யெகோவா தம் அமைப்பை எப்படி வழிநடத்துகிறார்?
அதிகாரம் பதினான்கு
யெகோவா தம் அமைப்பை எப்படி வழிநடத்துகிறார்?
கடவுளுக்கு ஓர் அமைப்பு இருக்கிறதா? இருக்கிறது என கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமம் சொல்கிறது. அந்த அமைப்பினுடைய பிரமிப்பூட்டும் பரலோக பகுதியின் கணநேரக் காட்சிகளை அவர் தம் வார்த்தையில் அளிக்கிறார். (எசேக்கியேல் 1:1, 4-14; தானியேல் 7:9, 10, 13, 14) கண்ணுக்குப் புலப்படாத இப்பகுதியை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், இது மெய் வணக்கத்தாரை இன்று பெரிதும் பாதிக்கிறது. (2 இராஜாக்கள் 6:15-17) யெகோவாவின் அமைப்பிற்கு காணக்கூடிய ஒரு பகுதியும் பூமியில் உள்ளது. அந்தப் பகுதி எது, அதை யெகோவா எப்படி வழிநடத்துகிறார் என்பதை புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது.
காணக்கூடிய பகுதியை அடையாளம் கண்டுகொள்ளுதல்
2இஸ்ரவேல் தேசம் 1,545 ஆண்டுகளுக்கு கடவுளின் சபையாக செயல்பட்டு வந்தது. (அப்போஸ்தலர் 7:38) ஆனால், அது கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய தவறியது, அவரது குமாரனையும் புறக்கணித்தது. அதனால், யெகோவா அந்த சபையை நிராகரித்து அதை கைவிட்டுவிட்டார். “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்று யூதர்களிடத்தில் இயேசு சொன்னார். (மத்தேயு 23:38) அதற்குப்பின் கடவுள் ஒரு புதிய சபையை உருவாக்கி, அதனுடன் ஒரு புதிய உடன்படிக்கை செய்துகொண்டார். பரலோகத்தில் தம் குமாரனுடன் ஒன்றாக ஆட்சி செய்வதற்கு 1,44,000 பேரை கடவுள் இந்தச் சபையில் கூட்டிச்சேர்க்கவிருந்தார்.—வெளிப்படுத்துதல் 14:1-4.
3அந்தப் புதிய சபையின் முதல் அங்கத்தினர்கள் பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அப்போஸ்தலர் 2:1-4) இவ்வாறு கடவுள் தம் நோக்கத்தை பரலோகத்திலிருக்கும் இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்போகிற ஜனங்கள் இவர்களே என்பதற்கு கடவுளுடைய ஆவி தெள்ளத் தெளிவான அத்தாட்சி அளித்தது.
நாளன்று யெகோவாவின் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள். அந்தக் குறிப்பிடத்தக்க சம்பவத்தைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்[டார்கள்].” (4இந்த 1,44,000 பேரில் மீதியானோர் மட்டுமே இன்று பூமியில் இருக்கிறார்கள். ஆனால் பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின்படி, ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்த ‘திரள் கூட்டத்தாரில்’ லட்சக்கணக்கானோர் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருடன் கூட்டுறவு கொள்ளும்படி சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நல்ல மேய்ப்பராகிய இயேசு இந்த வேறே ஆடுகளை மீதியானோருடன் ஒன்றுசேர்த்திருக்கிறார்; அதன் மூலம் தங்களுடைய ஒரே மேய்ப்பனாகிய இயேசுவின்கீழ் அவர்கள் ஒரே மந்தையாகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:11, 16) இவர்கள் அனைவரும் ஒன்றுபட்ட ஒரு சபையாக, யெகோவாவின் காணக்கூடிய அமைப்பாக ஆகிறார்கள்.
தேவராஜ்ய அமைப்புமுறை
5“ஜீவனுள்ள தேவனுடைய சபை” என்ற பைபிள் சொற்றொடர், அதை வழிநடத்துபவர் யார் என்பதை தெளிவாக்குகிறது. அந்த அமைப்பு தேவராஜ்ய அமைப்பு அல்லது கடவுளால் ஆளப்படும் அமைப்பாகும். சபையின் காணக்கூடாத தலைவராக தாம் 1 தீமோத்தேயு 3:14, 15; எபேசியர் 1:22, 23; 2 தீமோத்தேயு 3:16, 17.
