யெகோவாவை வணங்குவோர் அனுபவிக்கும் சுதந்திரம்
அதிகாரம் ஐந்து
யெகோவாவை வணங்குவோர் அனுபவிக்கும் சுதந்திரம்
யெகோவா முதல் மனிதனையும் மனுஷியையும் படைத்தபோது இன்று மனிதர் அனுபவிக்கும் எவ்வித சுதந்திரத்தையும்விட மிக மேலான சுதந்திரத்தை அவர்கள் அனுபவித்தார்கள். பரதீஸ், அதாவது அழகான ஏதேன் தோட்டமே அவர்களது வீடாக இருந்தது. எந்தவித நோய்நொடியும் அவர்களுடைய வாழ்க்கையின் சந்தோஷத்தை பாழாக்கவில்லை; ஏனெனில் அவர்களது உடலும் உள்ளமும் பரிபூரணமாக இருந்தன. இன்று அனைவரும் எதிர்ப்படும் மரண பயம் அவர்களுக்கு இருக்கவில்லை. ரோபோட்டுகளைப் போல் இயந்திரத்தனமாக செயல்படுகிறவர்களாயும் அவர்கள் இல்லை, மாறாக சுயமாக தீர்மானம் செய்யும் திறமை, அதாவது சுயாதீனம் என்ற அருமையான பரிசு அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், இந்த அருமையான சுதந்திரத்தை தொடர்ந்து அனுபவிக்க, அவர்கள் கடவுளுடைய சட்டங்களை மதித்து நடக்க வேண்டியிருந்தது.
2உதாரணத்திற்கு, கடவுள் ஏற்படுத்தியுள்ள இயற்கை சட்டங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் இவை எழுதப்பட்ட சட்டங்களாக இல்லையென்றாலும், ஆதாமும் ஏவாளும் இயல்பாகவே அவற்றிற்குக் கீழ்ப்படிந்து வாழும் விதமாக படைக்கப்பட்டனர். பசி சாப்பிட வேண்டும் என்பதற்கும், தாகம் குடிக்க வேண்டும் என்பதற்கும், சூரிய அஸ்தமனம் உறங்க வேண்டும் என்பதற்கும் அறிகுறியாக இருந்தன. அவர்களுக்கு யெகோவா வேலையையும் கொடுத்தார். சொல்லப்போனால், அந்த வேலையும் ஒரு சட்டமாகவே இருந்தது, ஏனெனில் அது அவர்களுடைய செயல்களை கட்டுப்படுத்தியது. அவர்கள் பிள்ளைகளை பிறப்பித்து, பூமியிலுள்ள பற்பல வகை ஜீவராசிகளின்மீது அதிகாரம் செலுத்தி, பரதீஸின் எல்லைகளை பூகோளம் முழுவதுமாக விரிவுபடுத்தவும் வேண்டியிருந்தது. ஆதியாகமம் 1:28; 2:15) அது எப்பேர்ப்பட்ட நன்மை பயக்கும் அருமையான சட்டம்! பரம திருப்தியளிக்கும் வேலையை அது அவர்களுக்கு அளித்தது; தங்களுடைய திறமைகளை பிரயோஜனமான வழிகளில் முழுமையாக பயன்படுத்துவதற்கும் வழிசெய்தது. அதுமட்டுமல்ல, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை எப்படி நிறைவேற்றுவது என்பதை குறித்து தீர்மானங்கள் எடுப்பதற்கும் போதிய சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேல் என்ன வேண்டும்?
