாளிகளாக தீர்த்தது. இயேசுவின் காலத்திற்குள் அவர்களுடைய நிலைமை படுமோசமானது. மல்கியா முன்னுரைத்த ‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள்’ (NW) சமீபமாக இருந்தது. பொ.ச. 70-ல் ரோமப் படைகள் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் பத்து லட்சத்திற்கு அதிகமான யூதர்களையும் அழித்தபோது அந்த “நாள்” வந்தது. அந்த அழிவு வருவதற்கு முன்பே “உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படி,” மெய் வணக்கத்திடம் வைராக்கியம் காண்பித்த முழுக்காட்டுபவனாகிய யோவான் அனுப்பப்பட்டார். மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு விரோதமாக செய்த பாவங்களைவிட்டு மனந்திரும்பி, யெகோவா தங்களுக்கு அனுப்பிய தேவ குமாரனாகிய இயேசுவை ஏற்க அவர்கள் தயாராக இருக்க வேண்டியிருந்தது.—மல்கியா 4:4-6; லூக்கா 1:17; அப்போஸ்தலர் 19:4.
5யோவானிடத்தில் முழுக்காட்டுதல் பெற வந்தவர்களில் இயேசுவும் ஒருவர். ஆனால் ஏன்? இயேசு எந்தப் பாவமும் செய்யவில்லை என்பதை அறிந்த யோவான் “நான் உம்மாலே ஞானஸ்நானம் மத்தேயு 3:13-15) இயேசு பாவமற்றவராதலால், அவரது முழுக்காட்டுதல் பாவத்திலிருந்து மனந்திரும்புவதை அடையாளப்படுத்தவில்லை; அவர் ஏற்கெனவே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த தேசத்தின் அங்கத்தினராக இருந்ததால் கடவுளுக்கு தம்மை ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. மாறாக, 30-ம் வயதில் அவர் பெற்ற முழுக்காட்டுதல் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது; பரலோக தகப்பனின் மேலுமான சித்தத்தை செய்ய தம்மை அவருக்கு அர்ப்பணித்ததை அடையாளப்படுத்தியது.
பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா” என்றார். ஆனால், இயேசுவின் முழுக்காட்டுதல் வேறொன்றை அடையாளப்படுத்தியது. ஆகவே இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.” (6கிறிஸ்து இயேசுவுக்கான கடவுளுடைய சித்தத்தில் ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலைகள் உட்பட்டிருந்தன. (லூக்கா 8:1) மீட்கும் பொருளாகவும் புதிய உடன்படிக்கைக்கு அடிப்படையாகவும் தம் பரிபூரண மனித உயிரை அவர் பலிசெலுத்துவதை அது உட்படுத்தியது. (மத்தேயு 20:28; 26:26-28; எபிரெயர் 10:5-10) தம்முடைய தண்ணீர் முழுக்காட்டுதல் அடையாளப்படுத்தியதை இயேசு மிக முக்கியமானதாக கருதினார். மற்ற காரியங்கள் மீது தம்முடைய கவனம் திசைதிரும்ப அவர் இடங்கொடுக்கவில்லை. பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவு வரைக்கும் அவர் உண்மையுடன் கடவுளுடைய சித்தத்தை செய்தார், அதாவது கடவுளுடைய ராஜ்யத்தை பிரசங்கிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார்.—யோவான் 4:34.
கிறிஸ்தவ சீஷர்கள் பெறும் தண்ணீர் முழுக்காட்டுதல்
7முதன்முதலில் இயேசுவின் சீஷர்களானவர்கள் யோவானிடம் தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்; பிற்பாடு பரலோக ராஜ்யத்தின் வருங்கால அங்கத்தினர்கள் ஆகும்படி இயேசுவினிடம் வழிநடத்தப்பட்டார்கள். (யோவான் 3:25-30) இயேசுவின் வழிநடத்துதலால் இந்த சீஷர்களும் சிலருக்கு முழுக்காட்டுதல் கொடுத்தார்கள்; அது யோவான் கொடுத்த முழுக்காட்டுதலுக்கு ஒப்பாகவே இருந்தது. (யோவான் 4:1, 3) என்றாலும், பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு அவர்கள் “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டுதல் கொடுக்கும் பணியை நிறைவேற்ற ஆரம்பித்தார்கள். (மத்தேயு 28:19) அது எதைக் குறிக்கிறது என்பதை கலந்தாலோசிப்பது உங்களுக்கு அதிக பயனுள்ளதாய் இருக்கும்.