நியமித்த இயேசுவின் மூலமாகவும் ஏவப்பட்டு எழுதப்பட்ட தம் வார்த்தையாகிய பைபிள் மூலமாகவும் யெகோவா தம் மக்களுக்கு வழிநடத்துதலை அளிக்கிறார்.—6அப்படிப்பட்ட வழிநடத்துதல் பெந்தெகொஸ்தே நாளின்போது வெளிப்படையாக தெரிந்தது. (அப்போஸ்தலர் 2:14-18, 32, 33) ஆப்பிரிக்காவில் நற்செய்தியை பரப்புவதற்கு யெகோவாவின் தூதன் வழிநடத்திய சமயத்திலும், தர்சு பட்டணத்து சவுல் மனம் மாறியபோது இயேசுவின் குரல் கட்டளைகளைக் கொடுத்த சமயத்திலும், புறதேசத்தாரிடம் பேதுரு பிரசங்கிக்க ஆரம்பித்த சமயத்திலும் இது தெளிவாய் தெரிந்தது. (அப்போஸ்தலர் 8:26, 27; 9:3-7; 10:9-16, 19-22) ஆனால், காலப்போக்கில் பரலோகத்திலிருந்து குரல்கள் எதுவும் கேட்கப்படவில்லை, தூதர்கள் ஒருவரும் காட்சியளிக்கவில்லை, ஆவியின் அற்புத வரங்கள் எதுவும் அருளப்படவில்லை. இருந்தாலும், “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என இயேசு வாக்குறுதி அளித்திருந்தார். (மத்தேயு 28:20; 1 கொரிந்தியர் 13:8) இயேசுவின் வழிநடத்துதலை இன்று யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த வழிநடத்துதல் மட்டும் இல்லையென்றால், பயங்கரமான எதிர்ப்பின் மத்தியிலும் ராஜ்யத்தின் செய்தியை பிரசங்கிப்பது முடியாத விஷயம்.
7இயேசு தம் மரணத்திற்கு சற்று முன்பு சீஷர்களிடம், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைப்’ பற்றியும் எஜமானராக தாம் அதனிடம் விசேஷித்த பொறுப்பை ஒப்படைக்கப்போவதைப் பற்றியும் சொன்னார். அந்த “அடிமை,” கர்த்தர் பரலோகத்திற்குச் செல்லுகையிலும் இருக்கும், ராஜ்ய வல்லமையில் அவர் காணக்கூடாதவராக திரும்ப வருகையிலும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கும். இந்த விவரிப்பு ஒரு தனிநபருக்கு அல்ல, ஆனால் இது கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சபைக்கே பொருந்துகிறது. தம்முடைய இரத்தத்தினால் அவர்களை மீட்டிருப்பதால் தம் மத்தேயு 24:45-47; NW; 28:19; ஏசாயா 43:10; லூக்கா 12:42; 1 பேதுரு 4:10.
“அடிமை” என இயேசு அவர்களை குறிப்பிட்டார். சீஷர்களை உருவாக்கி, அவர்களுக்கு “ஏற்ற வேளையிலே . . . [ஆவிக்குரிய] போஜனம் கொடுத்து,” தொடர்ந்து போஷித்து வரும்படி இவர்களுக்கு பொறுப்பளித்தார்.—8எஜமான் 1914-ல் காணக்கூடாத விதத்தில் வந்தபோது அவருடைய வேலையை அந்த அடிமை வகுப்பார் உண்மைத்தவறாமல் செய்து வந்ததால், 1919-ல் அவர்களிடம் கூடுதலான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன; அதற்கு தெளிவான அத்தாட்சியும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து வந்த வருடங்கள் உலகம் முழுவதிலும் ராஜ்யத்தின் செய்தியை அறிவிப்பதற்கான காலப்பகுதியாக இருந்திருக்கின்றன; மேலும் திரள் கூட்டத்தாராகிய யெகோவாவின் வணக்கத்தார் மிகுந்த உபத்திரவத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். (மத்தேயு 24:14, 21, 22; வெளிப்படுத்துதல் 7:9, 10) இவர்களுக்கும்கூட ஆவிக்குரிய உணவு தேவை; அடிமை வகுப்பாரால் இது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அப்படியானால் யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு இவர்கள் மூலம் அவர் தரும் அறிவுரைகளை நாம் ஏற்று அதற்கிசைய செயல்படுவது அவசியம்.
