பகுதி 7—கலகத்தின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?
பகுதி 7—கலகத்தின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது?
ஆட்சி செய்ய கடவுளுடைய உரிமைப் பற்றிய விவாதத்தில், இந்த எல்லா நூற்றாண்டுகளிலும் கடவுளைச் சார்ந்திராத மனித ஆட்சியின் விளைவு என்னவாக இருந்திருக்கிறது? மனிதர்கள் கடவுளைக் காட்டிலும் மேம்பட்ட ஆட்சியாளர்களாக நிரூபித்திருக்கிறார்களா? மனிதனுக்கு மனிதனின் மனிதாபிமானமின்மையின் பதிவை வைத்து நாம் நிதானிப்போமானால், நிச்சயமாகவே இல்லை.
2நம்முடைய முதல் பெற்றோர் கடவுளின் ஆட்சியை நிராகரித்தபோது, பெருந்துன்பம் அதைத் தொடர்ந்து வந்தது. அவர்கள் தங்கள் மீதும் தங்களிலிருந்து வந்த எல்லா மனித குடும்பத்தின் மீதும் துன்பத்தை வருவித்துக்கொண்டார்கள். மேலும் அவர்கள் தங்களையேயன்றி வேறு எவரையும் குறைசொல்வதற்கு இருக்கவில்லை. கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; குற்றம் அவர்களுடையதே.”—உபாகமம் 32:5, NW.
3ஆதாம் ஏவாள் கடவுளுடைய ஏற்பாடுகளின் கீழிருந்து வெளியேறிவிடுவார்களேயானால் அவர்கள் படிப்படியாக மோசமாகி கடைசியில் மரித்துப்போவார்கள் என்ற கடவுளுடைய எச்சரிக்கை, சரியானது என்பதை வரலாறு காண்பித்திருக்கிறது. (ஆதியாகமம் 2:17; 3:19) அவர்கள் கடவுளுடைய ஆட்சியின் கீழிருந்து வெளியேறி காலப்போக்கில் அவர்கள் நிச்சயமாகவே படுமோசமாகி மரித்துப்போயினர்.
4அதற்குப்பின் அவர்களுடைய எல்லா சந்ததிக்கும் நேரிட்டது ரோமர் 5:12 விளக்கும் வண்ணமாகவே இருந்தது: “ஒரே மனுஷனாலே [ஆதாம், மனிதவர்க்கத்தின் குடும்பத் தலைவன்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது . . . மரணம் எல்லாருக்கும் வந்தது.” ஆகவே நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுடைய கண்காணிப்பு ஸ்தானத்துக்கு விரோதமாகக் கலகம் செய்தபோது, அவர்கள் குறைபாடுள்ள பாவிகளானார்கள். மரபுவழிப்பண்பியல் விதிக்கு இசைவாக, இதன் விளைவாக உண்டான அபூரணத்தையே அவர்களால் தங்களுடைய சந்ததிக்கு கடத்த முடிந்தது. அதன் காரணமாகவே நாம் அனைவரும் குறைபாடுள்ளவர்களாக, வியாதியும் மரணமும் ஏற்படும் சாத்தியமுள்ளவர்களாக பிறந்திருக்கிறோம்.
5அநேக நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. பேரரசுகள் வந்தும் போயுமிருக்கின்றன. எண்ணிப்பார்க்கக்கூடிய எல்லா வகையான அரசாங்கங்களும் முயற்சிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும், மீண்டும் மீண்டும் மனிதகுடும்பத்துக்கு பயங்கரமான சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. ஆறாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, மனிதர்கள் பூமி முழுவதிலும் சமாதானத்தையும் நீதியையும் செழுமையையும் நிலைநாட்டும் அளவுக்கு முன்னேறி, இப்பொழுதிற்குள், தயவு, இரக்கம் மற்றும் ஒற்றுமையின் உடன்பாடான மதிப்பீடுகளில் முழுதேர்ச்சியடைந்திருப்பார்கள் என்று ஒருவர் நினைக்கக்கூடும்.
