Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 10

கடவுள் சொல்வதைக் கேட்டால் என்ன நன்மை?

கடவுள் சொல்வதைக் கேட்டால் என்ன நன்மை?

இறந்துபோன நிறைய பேர் உயிருடன் எழுப்பப்படுவார்கள். அப்போஸ்தலர் 24:15

யெகோவா சொல்வதைக் கேட்டு நடந்தால் உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், வியாதியே வராது, உடம்பில் எந்தக் குறையும் இருக்காது. நீங்கள் எல்லாரையும் நம்பலாம். ஏனென்றால், கெட்டவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

வலியும் வேதனையும் இருக்காது, கண்ணீரும் கஷ்டமும் இருக்காது. யாருமே வயதாகி சாக மாட்டார்கள்.

இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறும்போது குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து சந்தோஷமாக இருப்பீர்கள்.

எதற்குமே பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்கள்.

கடவுளுடைய ஆட்சியில் நம் கஷ்டமெல்லாம் பறந்து போய்விடும். வெளிப்படுத்துதல் 21:3, 4