Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 11—புதிய உலகத்தின் அஸ்திவாரம் இப்பொழுதே உருவாக்கப்பட்டுவருகிறது

பகுதி 11—புதிய உலகத்தின் அஸ்திவாரம் இப்பொழுதே உருவாக்கப்பட்டுவருகிறது

பகுதி 11புதிய உலகத்தின் அஸ்திவாரம் இப்பொழுதே உருவாக்கப்பட்டுவருகிறது

சாத்தானிய பழைய உலகம் மேலும் மேலுமாக சீரழிந்துக்கொண்டுவருகையில், கடவுளுடைய புதிய உலகத்தின் அஸ்திவாரம் இப்பொழுதே உருவாக்கப்பட்டுவரும் உண்மைதானே மேலும் அதிக மகத்தானதாக இருக்கிறது. வெகு சீக்கிரத்தில் இன்றைய பிரிவுற்றிருக்கும் உலகத்தை மாற்றீடு செய்யப்போகும் புதிய ஒரு பூமிக்குரிய சமுதாயத்தினுடைய அஸ்திவாரமாக நம்முடைய கண்களுக்கு முன்பாகவே, கடவுள் சகல ஜாதிகளிலிருந்தும் மக்களைக் கூட்டிச் சேர்த்து வருகிறார். பைபிளில் 2 பேதுரு 3:13-ல் இந்தப் புதிய சமுதாயம் “புதிய பூமி” என்றழைக்கப்படுகிறது.

2பைபிள் தீர்க்கதரிசனம் மேலுமாகச் சொல்கிறது: “கடைசிநாட்களில் [நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் காலம்] . . . திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், [அவருடைய உண்மை வணக்கம்], . . . போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.”—ஏசாயா 2:2-3.

3‘கடவுளுடைய வழிகளுக்கும் பாதைகளுக்கும்’ தங்களைக் கீழ்ப்படுத்துகிறவர்கள் மத்தியில் அந்தத் தீர்க்கதரிசனம் இப்பொழுது நிறைவேறிவருகிறது. பைபிளின் கடைசி புத்தகம் சமாதானத்தை நேசிக்கும் மக்களின் இந்தச் சர்வதேச சமுதாயத்தை, “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமான” ஜனங்கள், கடவுளை ஐக்கியமாக சேவிக்கும் மெய்யான உலகளாவிய சகோதரத்துவம் என்று பேசுகிறது. பைபிள் மேலுமாகச் சொல்கிறது: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்.” அதாவது, அவர்கள் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; மத்தேயு 24:3.

உண்மையான சர்வதேச சகோதரத்துவம்

4இலட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய அறிவுரைகளுக்கும் வழிகளுக்கும் இசைவாக வாழ உண்மையுடன் முயற்சிசெய்கிறார்கள். நித்திய ஜீவனைப் பற்றிய அவர்களுடைய நம்பிக்கை கடவுளுடைய புதிய உலகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கிறது. கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிதலுடன் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதன் மூலம், இப்பொழுதும் புதிய உலகத்திலும் அவருடைய ஆட்சி முறைக்குக் கீழ்ப்பட்டிருக்க மனமுள்ளவர்களாயிருப்பதை அவருக்குக் காண்பிக்கிறார்கள். எல்லா இடங்களிலும், தங்கள் தேசம் அல்லது இனம் எதுவாக இருப்பினும் கடவுள் அவருடைய வார்த்தையில் விவரித்திருக்கும் ஒரே தராதரங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் உண்மையான சர்வதேச சகோதரத்துவமாக கடவுள் உண்டுபண்ணும் ஒரு புதிய உலக சமுதாயமாக இருக்கிறார்கள்.—ஏசாயா 54:13; மத்தேயு 22:37, 38; யோவான் 15:9, 14.