6இருப்பினும், மெய்ம்மை முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. எக்காலத்திலும் உருவாக்கப்பட்டுள்ள எந்த வகையான மனித அரசாங்கமும் அனைவருக்கும் மெய்யான சமாதானத்தையும் செழுமையையும் கொண்டுவரவில்லை. இந்த 20-ம் நூற்றாண்டில் மாத்திரமே, படுகொலையின் போது லட்சக்கணக்கானோரின் திட்டமிட்டுசெய்யப்பட்ட கொலையையும், போர்களில் 10 கோடிக்கும் அதிகமானவர்களின் படுகொலையையும் நாம் பார்த்திருக்கிறோம். நம்முடைய நாளில் சகிப்புத்தன்மையில்லாமை மற்றும் அரசியல் கருத்துவேறுபாடுகளின் காரணமாக எண்ணிலடங்கா ஆட்கள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள், காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இன்றுள்ள நிலைமை
7கூடுதலாக, இன்று மனிதகுடும்பத்தின் அனைத்தையும் உள்ளிட்ட நிலைமையை சிந்தித்துப்பாருங்கள். குற்றச்செயலும் வன்முறையும் மிகுதியாய் இருக்கின்றன. போதை வஸ்துக்கள் துர்ப்பிரயோகம் பெருவாரியாக பரவியுள்ளது. பாலுறவில் கடத்தப்படும் நோய்கள் மிகப்பரவலாக இருக்கின்றன. நடுக்கந்தரும் எய்ட்ஸ் நோய் லட்சக்கணக்கான ஆட்களைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான ஆட்கள் ஆண்டுதோறும் பசியினால் அல்லது நோயினால் மரிக்கையில், வெகு சில ஆட்கள் அதிகமாக செல்வமுடையவர்களாக இருக்கின்றனர். மனிதர்கள் பூமியை மாசுப்படுத்தி சூறையாடுகிறார்கள். குடும்ப வாழ்க்கையும் ஒழுக்க மதிப்பீடுகளும் எல்லா இடங்களிலும் சிதைந்துவிட்டிருக்கின்றன. உண்மையில், வாழ்க்கை இன்று ‘இந்த உலகத்தின் தேவனாகிய’ சாத்தானின் இழிவான ஆட்சியைப் பிரதிபலிக்கிறது. அவன் எஜமானாக இருக்கும் அந்த உலகம் அன்பற்றதாக, இரக்கமற்றதாக, முற்றிலும் சீரழிந்ததாக உள்ளது.—2 கொரிந்தியர் 4:4.
8மனிதர்கள் தங்கள் அறிவியல் மற்றும் பொருள் சம்பந்தமான முன்னேற்றத்தின் உச்சநிலைக்கு வர போதிய காலத்தைக் கடவுள் அனுமதித்திருக்கிறார். ஆனால் வில்லுக்கும் அம்புக்கும் பதிலாக, இயந்திர துப்பாக்கிகளும், பீரங்கிகளும், வெடிகுண்டு விமானங்களும், அணுசக்தி ஏவுகணைகளும் இருக்கையில் அது உண்மையான முன்னேற்றமா? மனிதர் விண்வெளிக்குள் பிரயாணம் பண்ணமுடிகையில், ஆனால் பூமியின் மீது ஒன்றாக சமாதானமாக வாழமுடியாதபோது அது முன்னேற்றமா? மக்கள் தெருக்களில் இரவுநேரத்தில் அல்லது சில இடங்களில் பகல்நேரத்திலும்கூட நடந்துசெல்ல பயப்படுகையில் அது முன்னேற்றமா?