9சில சமயங்களில் கோட்பாடு, செயல்முறை சார்ந்த கேள்விகள் எழும்புகின்றன. அப்போது என்ன செய்வது? மதம் மாறிய புறதேசத்தார் சம்பந்தமாக எழும்பிய ஒரு விவாதம் தீர்க்கப்பட்ட விதத்தை அப்போஸ்தலர் 15-ம் அதிகாரம் நமக்குச் சொல்கிறது. எருசலேமில் மத்திய ஆளும் குழுவாக செயல்பட்டு வந்த அப்போஸ்தலர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் அந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பரிபூரணர் அல்லர், ஆனாலும் கடவுள் அவர்களை பயன்படுத்தினார். அவர்கள் அந்த விஷயத்தின் பேரில் வேத வசனங்களை ஆராய்ந்தார்கள்; புறதேசத்தாருக்கு வழிதிறக்கப்படுவதில் கடவுளுடைய ஆவி செயல்பட்டதற்குரிய அத்தாட்சிக்கும் கவனம் செலுத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் தீர்மானம் எடுத்தார்கள். அந்த ஏற்பாட்டைக் கடவுள் ஆசீர்வதித்தார். (அப்போஸ்தலர் 15:1-29; 16:4, 5) அந்த மத்திய குழுவே ராஜ்ய பிரசங்க வேலையை முன்னேற்றுவிப்பதற்கு ஆட்களை நியமித்து அனுப்பியது.
10நம் நாளிலுள்ள யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் ஆளும் குழு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆவியால்-அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களால் ஆனது; இது யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமையகத்தில் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் தலைமையில் இந்த ஆளும் குழு தூய வணக்கத்தை எல்லா நாடுகளிலும் முன்னேற்றுவிக்கிறது; ஆயிரக்கணக்கான சபைகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. ஆளும் குழுவைச் சேர்ந்தவர்கள் அப்போஸ்தலனாகிய பவுலின் நோக்குநிலையைக் கொண்டிருக்கிறார்கள். “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே” என்று அவர் தம் சக கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்.—2 கொரிந்தியர் 1:24.
11உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் தகுதிபெற்ற சகோதரர்களைத் தேர்ந்தெடுக்க ஆளும் குழுவையே சார்ந்திருக்கிறார்கள்; இவர்கள் சபைகளைக் கவனிப்பதற்காக மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்க அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு நியமிக்கப்படுவோருக்குரிய தகுதிகள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன; அவர்கள் பரிபூரணரோ தவறு செய்யாதவர்களோ அல்ல என்பதை நினைவில் வைக்க வேண்டும். சிபாரிசுகளை செய்கிற மூப்பர்களும் நியமனம் செய்பவர்களும் கடவுளுக்கு முன்பாக அதிக பொறுப்புள்ளவர்கள். (1 தீமோத்தேயு 3:1-10, 12, 13; தீத்து 1:5-9) ஆகவே, அவர்கள் கடவுளுடைய ஆவியின் உதவிக்காக ஜெபம் செய்கிறார்கள், அவருடைய ஏவப்பட்ட வார்த்தையின் வழிநடத்துதலை நாடுகிறார்கள். (அப்போஸ்தலர் 6:2-4, 6; 14:23) ‘விசுவாசத்தில் ஒருமைப்பட்டவர்களாவதற்கு’ நம் அனைவருக்கும் உதவுகிற ‘மனிதரில் வரங்களாகிய’ (NW) இவர்களுக்கு நம் போற்றுதலை காட்டுவோமாக.—எபேசியர் 4:8, 11-16.
