Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளைப் பிரியப்படுத்துகிற குடும்ப வாழ்க்கை

கடவுளைப் பிரியப்படுத்துகிற குடும்ப வாழ்க்கை

பாடம் 8

கடவுளைப் பிரியப்படுத்துகிற குடும்ப வாழ்க்கை

குடும்பத்தில் கணவனுடைய ஸ்தானம் என்ன? (1)

ஒரு கணவன் தன் மனைவியை எப்படி நடத்த வேண்டும்? (2)

ஒரு தகப்பனுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன? (3)

குடும்பத்தில் மனைவியின் பாகம் என்ன? (4)

பெற்றோரிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறார்? (5)

பிரிந்து வாழ்வதைப் பற்றியும் மணவிலக்கைப் பற்றியும் பைபிளின் நோக்கு என்ன? (6, 7)

1. கணவன் குடும்பத்துக்கு தலைவனாய் இருக்கிறான் என்று பைபிள் சொல்லுகிறது. (1 கொரிந்தியர் 11:3) ஒரு கணவனுக்கு ஒரு மனைவி மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் சட்டப்படி சரியாக திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 3:2; தீத்து 3:1, 2.

2. ஒரு கணவன் தன்னில்தான் அன்புகூருவதுபோல தன் மனைவியிடம் அன்புகூர வேண்டும். இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களை நடத்துகிறபடியே அவன் அவளை நடத்த வேண்டும். (எபேசியர் 5:25, 28, 29) அவன் ஒருபோதும் தன் மனைவியை அடிக்கவோ எவ்விதத்திலும் தவறாக நடத்தவோ கூடாது. மாறாக, அவன் அவளுக்கு கனத்தையும் மரியாதையையும் காண்பிக்க வேண்டும்.—கொலோசெயர் 3:19; 1 பேதுரு 3:7.

3. ஒரு தகப்பன் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். அவன் தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உணவு, உடை, மற்றும் உறைவிடத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு தகப்பன் தன் குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளையும் அளிக்க வேண்டும். (1 தீமோத்தேயு 5:8) கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி கற்றுக்கொள்ள தன்னுடைய குடும்பத்துக்கு உதவுவதில் முன்நின்று செயல்பட வேண்டும்.—உபாகமம் 6:4-9; எபேசியர் 6:4.

4. ஒரு மனைவி தன் கணவனுக்கு ஒரு நல்ல உதவியாளாக இருக்க வேண்டும். (ஆதியாகமம் 2:18, NW) தங்கள் பிள்ளைகளுக்குப் போதிப்பதிலும் பயிற்றுவிப்பதிலும் அவள் தன் கணவனுக்கு உதவ வேண்டும். (நீதிமொழிகள் 1:8) ஒரு மனைவி தன் குடும்பத்தை அன்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை யெகோவா தேவைப்படுத்துகிறார். (நீதிமொழிகள் 31:10, 15, 26, 27; தீத்து 2:4, 5) அவள் தன் கணவனிடம் ஆழ்ந்த மரியாதை உள்ளவளாக இருக்க வேண்டும்.—எபேசியர் 5:22, 23, 33, NW.

5. பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று கடவுள் தேவைப்படுத்துகிறார். (எபேசியர் 6:1-3) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் போதித்து, திருத்த வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிட்டு, பைபிளைப் படித்து, அவர்களுடைய ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிப்பூர்வ தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். (உபாகமம் 11:19, 20; நீதிமொழிகள் 22:6, 15) பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கடுமையான அல்லது கொடூரமான வகையில் ஒருபோதும் சிட்சிக்கக் கூடாது.—கொலோசெயர் 3:21.

6. திருமண துணைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒத்துப்போவதில் பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் பைபிள் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிக்க முயல வேண்டும். அன்பைக் காண்பிக்கும்படியும் மன்னிக்கிறவர்களாய் இருக்கும்படியும் பைபிள் நம்மைத் தூண்டுகிறது. (கொலோசெயர் 3:12-14) சிறிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாக பிரிந்து வாழ்வதை கடவுளுடைய வார்த்தை ஊக்குவிப்பதில்லை. ஆனால் தன்னுடைய கணவன் (1தன் குடும்பத்தைப் பராமரிக்க பிடிவாதமாக மறுத்தால், (2மனைவியின் உடல்நலமும் உயிரும் ஆபத்திலிருக்கும் அளவுக்கு அவன் அவ்வளவு வன்முறையாக நடந்துகொண்டால், அல்லது (3அவனுடைய கடுமையான எதிர்ப்பு, யெகோவாவை அவள் வழிபடுவதைக் கூடாத காரியமாக்கினால், ஒரு மனைவி அவனைவிட்டுப் பிரிவதைத் தெரிந்துகொள்ளலாம்.—1 கொரிந்தியர் 7:12, 13.

7. திருமண துணைவர்கள் ஒருவரிடம் ஒருவர் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். விபசாரம் என்பது கடவுளுக்கு விரோதமும் ஒருவருடைய துணைக்கு விரோதமுமான ஒரு பாவம். (எபிரெயர் 13:4) திருமணத்திற்கு வெளியே பாலுறவுகளை வைத்திருப்பது, மறுமணத்தை அனுமதிக்கும் மணவிலக்குக்கான ஒரே வேதப்பூர்வ காரணம். (மத்தேயு 19:6-9; ரோமர் 7:2, 3) மக்கள், வேதப்பூர்வ காரணங்கள் இல்லாமல் மணவிலக்கு செய்து வேறொருவரை திருமணம் செய்யும்போது, யெகோவா அதை வெறுக்கிறார்.—மல்கியா 2:14-16.

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் போதனையளிக்க வேண்டுமென்றும் அவர்களைத் திருத்த வேண்டுமென்றும் கடவுள் எதிர்பார்க்கிறார்

[பக்கம் 17-ன் படம்]

ஓர் அன்பான தகப்பன் தன் குடும்பத்திற்கு பொருளாதார மற்றும் ஆவிக்குரிய தேவைகளை அளிக்கிறான்