(3ஆனால் தீர்மானம் எடுக்கிற சிலாக்கியம் ஆதாம் ஏவாளுக்கு கொடுக்கப்பட்டபோது, அவர்கள் எடுக்கும் எந்தத் தீர்மானமும் நல்ல பலன்களையே தரும் என அது அர்த்தப்படுத்தவில்லை. தீர்மானங்கள் எடுப்பதற்கான அவர்களுடைய சுதந்திரம் கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கட்டுப்பட்டதாய் இருக்க வேண்டியிருந்தது. கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் அவர்கள் எப்படி கற்றுக்கொள்ள முடியும்? தங்களை படைத்தவருக்கு செவிசாய்ப்பதன் வாயிலாகவும், அவரது படைப்புகளை உற்று கவனிப்பதன் வாயிலாகவும் கற்றுக்கொள்ள முடியும். கற்றுக்கொண்டதை கடைப்பிடிப்பதற்கு தேவையான புத்தியையும் ஆதாம் ஏவாளுக்கு கடவுள் அருளினார். அவர்கள் பரிபூரணராக படைக்கப்பட்டிருந்ததால், தீர்மானங்களை எடுக்கும்போது அவர்களுடைய இயல்பான மனச்சாய்வு கடவுளுடைய பண்புகளை பிரதிபலிப்பதாகவே இருக்கும். சொல்லப்போனால், தங்களுக்காக கடவுள் செய்திருப்பவற்றை உண்மையிலேயே மதித்துணர்ந்து அவரை பிரியப்படுத்த விரும்பியிருந்தால், தீர்மானம் எடுக்கும் விஷயத்தில் அவர்கள் கவனமாக இருந்திருப்பார்கள்.—ஆதியாகமம் 1:26, 27; யோவான் 8:29.
4ஆகவே, உயிரளித்தவர் என்ற முறையில் தமக்கு பக்தி காட்டுகிறார்களா, தாம் கட்டளையிட்ட வரம்பிற்குள் நிலைத்திருக்க மனமுள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை சோதிக்க கடவுள் நியாயமாகவே தீர்மானித்தார். “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் ஆதியாகமம் 2:16, 17) ஏவாள் படைக்கப்பட்டபின் அவளுக்கும் இந்தக் கட்டளை தெரிவிக்கப்பட்டது. (ஆதியாகமம் 3:2, 3) இந்தக் கட்டுப்பாடு அவர்களுடைய சுதந்திரத்தை பறித்துவிட்டதா? இல்லவே இல்லை. அந்த மரத்தின் கனியை தவிர, அவர்கள் சாப்பிடுவதற்கு விதவிதமான, சுவையான உணவுகள் ஏராளமாக இருந்தன. (ஆதியாகமம் 2:8, 9) பூமியை படைத்தது கடவுளாதலால், அது அவருக்கே சொந்தம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது நியாயமாகவே இருந்தது. தமது நோக்கத்திற்கு இணங்கவும் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் வண்ணமும் சட்டங்களை வகுக்கும் உரிமை படைப்பாளராக அவருக்கே உரியது.—சங்கீதம் 24:1, 10.
நாளில் சாகவே சாவாய்” என்ற கட்டளையை ஆதாமுக்கு யெகோவா கொடுத்தார். (5ஆனால் சம்பவித்தது என்ன? தன்னல ஆசையால் தூண்டப்பட்ட ஒரு தூதன் தன்னுடைய சுயாதீனத்தை துஷ்பிரயோகம் செய்து சாத்தானாக மாறிவிட்டான். சாத்தான் என்பதன் அர்த்தம் “எதிர்ப்பவன்.” அவன் ஏவாளிடம் கடவுளுடைய சித்தத்திற்கு முரணான ஒன்றை உறுதியளிப்பதன் மூலம் அவளை வஞ்சித்தான். (ஆதியாகமம் 3:4, 5) ஆதாமும் ஏவாளுடன் சேர்ந்துகொண்டு கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் போனான். தங்களுக்கு சொந்தமல்லாததை அபகரிப்பதன் மூலம் அவர்கள் தாங்கள் பெற்றிருந்த மகத்தான சுதந்திரத்தை இழந்தார்கள். பாவம் அவர்களின் எஜமான் ஆனது, கடவுள் எச்சரித்த விதமாக முடிவில் மரணமும் அவர்களை தழுவியது. அவர்கள் பாவத்தை—தவறுசெய்யும் இயல்பான மனப்பான்மையை—பரம்பரை சொத்தாக தங்களுடைய சந்ததியாருக்குக் கொடுத்தார்கள். பாவம் பலவீனங்களையும் வருவித்தது, இதனால் நோயும் முதுமையும் மரணமும் விளைவடைந்தன. தவறு செய்யும் மனச்சாய்வும் அதோடு சாத்தானின் செல்வாக்கும் சேர்ந்து, பகைமையும் குற்றச்செயலும் ஒடுக்குதலும் போரும் நிறைந்த ஒரு மனித சமுதாயத்தை உருவாக்கியது; இவை லட்சக்கணக்கானோரின் உயிரை பறித்திருக்கின்றன. ஆரம்பத்தில் கடவுள் மனிதவர்க்கத்திற்குக் கொடுத்த சுதந்திரத்திலிருந்து இது எவ்வளவாய் வேறுபட்டிருக்கிறது!—உபாகமம் 32:4, 5; யோபு 14:1, 2; ரோமர் 5:12; வெளிப்படுத்துதல் 12:9.