12சபையை கண்காணிக்கும் பொறுப்பு ஆண்களுக்குரியது என வேதவசனங்கள் குறிப்பிடுகின்றன. இது பெண்களை மதிப்புக் குறைவாக்குவதில்லை; ஏனெனில் பெண்கள் சிலர் பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாய் இருக்கிறார்கள்; பிரசங்க வேலையில் பெருமளவு பங்கெடுப்பவர்களும் அவர்களே. (சங்கீதம் 68:11, NW) குடும்பப் பொறுப்புகளை தவறாமல் கவனித்து வருவதாலும் அவர்கள் சபையின் நற்பெயருக்குப் பெருமை சேர்க்கிறார்கள். (தீத்து 2:3-5) ஆனால் சபையில் போதிக்கும் பொறுப்புகளை நியமிக்கப்பட்ட ஆண்கள் மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள்.—1 தீமோத்தேயு 2:12, 13.
13இந்த உலகில் உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கிற ஒருவர் முக்கியமானவராக கருதப்படுகிறார்; ஆனால், “உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான்” என்பதே கடவுளுடைய அமைப்புக்குள் பின்பற்றப்படும் விதிமுறை. (லூக்கா 9:46-48; 22:24-26) கடவுளுடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளாமல் மந்தைக்கு மாதிரிகளாக இருக்கும்படி வேத வசனங்கள் மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றன. (1 பேதுரு 5:2, 3) இப்பிரபஞ்சத்தின் பேரரசருக்கு பிரதிநிதிகளாக இருப்பதற்கும், அவருடைய பெயரில் தாழ்மையுடன் பேசுவதற்கும் அவருடைய ராஜ்யத்தைப் பற்றி எங்குமுள்ள மக்களுக்கு சொல்வதற்கும் நல்வாய்ப்பை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமல்ல; ஆண்களும் பெண்களுமாகிய யெகோவாவின் சாட்சிகள் அனைவருமே இந்த நல்வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
14நம்மைநாமே இவ்வாறு கேட்டுக் கொள்வது நல்லது: ‘யெகோவா தமது காணக்கூடிய அமைப்பை வழிநடத்தும் முறைக்கு நான் உண்மையிலேயே மதித்துணர்வைக் காட்டுகிறேனா? என்னுடைய எண்ணங்களும், சொல்லும் செயலும் இதை வெளிப்படுத்துகின்றனவா?’ இப்படி சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு, பின்வரும் குறிப்புகளை சிந்தித்துப் பார்ப்பது நம் அனைவருக்கும் உதவலாம்:
சபையின் தலைவராக கிறிஸ்துவுக்கு நான் உண்மையிலேயே கீழ்ப்படிந்தால், பின்வரும் வசனங்களில் குறிப்பிட்டுள்ளபடி, நான் எதைச் செய்ய வேண்டும்? (மத்தேயு 24:14; 28:19, 20; யோவான் 13:34, 35)
அடிமை வகுப்பின் மூலமாகவும் அதன் ஆளும் குழுவின் மூலமாகவும் வருகிற ஆவிக்குரிய ஏற்பாடுகளை நன்றியோடு ஏற்றுக்கொள்கையில் யாருக்கு நான் மரியாதை காட்டுகிறேன்? (லூக்கா 10:16)
சபையிலுள்ள ஒவ்வொருவரும், முக்கியமாக மூப்பர்கள் ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டும்? (15கிறிஸ்துவின் தலைமையில் தம்முடைய காணக்கூடிய அமைப்பின் வாயிலாக யெகோவா இன்று நம்மை வழிநடத்தி வருகிறார். இந்த ஏற்பாட்டிற்கு நாம் காட்டும் மனப்பான்மை, சர்வலோக பேரரசுரிமையைப் பற்றிய விவாதத்தை நாம் எப்படி கருதுகிறோம் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது. (எபிரெயர் 13:17) சுயநலமே நம்முடைய முதன்மையான அக்கறை என சாத்தான் வாதிடுகிறான். சுயநலமான காரியங்களுக்கு மட்டுக்குமீறி கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, தேவைப்படும் எந்த விதத்திலும் அவருக்கு சேவை செய்கையில் நாம் பிசாசை பொய்யனாக நிரூபிக்கிறோம். ‘நம் நலனுக்காகப் பிறரைப் போலியாகப் புகழுவதைத்’ தவிர்த்து, நம்மை வழிநடத்துபவர்களிடம் அன்பும் மரியாதையும் காண்பிக்கையில் நாம் யெகோவாவுக்கு மகிழ்ச்சியை சேர்க்கிறோம். (யூதா 16, பொ.மொ.; எபிரெயர் 13:7) யெகோவாவின் அமைப்புக்கு உண்மைத்தவறாமல் இருப்பதன் மூலம் யெகோவாவே நம் கடவுள் எனவும் அவருடைய வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறோம் எனவும் நாம் காட்டுகிறோம்.—1 கொரிந்தியர் 15:58.
