வீட்டில் தேவபக்தியை கடைப்பிடியுங்கள்
அதிகாரம் பதினேழு
வீட்டில் தேவபக்தியை கடைப்பிடியுங்கள்
திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் யெகோவாவே. அவரது வார்த்தை, இல்லற வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. அதைப் பின்பற்றியதால் அநேகருடைய வாழ்க்கை ஒளிவீசியிருக்கிறது. மணம் முடிக்காமலே சேர்ந்து வாழ்ந்து வந்த சிலர் தங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய தூண்டப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இன்னும் சிலரோ தங்கள் மணத்துணைக்கு துரோகம் செய்வதை நிறுத்தியிருக்கின்றனர். தங்கள் மனைவி மக்களை கொடுமைப்படுத்தி வந்த முரடர்கள் இப்போது அவர்களை தயவாகவும் மென்மையாகவும் நடத்த கற்றிருக்கிறார்கள்.
2நிலையான மணவாழ்க்கையை நாம் எப்படி கருதுகிறோம், குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு நாம் என்ன செய்கிறோம், குடும்பத்தாரிடம் எப்படி நடந்து கொள்கிறோம் போன்ற பல காரியங்கள் கிறிஸ்தவ இல்லற வாழ்வில் உட்பட்டுள்ளன. (எபேசியர் 5:33–6:4) குடும்ப வாழ்க்கையின் பேரில் பைபிள் சொல்லும் ஆலோசனையை அறிந்திருந்தால் மட்டும் போதாது; அதைக் கடைப்பிடிப்பது முக்கியம். கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள தவறியதன் நிமித்தம் இயேசுவால் கண்டனம் செய்யப்பட்டவர்களைப் போன்று நாம் இருக்க விரும்ப மாட்டோம். கடவுள் பக்தி இருந்தாலே போதுமானது என அவர்கள் பொய்யாக விளக்கம் கூறினர். (மத்தேயு 15:4-9) தேவபக்தியின் வேஷத்தை போட்டுக்கொண்டு நம்முடைய சொந்த குடும்பத்தில் அதைக் கடைப்பிடிக்காமல் இருக்க நாம் விரும்புவதில்லை. மாறாக, “மிகுந்த ஆதாயம்” தருகிற உண்மையான தேவபக்தியை வெளிக்காட்டவே நாம் விரும்புகிறோம்.—1 தீமோத்தேயு 5:4; 6:6; 2 தீமோத்தேயு 3:5.
மண வாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கும்?
3இப்போது திருமண பந்தங்கள் முறிவடைவதற்கு அளவே இல்லை. பல வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தம்பதியினர் சிலர், விவாகரத்து செய்துகொண்டு மற்றொருவரை மணம் செய்ய தீர்மானிக்கின்றனர். மணம் முடித்த கொஞ்ச காலத்திற்குள்ளேயே பிரிந்துவிட்ட தம்பதியினரைப் பற்றி கேள்விப்படுவதும் இப்போது மிக சகஜம். மற்றவர்கள் எப்படி நடந்தாலும், நாம் யெகோவாவுக்குப் பிரியமாய் நடக்க வேண்டும். ஆகவே நிலையான மண வாழ்க்கையைப் பற்றி கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்ள பின்வரும் கேள்விகளையும் வசனங்களையும் கலந்தாலோசிக்கலாம்.
