Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்தச் சிற்றேட்டை எப்படி பயன்படுத்துவது

இந்தச் சிற்றேட்டை எப்படி பயன்படுத்துவது

இந்தச் சிற்றேட்டை எப்படி பயன்படுத்துவது

இந்தச் சிற்றேடு ஒரு பைபிள் படிப்பு திட்டத்திற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும்? பின்வரும் திட்டத்தைப் பின்பற்றும்படி நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்: ஒவ்வொரு பாடத்தின் தொடக்கத்திலும், கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கேள்விக்குப் பக்கத்திலும், அதற்கான பதில்கள் இருக்கும் பாராக்களின் எண்கள் அடைப்புக் குறிகளில் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். முதலில் கேள்விகளை வாசித்துவிடுங்கள். அவற்றைக் குறித்து யோசித்துப் பாருங்கள். பின்னர் ஒவ்வொரு பாராவையும் வாசித்து, உங்கள் பைபிளிலிருந்து வசனங்களை எடுத்துப் பாருங்கள். ஒரு பாடத்தை முடித்ததும், அந்தக் கேள்விகளை மீண்டும் பார்த்து, ஒவ்வொரு கேள்விக்கும் பைபிள் கொடுக்கும் பதிலை நினைவுபடுத்திப் பார்க்க முயலுங்கள். முழு சிற்றேட்டையும் முடித்தவுடன், மீண்டும் அந்தக் கேள்விகள் அனைத்தையும் மறுபார்வை செய்யுங்கள்.