மறுபார்வை
• இன்று யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு எது, அதன் நோக்கம் என்ன?
• சபையின் நியமிக்கப்பட்ட தலைவர் யார், காணக்கூடிய என்ன ஏற்பாடுகளின் வாயிலாக அவர் அன்பான வழிநடத்துதலை நமக்கு அளிக்கிறார்?
• யெகோவாவின் அமைப்பில் உள்ளவர்களிடமாக என்ன சிறந்த மனப்பான்மைகளை நாம் வளர்க்க வேண்டும்?
[கேள்விகள்]
1. யெகோவாவின் அமைப்பைப் பற்றி பைபிள் தரும் தகவல் என்ன, அது நமக்கு ஏன் முக்கியம்?
2. கடவுள் ஏற்படுத்திய புதிய சபை எது?
3. கடவுள் புதிய சபையை பயன்படுத்தி வந்ததற்கு தெள்ளத் தெளிவான அத்தாட்சியாக பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று என்ன நடந்தது?
4. இன்று யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் அங்கத்தினர்களாகிறவர்கள் யார்?
5. கடவுளுடைய அமைப்பை வழிநடத்துபவர் யார், எப்படி?
6. (அ) சபைக்கு பரலோக வழிநடத்துதல் இருந்தது முதல் நூற்றாண்டில் எப்படி தெளிவாய் தெரிந்தது? (ஆ) இன்றும் இயேசுவே சபைக்கு தலைவர் என எது காட்டுகிறது?
7. (அ) “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” யாராலானது, ஏன்? (ஆ) அந்த ‘அடிமைக்கு’ என்ன வேலை கொடுக்கப்பட்டது?
8. (அ) அடிமை வகுப்பாருக்கு இப்போது என்ன பொறுப்புகள் இருக்கின்றன? (ஆ) இவர்கள் வாயிலாக கடவுள் கொடுக்கும் அறிவுரைக்கு செவிசாய்ப்பது ஏன் முக்கியம்?
9, 10. (அ) கோட்பாடு சம்பந்தமான கேள்விகளைத் தீர்ப்பதற்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு வழிநடத்துதலை அளிப்பதற்கும் முதல் நூற்றாண்டில் என்ன ஏற்பாடு இருந்தது? (ஆ) யெகோவாவின் ஜனங்களுடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இன்று என்ன ஏற்பாடு இருக்கிறது?
11. (அ) மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி நியமிக்கப்படுகிறார்கள்? (ஆ) நியமனம் செய்யப்பட்டவர்களோடு நாம் ஏன் நன்கு ஒத்துழைக்க வேண்டும்?
12. தேவராஜ்ய ஏற்பாட்டில் பெண்களை யெகோவா எப்படி பயன்படுத்துகிறார்?
13. (அ) தங்கள் ஸ்தானத்தை எப்படி கருதும்படி மூப்பர்களுக்கு பைபிள் அறிவுறுத்துகிறது? (ஆ) எந்த நல்வாய்ப்பில் நாம் அனைவரும் பங்குகொள்ளலாம்?
14. கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களைப் பயன்படுத்தி பாராவின் முடிவிலுள்ள கேள்விகளுக்கு விடை அளியுங்கள்.
15. (அ) யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிடமுள்ள நம் மனப்பான்மையால் நாம் எதை மெய்ப்பித்துக் காட்டுகிறோம்? (ஆ) சாத்தானை பொய்யனாக நிரூபித்து யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவதற்கு நமக்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் இருக்கின்றன?
[பக்கம் 133-ன் படங்கள்]
கிறிஸ்துவின் தலைமையில் செயல்படும் தமது காணக்கூடிய அமைப்பின் வாயிலாக யெகோவா நம்மை வழிநடத்துகிறார்