ஓர் ஆணும் பெண்ணும் மண வாழ்க்கையில் இணைகையில் அவர்கள் எவ்வளவு காலம் சேர்ந்து வாழும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள்? (மாற்கு 10:6-9; ரோமர் 7:2, 3)
எந்த ஒரே காரணத்திற்காக விவாகரத்து செய்து மறுமணம் செய்வதை கடவுள் அனுமதிக்கிறார்? (மத்தேயு 5:31, 32; 19:3-9)
தம்முடைய வார்த்தை அங்கீகரிக்காத விவாகரத்துக்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? (மல்கியா 2:13-16)
மண வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிரிந்துபோதலை ஒரு வழி என பைபிள் ஆதரிக்கிறதா? (1 கொரிந்தியர் 7:10-13)
எந்தச் சூழ்நிலைகளில் பிரிந்துபோதல் அனுமதிக்கப்படுகிறது? (சங்கீதம் 11:5; லூக்கா 4:8; 1 தீமோத்தேயு 5:8)
4சிலருடைய மணவாழ்வு வெற்றிகரமாக, நீடித்து நிலைத்திருக்கிறது. ஏன்? மணம் முடிக்கும் இருவரும் பக்குவம் அடையும் வரையில் பொறுத்திருப்பது முக்கியமானது; அதேசமயத்தில் விருப்பங்களை சங்கீதம் 119:97, 104; 2 தீமோத்தேயு 3:16, 17) காரியங்கள் சரிவர நடக்கவில்லை என்றால் பிரிந்துவிடலாம் அல்லது விவாகரத்து செய்துவிடலாம் என்ற எண்ணம் இப்படிப்பட்டவருக்கு ஏற்படாது. தன் கடமைகளிலிருந்து விலகிவிடுவதற்கு துணையின் குறைகளை ஒரு சாக்காக பயன்படுத்த மாட்டார். மாறாக, பிரச்சினைகளை தைரியமாக சந்தித்து அவற்றிற்கு நடைமுறையான தீர்வுகளை கண்டுபிடிப்பார்.
பகிர்ந்து கொள்கிறவரும் காரியங்களை ஒளிவு மறைவில்லாமல் கலந்து பேசுகிறவருமான ஒரு துணையைக் கண்டுபிடிப்பதும்கூட முக்கியம். ஆனாலும், யெகோவாவை நேசிக்கிற, பிரச்சினைகளை கையாளுவதற்கு அடிப்படையாக விளங்கும் அவருடைய வார்த்தைக்கு மரியாதை காண்பிக்கிற மணத்துணையை தேர்ந்தெடுப்பது மிக மிக முக்கியம். (5கஷ்டத்தை எதிர்ப்படுகையில் நாம் யெகோவாவின் வழிகளை விட்டுவிடுவோம் என சாத்தான் வாதிடுகிறான். (யோபு 2:4, 5; நீதிமொழிகள் 27:11) ஆனால், அவிசுவாசியான மணத் துணையின் எதிர்ப்பை அனுபவித்திருக்கிற பெரும்பான்மையான யெகோவாவின் சாட்சிகள் தங்கள் திருமண உறுதிமொழிகளை உதறித்தள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்கும் அவருடைய கற்பனைகளுக்கும் உண்மைப் பற்றுறுதியோடு இருக்கிறார்கள். (மத்தேயு 5:37) பல வருடங்களாகவும்கூட துணையின் எதிர்ப்பை சகித்து வந்த சிலர், இறுதியில் அத்துணையுடன் சேர்ந்து யெகோவாவை சேவிக்கும் சந்தோஷத்தை அனுபவித்துள்ளனர். (1 பேதுரு 3:1, 2) மாற்றத்திற்கான எந்த அறிகுறியையும் காட்டாத துணையை உடைய கிறிஸ்தவர்கள் அல்லது யெகோவாவை சேவிப்பதன் காரணமாக தங்கள் துணையால் கைவிடப்பட்ட கிறிஸ்தவர்கள், குடும்பத்தில் தேவபக்தியை காட்டுவதால் தாங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள்.—சங்கீதம் 55:22; 145:16.
ஒவ்வொருவரும் தன் பங்கை செய்தல்
6மணவாழ்க்கை வெற்றி சிறக்க, ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் 1 கொரிந்தியர் 11:3-ல் நாம் வாசிக்கிறோம்.
