பிரசுரிப்போரிடமிருந்து
பிரசுரிப்போரிடமிருந்து
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் கடவுளைத் தேடி அலைந்திருக்கிறான்; இதற்காக பற்பல பாதைகளை வகுத்திருக்கிறான். விளைவு? மலைக்க வைக்கும் அளவுக்கு பல்வகை மதங்கள் உலகெங்கும் தோன்றியிருக்கின்றன; எண்ணற்ற வழிபாட்டு முறைகளை கொண்ட இந்து மதம், ஒரே தெய்வம் என்ற கொள்கையுடைய யூத மதம், இஸ்லாம் மதம், கிறிஸ்தவமண்டலம், கிழக்கத்திய தத்துவங்கள் கொண்ட ஷின்டோ மதம், தாவோ மதம், புத்த மதம், கன்பூசிய மதம் என எத்தனை எத்தனை மதங்கள்! அதுமட்டுமா? ஆன்மவாதம், மாயமந்திரம், ஆவியுலகத் தொடர்பு, பில்லிசூனியம் ஆகியவற்றையும் மனிதன் முயன்று பார்த்திருக்கிறான். கடவுளைத் தேடுவதற்காக எடுக்கப்பட்ட இத்தகைய முயற்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றனவா? நீங்கள் எம்மதத்தவராக இருந்தாலும் சரி, மெய்க் கடவுளைத் தேடும் சுவாரஸ்யமான இந்த முயற்சியில் கலந்துகொள்ளும்படி இப்புத்தகத்தின் வாயிலாக உங்களை அழைக்கிறோம்.—பிரசுரிப்போர்
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பைபிள் மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற மத நூல்களின் குறியீடுகள்:
AS- அமெரிக்கன் ஸ்டான்டர்டு வர்ஷன், அமெரிக்கன் ரிவிஷன் கமிட்டி (1901)
AYA- த ஹோலி குர்ஆன், அப்துல்லா யூஸுஃப் அலி மொழிபெயர்ப்பு (1934)
BG- பகவத் கீதை, சுருக்க பதிப்பு, ஏ. சி. பக்திவேதாந்தா சுவாமி பிரபுபேதா மொழிபெயர்ப்பு (1976)
Int- த கிங்டம் இன்டர்லீனியர் டிரான்ஸ்லேஷன் ஆஃப் த கிரீக் ஸ்கிரிப்சர்ஸ் (1985)
JP- த ஹோலி ஸ்கிரிப்சர்ஸ், த ஜூயிஷ் பப்ளிகேஷன் சொஸைட்டி ஆஃப் அமெரிக்கா (1955)
MMP- த குளோரியஸ் குர்ஆன், முகமது எம். பிக்தால் மொழிபெயர்ப்பு (1977)
NW- பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக் குறிப்புகளுடன் (1984)
Ta- தானக், த ஹோலி ஸ்கிரிப்சர்ஸ், த நியூ ஜூயிஷ் பப்ளிகேஷன் சொஸைட்டி மொழிபெயர்ப்பு (1985)
எந்த மொழிபெயர்ப்பு என குறிப்பிடப்படாத பைபிள் மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.