காலம் என்னத்தை காண்பித்திருக்கிறது
9பல நூற்றாண்டுகால சோதனை காண்பித்திருப்பது என்னவென்றால், கடவுளுடைய ஆட்சியிலிருந்து விலகி மனிதர்கள் தங்கள் சொந்த நடைகளை வெற்றிகரமாக நடத்திக்கொள்வது அவர்களுக்கு சாத்தியமற்றது என்பதையே. சாப்பிடாமலும், குடிக்காமலும், சுவாசிக்காமலும் உயிர்வாழ்வது எப்படி சாத்தியமற்றதோ அப்படியே அவ்விதமாகச் செய்வது அவர்களுக்கு இருக்கிறது. அத்தாட்சி தெளிவாக இருக்கிறது: நாம் உணவு, நீர் மற்றும் காற்றின் மீது கட்டாயமாக சார்ந்திருக்கும்படி சிருஷ்டிக்கப்பட்டிருப்பது போலவே நம்முடைய சிருஷ்டிகரின் வழிநடத்துதலின்மீது சார்ந்திருக்கும்படி நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்.
10அக்கிரமத்தை அனுமதிப்பதன் மூலம், கடவுள் தெரிவுசெய்யும் சுயாதீனத்தை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் வருத்தமான விளைவுகளை எல்லா காலத்துக்கும் முடிவாக காண்பித்திருக்கிறார். தெரிவுசெய்யும் சுயாதீனம் அப்பேர்ப்பட்ட ஒரு விலைமதிப்புள்ள பரிசாக இருப்பதால், அதை மனிதர்களிடமிருந்து எடுத்துவிடுவதற்குப் பதிலாக அதைத் துர்ப்பிரயோகம் செய்வது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை அவர்கள் காணும்படிக்கு கடவுள் அனுமதித்திருக்கிறார். கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு சொல்லுகையில் அது உண்மையையே பேசுகிறது: “மனுஷடைய வழி அவனாலே ஆகிறதல்ல. தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” அது இவ்வாறு சொல்வதும்கூட உண்மையாகவே உள்ளது: “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.”—எரேமியா 10:23; பிரசங்கி 8:9.
11ஆறாயிரம் ஆண்டுகள் மனித ஆட்சியை கடவுள் அனுமதித்திருப்பது, மனிதனால் துன்பத்தை ஒழித்திட இயலாது என்பதை வலிமையுடன் காட்டுகிறது. எந்த ஒரு சமயத்திலும் அவன் அவ்விதமாக செய்தது கிடையாது. உதாரணமாக, இஸ்ரவேலின் சாலொமோன் ராஜா அவனுடைய நாளில், அவனுடைய எல்லா ஞானம், செல்வம் மற்றும் வல்லமையோடும்கூட மனித ஆட்சியிலிருந்து விளைந்த ஆழ்ந்த துயரத்தை நேராக்கக்கூடாதவனாக இருந்தான். (பிரசங்கி 4:1-3) அதேவிதமாகவே, நம்முடைய நாளில், உலகத் தலைவர்கள் நவீனமான தொழில்நுட்ப முன்னேற்றங்களோடும்கூட துன்பத்தை நீக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். இன்னும் மோசமாக, கடவுளுடைய ஆட்சியின் மீது சார்ந்திராத மனிதர்கள் துன்பத்தை நீக்குவதற்குப் பதிலாக அதை அதிகரித்தேவிட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு காண்பித்திருக்கிறது.
கடவுளுடைய நீண்ட-தொலை நோக்கு
12கடவுள் துன்பத்தை அனுமதித்திருப்பது நமக்கு வேதனையளிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால், முடிவில் வரப்போகும் நல்ல விளைவுகளை அறிந்தவராய் அவர் நீண்ட-தொலை நோக்கை எடுத்திருக்கிறார். கடவுளுடைய நோக்கு ஒரு சில வருடங்களோ அல்லது ஒரு சில ஆயிர வருடங்களோ அல்ல ஆனால் லட்சக்கணக்கான ஆண்டுகள் எல்லா நித்திய காலத்துக்குமாக சிருஷ்டிகளுக்கு பிரயோஜனமாயிருக்கும்.
