யெகோவாவை ஒரே மெய்க் கடவுளாக மகிமைப்படுத்துங்கள்
அதிகாரம் இரண்டு
யெகோவாவை ஒரே மெய்க் கடவுளாக மகிமைப்படுத்துங்கள்
கடவுளென கருதப்படுகிறவர்கள் அநேகர் இருந்தாலும், “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு” என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 8:5, 6) அந்த ‘ஒரே தேவனே’ யெகோவா. அவரே எல்லாவற்றையும் படைத்தவர். (உபாகமம் 6:4; வெளிப்படுத்துதல் 4:11; NW) ‘என் தேவன்,’ ‘உங்கள் தேவன்’ என்று இயேசு அவரை குறிப்பிட்டார். (யோவான் 20:17) “கர்த்தரே [“யெகோவாவே,” NW] தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை” என மோசே குறிப்பிட்டிருந்ததை இயேசு ஒப்புக்கொண்டார். (உபாகமம் 4:35) வணங்கப்படும் எதைக் காட்டிலும்—விக்கிரகங்கள், கடவுளாக பூஜிக்கப்படுகிற மனிதர்கள், அல்லது கடவுளுடைய விரோதியாகிய ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ பிசாசாகிய சாத்தான் போன்ற எதைக் காட்டிலும்—யெகோவாவே ஈடற்ற உன்னதர். (2 கொரிந்தியர் 4:3, 4) இவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா முற்றிலும் வித்தியாசப்பட்டவர், இயேசு இவரை ‘ஒரே மெய்க் கடவுள்’ என அழைத்தார்.—யோவான் 17:3, NW.
2கடவுள் நமக்கு என்ன செய்திருக்கிறார், என்ன செய்யப் போகிறார் போன்றவற்றோடு மனதைக் கவரும் அவருடைய பண்புகளையும் கற்றுக்கொள்கிற நன்றியுணர்வுள்ள மக்கள் அவரிடம் ஈர்க்கப்படுகிறார்கள். யெகோவா மீதுள்ள அன்பு வளர வளர அவரை மகிமைப்படுத்த தூண்டப்படுகிறார்கள். அவரை மகிமைப்படுத்துவது எப்படி? அவரைப் பற்றி மற்றவர்களிடத்தில் சொல்வதே அதற்கு ஒரு வழி. “இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்” என ரோமர் 10:10 குறிப்பிடுகிறது. சொல்லிலும் செயலிலும் அவரைப் பின்பற்றுவது மற்றொரு வழி. “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களா[குங்கள்]” என எபேசியர் 5:1 கூறுகிறது. இவற்றை இன்னும் முழுமையாக செய்வதற்கு, உண்மையில் யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்.
3கடவுளுடைய தலைசிறந்த பண்புகளை கண்டுகொள்ள உதவும் பல வசனங்கள் பைபிள் முழுவதிலும் இருக்கின்றன. ஞானம், நீதி, வல்லமை, அன்பு இவையே அவருடைய நான்கு முக்கிய பண்புகளாகும். ‘ஞானம் அவரிடத்தில் உள்ளது.’ (யோபு 12:13, பொ.மொ.) ‘அவர் வழிகளெல்லாம் நீதியானவை.’ (உபாகமம் 32:4, NW) அவர் ‘மகா வல்லமை’ உடையவர். (ஏசாயா 40:26) ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்.’ (1 யோவான் 4:8) கடவுளுடைய நான்கு முக்கிய பண்புகளில் மிகவும் தலைசிறந்ததும் அவர் எப்படிப்பட்டவர் என தனிப்படுத்திக் காட்டுவதுமான பண்பு எது?
“தேவன் அன்பாகவே இருக்கிறார்”
4இந்தப் பிரபஞ்சத்தையும் புத்திக்கூர்மையுள்ள ஆவி சிருஷ்டிகளையும் மனித சிருஷ்டிகளையும் படைப்பதற்கு யெகோவாவை தூண்டியது எது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவருடைய ஞானமா அல்லது வல்லமையா? இந்தப் பண்புகளை அவர் பயன்படுத்தி இருந்தாலும், இவை அவரை தூண்டவில்லை. உயிராகிய பரிசை அளிக்க வேண்டுமென அவரது நீதி தேவைப்படுத்தவும் இல்லை. மாறாக, புத்திக்கூர்மையுள்ள நபராக வாழ்வதிலுள்ள சந்தோஷங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு கடவுளைத் தூண்டியது அவரது பேரன்பே. கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் பரதீஸில் என்றென்றும் வாழ வேண்டும் என்ற நோக்கமுள்ளவராக இருக்கவும் அன்பே அவரை தூண்டியது. (ஆதியாகமம் 1:28; 2:15) ஆதாமுடைய மீறுதலினால் மனிதகுலத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை நீக்குவதற்கு ஓர் ஏற்பாட்டை செய்யவும் அன்பே அவரை தூண்டியது.
