Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்குச் சேவை செய்வதற்கான உங்கள் தீர்மானம்

கடவுளுக்குச் சேவை செய்வதற்கான உங்கள் தீர்மானம்

பாடம் 16

கடவுளுக்குச் சேவை செய்வதற்கான உங்கள் தீர்மானம்

கடவுளுடைய ஒரு நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (1, 2)

கடவுளுக்கு உங்கள் ஒப்புக்கொடுத்தலை எப்படி செய்வீர்கள்? (1)

நீங்கள் எப்போது முழுக்காட்டப்பட வேண்டும்? (2)

கடவுளுக்கு உண்மையாய் இருப்பதற்கான பலத்தை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? (3)

1. கடவுளுடைய நண்பராக ஆக வேண்டுமானால், நீங்கள் பைபிள் சத்தியத்தைப் பற்றிய நல்ல அறிவைப் பெற்று (1 தீமோத்தேயு 2:3, 4), நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிற காரியங்களில் விசுவாசம் வைத்து (எபிரெயர் 11:6), உங்கள் பாவங்களைக் குறித்து மனம்வருந்தி (அப்போஸ்தலர் 17:30, 31), உங்கள் வாழ்க்கை போக்கை மாற்றியமைக்க வேண்டும். (அப்போஸ்தலர் 3:19) அவற்றைச் செய்தபின், கடவுளுக்கான உங்களுடைய அன்பு, உங்களை அவருக்காக ஒப்புக்கொடுக்கும்படியாக உங்களைத் தூண்டுவிக்க வேண்டும். அவருடைய சித்தத்தைச் செய்வதற்காக உங்களை அவருக்குக் கொடுக்கிறீர்கள் என்று ஒரு தனிப்பட்ட, சொந்த ஜெபத்தில் அவரிடம் நீங்கள் சொல்வதை இது அர்த்தப்படுத்துகிறது.—மத்தேயு 16:24; 22:37.

2. கடவுளிடம் உங்கள் ஒப்புக்கொடுத்தலை நீங்கள் செய்த பிறகு, நீங்கள் முழுக்காட்டப்பட வேண்டும். (மத்தேயு 28:19, 20) முழுக்காட்டுதல், நீங்கள் உங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறீர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்ளச் செய்கிறது. ஆகவே கடவுளுக்குச் சேவை செய்ய தீர்மானம் எடுப்பதற்குப் போதுமான வயதுள்ளவர்களுக்கு மட்டும் உரியதே முழுக்காட்டுதல். ஒரு நபர் முழுக்காட்டுதலைப் பெறும்சமயத்தில், அவருடைய முழு உடலும் அந்தக் கணநேரத்திற்கு தண்ணீரின் அடியில் அமிழ்த்தப்பட்டிருக்க வேண்டும். aமாற்கு 1:9, 10; அப்போஸ்தலர் 8:36.

3. நீங்கள் ஓர் ஒப்புக்கொடுத்தலைச் செய்த பிறகு, உங்கள் வாக்குறுதிக்கு இசைவாக வாழ வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பார். (சங்கீதம் 50:14; பிரசங்கி 5:4, 5) நீங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து உங்களை நிறுத்தும்படி பிசாசு முயற்சிப்பான். (1 பேதுரு 5:8) ஆனால் ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி செல்லுங்கள். (பிலிப்பியர் 4:6, 7) ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையைப் படியுங்கள். (சங்கீதம் 1:1-3) சபையுடன் நெருங்கியவர்களாய் நிலைத்திருங்கள். (எபிரெயர் 13:17) இவை அனைத்தையும் செய்வதன் மூலம், கடவுளுக்கு உண்மையாய் நிலைத்திருப்பதற்கான பலத்தை நீங்கள் பெறுவீர்கள். இவ்வாறாக நித்திய காலத்திற்கும், கடவுள் உங்களிடமிருந்து தேவைப்படுத்துகிற காரியங்களை நீங்கள் செய்யலாம்!

[அடிக்குறிப்புகள்]

a முழுக்காட்டுதலுக்குத் தயாராவதற்காக நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு, அல்லது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட அதுபோன்ற ஒரு புத்தகத்தைப் படிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.