Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்க்க நீங்கள் ஏங்குகிறீர்களா?

பகுதி 7

கடவுளுடைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள்​—⁠எல்லாவற்றையும் புதிதாக்குவது

கடவுளுடைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள்​—⁠எல்லாவற்றையும் புதிதாக்குவது

நன்றாகப் பழுத்திருக்கும் ஒரு ஆப்பிளை மரத்திலிருந்து நீங்கள் பறிக்கிறீர்கள். அதை முகர்ந்து பார்த்த பிறகு, கூடையில் இருக்கிற மற்ற ஆப்பிள்களோடு அதையும் வைக்கிறீர்கள். மணிக்கணக்காக வேலை செய்திருந்தாலும் நீங்கள் சோர்வாக உணர்வதில்லை, இன்னும் கொஞ்சம் நேரம் வேலை செய்ய ஆசைப்படுகிறீர்கள். உங்களுடைய அம்மா, பக்கத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து ஆப்பிள்களைப் பறிக்கிறார். குடும்பத்திலுள்ள மற்றவர்களும் நண்பர்களும் அம்மாவோடு சேர்ந்து சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டே அந்த வேலையைச் செய்கிறார்கள். நீங்கள் குட்டிப் பிள்ளையாக இருந்தபோது உங்கள் அம்மா பார்ப்பதற்கு எப்படி இளமையாக இருந்தாரோ அப்படியே இப்போதும் இருக்கிறார். பழைய உலகத்தில், அம்மா வயதான கோலத்தில் இருந்தது, வியாதியால் எலும்பும்தோலுமாக ஆனது, மரணப்படுக்கையில் அவருடைய கையை நீங்கள் பிடித்திருந்தது, கல்லறையில் வைக்கப்பட்டபோது கதறி அழுதது எல்லாம் உங்கள் நினைவிலிருந்து மறைந்துவிட்டது. மற்றவர்களைப் போல இப்போது அம்மாவும் உயிரோடு வந்துவிட்டார்! மறுபடியும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்!

அப்படிப்பட்ட காலம் வரும் என்று நமக்குத் தெரியும். ஏனென்றால், கடவுள் கொடுத்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும். அர்மகெதோன் போருக்கு முன் நிறைவேறப்போகும் கடவுளுடைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் சிலவற்றைப் பற்றியும், அதன் பிறகு நிறைவேறப்போகிற சிலிர்க்கவைக்கும் வாக்குறுதிகள் சிலவற்றைப் பற்றியும் இந்த அதிகாரத்தில் பார்ப்போம். இந்த முழு பூமியையும் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்வதையும், எல்லாவற்றையும் அது புதிதாக்குவதையும் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

இந்தப் பகுதியில்

அதிகாரம் 21

கடவுளுடைய அரசாங்கம் எதிரிகளை ஒழித்துக்கட்டுகிறது

அர்மகெதோன் போருக்கு நீங்கள் இப்போதே தயாராகலாம்.

அதிகாரம் 22

கடவுளுடைய அரசாங்கம் அவருடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றுகிறது

யெகோவாவின் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறும் என்று நீங்கள் எப்படி உறுதியாக நம்பலாம்?