5ஆகவே, கடவுளுடைய பண்புகள் அனைத்திலும் மிகவும் மேலோங்கி நிற்பது அன்பே. அவருடைய சுபாவமே அதுதான். ஞானம், நீதி, வல்லமை போன்ற பண்புகள் முக்கியமாக இருந்தாலும், கடவுள் ஞானமாகவே, நீதியாகவே, அல்லது வல்லமையாகவே
இருக்கிறார் என பைபிள் ஒருபோதும் சொல்வதில்லை. ஆனால் அவர் அன்பாகவே இருக்கிறார் என அது சொல்கிறது. ஆம், யெகோவா அன்பின் உருவானவர். இந்த அன்பு உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல, ஆனால் நியமங்களின் அடிப்படையிலேயே காண்பிக்கப்படுகிறது. சத்தியம், நீதி ஆகிய நியமங்களால் கடவுளுடைய அன்பு கட்டுப்படுத்தப்படுகிறது. அன்பிலேயே உயரிய அன்பு இதுதான்; இதற்கு யெகோவாவே முன்மாதிரியாக திகழ்கிறார். இத்தகைய அன்பு முற்றிலும் சுயநலமற்றது; இது எப்பொழுதும் கண்கூடான அத்தாட்சியுடன் செயலில் காட்டப்படுகிறது.6அன்பு என்ற இந்தத் தலைசிறந்த பண்பே அப்படிப்பட்ட கடவுளை பின்பற்ற நம்மை உந்துவிக்கிறது. தவறு செய்யும் இயல்புடைய தாழ்ந்த, அபூரண மனிதராகிய நாம் கடவுளை சிறப்பாக பின்பற்றுவது முடியாத விஷயம் என நினைக்கலாம். ஆனால், யெகோவாவின் பேரன்புக்கு மற்றொரு உதாரணம் இருக்கிறது: அவர் நம்முடைய பலவீனங்களை புரிந்துகொள்வதால் நம்மிடத்தில் பரிபூரணத்தை எதிர்பார்ப்பதில்லை. இப்போது பரிபூரணத்திற்கும் நமக்கும் வெகுதூரம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். (சங்கீதம் 51:5) ஆகவேதான் சங்கீதம் 130:3, 4 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. . . . உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.” ஆம், யெகோவா ‘இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும் உள்ள தேவன்.’ (யாத்திராகமம் 34:6) “ஆண்டவரே நீர் நல்லவரும் மன்னிக்கிறவரு[மானவர்].” (சங்கீதம் 86:5) எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! இப்படிப்பட்ட அற்புதமான கடவுளுக்கு சேவை செய்வதும், அன்பும் இரக்கமும் நிறைந்த அவரது அரவணைப்பை அனுபவிப்பதும் எவ்வளவாய் புத்துணர்ச்சி அளிக்கிறது!
7யெகோவாவின் அன்பை அவருடைய படைப்பிலும் காணலாம். அழகிய மலைகள், காடுகள், ஏரிகள், கடல்கள் என நம் மகிழ்ச்சிக்காக யெகோவா செய்திருக்கிற நல்ல நல்ல காரியங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் ருசித்து மகிழ்வதற்கும் உயிர்வாழ்வதற்கும் வியப்பூட்டும் அளவில் வித விதமான உணவு வகைகளை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். மணம்வீசும் அழகிய மலர்களையும் ரோமர் 8:22) ஆனால், பரதீஸில் யெகோவா நமக்கு செய்யப் போவதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! சங்கீதக்காரன் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் [நியாயமான] வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.”—சங்கீதம் 145:16.