8‘பிதாவின் நாமத்தில்’ முழுக்காட்டப்படுவது எதைக் குறிக்கிறது? அது அவருடைய பெயர், ஸ்தானம், அதிகாரம், நோக்கம், சட்டங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. இவற்றில் உட்பட்டுள்ளவற்றைக் கவனியுங்கள். (1) அவரது பெயரைக் குறித்து சங்கீதம் 83:17 இவ்வாறு கூறுகிறது: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.’ (2) அவரது ஸ்தானத்தைக் குறித்து 2 இராஜாக்கள் 19:15 (NW) இவ்வாறு குறிப்பிடுகிறது: “யெகோவாவே . . . நீர் ஒருவரே மெய்க் கடவுள்.” (3) அவருடைய அதிகாரத்தைக் குறித்து வெளிப்படுத்துதல் 4:11 நம்மிடம் இவ்வாறு சொல்கிறது: “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” (4) யெகோவாவே உயிரளிப்பவர் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர் நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிக்க நோக்கமாய் இருக்கிறார். “இரட்சிப்பு யெகோவாவுடையது.” (சங்கீதம் 3:8, NW; 36:9) (5) யெகோவாவே சட்டம் வழங்குவதில் மிகவும் உயர்ந்தவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்: “யெகோவாவே நமக்கு நீதிபதி, யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர், யெகோவாவே நமக்கு ராஜா.” (ஏசாயா 33:22, NW) இந்த எல்லா பதவிகளையும் அவர் ஏற்றிருப்பதால் நாம் இவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறோம்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.”—மத்தேயு 22:37.
9‘குமாரனின் நாமத்தில்’ முழுக்காட்டுதல் எதைக் குறிக்கிறது? மத்தேயு 16:16; கொலோசெயர் 1:15, 16) இந்தக் குமாரனை பற்றி யோவான் 3:16 இவ்வாறு கூறுகிறது: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” இயேசு மரணம் வரை உண்மையுடன் நிலைத்திருந்ததால், அவரை கடவுள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பி கூடுதல் அதிகாரத்தைக் கொடுத்தார். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறபடி, இந்த பிரபஞ்சத்திலேயே யெகோவாவுக்கு அடுத்த படியாக ‘எல்லாவற்றிற்கும் மேலாக அவரை [இயேசுவை] உயர்த்தினார்.’ அதன் காரணமாகவே, ‘இயேசுவின் நாமத்தில் . . . முழங்கால் யாவும் முடங்கும், . . . பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்.’ (பிலிப்பியர் 2:9-11) இது இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைக் குறிக்கிறது; அவற்றை பிறப்பிப்பவர் யெகோவாவே.—யோவான் 15:10.
இது இயேசு கிறிஸ்துவின் பெயரையும் ஸ்தானத்தையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இயேசு என்ற பெயரின் அர்த்தம் “யெகோவாவே இரட்சிப்பு” என்பதாகும். கடவுளுடைய ஒரே பேறான குமாரன் என்பதால், அதாவது கடவுளுடைய முதல் சிருஷ்டி என்பதால் அவர் தம் ஸ்தானத்தை பெறுகிறார். (10“பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுவது எதைக் குறிக்கிறது? பரிசுத்த ஆவியின் பங்கையும் அதன் செயல்களையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவி என்றால் என்ன? அது யெகோவாவின் செயல் நடப்பிக்கும் சக்தி, அதைக் கொண்டே அவர் தம் நோக்கங்களை நிறைவேற்றுகிறார். “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை [“சகாயரை,” NW] அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” என இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 14:16, 17) இந்த பரிசுத்த ஆவி எதைச் செய்ய அவர்களுக்கு உதவும்? “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றும் இயேசு அவர்களிடம் சொன்னார். (அப்போஸ்தலர் 1:8) பரிசுத்த ஆவியின் மூலமாக பைபிள் எழுதப்படுவதற்கும் யெகோவா ஏவினார்: “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” (2 பேதுரு 1:21) ஆகவே பைபிளை படிக்கும்போது பரிசுத்த ஆவி வகிக்கும் பங்கை நாம் ஏற்றுக்கொள்கிறோம். பரிசுத்த ஆவியை ஏற்றுக்கொள்வதற்கான மற்றொரு வழி, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற ‘ஆவியின் கனிகளை’ பிறப்பிப்பதற்கு யெகோவாவிடம் உதவி கேட்பதாகும்.—கலாத்தியர் 5:22, 23.