சுதந்திரத்தை எங்கு கண்டடையலாம்
6இன்று மூலைமுடுக்கெங்கும் காணப்படும் மோசமான நிலைமைகளால், மக்கள் அதிக சுதந்திரத்திற்காக ஏங்குவதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. ஆனால் உண்மையான சுதந்திரத்தை எங்கு கண்டடையலாம்? “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என இயேசு சொன்னார். (யோவான் 8:31, 32) ஜனங்கள் ஓர் ஆட்சியாளரை அல்லது அரசாங்கத்தை புறக்கணித்து மற்றொன்றை தேர்ந்தெடுக்கையில் எதிர்பார்க்கும் விதமான சுதந்திரம் அல்ல இது. மாறாக இந்த சுதந்திரம் மனித பிரச்சினைகளின் ஆணிவேரையே நீக்கிவிடுகிறது. பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து கிடைக்கும் சுதந்திரத்தைப் பற்றியே இயேசு குறிப்பிட்டார். (யோவான் 8:24, 34-36) ஆகவே, ஒருவர் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷராகும்போது, அவர் தன் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை, ஒரு விடுதலையை அனுபவிக்கிறார்!
7பாவம் செய்யத் தூண்டுகிற பிறவி குணம் இப்போது மெய் கிறிஸ்தவர்களிடம் தலைதூக்குவதே இல்லை என இது அர்த்தப்படுத்துவதில்லை. அவர்களும் பாவத்தை சுதந்தரித்திருப்பதால் இன்னும் அதனோடு போராடவே செய்கிறார்கள். (ரோமர் 7:21-25) ஆனால் இயேசுவின் போதனைகளுக்கு இசைய ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்தால், அவர் இனிமேலும் பாவத்திற்கு அடிமையாக மாட்டார். மறுபேச்சின்றி கீழ்ப்படியும்படி ஆணை பிறப்பிக்கிற சர்வாதிகாரி போல பாவம் இனி அவரை ஆட்டிப்படைக்காது. அவர் நோக்கமில்லாத வாழ்க்கையிலும் குற்றமுள்ள மனசாட்சியிலும் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியம் இராது. கடவுளுக்கு முன்பாக சுத்தமான மனசாட்சியை அவர் அனுபவித்து மகிழ்வார், ஏனெனில் கிறிஸ்துவின் பலியின் மீதுள்ள விசுவாசத்தின் அடிப்படையில் அவருடைய கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. பாவமுள்ள மனச்சாய்வுகள் தலைதூக்கி அவரை கட்டுப்படுத்த முயலலாம், ஆனால் கிறிஸ்துவின் சுத்தமான போதனைகளை அவர் நினைவுகூர்ந்து அத்தகைய மனச்சாய்வுகளுக்கு அடிபணிய மறுக்கும்போது இனிமேலும் பாவம் தன் எஜமான் அல்ல என்பதை அவர் காட்டுகிறார்.—ரோமர் 6:12-17.