13எதிர்காலத்தில் எந்தச் சமயத்திலாவது காரியங்களை கடவுள் செய்யும் முறையைக் குறித்து சந்தேகமெழுப்புவதற்கு எவராவது தெரிவுசெய்யும் சுயாதீனத்தை தவறாகப் பயன்படுத்தும் ஒரு நிலை எப்போதாவது ஏற்படுமானால், அவருடைய கருத்துக்களை நிரூபிக்க முயற்சிசெய்வதற்கு அவருக்குக் காலமளிக்க வேண்டிய அவசியமிராது. கலகக்காரர்களுக்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளை அனுமதித்திருப்பதன் காரணமாக, சர்வலோகத்தில் எந்த இடத்திலும், நித்திய காலம் முழுவதிலுமாக பொருத்தக்கூடிய
சட்டப்படியான ஒரு முன்நிகழ்ச்சியை கடவுள் நிலைநிறுத்தியிருக்கிறார்.14இந்தக் காலத்தில், யெகோவா அக்கிரமத்தையும் துன்பத்தையும் அனுமதித்திருப்பதன் காரணமாக அவரோடு இசைவாக இல்லாத எதுவுமே செழிக்க முடியாது என்பது போதிய அளவில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டிருக்கும். மனிதரின் அல்லது ஆவி சிருஷ்டிகளின் தன்னிச்சையான எந்தத் திட்டமும் நிலையான நன்மைகளை கொண்டுவரமுடியாது என்பது சந்தேகமேதுமின்றி காண்பிக்கப்பட்டிருக்கும். ஆகவே எந்தக் கலகக்காரரையும் விரைவாக நசுக்கிவிடுவதில் கடவுள் அப்போது முழுவதும் நியாயமுள்ளவராக இருப்பார். “துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.”—சங்கீதம் 145:20; ரோமர் 3:4.
[கேள்விகள்]
1-3. யெகோவா சரியாயிருப்பதை காலம் எவ்வாறு நிரூபித்திருக்கிறது?
4. நாம் அனைவருமே ஏன் அபூரணராக, வியாதியும் மரணமும் ஏற்படும் சாத்தியமுள்ளவர்களாக பிறந்திருக்கிறோம்?
5, 6. உண்மையான சமாதானத்தையும் செழுமையையும் கொண்டுவர மனிதரின் முயற்சிகள் பற்றி வரலாறு என்ன காண்பித்திருக்கிறது?
7. இன்று மனிதகுடும்பத்தின் நிலை எவ்வாறு வருணிக்கப்படலாம்?
8. மனிதவர்க்கத்தின் சாதனைகளை மெய்யான முன்னேற்றம் என்று நாம் ஏன் அழைக்கமுடியாது?
9, 10. (எ) கடந்துபோன நூற்றாண்டுகளின் காலம் எதைத் தெளிவாக காண்பித்திருக்கிறது? (பி) தெரிவுசெய்யும் சுயாதீனத்தை கடவுள் ஏன் எடுத்துக்கொண்டுவிட மாட்டார்?
11. எந்த வகையான மனித ஆட்சியாவது துன்பத்தை நீக்கியிருக்கிறதா?
12-14. கடவுள் துன்பத்தை அனுமதித்திருப்பதன் விளைவாக என்ன நீண்ட-தொலை நன்மைகள் வந்திருக்கின்றன?
[பக்கம் 15-ன் படம்]
நம்முடைய முதல்பெற்றோர் கடவுள் மீது சார்ந்திராதிருக்க தெரிந்துகொண்ட பின்னர், அவர்கள் இறுதியில் வயோதிபராகி, மரித்துப்போயினர்
[பக்கம் 16-ன் படங்கள்]
கடவுளைச் சார்ந்திராத மனித ஆட்சி துயரம் நிறைந்ததாக நிரூபித்திருக்கிறது
[படத்திற்கான நன்றி]
U.S. Coast Guard photo