11இயேசு கொடுத்த அறிவுரைகளின்படி பொ.ச. 33-ன் ஆரம்பத்தில் யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் முதலில் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அதற்குப்பின் சீக்கிரத்தில் சமாரியர்களுக்கும் கிறிஸ்தவ சீஷர்களாகும் சிலாக்கியம் வழங்கப்பட்டது. அதற்குப்பின் பொ.ச. 36-ல் விருத்தசேதனம் செய்யப்படாத புறதேசத்தாருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. சமாரியரும் புறதேசத்தாரும் முழுக்காட்டுதல் பெறும் முன்பு, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக யெகோவாவை சேவிப்பதற்கு தங்களை அவருக்கு தனிப்பட்ட விதமாக ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. இன்று வரை கொடுக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ முழுக்காட்டுதலின் அர்த்தம் இதுவே. தண்ணீருக்குள் முழுவதுமாக மூழ்குவது தனிப்பட்ட இந்த ஒப்புக்கொடுத்தலுக்குப் பொருத்தமான அடையாளம்; ஏனெனில் முழுக்காட்டுதல் அடையாள அர்த்தத்தில் புதைக்கப்படுவதைக் குறிக்கிறது. முழுக்காட்டுதலின்போது தண்ணீருக்கு அடியில் செல்வது பழைய வாழ்க்கை முறைக்கு நீங்கள் மரிப்பதை குறிக்கிறது. தண்ணீரிலிருந்து மேலெழும்புவது கடவுளுடைய சித்தத்தை செய்வதற்காக நீங்கள் உயிருடன் எழும்புவதை அடையாளப்படுத்துகிறது. இந்த ‘ஒரே முழுக்காட்டுதல்’ மெய்க் கிறிஸ்தவர்களாக மாறுகிற அனைவருக்கும் பொருந்துகிறது. முழுக்காட்டுதலின்போது அவர்கள் யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளாக ஆகிறார்கள், அதாவது கடவுளால் நியமிக்கப்பட்ட ஊழியர்களாக ஆகிறார்கள்.—எபேசியர் 4:5, NW; 2 கொரிந்தியர் 6:3, 4.
1 பேதுரு 3:21) கடவுள் நியமித்த வேலையை நோவா உண்மையுடன் செய்து முடித்ததற்கு இந்தப் பேழை உறுதியான அத்தாட்சி அளித்தது. பேழையைக் கட்டும் வேலை முடிந்த பின்பு “அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்த[து].” (2 பேதுரு 3:6) ஆனால் நோவாவும் அவருடைய குடும்பத்தாருமாகிய “எட்டுப்பேர் . . . ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.”—1 பேதுரு 3:20.