விந்தைமிகு விலங்கினங்களையும் யெகோவா அளித்திருக்கிறார். இவற்றை படைக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் மனிதனின் இன்பத்திற்காக அவர் இவற்றை படைத்தார். நம்முடைய தற்போதைய அபூரண நிலையில் இந்தப் பொல்லாத உலகில் அவருடைய படைப்புகள் அனைத்தையும் முழுமையாக மகிழ்ந்து அனுபவிக்க முடியாது என்பது உண்மையே. (8மனிதகுலத்திடம் யெகோவா காண்பித்திருக்கும் அன்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது? பைபிள் அதை இவ்வாறு விளக்குகிறது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) மனிதனின் நல்ல குணத்தை கண்டுதான் யெகோவா இதைச் செய்தாரா? ரோமர் 5:8 அதற்கு பதிலளிக்கிறது: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.” ஆம், மீட்கும் பலியாக கடவுளுடைய பரிபூரண குமாரன் தம் உயிரையே கொடுத்து பாவம், மரணம் என்ற தண்டனை தீர்ப்பிலிருந்து நம்மை விடுவிப்பதற்கு கடவுள் அவரை பூமிக்கு அனுப்பினார். (மத்தேயு 20:28) கடவுளை நேசிப்போர் நித்திய ஜீவனை அடைவதற்கு இது வழியைத் திறந்தது. தம்முடைய சித்தத்தை செய்ய விரும்பும் அனைவரிடமும் கடவுள் அன்பு காட்டுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்; ஏனெனில் பைபிள் நமக்கு இவ்வாறு கூறுகிறது: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
9யெகோவா தமது குமாரனை மீட்கும்பொருளாக தந்து நாம் நித்திய ஜீவனைப் பெற வழியை திறந்திருப்பது, நாம் இப்போது வாழும் விதத்தை எப்படி பாதிக்க வேண்டும்? மெய்க் கடவுளாகிய 2 கொரிந்தியர் 5:15) யெகோவாவின் அன்புக்கும் பரிவுக்கும் இயேசுவே இலக்கணமாக திகழ்வதால் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுவது எவ்வளவாய் மகிழ்ச்சியை தருகிறது! இயேசு வைத்த முன்மாதிரி மனத்தாழ்மை உள்ளவர்களிடத்தில் அவர் இவ்வாறு சொன்னதிலிருந்து தெரிகிறது: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
யெகோவா மீதுள்ள நம் அன்பை அது இன்னும் அதிகரிக்க செய்ய வேண்டும். அதே சமயத்தில், கடவுளை பிரதிநிதித்துவம் செய்கிற இயேசுவுக்கு செவிசாய்க்கவும் அது நம்மை தூண்ட வேண்டும். ‘பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் [இயேசு] எல்லாருக்காகவும் மரித்தார்.’ (பிறரிடம் அன்பு காட்டுதல்
10யெகோவாவும் இயேசுவும் நம்மிடத்தில் காண்பிக்கிற அதே அன்பு சக கிறிஸ்தவர்களிடம் நமக்கிருப்பதை எப்படி காட்டலாம்? இதைக் காட்டுவதற்கான பல வழிகளை கவனியுங்கள்: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:4-8; 1 யோவான் 3:14-18; 4:7-12.
11வேறு யாரிடத்திலும் நாம் அன்பு காட்ட வேண்டும், எப்படி? இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி மத்தேயு 28:19, 20) இது, வரவிருக்கும் பரதீஸிய புதிய பூமியைப் பற்றிய நற்செய்தியை, நம் சக கிறிஸ்தவர்களாக இன்னும் மாறாதவர்களிடத்தில் அறிவிப்பதை உட்படுத்துகிறது. நம்மைப் போன்ற நம்பிக்கைகளை உள்ளவர்களிடத்தில் மட்டுமே நாம் அன்பு காட்டக் கூடாது என இயேசு தெளிவாக காட்டினார்; ஏனெனில் ‘உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்களும் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷிமாய்ச் செய்கிறதென்ன? புறஜாதியாரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா?’ என அவர் சொன்னார்.—மத்தேயு 5:46, 47, திருத்திய மொழிபெயர்ப்பு; 24:14; கலாத்தியர் 6:10.
அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (‘யெகோவாவின் நாமத்தில் நடவுங்கள்’
12மெய்க் கடவுளை மகிமைப்படுத்துவதன் மற்றொரு முக்கிய அம்சம், யெகோவா என்ற அவருடைய ஒப்பற்ற பெயரை அறிவதும், பயன்படுத்துவதும், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுமாகும். சங்கீதக்காரன் தன்னுடைய உள்ளப்பூர்வமான ஆவலை இவ்வாறு வெளிப்படுத்தினார்: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர்ந்து கொள்வார்கள்.’ (சங்கீதம் 83:17) யெகோவா என்ற பெயரின் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்.” அவர் மகத்தான நோக்கமுள்ளவர், அவர் எப்போதுமே தம் நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறவர். மேலும் மெய்க் கடவுளுக்கு மட்டுமே அந்தப் பெயர் பொருந்தும். ஏனெனில் மனிதரோ தங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும் என ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது. (யாக்கோபு 4:13, 14) தம்முடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை அதன் நோக்கத்தை ‘வெற்றிகரமாக நிறைவேற்றும்’ என யெகோவாவால் மட்டுமே சொல்ல முடியும். (ஏசாயா 55:11, NW) கடவுளுடைய பெயரை தங்களுடைய பைபிள்களில் முதன் முதலாக பார்த்து அதன் அர்த்தத்தை கற்றுக்கொள்கையில் அநேகர் மெய்சிலிர்த்துப் போகிறார்கள். (யாத்திராகமம் 6:3) ஆனால் அவர்கள் ‘யெகோவாவின் நாமத்திலே என்றென்றைக்கும் நடந்தால்’ மட்டுமே இந்த அறிவினால் நன்மையடைவார்கள்.—மீகா 4:5, தி.மொ.
சங்கீதம் 9:10 இவ்வாறு குறிப்பிடுகிறது: “உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” இது, யெகோவா என்ற பெயரை அறிந்திருப்பதை மட்டுமே குறிப்பதில்லை; வெறுமனே பெயரை அறிந்திருப்பது அவரை நம்பியிருப்பதை அர்த்தப்படுத்தாது. கடவுளுடைய பெயரை அறிந்திருப்பது, யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை மதித்துணர்வதையும், அவருடைய அதிகாரத்திற்கு மரியாதை காண்பிப்பதையும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதையும், எல்லா காரியங்களிலும் அவரை நம்பியிருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 3:5, 6) அவ்வாறே, யெகோவாவுடைய பெயரில் நடப்பதென்பது அவருக்கு ஒப்புக்கொடுப்பதையும், அவரை வழிபடுபவர்களில் ஒருவராக அவரை பிரதிநிதித்துவம் செய்வதையும், அவருடைய சித்தத்திற்கு இசைவாக உண்மையிலேயே வாழ்வதையும் குறிக்கிறது. (லூக்கா 10:27) நீங்கள் அதைச் செய்கிறீர்களா?
13கடவுளுடைய பெயரைப் பற்றி14நித்தியமாக யெகோவாவை சேவிக்கப் போகிறோமென்றால், அதற்கு கடமை உணர்ச்சி மட்டும் போதாது. பல ஆண்டுகளாக யெகோவாவை சேவித்து வந்த தீமோத்தேயுவை அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு ஊக்குவித்தார்: “தெய்வபக்தியை அப்பியாசித்துக் கொண்டிரு.” (1 தீமோத்தேயு 4:7, திருத்திய மொழிபெயர்ப்பு) பக்தி என்பது நன்றியுணர்வால் நிறைந்த இருதயத்திலிருந்து வருகிறது; அந்த நன்றியுணர்வு, யாரிடம் பக்தி செலுத்தப்படுகிறதோ அவர்மீது காட்டப்படும் ஒன்று. “தெய்வபக்தி” என்பது யெகோவாவுக்கு தனிப்பட்ட விதமாக ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் காண்பிப்பதை குறிக்கிறது. அவரையும் அவருடைய வழிகளையும் வெகுவாக மதிப்பதால் ஏற்படும் பாசப் பிணைப்பை வெளிப்படுத்துகிறது. அவருடைய பெயரை அனைவரும் உயர்வாக கருத வேண்டுமென்ற ஆவலை இது நம்மில் வளர்க்கிறது. ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நித்தியமாய் நடக்க வேண்டுமென்றால் நம் வாழ்க்கையில் தெய்வ பக்தியை வளர்க்க வேண்டும்.—சங்கீதம் 37:4; 2 பேதுரு 3:11.
