Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய சித்தத்தைச் செய்ய மற்றவர்களுக்கு உதவி செய்தல்

கடவுளுடைய சித்தத்தைச் செய்ய மற்றவர்களுக்கு உதவி செய்தல்

பாடம் 15

கடவுளுடைய சித்தத்தைச் செய்ய மற்றவர்களுக்கு உதவி செய்தல்

நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி ஏன் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்? (1)

நீங்கள் யாருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளலாம்? (2)

உங்களுடைய நடத்தை மற்றவர்கள்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கலாம்? (2)

நீங்கள் எப்போது சபையுடன் சேர்ந்து பிரசங்கிக்கலாம்? (3)

1. இப்போது நீங்கள் பைபிளிலிருந்து அநேக நல்ல காரியங்களைக் கற்றிருக்கிறீர்கள். ஒரு கிறிஸ்தவ ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கு இந்த அறிவு உங்களை வழிநடத்த வேண்டும். (எபேசியர் 4:22-24) நித்திய ஜீவனைப் பெறுவதற்கு அப்படிப்பட்ட அறிவு உங்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. (யோவான் 17:3) என்றபோதிலும், மற்றவர்களும் இரட்சிக்கப்படுவதற்கு ஏதுவாக, அவர்களும் நற்செய்தியைக் கேட்பது அவசியம். எல்லா உண்மை கிறிஸ்தவர்களும் மற்றவர்களுக்குச் சாட்சி பகர வேண்டும். அது கடவுளுடைய கட்டளையாக இருக்கிறது.—ரோமர் 10:10; 1 கொரிந்தியர் 9:16; 1 தீமோத்தேயு 4:16.

2. நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிற நல்ல காரியங்களை உங்களுக்கு அருகிலுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் நீங்கள் தொடங்கலாம். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பள்ளி சகாக்கள், உடன் வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் சொல்லுங்கள். அவ்வாறு நீங்கள் செய்கையில், தயவாகவும் பொறுமையாகவும் இருங்கள். (2 தீமோத்தேயு 2:24, 25) மக்கள் பெரும்பாலும் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதைவிட அவருடைய நடத்தையையே பார்க்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லுகிற செய்தியை அவர்கள் கேட்கும்படியாக, உங்கள் நல்ல நடத்தை அவர்களை ஈர்க்கக்கூடும்.—மத்தேயு 5:16; 1 பேதுரு 3:1, 2, 16.

3. காலப்போக்கில், யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையுடன் சேர்ந்து பிரசங்கிக்கத் தொடங்குவதற்கு நீங்கள் தகுதி பெறக்கூடும். உங்களுடைய முன்னேற்றத்தில் இது ஒரு முக்கிய படியாக இருக்கிறது. (மத்தேயு 24:14) வேறு யாராவது ஒருவர் யெகோவாவின் ஊழியராகி, நித்திய ஜீவனை பெறுவதற்கு உங்களால் உதவ முடிந்தால் அது என்னே ஓர் சந்தோஷமாக இருக்கும்!—1 தெசலோனிக்கேயர் 2:19, 20.