மட்டும் போதாது. தலைமைத்துவத்தைப் பற்றிய யெகோவாவின் ஏற்பாட்டுக்கு மரியாதை காண்பிப்பது கணவன், மனைவி ஆகிய இருவரது பங்கிலும் அவசியம். இது குடும்பத்தில் நல்லொழுங்கையும் பாதுகாப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும்”7அந்த வசனத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனித்தீர்களா? ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார்; அவர்கள் அவருக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும். கணவன் தலைமை வகிக்கையில் இயேசுவின் பண்புகளை வெளிக்காட்ட வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கிறிஸ்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறார், சபையின்மீது ஆழ்ந்த அன்பை காட்டுகிறார், அதைப் பேணி பராமரிக்கிறார். (1 தீமோத்தேயு 3:15) அவர் ‘தம்மையும் அதற்காக ஒப்புக்கொடுத்தார்.’ இயேசு பெருமைக்காரரோ கரிசனையில்லாதவரோ அல்ல, ஆனால் ‘சாந்தமும் மனத்தாழ்மையுமானவர்.’ அவருடைய தலைமை வகிப்புக்குக் கீழ்ப்படிகிறவர்கள் ‘தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை கண்டடைகிறார்கள்.’ ஒரு கணவன் குடும்பத்தை இவ்வாறு நடத்தும்போது, தான் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருப்பதை காட்டுகிறார். அப்போது ஒரு கிறிஸ்தவ மனைவியும் தன் கணவனின் தலைமை வகிப்புக்குக் கீழ்ப்படிந்து அவரோடு ஒத்துழைப்பதை பயனுள்ளதாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் காண வேண்டும்.—எபேசியர் 5:25-33; மத்தேயு 11:28, 29; நீதிமொழிகள் 31:10, 28, 29.
8இருந்தாலும், குடும்பத்தில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். குடும்பத்திலுள்ள யாரேனும் ஒருவர் பைபிள் நியமங்களை கடைப்பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, மற்றவர்களால் ஆதிக்கம் செய்யப்படும் உணர்வு அடிமனதில் ஓரளவு மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே பணிந்து கேட்டுக்கொள்வதாலும் அன்பாக நடந்துகொள்வதாலும் என்ன பயன் என எபேசியர் 4:31) ஆனால் குடும்பத்தில் சிலருக்கு இப்படி கத்தி கூச்சல் போடுவதைத் தவிர வேறெதுவுமே தெரியாதபோது என்ன செய்ய வேண்டும்? இயேசு தம்மை பயமுறுத்தியவர்களையும் இகழ்ந்தவர்களையும் பின்பற்றவில்லை, மாறாக அவர் தம் தகப்பனை சார்ந்திருந்தார். (1 பேதுரு 2:22, 23) ஆகவே வீட்டில் கடினமான சூழ்நிலைகள் எழும்புகையில், உலகப்பிரகாரமான வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபிப்பதன் மூலம் தேவபக்தியைக் காட்டுங்கள்.—நீதிமொழிகள் 3:5-7.
தோன்றலாம். ‘கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம்’ போன்ற குணங்களை விட்டொழிக்கும்படி பைபிள் சொல்வதை நாம் அறிவோம். (9மாற்றங்கள் எப்போதுமே உடனுக்குடன் நிகழ்வதில்லை; ஆனால் பைபிளின் ஆலோசனைகளைப் பொறுமையாகவும் ஊக்கமாகவும் கடைப்பிடிக்கையில் கைமேல் பலன் கிடைக்கிறது. சபையை கிறிஸ்து நடத்தும் விதத்தை கணவர்கள் மதித்துணர்ந்தபோது, தங்கள் மணவாழ்வும் மேம்பட ஆரம்பித்ததை கண்டிருக்கிறார்கள். சபை பரிபூரண மனிதரால் ஆனதல்ல. ஆனாலும், இயேசு அதை நேசிக்கிறார், அதற்கு 1 பேதுரு 2:21) நல்ல குடும்பத் தலைவர்களாகவும் மணவாழ்க்கை செழிப்பதற்கு அன்புடன் உதவுகிறவர்களாகவும் இருப்பதற்கு அவருடைய முன்மாதிரி அநேக கிறிஸ்தவ கணவர்களை உந்துவித்துள்ளது. குற்றங்குறை கண்டுபிடிப்பதையோ பேசாமல் இருப்பதையோவிட இது மிகச் சிறந்த பலன்களைத் தருகிறது.
சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார், அதன் முன்னேற்றத்திற்கு வேத வசனங்களை பயன்படுத்துகிறார். அந்த சபைக்காக தம் உயிரையும் கொடுத்தார். (10கணவன் தன் குடும்பத்தாரின் உணர்ச்சிப்பூர்வ தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்தாமலோ குடும்ப பைபிள் படிப்புக்கும் இதர நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்ய முன்வராமலோ இருந்தால் அப்போது என்ன செய்வது? அல்லது மனைவி ஒத்துழைக்காமலும் தெய்வீக கீழ்ப்படிதலை காட்டாமலும் போனால் என்ன செய்வது? குடும்பமாக ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பிரச்சினைகளை கலந்தாலோசிக்கையில் சிலர் நல்ல பலன்களை அடைகிறார்கள். (ஆதியாகமம் 21:10-12; நீதிமொழிகள் 15:22) நினைத்த பலன் கிடைக்காமல் போனாலும், கடவுளுடைய ஆவியின் கனியை வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் காண்பிப்பதன் மூலமும் குடும்பத்தாரிடம் அன்பான அக்கறையை காட்டுவதன் மூலமும் குடும்பத்தின் மேம்பாட்டிற்கு நாம் ஒவ்வொருவரும் பங்களிக்கலாம். (கலாத்தியர் 5:22, 23) மற்றவர்கள் செய்யட்டும் என காத்திருப்பதற்கு பதிலாக நம் பங்கை செய்கையில் முன்னேற்றத்தைக் காண்போம்; இவ்வாறு தேவபக்தியை கடைப்பிடிப்பதைக் காட்டலாம்.—கொலோசெயர் 3:18-21.
பதில்களை எங்கே காண்பது
11குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக ஆலோசனையைப் பெற பல தகவல் மூலங்கள் இருக்கின்றன. ஆனால் கடவுளுடைய வார்த்தையில் மிகச் சிறந்த அறிவுரைகள் பொதிந்துள்ளன என்பதை நாம் அறிவோம்; அவற்றை கடைப்பிடிப்பதற்கு கடவுள் தமது காணக்கூடிய சங்கீதம் 119:129, 130; மீகா 4:2.
அமைப்பின் வாயிலாக நமக்கு உதவி செய்வதற்கு நன்றியுடன் இருக்கிறோம். அந்த உதவியிலிருந்து நீங்கள் முழுமையாக நன்மையடைகிறீர்களா?—12சபை கூட்டங்களுக்கு வருவதோடு, குடும்ப பைபிள் படிப்பிற்கும் தவறாமல் நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்களா? அவ்வாறு செய்கிற குடும்பங்கள், ஒன்றுபட்டு வணங்குவதில் முன்னேற முடியும். கடவுளுடைய வார்த்தையை தங்கள் சூழ்நிலைகளுக்கு பொருத்துகையில் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை செழித்தோங்குகிறது.—உபாகமம் 11:18-21.
13குடும்ப விஷயங்களில் உங்களுக்கு கேள்விகள் இருக்கலாம். உதாரணத்திற்கு, கருத்தடை பற்றி என்ன? கருச்சிதைவு செய்துகொள்வது சரியா? ஒரு பிள்ளை ஆவிக்குரிய காரியங்களிடம் அக்கறை காட்டாதபோது வணக்க காரியங்களில் குடும்பமாக ஈடுபடுகையில் எந்தளவுக்கு அவனை அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்? யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட பிரசுரங்களில் இப்படிப்பட்ட பல கேள்விகள் கலந்தாராயப்பட்டிருக்கின்றன. பதில்களை கண்டுபிடிப்பதற்கு இன்டெக்ஸ் உட்பட பைபிள் படிப்புக்கு உதவும் ஏதுக்களை பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். இன்டெக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களிடம் இல்லையெனில் ராஜ்ய மன்றத்திலுள்ள நூலகத்தில் பாருங்கள். அல்லது உங்களுடைய கம்ப்யூட்டரில் இப்பிரசுரங்களை எடுத்துப் பார்க்கலாம். உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலை முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடத்தில் கேட்கலாம். ஆனால் எப்போதுமே உங்கள் கேள்விகளுக்கு அவர்கள் ஆம் அல்லது இல்லை என்ற நேரடியான பதிலை தரும்படி எதிர்பார்க்காதீர்கள். தனிப்பட்டவர்களாகவோ தம்பதியினராகவோ பெரும்பாலும் தீர்மானம் எடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் தேவபக்தியை கடைப்பிடிப்பதை காட்டும் தீர்மானங்களை எடுங்கள்.—மறுபார்வை
• யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியைக் காட்டுவது, மணத்துணைக்கு உண்மையுள்ளவராக இருப்பதில் என்ன பங்கு வகிக்கிறது?