15கடவுள் ‘தனிப்பட்ட பக்தியை கேட்பவராதலால்’ அவர் ஏற்றுக்கொள்ளும் விதமாக சேவிக்க அவருக்கு முழு பக்தியை செலுத்த யாத்திராகமம் 20:5, NW) நாம் கடவுளையும் சாத்தானை கடவுளாக கொண்ட உலகையும் ஒரே சமயத்தில் நேசிக்க முடியாது. (யாக்கோபு 4:4; 1 யோவான் 2:15-17) நாம் ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர்களாக இருக்க முயலுகிறோம் என்பதை யெகோவா நன்றாகவே அறிந்திருக்கிறார். (எரேமியா 17:10) நாம் உண்மையில் நீதியை நேசிக்கிறோமென்றால், அதை அவர் பார்த்து, அன்றாடம் எதிர்ப்படுகிற சோதனைகளை சகிக்க நமக்கு உதவுவார். அவருடைய வல்லமை வாய்ந்த பரிசுத்த ஆவியால் நம்மை ஆதரித்து, இந்த உலகில் தலைவிரித்தாடும் துன்மார்க்கத்தை மேற்கொள்ள வழி செய்வார். (2 கொரிந்தியர் 4:7) பரதீஸிய பூமியில் நித்திய வாழ்க்கை என்ற உறுதியான நம்பிக்கையை காத்துக்கொள்வதற்கு அவர் நமக்கு உதவுவார். அது எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பு! இதற்கு நாம் ஆழ்ந்த மதித்துணர்வைக் காண்பிக்க வேண்டும்; இதை ஏற்படுத்தித் தருகிற மெய்க் கடவுள் யெகோவாவை மனப்பூர்வமாக சேவிக்கவும் வேண்டும்.
வேண்டும். (16பூமி முழுவதிலுமுள்ள லட்சோபலட்சம் பேர் சங்கீதக்காரனின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றிருக்கிறார்கள், அவர் இவ்வாறு எழுதினார்: “என்னோடே கூடக் கர்த்தரை [“யெகோவாவை,” NW] மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.” (சங்கீதம் 34:3) சகல தேசங்களிலிருந்தும் திரள் திரளாக வரும் ஜனங்கள் இதைச் செய்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்க யெகோவா உங்களுக்கு அழைப்பு கொடுக்கிறார்.
மறுபார்வை
• யெகோவா எப்படிப்பட்டவர்? அவருடைய பண்புகளை தெளிவாக புரிந்துகொள்வதன் மூலம் நாம் எவ்வாறு நன்மையடைகிறோம்?
• கடவுளைப் பற்றிய சத்தியத்தை பிறர் கற்றுக்கொள்ள நாம் எப்படி உதவலாம்?
• யெகோவாவை அறிவதிலும் அவருடைய பெயரில் நடப்பதிலும் உட்பட்டிருப்பது என்ன?
[கேள்விகள்]
1. ஒரே மெய்க் கடவுள் யார்?
2. கடவுளைப் பற்றி கற்று வருவது நம் வாழ்க்கையை எப்படி பாதிக்க வேண்டும்?
3. கடவுளுடைய முக்கிய பண்புகள் யாவை?
4. பிரபஞ்சத்தையும் உயிருள்ள அனைத்தையும் படைப்பதற்கு எந்தப் பண்பு கடவுளைத் தூண்டியது?
5. பைபிளின்படி, யெகோவா எந்தப் பண்பின் உருவாக இருக்கிறார், ஏன்?
6. கடவுள் நம்மைவிட எவ்வளவோ உயர்ந்தவராக இருந்தாலும் அவரை பின்பற்றுவதை எது சாத்தியமாக்குகிறது?
7. படைப்பில் யெகோவாவின் அன்பை எப்படி காண முடிகிறது?
8. நம்மிடத்தில் யெகோவா காண்பித்திருக்கும் அன்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?
9. யெகோவா தம் குமாரனை மீட்கும்பொருளாக நமக்குத் தந்திருப்பது நம்மை எப்படி பாதிக்க வேண்டும்?
10. சக கிறிஸ்தவர்களிடத்தில் அன்பு காட்டுவதற்கான சில வழிகள் யாவை?
11. வேறு யாரிடத்திலும் நாம் அன்பு காட்ட வேண்டும், எப்படி?
12. கடவுளுடைய பெயர் அவருக்கு மட்டுமே பொருந்துவது ஏன்?
13. யெகோவாவை அறிந்திருப்பதிலும் அவருடைய பெயரில் நடப்பதிலும் உட்பட்டிருப்பது என்ன?
14. நித்தியமாய் யெகோவாவை சேவிக்க வேண்டுமென்றால் கடமை உணர்ச்சியோடுகூட வேறு எதுவும் தேவை?
15. கடவுளுக்கு நம் முழு பக்தியை எப்படி செலுத்தலாம்?
16. லட்சோபலட்சம் ஜனங்களுடன் சேர்ந்து நீங்கள் என்ன செய்ய விரும்ப வேண்டும்?
[பக்கம் 14-ன் படங்கள்]
பேரன்பின் நிமித்தம் யெகோவா ‘தமது கையைத் திறந்து சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவார்’