தானியேல் 2:44; மத்தேயு 6:10) ஆனாலும், அப்படிப்பட்ட சுதந்திரம் அரசாங்க அதிகாரிகளையும் அவர்களுடைய சட்டங்களையும் அவமதிப்பதற்கு இடமளிப்பதில்லை.—தீத்து 3:1, 2; 1 பேதுரு 2:16, 17.
8கிறிஸ்தவர்களாக நாம் அனுபவிக்கும் எல்லா சுதந்திரத்தையும் சிந்தித்துப் பாருங்கள். பொய் போதனைகளின் பிடியிலிருந்தும், மூட நம்பிக்கையின் கட்டிலிருந்தும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் நாம் விடுதலை பெற்றிருக்கிறோம். இறந்தவர்களின் நிலைமையையும் உயிர்த்தெழுதலையும் பற்றிய அருமையான சத்தியங்கள் இறந்தவர்களைப் பற்றிய நியாயமற்ற பயத்திலிருந்து நம்மை விடுவித்திருக்கின்றன. அபூரண மனிதரின் அரசாங்கங்கள் நீங்கி கடவுளுடைய நீதியுள்ள ராஜ்யம் வரும் என்ற அறிவு நம்பிக்கையிழந்த நிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. (9வாழ்க்கைக்கு சிறந்த வழி எது என்பதை நாமாகவே முயன்று கண்டுபிடிக்கும்படி யெகோவா நம்மை விட்டுவிடுவதில்லை. நாம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறோம், எது நமக்கு உண்மையான திருப்தியை தருகிறது, எது நமக்கு நித்திய நன்மையை தருகிறது போன்றவற்றையெல்லாம் அவர் அறிவார். தம்முடனும் சக மனிதருடனும் உள்ள உறவை பாதிக்கும்—ஒருவேளை புதிய உலகிற்குள் அடியெடுத்து வைப்பதற்குக்கூட தடையாக இருக்கும்—எண்ணங்கள், நடத்தைகள் எவையென அவர் நன்கு அறிந்திருக்கிறார். பைபிள் வாயிலாகவும் தம்முடைய காணக்கூடிய அமைப்பு வாயிலாகவும் இந்த எல்லா விஷயங்களையும் யெகோவா நமக்கு அன்புடன் தெரிவிக்கிறார். (மாற்கு 13:10; கலாத்தியர் 5:19-23; 1 தீமோத்தேயு 1:12, 13) அப்படியானால், இதற்கு நாம் எவ்விதமாக பிரதிபலிக்கப் போகிறோம் என்பதை தீர்மானிப்பதற்கு கடவுள் தந்துள்ள சுயாதீனத்தை பயன்படுத்துவது நம் கடமை. ஆதாமைப் போல் அல்லாமல், பைபிள் சொல்வதை நாம் கவனத்தில் வைத்தால் ஞானமாக தீர்மானங்கள் எடுப்போம். யெகோவாவுடன் நல்ல உறவை வைத்திருப்பதே நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்பதை காட்டுவோம்.
மற்றொரு வகை சுதந்திரத்தை விரும்புதல்
10சில சமயங்களில் யெகோவாவின் சாட்சிகளாக உள்ள சில இளைஞர்களும் பெரியவர்களும் தங்களுக்கு மற்றொரு வகை சுதந்திரம் வேண்டும் என நினைக்கலாம். இந்த உலகம் அவர்களுக்கு அதிக கவர்ச்சியூட்டலாம். அதைப் பற்றி எந்தளவுக்கு ஆழ்ந்து சிந்திக்கிறார்களோ அந்தளவுக்கு இந்த உலகின் பிரபலமான, கிறிஸ்தவமற்ற காரியங்களின்மீது அவர்களுடைய நாட்டமும் அதிகரிக்கிறது. போதைப்பொருட்களை துஷ்பிரயோகம் செய்வது, குடித்து வெறிப்பது, வேசித்தனத்தில் ஈடுபடுவது போன்றவற்றை ஒருவேளை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால், உண்மை கிறிஸ்தவர்கள் அல்லாத சிலரின் பிரியத்தை சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையில் அவர்களுடன் சகவாசம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்களுடைய பேச்சையும் நடத்தையையும்கூட இவர்கள் பின்பற்ற ஆரம்பிக்கலாம்.—3 யோவான் 11.
