பகுதி 1—கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?
பகுதி 1—கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?
உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு சமயம், ‘நம்மைப்பற்றி உண்மையில் அக்கறையுள்ளவராக இருக்கும் ஒரு கடவுள் இருப்பாரேயானால், அவர் ஏன் இத்தனை துன்பத்தை அனுமதிக்கிறார்?’ என்பதாக நீங்கள் கேட்டிருக்கக்கூடும். துன்பத்தை நாமனைவருமே அனுபவித்தோ அவ்விதமாக அனுபவித்திருக்கும் எவரோ ஒருவரை அறிந்தோ இருக்கிறோம்.
2ஆம், சரித்திரம் முழுவதிலும் மக்கள் போர், கொடுமை, குற்றச்செயல், அநீதி, வறுமை, வியாதி மற்றும் அன்பானவர்களின் மரணத்திலிருந்து வேதனையையும் கடுந்துயரத்தையும் அனுபவித்து வந்திருக்கிறார்கள். நம்முடைய 20-ம் நூற்றாண்டில் மாத்திரமே, போர்கள் பத்து கோடிக்கும் மேலான ஆட்களின் உயிர்களைப் போக்கியிருக்கிறது. கோடிக்கணக்கான மற்றவர்கள் காயமுற்று அல்லது வீடுகளையும் உடைமைகளையும் இழந்துவிட்டிருக்கிறார்கள். மிகுதியான மனத்துயரமும், கண்ணீரும், எண்ணிலடங்கா ஆட்களின் பங்கில் நம்பிக்கையற்ற உணர்வும் ஏற்பட காரணமாயிருக்கும் எத்தனையோ பயங்கரமான காரியங்கள் நம்முடைய காலத்தில் சம்பவித்திருக்கின்றன.
3ஒருசிலர் மனக்கசப்படைந்து கடவுள் ஒருவர் இருப்பாரேயானால், அவர் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இல்லை என்பதாக நினைக்கிறார்கள். அல்லது ஒருவேளை கடவுள் இல்லை என்பதாகவும்கூட அவர்கள் நினைக்கலாம். உதாரணமாக, முதல் உலகப் போரில் நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினரின் மரணத்துக்குக் காரணமாயிருந்த இனக் கலவரத் துன்புறுத்தலில் துன்பமனுபவித்த ஒரு மனிதன், “எங்களுக்குத் தேவைப்பட்ட போது கடவுள் எங்கே இருந்தார்?” என்று கேட்டார். நாசிக்கள் இரண்டாம் உலகப் போரில் லட்சக்கணக்கில் செய்த படுகொலையில் தப்பிய மற்றொருவர், அவர் பார்த்த துன்பத்தால் அவ்வளவு துயரமடைந்து சொன்னார்: “என் இருதயத்தை நீங்கள் நக்கினால் அது உங்களை நச்சுப்படுத்திடும்.”
4இவ்விதமாக, ஒரு நல்ல கடவுள் ஏன் கெட்ட காரியங்கள் சம்பவிப்பதை அனுமதிக்கப்போகிறார் என்பதை அநேக ஆட்கள் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா அல்லது அவர் இருக்கிறாரா என்பதையே அவர்கள் சந்தேகிக்கிறார்கள். அவர்களில் அநேகர் துன்பம் எப்போதுமே மனிதவாழ்வின் ஒரு பாகமாக இருக்கும் என்பதாக நினைக்கிறார்கள்.
மற்றபடி குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர, தமிழ் யூனியன் பெயர்ப்பு பைபிள் பயன்படுத்தப்படுகிறது. NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்
[பக்கம் 2, 3-ன் படம்]
[கேள்விகள்]
1, 2. கடவுளைப்பற்றி மக்கள் என்ன கேள்வி கேட்கிறார்கள், ஏன்?
3, 4. துன்பத்தைக் கடவுள் அனுமதித்திருப்பதைப் பற்றி அநேகர் எவ்விதாக உணருகிறார்கள்?