12இந்த முழுக்காட்டுதல் கடவுளுடைய பார்வையில் இரட்சிக்கப்படுவதற்கேற்ற மிகுந்த மதிப்புடையதாய் இருக்கிறது. உதாரணமாக, நோவா பேழையைக் கட்டினதையும் அதன் மூலம் அவரும் அவருடைய குடும்பத்தாரும் ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டதையும் சொன்ன பிறகு அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு எழுதினார்: ‘அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது [“முழுக்காட்டுதலானது,” NW], மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.’ (13உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் அடிப்படையில் இன்று யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பவர்கள், அதற்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெறுகிறார்கள். அவர்கள் நம்முடைய நாளுக்கான கடவுளுடைய சித்தத்தைச் செய்வதோடு கலாத்தியர் 1:3, 4) அவர்கள் இனிமேலும் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையுடன் கைகோர்த்து அழிவுக்குரிய பாதையில் செல்வதில்லை. அவர்கள் இந்த அழிவிலிருந்து கடவுளால் காக்கப்பட்டு, நல் மனசாட்சி அளிக்கப்படுகிறார்கள். அப்போஸ்தலனாகிய யோவான் கடவுளுடைய ஊழியர்களுக்கு இந்த உறுதியை அளிக்கிறார்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
இந்தப் பொல்லாத உலகிலிருந்தும் காக்கப்படுகிறார்கள். (நம் உத்தரவாதங்களுக்கு ஏற்ப வாழ்தல்
14இரட்சிக்கப்படுவதற்கு முழுக்காட்டுதல் மட்டுமே போதுமானது என்ற முடிவுக்கு வருவது தவறு. ஒருவர் இயேசு கிறிஸ்து மூலமாக தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முடிவு வரை உண்மையோடிருந்து கடவுளுடைய சித்தத்தை செய்தால் மட்டுமே அந்த முழுக்காட்டுதல் அர்த்தமுள்ளதாக இருக்கும். “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”—மத்தேயு 24:13.
15இயேசுவைக் குறித்த கடவுளுடைய சித்தத்தில் ஒரு மனிதனாக அவர் எப்படி தன் வாழ்க்கையை பயன்படுத்தினார் என்பது உட்பட்டிருந்தது. அவருடைய உயிரை தியாக பலியாக செலுத்த வேண்டியிருந்தது. நம்முடைய விஷயத்தில், நம் சரீரங்களை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டியுள்ளது; கடவுளுடைய சித்தத்தை செய்வதன் மூலம் நாம் சுயதியாக வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது. (ரோமர் 12:1, 2) வேண்டுமென்றே இந்த உலகத்தாரைப் போல் நாம் எப்பொழுதாவதுகூட நடந்து கொண்டால், அல்லது ஏதோ கடனுக்குக் கடவுளுக்கு சேவை செய்து நம் விருப்பங்களுக்கே வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்தால், நிச்சயமாகவே கடவுளுடைய சித்தத்தை செய்கிறவர்களாக இருக்க மாட்டோம். (1 பேதுரு 4:1-3; 1 யோவான் 2:15, 16) நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென இயேசுவிடம் ஒரு யூதன் கேட்டபோது, ஒழுக்க நெறி தவறாமல் சுத்தமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார். ஆனால் பின்னர் அதைவிட முக்கியமான ஒன்றை, அதாவது இயேசுவை பின்பற்றுபவனாக, கிறிஸ்தவ சீஷனாவதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டார். அதுவே வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும். பொருளாதார நாட்டங்கள் முதலிடத்தையும் கடவுளுடைய சித்தம் இரண்டாம் இடத்தையும் பெற முடியாது.—மத்தேயு 19:16-21.
16இயேசுவுக்கான கடவுளுடைய சித்தத்தில் ராஜ்யம் சம்பந்தப்பட்ட முக்கியமான வேலையும் உட்பட்டிருந்ததை மீண்டும் வலியுறுத்த வேண்டும். இயேசு தாமே ராஜாவாக இருப்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார். ஆனாலும் அவர் பூமியில் இருக்கையில் ராஜ்யத்தைப் பற்றி வைராக்கியமாக சாட்சி கொடுத்தார். இது போன்ற சாட்சி கொடுக்கும் வேலை நமக்கும் உள்ளது; இந்த வேலையில் முழு இருதயத்தோடு ஈடுபடுவதற்கு தகுந்த காரணமும் நமக்குண்டு. இவ்வாறு செய்வதன் மூலம் யெகோவாவின் பேரரசுரிமைக்கு போற்றுதலையும் அதோடு சக மனிதரிடம் நம் அன்பையும் மெய்ப்பித்துக் காட்டுகிறோம். (மத்தேயு 22:36-40) ராஜ்யத்தை அறிவிக்கிற உலகெங்குமுள்ள சக வணக்கத்தாருடன் ஒன்றுபட்டிருப்பதையும் நாம் காட்டுகிறோம். இவ்வாறாக, அந்த ராஜ்யத்தின் பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனை பெறும் இலக்கை நோக்கி, உலகளவில் நாம் ஒன்றுசேர்ந்து முன்னேறுகிறோம்.