11கிறிஸ்தவர்களுக்கு ஏற்றதல்லாத நடத்தையில் ஈடுபடுவதற்கான 2 பேதுரு 2:19.
தூண்டுதல் சிலசமயங்களில் யெகோவாவை சேவிப்பதாக சொல்லிக்கொள்ளும் ஆட்களிடமிருந்தும் வருகிறது. பூர்வ கிறிஸ்தவர்கள் சிலருக்கு நேரிட்டதும் இதுதான், நம் நாளிலும் இதுவே நேரிடலாம். அப்படிப்பட்டவர்கள் எப்போதுமே தங்களுக்கு இன்பம் தருவதாக நினைக்கும் காரியங்களை செய்ய விரும்புகிறார்கள், ஆனால் அவையோ கடவுளுடைய சட்டங்களுக்கு எதிரானவை. வாழ்க்கையை கொஞ்சம் “ஜாலியாக” அனுபவிக்கும்படி பிறரை தூண்டுகிறார்கள். ‘தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்.’—12இப்படிப்பட்ட போலி சுதந்திரம் எப்போதுமே தீங்கு விளைவிக்கிறது, ஏனெனில் இது கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போவதை அர்த்தப்படுத்துகிறது. உதாரணமாக அது முறைதகாத பாலுறவு, உணர்ச்சிக் கொந்தளிப்புகள், வியாதி, மரணம், முறைதவறிய கர்ப்பம், ஒருவேளை விவாகரத்து போன்றவற்றில் போய் முடியலாம். (1 கொரிந்தியர் 6:18; 1 தெசலோனிக்கேயர் 4:3-8) போதைப்பொருள் துஷ்பிரயோகத்தினால் சிடுசிடுப்பு, பேச்சு குளறுதல், மங்கிய பார்வை, கிறுகிறுப்பு, சுவாசக் கோளாறு, பிரமை, மரணம் போன்றவை ஏற்படலாம். போதைப்பொருட்கள் ஆட்களை அடிமைப்படுத்தலாம்; அந்தப் பழக்கத்தைத் தொடர குற்றச் செயலில் ஈடுபட செய்யலாம். மிதமிஞ்சி மதுபானம் குடித்தாலும் இதே விளைவுகள் ஏற்படுகின்றன. (நீதிமொழிகள் 23:29-35) இப்படிப்பட்ட நடத்தைகளில் ஈடுபடுகிறவர்கள் தாங்கள் சுதந்திரப் பறவைகள் என நினைக்கலாம்; ஆனால் காலம் கடந்த பின்பே தாங்கள் பாவத்திற்கு அடிமைகள் என்பதை கண்டுகொள்கிறார்கள். பாவம் எவ்வளவு கொடூரமான கொடுங்கோலன்! இந்த விஷயத்திற்கு இப்போதே கவனம் செலுத்துவது இப்படிப்பட்ட அனுபவத்திலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு உதவலாம்.—கலாத்தியர் 6:7, 8.
பிரச்சினைகள் எங்கு ஆரம்பிக்கின்றன
13பிரச்சினைகள் பெரும்பாலும் எங்கு ஆரம்பிக்கின்றன என்பதை யாக்கோபு 1:14, 15) இச்சை எவ்வாறு தூண்டுவிக்கப்படுகிறது? மனதிற்குள் செல்வதெதுவோ அதன் மூலமாகவே தூண்டுவிக்கப்படுகிறது. பைபிள் நியமங்களை கடைப்பிடிக்காதவர்களோடு கூட்டுறவு வைப்பதாலேயே பெரும்பாலும் இது ஏற்படுகிறது. “கெட்ட கூட்டுறவுகளை” தவிர்க்க வேண்டுமென்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. (1 கொரிந்தியர் 15:33, NW) ஆனால் எந்தக் கூட்டுறவு கெட்டது? அதை யெகோவா எப்படி கருதுகிறார்? பின்வரும் கேள்விகளை ஆழ்ந்து சிந்திப்பதும் அங்கு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை எடுத்துப் பார்ப்பதும் சரியான முடிவுக்கு வர நமக்கு உதவ வேண்டும்.
சிந்தித்துப் பாருங்கள். பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” (ஒரு சிலர் பார்வைக்கு மதிப்புக்குரியவர்களாக இருப்பதே அவர்கள் நல்ல கூட்டாளிகள் என அர்த்தப்படுத்துகிறதா? (ஆதியாகமம் 34:1, 2, 18, 19)
அவர்களுடைய பேச்சு, ஒருவேளை அவர்கள் சொல்லும் ஜோக்குகள் நாம் அவர்களை உற்ற கூட்டாளிகளாக ஏற்றுக்கொள்ளலாம் என காட்டுகிறதா? (எபேசியர் 5:3, 4)
யெகோவாவை நேசிக்காதவர்களிடம் நாம் நெருங்கிய கூட்டுறவு கொள்ள தீர்மானிக்கையில் அதை அவர் எவ்வாறு கருதுகிறார்? (2 நாளாகமம் 19:1, 2)
நம்முடைய நம்பிக்கைகளில் அக்கறையில்லாதவர்களுடன் நாம் வேலை செய்யவோ அவர்களுடன் பள்ளிக்குச் செல்லவோ வேண்டியிருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது ஏன் அவசியம்? (1 பேதுரு 4:3, 4)
டிவி பார்ப்பது, சினிமா பார்ப்பது, இன்டர்நெட்டை பயன்படுத்துவது, புத்தகங்களையும் பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் வாசிப்பது போன்றவை மற்றவர்களுடன் கூட்டுறவு கொள்வதற்கான வழிகளாகும். இத்தகைய ஊற்றுமூலங்களிலிருந்து வரும் எந்தவித தகவல்களுக்கு எதிராக நம்மை காத்துக்கொள்வது அவசியம்? (நீதிமொழிகள் 3:31; ஏசாயா 8:19; எபேசியர் 4:17-19)
நாம் எத்தகைய கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம்மைக் குறித்து யெகோவாவுக்கு எதைத் தெரியப்படுத்துகிறது? (14கடவுளுடைய புதிய உலகம் நமக்கு மிக அருகில் உள்ளது. கடவுளுடைய பரலோக ராஜ்ய அரசாங்கத்தின் மூலமாக மனிதகுலம் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அவனுடைய பொல்லாத ஒழுங்குமுறை முழுவதிலிருந்தும் விடுதலை பெறும். கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திடமிருந்து பாவத்தின் பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி, உடலும் உள்ளமும் பரிபூரணத்தை அடையும். அப்போது பரதீஸில் நித்திய ஜீவனை நாம் அனுபவித்து மகிழ முடியும். கடைசியில், சிருஷ்டிகள் அனைத்தும் ‘யெகோவாவின் ஆவிக்கு’ முற்றிலும் இசைவான சுதந்திரத்தை அனுபவித்து மகிழும். (2 கொரிந்தியர் 3:17, NW) கடவுளுடைய வார்த்தையின் ஆலோசனையை இப்பொழுது அசட்டை செய்து இந்த எல்லாவற்றையும் இழக்கும் நிலைக்குள்ளாவது புத்திசாலித்தனமான செயலாகுமா? ஆகவே இன்று நம்முடைய கிறிஸ்தவ சுதந்திரத்தை ஞானமாக பயன்படுத்துவதன் மூலம், “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை”த்தான் விரும்புகிறோம் என நாம் அனைவரும் தெளிவாக காட்டுவோமாக.—ரோமர் 8:20.
மறுபார்வை
• முதல் மனித ஜோடி எவ்வகையான சுதந்திரத்தை அனுபவித்து மகிழ்ந்தது? இன்று மனிதகுலம் எதிர்ப்படும் நிலைமையோடு அது எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?
