Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு கிறிஸ்து யார்?

பாடம் 3

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு ஏன் கடவுளுடைய ‘முதற்பேறான’ குமாரன் என்றழைக்கப்படுகிறார்? (1)

அவர் ஏன் “வார்த்தை” என்றழைக்கப்படுகிறார்? (1)

இயேசு ஏன் ஒரு மனிதராக பூமிக்கு வந்தார்? (2-4)

அவர் ஏன் அற்புதங்களைச் செய்தார்? (5)

சமீபத்திய எதிர்காலத்தில் இயேசு என்ன செய்வார்? (6)

1. இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு, ஓர் ஆவி ஆளாக பரலோகத்தில் வாழ்ந்தார். அவர் கடவுளின் முதல் படைப்பாக இருந்தார்; அதனால் அவர் கடவுளுடைய ‘முதற்பேறான’ குமாரன் என்றழைக்கப்படுகிறார். (கொலோசெயர் 1:15; வெளிப்படுத்துதல் 3:14) கடவுள்தாமே படைத்த ஒரே குமாரன் இயேசுவே. மனிதராக வருவதற்கு முன்னான காலத்தில் இயேசுவை யெகோவா வானத்திலும் பூமியிலுமுள்ள மற்ற எல்லாவற்றையும் படைப்பதில் தமது ‘கைதேர்ந்த வேலையாளாக’ பயன்படுத்தினார். (நீதிமொழிகள் 8:22-31, NW; கொலோசெயர் 1:16, 17) கடவுள் அவரைத் தமது பிரதான சார்பு பேச்சாளராகவும் பயன்படுத்தினார். அதன் காரணமாகவே “வார்த்தை” என இயேசு அழைக்கப்படுகிறார்.—யோவான் 1:1-3; வெளிப்படுத்துதல் 19:13.

2. கடவுள் தம்முடைய குமாரனின் உயிரை மரியாளின் கருவிற்குள் மாற்றுவதன்மூலம் அவரை பூமிக்கு அனுப்பினார். ஆகவே இயேசுவுக்கு ஒரு மனித தந்தை இருக்கவில்லை. அதனால்தான் அவர் எவ்வித பாவத்தையும் அபூரணத்தையும் சுதந்தரிக்கவில்லை. கடவுள், இயேசுவை மூன்று காரணங்களுக்காக பூமிக்கு அனுப்பினார்: (1கடவுளைப் பற்றிய சத்தியத்தை நமக்குப் போதிப்பதற்காக (யோவான் 18:37), (2முழுமையான உத்தமத்தைக் காத்துக்கொள்வதன்மூலம் நாம் பின்பற்றத்தக்க ஒரு மாதிரியை அளிப்பதற்காக (1 பேதுரு 2:21), மற்றும் (3பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுவிக்க தமது உயிரைப் பலியாகச் செலுத்துவதற்காகவுமே. இது ஏன் தேவைப்பட்டது?—மத்தேயு 20:28.

3. கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாததன்மூலம், முதல் மனிதனாகிய ஆதாம், “பாவம்” என்று பைபிள் அழைப்பதைச் செய்துவிட்டான். ஆகவே கடவுள் அவனுக்கு மரண தண்டனை விதித்தார். (ஆதியாகமம் 3:17-19) கடவுளுடைய தராதரங்களுக்கு இசைந்து செல்பவனாக அவன் இனிமேலும் இருக்கவில்லை; ஆகையால் அவன் இனியும் பரிபூரணமாக இருக்கவில்லை. அவன் மெதுவாக வயதாகி மரணமடைந்தான். ஆதாம் தன் பிள்ளைகள் எல்லாருக்கும் பாவத்தைக் கடத்தினான். அதனால்தான் நாமும் வயதாகிறோம், நோய்வாய்ப்படுகிறோம், மரணமடைகிறோம். மனிதவர்க்கம் எவ்வாறு இரட்சிக்கப்பட முடியும்?—ரோமர் 3:23; 5:12.

4. ஆதாமைப் போலவே இயேசு ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். என்றாலும், ஆதாமைப் போலில்லாமல், மிகப் பெரிய சோதனையின் கீழும்கூட இயேசு, கடவுளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். ஆகவே அவர், ஆதாமின் பாவத்திற்கு கிரயமாகத் தம்முடைய பரிபூரண மனித உயிரை பலிசெலுத்த முடிந்தது. இதைத்தான் பைபிள் ‘மீட்கும்பொருள்’ என்பதாகக் குறிப்பிடுகிறது. இதன் மூலமாக ஆதாமின் பிள்ளைகள் மரணத்திற்கென்று தீர்க்கப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட முடியும். இயேசுவில் தங்கள் விசுவாசத்தை வைக்கிற அனைவரும், தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெற முடியும்.—1 தீமோத்தேயு 2:5, 6; யோவான் 3:16; ரோமர் 5:18, 19.

5. இயேசு பூமியில் இருந்தபோது, நோயுற்றோரைக் குணப்படுத்தினார், பசியுள்ளவர்களுக்கு உணவளித்தார், புயல்களையும் அமைதிப்படுத்தினார். மரணமடைந்தவர்களையும்கூட எழுப்பினார். அவர் ஏன் அற்புதங்களைச் செய்தார்? (1துன்பப்படுகிற மக்களைப் பார்த்து அவர் மனதுருகி, அவர்களுக்கு உதவ விரும்பினார். (2அவர் கடவுளுடைய குமாரன் என்பதை அவருடைய அற்புதங்கள் நிரூபித்துக் காட்டின. (3பூமியின்மீது அரசராக ஆளும்போது, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்காக அவர் என்ன செய்வார் என்று அவை காண்பித்தன.—மத்தேயு 14:14; மாற்கு 2:10-12; யோவான் 5:28, 29.

6. இயேசு மரணமடைந்து, ஓர் ஆவி சிருஷ்டியாக கடவுளால் உயிர்த்தெழுப்பப்பட்டு, பரலோகத்திற்குத் திரும்பினார். (1 பேதுரு 3:18) அப்போது முதல், கடவுள் அவரை ஓர் அரசராக்கியிருக்கிறார். சீக்கிரத்தில் இயேசு, இந்தப் பூமியிலிருந்து எல்லா துன்மார்க்கத்தையும் துன்பத்தையும் நீக்குவார்.—சங்கீதம் 37:9-11; நீதிமொழிகள் 2:21, 22.

[பக்கம் 7-ன் படம்]

இயேசுவின் ஊழியம் போதித்தல், அற்புதங்களைச் செய்தல், நமக்காகத் தம் உயிரையும்கூட அளித்தல் ஆகியவற்றை உட்படுத்தியது