5யெகோவாவின் சாட்சிகள் அவர்கள் ஈடிணையற்ற ஓர் உலகளாவிய சகோதரத்துவமாக இருப்பதற்குரிய பாராட்டை எடுத்துக்கொள்வதில்லை. இது அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் மக்கள் மீது கடவுளுடைய வல்லமையான ஆவி செயல்படுவதன் விளைவே என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:29, 32; கலாத்தியர் 5:22, 23) இது கடவுளின் செயலாகும். இயேசு சொன்னதுபோல, “மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்.” (லூக்கா 18:27) ஆகவே நிலைத்திருக்கும் பிரபஞ்சத்தைக் கூடிய காரியமாக்கின கடவுளே, நிலைத்திருக்கும் புதிய உலக சமுதாயத்தையும்கூட கூடிய காரியமாக்குகிறவராய் இருக்கிறார்.

6இவ்விதமாக, இப்பொழுதே உருவாக்கப்பட்டுவரும் புதிய உலகத்திற்கான அஸ்திவாரத்தில் யெகோவா உண்டுபண்ணிக்கொண்டிருப்பவற்றில், ஏற்கெனவே புதிய உலகத்தில் கடவுளுடைய ஆளும் முறையை காணமுடியும். சாட்சிகளோடு அவர் செய்திருப்பது ஒரு கருத்தில், நவீன கால அற்புதமாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால் அவர் யெகோவாவின் சாட்சிகளை, உண்மையான உலகளாவிய ஒரு சகோதரத்துவமாக கட்டியமைத்திருக்கிறார். இது பிரிவினை உண்டாக்கும் தேசீய, இன அல்லது மத அக்கறைகளால் ஒருபோதும் முறிக்கப்பட முடியாததாகும். சாட்சிகள் எண்ணிக்கையில் லட்சக்கணக்கானோராயும் 200-க்கும் மேற்பட்ட தேசங்களில் வாழ்பவர்களாயும் இருக்கையில், முறிக்கப்பட முடியாத ஒரு பந்தத்தில் அவர்கள் ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறார்கள். எல்லா சரித்திரத்திலும் ஈடிணையற்றதாக இருக்கும் இந்த உலகளாவிய சகோதரத்துவம், நிச்சயமாகவே ஒரு நவீன கால அற்புதமாக—கடவுளுடைய செயலாக—இருக்கிறது.—ஏசாயா 43:10, 11, 21; அப்போஸ்தலர் 10:34, 35; கலாத்தியர் 3:28.

கடவுளுடைய மக்களை அடையாளங்கண்டுகொள்ளுதல்

7கடவுள் அவருடைய புதிய உலகத்தின் அஸ்திவாரமாக பயன்படுத்தும் மக்கள் யார் என்பது மேலும் எவ்விதமாக நிர்ணயிக்கப்பட முடியும்? சரி, யோவான் 13:34, 35-லுள்ள இயேசுவின் வார்த்தைகளை நிறைவேற்றுவது யார்? அவர் சொன்னார்: “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் வார்த்தைகளை விசுவாசித்து அவற்றின் பேரில் செயல்படுகிறார்கள். கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துகிறபடியே, அவர்கள் “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயி”ருக்கிறார்கள். (1 பேதுரு 4:8) மேலுமாக, அவர்கள், “பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் [தங்களில்] தரித்துக்கொள்”கிறார்கள். (கொலோசெயர் 3:14) ஆகவே உலகம் முழுவதிலும் அவர்களை ஒன்றாகச் சேர்த்து பிடிப்பில் வைத்திருக்கும் அந்தப் “பசைப்பொருள்” சகோதர அன்பே.

8மேலுமாக, 1 யோவான் 3:10-12 சொல்வதாவது: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்க வேண்டாம்.” இவ்விதமாக கடவுளுடைய மக்கள் வன்னடத்தையற்ற, உலகளாவிய சகோதரத்துவமாக இருக்கின்றனர்.

அடையாளங்காட்டும் மற்றொரு அம்சம்

9கடவுளுடைய ஊழியர்களை அடையாளம்காண மற்றொரு வழி இருக்கிறது. உலக முடிவைப் பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில், இயேசு இந்தக் காலப்பகுதியை கடைசி நாட்களென குறித்துக்காட்டும் அநேக தீர்க்கதரிசனங்களைப் பற்றிச்சொன்னார். (இந்தச் சிற்றேட்டில் பகுதி 9 பார்க்கவும்.) இந்தத் தீர்க்கதரிசனத்தின் ஓர் அடிப்படை அம்சம் மத்தேயு 24:14-லுள்ள அவருடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளது: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”

10அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிவருவதை நாம் பார்த்திருக்கிறோமா? ஆம். கடைசி நாட்கள் 1914-ல் ஆரம்பமானது முதற்கொண்டு, யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலுமாக இயேசு கட்டளையிட்ட வண்ணமாக, அதாவது, மக்களுடைய வீடுகளில், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கித்து வந்திருக்கிறார்கள். (மத்தேயு 10:7, 12; அப்போஸ்தலர் 20:20) இலட்சக்கணக்கான சாட்சிகள் புதிய உலகத்தைப் பற்றி அவர்களிடம் பேசுவதற்காக எல்லா தேசங்களிலுள்ள ஆட்களையும் சந்திக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கோடிக்கணக்கான பிரசுரங்களை அச்சடிப்பதையும் விநியோகிப்பதையும் உட்படுத்துவதன் காரணமாக, இந்தச் சிற்றேட்டை நீங்கள் பெற்றுக்கொள்வதற்கு இது வழிநடத்தியிருக்கிறது. உலகம் முழுவதிலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கும் வேறு எவரையாவது உங்களுக்குத் தெரியுமா? மேலும் மாற்கு 13:10, முடிவு வருவதற்கு முன்பாக இந்தப் பிரசங்க மற்றும் போதிக்கும் வேலை “முந்தி” செய்யப்படவேண்டும் என்று காண்பிக்கிறது.

இரண்டாவது பெரிய விவாதத்துக்குப் பதிலளித்தல்

11கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்பட்டிருப்பதன் மூலம், யெகோவாவின் சாட்சிகள் வேறொன்றையும் நிறைவேற்றுகிறார்கள். சோதனையின் கீழ் மனிதர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க முடியாது என்று சாத்தான் சொன்னபோது அவன் ஒரு பொய்யனாக இருந்தான் என்பதை அவர்கள் காண்பிக்கிறார்கள். இவ்விதமாக மனிதரின் உத்தமத்தை உட்படுத்தும் இரண்டாவது பெரிய விவாதத்துக்குப் பதிலளிக்கிறார்கள். (யோபு 2:1-5) எல்லாத் தேசங்களிலுமிருந்து வந்த லட்சக்கணக்கானோர் அடங்கிய ஒரு சமுதாயமாக இருப்பதால், சாட்சிகள், ஒரே ஒரு தொகுதியாக கடவுளுடைய ஆட்சிக்கு உண்மைத்தவறாமையை காண்பிக்கிறார்கள். அவர்கள் அபூரண மனிதர்களாக இருந்தபோதிலும் சாத்தானிய அழுத்தத்தின் மத்தியிலும், சர்வலோக அரசுரிமை விவாதத்தில் கடவுளுடைய பக்கத்துக்கு ஆதரவளிக்கிறார்கள்.

12இன்று, யெகோவாவின் சாட்சிகளின் இந்த லட்சக்கணக்கானோர் கடந்தக் காலங்களில் கடவுளுக்குத் தங்கள் உண்மைத்தவறாமையை காண்பித்திருக்கும் மற்ற சாட்சிகளின் நீண்ட வரிசையோடு தங்கள் அத்தாட்சிகளை கூட்டுகிறார்கள். அவர்களில் ஆபேல், நோவா, யோபு, ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, யாக்கோபு, தெபோராள், ரூத், தாவீது மற்றும் தானியேல் அவர்களில் ஒரு சிலராயிருந்தனர். (எபிரெயர், அதிகாரம் 11) பைபிள் சொல்கிறவிதமாகவே அவர்கள் ‘மேகம் போன்ற திரளான சாட்சி’களாக இருக்கிறார்கள். (எபிரெயர் 12:1) இவர்களும், இயேசுவும் அவருடைய சீஷர்களும் உட்பட மற்றவர்களும் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொண்டார்கள். மேலும் இயேசு தாமேயும் பரிபூரண உத்தமத்தைக் காத்துக்கொள்வதன் மூலம் மிகப்பெரிய முன்மாதிரியை அளித்தார்.

13மதத்தலைவர்களிடம் இயேசு சாத்தானைப் பற்றி சொன்னது உண்மை என்பதை இது நிரூபிக்கிறது: “தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், . . . நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.”—யோவான் 8:40, 44.

உங்கள் தெரிவு என்ன?

14யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச சமுதாயத்தில் கடவுள் இப்பொழுது உருவாக்கிவரும் புதிய உலகத்தின் அஸ்திவாரம் அதிகமதிகமாக பலமுள்ளதாகிவருகிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான ஆட்கள், திருத்தமான அறிவின் அடிப்படையில், தங்கள் தெரிவுசெய்யும் சுயாதீனத்தைக் கடவுளுடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ள பயன்படுத்திவருகிறார்கள். அவர்கள் புதிய உலக சமுதாயத்தின் ஒரு பாகமாகி, சர்வலோக பேரரசுரிமை விவாதத்தில் கடவுளுடைய பக்கத்துக்கு ஆதரவளித்து, சாத்தானைப் பொய்யனாக நிரூபிக்கிறார்கள்.

15கடவுளுடைய ஆட்சியை தெரிந்துகொள்வதன் மூலம், அவர்கள் கிறிஸ்து “செம்மறியாடுகளை” “வெள்ளாடுகளி”லிருந்து பிரிக்கையில் அவருடைய “வலது பக்கத்தில்” சேர்க்கப்படுவதற்கு தகுதிபெறுகிறார்கள். கடைசிநாட்களைப் பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில் இயேசு முன்னுரைத்தார்: “சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.” செம்மறியாடுகள் கிறிஸ்துவின் சகோதரர்களோடு கூட்டுறவுக் கொண்டும், ஆதரித்தும், கடவுளுடைய ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருக்கும் மனத்தாழ்மையுள்ள ஆட்களாக இருக்கிறார்கள். வெள்ளாடுகள் கிறிஸ்துவின் சகோதரர்களை நிராகரித்து கடவுளுடைய ஆட்சிக்கு ஆதரவுகாட்ட எதையும் செய்யாத பிடிவாதமுள்ள ஆட்களாக இருக்கிறார்கள். என்ன விளைவோடு? இயேசு சொன்னார்: “இவர்கள் [வெள்ளாடுகள்] நித்திய ஆக்கினையை அடையவும் நீதிமான்களோ [செம்மறியாடுகள்] நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.”—மத்தேயு 25:31-46.

16உண்மையிலேயே, கடவுள் நம்மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார்! வெகு சீக்கிரத்தில் அவர் மகிழ்ச்சிகரமான பூமிக்குரிய ஒரு பரதீஸை ஏற்பாடு செய்வார். அந்தப் பரதீஸில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? அப்படியானால், அவரைப் பற்றி கற்றறிந்து, நீங்கள் கற்றறிகின்றவற்றின் மீது செயல்படுவதன் மூலம் யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு உங்கள் போற்றுதலைக் காண்பியுங்கள். “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்.”—ஏசாயா 55:6, 7.

17வீணாக்குவதற்கு நேரமில்லை. இந்தப் பழைய ஒழுங்கின் முடிவு வெகு அருகாமையில் இருக்கிறது. கடவுளுடைய வார்த்தை புத்திமதி கூறுகிறது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. . . . உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:15-17.

18கடவுளுடைய மக்கள் புதிய உலகத்தில் நித்திய ஜீவனுக்காக பயிற்றுவிக்கப்பட்டுவருகிறார்கள். அவர்கள் ஒரு பரதீஸை உருவாக்கத் தேவைப்படும் ஆவிக்குரிய இன்னும் மற்ற தேர்ச்சித்திறமைகளை கற்றுவருகிறார்கள். கடவுளை அரசராக தெரிவுசெய்து இன்று பூமி முழுவதிலும் அவர் செய்யப்படும்படி செய்துவரும் உயிர்காக்கும் வேலையை ஆதரிக்குமாறு நாங்கள் உங்களைத் துரிதப்படுத்துகிறோம். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்து, உங்களைப் பற்றி உண்மையில் அக்கறையுள்ளவரும் துன்பத்துக்கு முடிவைக்கொண்டு வரப்போகிறவருமான கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். இவ்விதமாக நீங்களும்கூட புதிய உலகத்தின் அஸ்திவாரத்தின் ஒரு பாகமாக ஆகக்கூடும். அப்போது நீங்கள் கடவுளுடைய தயவை சம்பாதிக்கவும் அந்த மகத்தான புதிய உலகத்தில் என்றுமாக வாழவும் நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கலாம்.

[கேள்விகள்]

1, 2. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக நம்முடைய கண் முன்னாலேயே என்ன சம்பவித்துக்கொண்டிருக்கிறது?

3. () ஏசாயாவின் தீர்க்கதரிசனம் யார் மத்தியில் நிறைவேறி வருகிறது? (பிபைபிளின் கடைசி புத்தகம் இதன்பேரில் எவ்விதமாகக் குறிப்புசொல்கிறது?

4, 5. யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய சகோதரத்துவம் ஏன் கூடிய காரியமாயிருக்கிறது?

6. யெகோவாவின் சாட்சிகளுடைய சகோதரத்துவம் ஏன் ஒரு நவீன கால அற்புதம் என்றழைக்கப்படலாம்?

7. இயேசு தம்மை உண்மையாய் பின்பற்றுகிறவர்களை எவ்வாறு அடையாளங்காணலாம் என்று சொன்னார்?

8. கடவுளுடைய மக்களை 1 யோவான் 3:10-12 மேலும் எவ்விதமாக அடையாளங்காட்டுகிறது?

9, 10. (கடைசிநாட்களில் கடவுளுடைய ஊழியர்கள் என்ன வேலையினால் அடையாளங்கண்டுகொள்ளப்படுவர்? (பிமத்தேயு 24:14-ஐ யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறார்கள்?

11. கடவுளுடைய ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருப்பதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் வேறு எதை நிறைவேற்றுகிறார்கள்?

12. தங்கள் விசுவாசத்தின் மூலம் சாட்சிகள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?

13. சாத்தானைப் பற்றிய இயேசுவின் எந்த வார்த்தைகள் உண்மையாக நிரூபித்திருக்கிறது?

14. புதிய உலகத்தின் அஸ்திவாரத்துக்கு இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது?

15. என்ன பிரிக்கும் வேலையை இயேசு நம்முடைய நாளில் செய்து வருகிறார்?

16. வரவிருக்கும் பரதீஸில் நீங்கள் வாழ விரும்பினால், நீங்கள் என்ன செய்யவேண்டும்?

17. யாரை சேவிப்பது என்பதை தெரிந்துகொள்வதில் வீணாக்குவதற்கு ஏன் நேரமில்லை?

18. என்ன நடத்தைப்போக்கு கடவுளுடைய மகத்தான புதிய உலகத்தில் வாழ்வதை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்க உதவிசெய்யும்?

[பக்கம் 31-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகள் உண்மையான சர்வதேச சகோதரத்துவத்தைக் கொண்டிருக்கிறார்கள்

[பக்கம் 32-ன் படம்]

கடவுளுடைய புதிய உலகில் அஸ்திவாரம் இப்பொழுதே உருவாக்கப்பட்டு வருகிறது