• மெய்க் கிறிஸ்தவர்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது? சுதந்திரம் என இந்த உலகம் கருதுவதிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது?
• கெட்ட கூட்டுறவுகளை தவிர்ப்பது ஏன் மிக முக்கியம்? ஆதாமைப் போலின்றி தவறான காரியங்களைக் குறித்ததில் யாருடைய தீர்மானங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம்?
[கேள்விகள்]
1, 2. (அ) முதல் மனித ஜோடிக்கு கடவுள் என்ன வகையான சுதந்திரத்தைக் கொடுத்தார்? (ஆ) ஆதாம் ஏவாளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தின சில சட்டங்களை குறிப்பிடுங்கள்.
3. தீர்மானங்களை எடுப்பதில் தங்கள் சுதந்திரத்தை ஞானமாக பயன்படுத்துவதற்கு ஆதாமும் ஏவாளும் எப்படி கற்றுக்கொள்ள முடியும்?
4. (அ) ஒரு மரத்தின் கனியை மட்டும் சாப்பிட வேண்டாமென ஆதாம் ஏவாளுக்குக் கொடுத்த கட்டளை அவர்களுடைய சுதந்திரத்தை பறித்துவிடுவதாக இருந்ததா? (ஆ) இது ஏன் பொருத்தமான கட்டளையாக இருந்தது?
5. (அ) ஆதாமும் ஏவாளும் தங்களுடைய மகத்தான சுதந்திரத்தை எப்படி இழந்தார்கள்? (ஆ) ஆதாமும் ஏவாளும் அனுபவித்த சுதந்திரத்தின் இடத்தை எது பிடித்துக்கொண்டது, நாம் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறோம்?
6. (அ) உண்மையான சுதந்திரத்தை எங்கு கண்டடையலாம்? (ஆ) எத்தகைய விடுதலையைப் பற்றி இயேசு குறிப்பிட்டார்?
7. (அ) என்ன கருத்தில் நாம் இப்போது பாவத்திலிருந்து விடுதலை பெறலாம்? (ஆ) அந்தச் சுதந்திரத்தைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
8. (அ) மெய் கிறிஸ்தவம் எக்காரியங்களில் இருந்து விடுதலை அளிக்கிறது? (அ) உலக ஆட்சியாளர்களிடம் நாம் எப்படிப்பட்ட மனநிலையைக் காட்ட வேண்டும்?
9. (அ) மனிதருக்கு இப்போது கிடைத்திருக்கிற இந்தளவு சுதந்திரத்தை அனுபவித்து மகிழ யெகோவா எவ்வாறு அன்புடன் நமக்கு உதவுகிறார்? (ஆ) நாம் எவ்வாறு ஞானமாக தீர்மானங்கள் எடுக்கலாம்?
10. யெகோவாவின் சாட்சிகளில் சிலர் எவ்வகையான சுதந்திரத்தை நாடியிருக்கிறார்கள்?
11. தவறானதை செய்வதற்கான தூண்டுதல் சிலசமயங்களில் எங்கிருந்து வருகிறது?
12. கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் எதிரான நடத்தையால் வரும் சோகமான விளைவுகள் யாவை?
13. (அ) பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் இச்சைகள் பெரும்பாலும் எவ்வாறு தூண்டுவிக்கப்படுகின்றன? (ஆ) “கெட்ட கூட்டுறவுகள்” எவை என புரிந்துகொள்ள நமக்கு யாருடைய நோக்குநிலை தேவைப்படுகிறது? (இ) பாரா 13-ல் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கையில் யெகோவாவின் நோக்குநிலையை வலியுறுத்திக் காட்டுங்கள்.
14. கடவுளுடைய வார்த்தையின் ஆலோசனையை இன்று உண்மையுடன் கடைப்பிடிப்போருக்கு என்ன மகத்தான சுதந்திரம் காத்திருக்கிறது?
[பக்கம் 46-ன் படங்கள்]
“மோசம் போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவுகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது