Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

யெகோவாவையும் பைபிளையும் நேசிக்கிறவர்களே:

“சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:32) பைபிள் சத்தியத்தை நீங்கள் முதன்முதலில் தெரிந்துகொண்டபோது எப்படி உணர்ந்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். பொய்யும் புரட்டும் நிறைந்த இந்த உலகத்தில் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதைத் தெரிந்துகொண்டபோது சந்தோஷப்பட்டிருப்பீர்கள்.—2 தீமோத்தேயு 3:1.

சத்தியத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். மக்களை நாம் நேசிப்பதால் சத்தியத்தை அவர்களிடம் சொல்ல விரும்புகிறோம். ஆனால், கடவுளைச் சேவிப்பதற்கு அது மட்டும் போதாது. யெகோவாவின் நியமங்களின்படி வாழ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஏனென்றால், அவற்றின்மீது நாம் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கிறோம். நாம் கடவுளை நேசிக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு முக்கிய வழியைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “நான் என் தகப்பனுடைய கட்டளைகளின்படி நடந்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே, நீங்களும் என் கட்டளைகளின்படி நடந்தால் என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்.”—யோவான் 15:10.

இயேசு தன் தகப்பனை உண்மையிலேயே நேசிக்கிறார், தன் தகப்பன் சொல்கிறபடி எல்லாவற்றையும் செய்கிறார். இயேசுவைப் போல நாமும் நடந்தால், யெகோவா நம்மை நேசிப்பார்; நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருப்போம். “இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 13:17.

பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட சத்தியத்தின்படி வாழவும் கடவுளுடைய நண்பராக ஆகவும் இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். கடவுள்மீதுள்ள உங்கள் அன்பு அதிகரிக்க வேண்டுமென்றும் முடிவில்லாத வாழ்வை மனதில் வைத்து ‘கடவுளுடைய அன்பில்’ நீங்கள் நிலைத்திருக்க வேண்டுமென்றும் ஜெபிக்கிறோம்.—யூதா 21.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு