Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 6—கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்

பகுதி 6—கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்

பகுதி 6கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்

என்ன தவறு நேர்ந்துவிட்டது? நம்முடைய முதல் பெற்றோருக்கு ஏதேன் பரதீஸில் கடவுள் கொடுத்த நேர்த்தியான ஆரம்பத்தைக் கெடுத்துப்போட என்ன சம்பவித்துவிட்டது? பரதீஸின் சமாதானத்துக்கும் ஒத்திசைவுக்கும் பதிலாக, ஏன் அக்கிரமமும் துன்பமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீங்காது இருந்துவந்திருக்கின்றன?

2ஆதாமும் ஏவாளும் தங்கள் தெரிவுசெய்யும் சுயாதீனத்தை தவறாகப் பயன்படுத்தியதே காரணமாகும். கடவுளிடமிருந்தும் அவருடைய சட்டங்களிடமிருந்தும் விலகியிருந்து செழித்திருக்கும்படியாக அவர்கள் சிருஷ்டிக்கப்படவில்லை என்பதை அவர்கள் மறந்துபோனார்கள். அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நினைத்து கடவுள் மீது சார்ந்தில்லாமல் இருக்க அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் கடவுள் நியமித்திருந்த தெரிவுசெய்யும் சுயாதீன வரம்புகளுக்கு வெளியே காலெடுத்துவைத்தார்கள்.—ஆதியாகமம், அதிகாரம் 3.

சர்வலோக அரசுரிமை விவாதம்

3கடவுள் ஏன் வெறுமனே ஆதாமையும் ஏவாளையும் அழித்துவிட்டு மற்றொரு மனித ஜோடியோடு மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவில்லை? ஏனென்றால் அவருடைய சர்வலோக அரசுரிமை, அதாவது ஆட்சிசெய்ய அவருக்கிருந்த மாற்றப்படமுடியாத உரிமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

4கேள்வியானது: யாருக்கு ஆட்சிசெய்ய உரிமை இருக்கிறது, யாருடைய ஆட்சி சரியானது? அவர் சர்வவல்லமையுள்ளவராகவும் எல்லா சிருஷ்டிப்புகளின் சிருஷ்டிகராகவும் இருப்பது, அவர்கள் மீது ஆட்சிசெய்ய கடவுளுக்கு உரிமையை அளிக்கிறது. அவர் சகல-ஞானமுமுள்ளவராக இருப்பதன் காரணமாக, அவருடைய ஆட்சியே எல்லா சிருஷ்டிகளுக்கும் மிகச்சிறந்ததாகும். ஆனால் கடவுளுடைய ஆட்சிக்கு இப்பொழுது சவால்விடப்பட்டிருக்கிறது. மேலுமாக, அவருடைய சிருஷ்டிப்பாகிய மனிதனில் ஏதாவது தவறு இருந்ததா? மனித உத்தமத்தன்மையின் கேள்வி எவ்வாறு உட்பட்டிருக்கிறது என்பதை நாம் பின்னால் ஆராய்வோம்.

5மனிதன் கடவுளை சார்ந்திராதவனாக ஆனது மூலம் மற்றொரு கேள்வி மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டது: கடவுளால் ஆட்சி செய்யப்படாவிட்டால், மனிதர்கள் மேம்பட்டுச் செயல்பட முடியுமா? சிருஷ்டிகர் நிச்சயமாகவே பதிலை அறிந்திருந்தார், ஆனால் மனிதர்கள் கண்டுபிடிப்பதற்கு ஒரு நிச்சயமான வழி, அவர்கள் விரும்பிய முழுமையான சுயாதீனத்தை அவர்களுக்கு அனுமதிப்பதாக இருந்தது. அவர்கள் தங்கள் சொந்த தெரிவுசெய்யும் சுயாதீனத்தில் அந்தப் போக்கை தெரிந்துகொண்டார்கள், ஆகவே கடவுள் அதை அனுமதித்தார்.

6முழுமையான சுயாதீனத்தோடு பரிசோதனைசெய்ய மனிதர்களுக்கு போதிய நேரத்தை அனுமதிப்பதன் மூலம், மனிதர்கள் கடவுளுடைய ஆட்சியின் கீழா அல்லது தங்களுடைய சொந்த முயற்சியிலா மேம்பட்டிருக்கிறார்கள் என்பதை எல்லா காலத்துக்குமாக கடவுள் நிலைநாட்டிடுவார். அனுமதிக்கப்படுகிற நேரம், மனிதர்கள் தங்களுடைய அரசியல், தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ சாதனைகளில் உச்சக்கட்டமாக கருதுவதை அடைவதற்கு போதிய அளவு நீண்டதாக இருக்கவேண்டும்.

7ஆகவே, கடவுள்மீது சார்ந்திராத மனித ஆட்சி வெற்றிபெறக்கூடுமா என்பதை எந்தச் சந்தேகத்திற்குமிடமின்றி காண்பிப்பதற்காக தெளிவாக நம்முடைய நாள் வரையாகவும் மனிதனை தடையில்லாமல் மனம்போன போக்கில் செல்ல அனுமதித்திருக்கிறார். இதன் காரணமாக மனிதன் தயவுக்கும் கொடுமைக்குமிடையே, அன்புக்கும் பகைமைக்குமிடையே, நீதிக்கும் அநீதிக்குமிடையே தெரிந்துகொள்ள முடிகிறவனாக இருந்திருக்கிறான். ஆனால் அவனுடைய தெரிவின் பின்விளைவுகளை அவன் எதிர்ப்படவும்கூட வேண்டியதாக இருந்திருக்கிறது: நன்மையும் சமாதானமும் அல்லது பொல்லாப்பும் துன்பமும்.

ஆவி சிருஷ்டிப்புகளின் கலகம்

8சிந்திக்க மற்றொரு காரியமும் இருக்கிறது. கடவுளுடைய சட்டத்துக்கு எதிராக கலகம் செய்தது நம்முடைய ஆதி பெற்றோர் மாத்திரமல்ல. ஆனால் அந்தச் சமயத்தில் வேறு யாரும் இருந்தனர்? ஆவி சிருஷ்டிப்புகள். மனிதர்களை கடவுள் சிருஷ்டிப்பதற்கு முன்பு பரலோகத்தில் வாழ்வதற்காக அவர் உயர்ந்த வகையான உயிர்களைப், பெரும் எண்ணிக்கையான தேவதூதர்களைச் சிருஷ்டித்தார். அவர்களும்கூட தெரிவுசெய்யும் சுயாதீனத்தோடும் கடவுளுடைய ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டிய தேவையோடும் சிருஷ்டிக்கப்பட்டனர்.—யோபு 38:7; சங்கீதம் 104:4; வெளிப்படுத்துதல் 5:11.

9கலகம் முதலாவதாக ஆவி மண்டலத்தில் தோன்றியது என்பதாக பைபிள் காண்பிக்கிறது. ஓர் ஆவி சிருஷ்டி முழுமையான சுயாதீனத்தை விரும்பினான். மனிதர்கள் தன்னை வணங்கவும்கூட வேண்டுமென்று அவன் விரும்பினான். (மத்தேயு 4:8, 9) இந்தக் கலகக்கார ஆவிதானே கடவுள் அவர்களுக்கு நன்மையான ஏதோவொன்றை கொடுக்க மறுப்பதாய் பொய்யாய் வாதாடி கலகம் செய்யும்படியாக ஆதாம் ஏவாள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு காரணமாக ஆனான். (ஆதியாகமம் 3:1-5) ஆகவே அவன் பிசாசு (பழிதூற்றுபவன்) மற்றும் சாத்தான் (எதிரி) என்று அழைக்கப்படுகிறான். பின்னால், அவன் மற்ற ஆவி சிருஷ்டிகளைக் கலகம் செய்யத் தூண்டினான். அவை பிசாசுகள் என்று அழைக்கப்படலாயின.—உபாகமம் 32:17; வெளிப்படுத்துதல் 12:9; 16:14.

10மனிதர்கள் கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்வதன் மூலம், சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் செல்வாக்குக்குத் தங்களையே கொடுத்துவிட்டனர். இதன் காரணமாகவே பைபிள் சாத்தானை, “அவிசுவாசிகளின் மனங்களை குருடாக்கியிருக்கும்,” ‘இந்த ஒழுங்குமுறையின் தேவன்,’ என்பதாக அழைக்கிறது. ஆகவே, கடவுளுடைய வார்த்தை “உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்பதாகச் சொல்கிறது. இயேசுதாமேயும் சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்பதாக அழைத்தார்.—2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19; யோவான் 12:31.

இரண்டு விவாதங்கள்

11சாத்தான் கடவுளுக்கு சவாலாக அமைந்த மற்றொரு விவாதத்தை எழுப்பினான். மெய்யாகவே மனிதர்களை சிருஷ்டித்த விதத்தில் அவர் தவறுசெய்துவிட்டார் என்றும் அழுத்தத்தின் கீழ் வைக்கப்படுகையில், எவருமே சரியானதைச் செய்ய விரும்பமாட்டார் என்றும் கடவுளைக் குற்றஞ்சாட்டினான். உண்மையில், சோதனையின்கீழ் அவர்கள் கடவுளைத் தூஷிக்கவும்கூட செய்வார்கள் என்று தெரிவித்தான். (யோபு 2:1-5) இவ்விதமாக சாத்தான் மனித சிருஷ்டிப்புகளின் உத்தமத்தின் பேரில் சந்தேகத்தை எழுப்பினான்.

12ஆகவே, இந்த விவாதமும் கடவுளுடைய அரசுரிமைப் பற்றிய விவாதமும் எவ்விதமாக தீர்க்கப்படும் என்பதை புத்திக்கூர்மையுள்ள எல்லா சிருஷ்டிப்புகளும் காண்பதற்காகப் போதிய காலத்தை கடவுள் அனுமதித்திருக்கிறார். (யாத்திராகமம் 9:16 ஒப்பிடவும்.) மனித வரலாற்றின் முடிவான அனுபவம் இந்த இரண்டு விவாதங்களைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தும்.

13முதலாவதாக, சர்வலோக அரசுரிமை, கடவுளுடைய ஆட்சியின் சரியான தன்மையைப் பற்றி காலம் எதை வெளிப்படுத்தும்? கடவுளைவிட மேம்பட்ட விதத்தில் மனிதர்கள் தங்களை ஆண்டுகொள்ள முடியுமா? கடவுளைத் தவிர, எந்த மனித ஆட்சி முறையும் போர், குற்றச்செயல் மற்றும் அநீதியிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியானதொரு உலகைக்கொண்டுவருமா? ஏதாகிலும் ஒன்று வறுமையை ஒழித்து அனைவருக்கும் செழுமையை அளிக்குமா? ஏதாகிலும் ஒன்று வியாதி, முதுமை மற்றும் மரணத்தை வென்றிடுமா? கடவுளுடைய ஆட்சி அவை அனைத்தையும் செய்வதற்கு வடிவமைக்கப்பட்டது.—ஆதியாகமம் 1:26-31.

14இரண்டாவது விவாதத்தைப் பற்றியதில், மனித சிருஷ்டிப்பின் தகுதி பற்றி காலம் எதை வெளிப்படுத்தும்? கடவுள் அவர் செய்தவிதமாக மனிதர்களைச் சிருஷ்டித்தது தவறாக இருந்ததா? சோதனையின் கீழ் அவர்களில் எவராவது சரியான காரியத்தை செய்வார்களா? சுயேச்சையான மனித ஆட்சிக்குப் பதிலாக தங்களுக்குக் கடவுளுடைய ஆட்சியே வேண்டும் என்பதை எந்த ஜனமாவது காண்பிக்குமா?

[கேள்விகள்]

1, 2. நம்முடைய முதல் பெற்றோர் கடவுள் அவர்களுக்குக் கொடுத்த நேர்த்தியான ஆரம்பத்தை எவ்விதமாக கெடுத்துப்போட்டார்கள்?

3-5 கடவுள் ஏன் வெறுமனே ஆதாமையும் ஏவாளையும் அழித்துவிட்டு மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவில்லை?

6, 7. கடவுள் ஏன் இத்தனை நீண்ட காலமாக மனிதருக்கு முழுமையான சுயாதீனத்தை அனுமதித்திருக்கிறார்?

8, 9. () ஆவி மண்டலத்தில் கலகம் எவ்வாறு தோன்றினது? (பிஆதாம் ஏவாளைத் தவிர வேறுயாரும் கலகம்செய்யும்படி சாத்தான் செல்வாக்கு செலுத்தினான்?

10. மனித மற்றும் ஆவி சிருஷ்டிப்புகளின் கலகத்திலிருந்து என்ன விளைவடைந்தது?

11. வேறு எந்த விவாதத்தைக் குறித்து சாத்தான் கடவுளுக்குச் சவால்விட்டான்?

12-14. சாத்தான் எழுப்பிய இரண்டு விவாதங்களைப் பற்றி காலம் எவ்விதமாக உண்மையை வெளிப்படுத்தும்?

[பக்கம் 13-ன் படம்]

மனிதர்கள் தங்கள் சாதனைகளின் உச்சக்கட்டத்துக்கு வருவதற்காக காலத்தை கடவுள் அனுமதித்திருக்கிறார்

[படத்திற்கான நன்றி]

Shuttle; Based on NASA photo