மறுபார்வை
• இயேசுவின் முழுக்காட்டுதலுக்கும் இன்றைய தண்ணீர் முழுக்காட்டுதலுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் யாவை?
• “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுவதன் அர்த்தம் என்ன?
• கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டுதலின் உத்தரவாதங்களுக்கு ஏற்ப வாழ்வதில் உட்பட்டிருப்பது என்ன?
[கேள்விகள்]
1. தண்ணீர் முழுக்காட்டுதல் நம் ஒவ்வொருவருக்கும் ஏன் முக்கியமானதாக இருக்க வேண்டும்?
2. முழுக்காட்டுதல் சம்பந்தமாக என்ன கேள்விகளுக்கு பதில் தேவை?
3. யாருக்கு மட்டுமே யோவான் முழுக்காட்டுதல் கொடுத்தார்?
4. முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்கள் உடனடியாக மனந்திரும்புவது ஏன் அவசியமாக இருந்தது?
5. (அ) இயேசு முழுக்காட்டுதல் பெற வந்தபோது யோவான் ஏன் ஆட்சேபித்தார்? (ஆ) இயேசுவின் முழுக்காட்டுதல் எதை அடையாளப்படுத்தியது?
6. கடவுளுடைய சித்தத்தை செய்வது இயேசுவுக்கு எந்தளவு முக்கியமாக இருந்தது?
7. பொ.ச. 33 முதற்கொண்டு முழுக்காட்டுதல் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் என்ன செய்யும்படி சொல்லப்பட்டது?
8. ‘பிதாவின் நாமத்தில்’ முழுக்காட்டப்படுவது எதைக் குறிக்கிறது?
9. ‘குமாரனின் நாமத்தில்’ முழுக்காட்டப்படுவது எதைக் குறிக்கிறது?
10. “பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டப்படுவது எதைக் குறிக்கிறது?
11. (அ) இன்று கொடுக்கப்பட்டு வரும் முழுக்காட்டுதலின் உண்மையான கருத்து என்ன? (ஆ) முழுக்காட்டுதல் எவ்வாறு மரித்து மீண்டும் உயிருடன் எழும்புவதற்கு ஒப்பாக இருக்கிறது?
12. கிறிஸ்தவ தண்ணீர் முழுக்காட்டுதல் எதற்கு ஒப்பாக இருக்கிறது, எப்படி?
13. தண்ணீர் முழுக்காட்டுதலால் ஒரு கிறிஸ்தவர் எதிலிருந்து காப்பாற்றப்படுகிறார்?
14. இரட்சிக்கப்படுவதற்கு முழுக்காட்டுதல் மட்டுமே ஏன் போதுமானதல்ல?
15. (அ) இன்று, முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களுக்கான கடவுளுடைய சித்தம் என்ன? (ஆ) கிறிஸ்தவ சீஷனாவது நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும்?
16. (அ) ராஜ்யம் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் என்ன உத்தரவாதம் உள்ளது? (ஆ) பக்கங்கள் 116, 117-ல் காட்டியிருக்கிறபடி ராஜ்ய வேலையைச் செய்வதற்கு பயனுள்ள சில வழிகள் யாவை? (இ) நாம் முழு இருதயத்துடன் சாட்சி கொடுக்கும் வேலையில் ஈடுபடுவது எதற்கு அத்தாட்சி அளிக்கிறது?
[பக்கம் 116, 117-ன் படங்கள்]
ராஜ்யத்தை அறிவிக்க சில வழிகள்
வீடு வீடாக
உறவினர்களிடத்தில்
சக பணியாளர்களிடத்தில்
பள்ளித் தோழர்களிடத்தில்
தெருக்களில்
அக்கறை காட்டுவோரை மீண்டும் சந்திப்பதன் மூலம்
வீட்டு பைபிள் படிப்புகள் மூலம்