• குடும்பப் பிரச்சினைகளால் அழுத்தத்தை எதிர்ப்படுகையில் கடவுளுக்குப் பிரியமானதைச் செய்ய எது நமக்கு உதவும்?
• குடும்பத்திலுள்ள மற்றவர்கள் ஒத்துழைக்காவிட்டாலும் நிலைமையை மேம்படுத்த நாம் என்ன செய்யலாம்?
[கேள்விகள்]
1. கடவுளுடைய வார்த்தையை பின்பற்றியது எப்படி இல்லறம் சிறக்க வழி செய்திருக்கிறது?
2. கிறிஸ்தவ இல்லற வாழ்வில் எவை உட்பட்டுள்ளன?
3. (அ) அநேகருடைய மண வாழ்க்கைக்கு என்ன நேரிடுகிறது, நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்? (ஆ) இந்தப் பாராவுக்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பைபிளை பயன்படுத்தி விடையளியுங்கள்.
4. சில திருமணங்கள் ஏன் நிலைத்திருக்கின்றன?
5. (அ) யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியை காட்டுவது மணவாழ்க்கையில் என்ன பங்கு வகிக்கிறது? (ஆ) எதிர்ப்பு வந்தாலும் யெகோவாவின் தராதரங்களைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மைகளைப் பெறலாம்?
6. மணவாழ்க்கை வெற்றி சிறக்க என்ன ஏற்பாட்டுக்கு மரியாதை காட்ட வேண்டும்?
7. குடும்பத்தில் தலைமை வகிப்பை எப்படி செயல்படுத்த வேண்டும்?
8. (அ) சில வீடுகளில் கிறிஸ்தவ நியமங்களைக் கடைப்பிடிப்பது விரும்பிய பலனை தராததாக தோன்றுவதற்கு காரணம் என்ன? (ஆ) அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?
9. குற்றங்குறை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக எதைச் செய்ய அநேக கிறிஸ்தவ கணவர்கள் கற்றிருக்கின்றனர்?
10. (அ) கணவனோ மனைவியோ—கிறிஸ்தவரென சொல்லிக்கொள்பவராக இருந்தாலும்—என்ன வழிகளில் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்க்கையை சிரமமாக்கலாம்? (ஆ) நிலைமையை மேம்படுத்துவதற்கு என்ன செய்யலாம்?
11, 12. குடும்ப வாழ்க்கை வெற்றி சிறக்க யெகோவா எதை நமக்கு உதவியாக அளித்திருக்கிறார்?
13. (அ) குடும்ப விஷயங்களில் நமக்கு கேள்விகள் இருந்தால், பெரும்பாலும் தேவையான உதவியை எங்கு கண்டடையலாம்? (ஆ) நாம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்திலும் எது வெளிப்படையாக தெரிய வேண்டும்?
[பக்கம் 155-ன் படம்]
கணவன் தலைமை வகிக்கையில் இயேசுவின் பண்புகளை வெளிக்காட்ட வேண்டும்
[பக்கம் 157-ன் படம்]
தவறாமல் குடும்ப பைபிள் படிப்பு நடத்துவது குடும்பத்தை ஒன்றுபடுத்துகிறது