Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாகம் 3

ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?

ஆரம்பத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது?

ஆதாம்-ஏவாளுக்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா கொடுத்தார். ஆதியாகமம் 1:28

யெகோவா ஒரு பெண்ணைப் படைத்தார். அவள் பெயர் ஏவாள். அவளை ஆதாமுக்கு மனைவியாக கொடுத்தார்.—ஆதியாகமம் 2:21, 22.

மனதிலும் உடலிலும் எந்தக் குறையும் இல்லாமல் யெகோவா அவர்களைப் படைத்தார்.

ஏதேன் என்ற அழகான தோட்டத்தில் அவர்கள் குடியிருந்தார்கள். அதில் ஒரு ஆறு ஓடியது, விதவிதமான பழ மரங்கள், விலங்குகள் இருந்தன.

யெகோவா அவர்களிடம் பேசினார், அவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். அவர் சொன்னதைக் கேட்டிருந்தால், பூஞ்சோலை பூமியில் சாகாமல் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள்.

ஒரேவொரு மரத்தில் இருக்கிற பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்னார். ஆதியாகமம் 2:16, 17

ஆதாம்-ஏவாளிடம் யெகோவா ஒரு மரத்தைக் காட்டி, ‘இந்த மரத்தில் இருக்கிற பழத்தைச் சாப்பிடாதீர்கள், சாப்பிட்டால் செத்துப்போய்விடுவீர்கள்’ என்று சொன்னார்.

ஒரு தேவதூதன் கடவுளுக்கு எதிரியாக மாறினான். அந்தக் கெட்ட தூதன்தான் சாத்தான்.

கடவுள் சொன்னதை ஆதாம்-ஏவாள் கேட்கக் கூடாது என்று சாத்தான் நினைத்தான். அதற்காக, ஒரு பாம்பின் மூலம் ஏவாளிடம் பேசினான். ‘அந்தப் பழத்தைச் சாப்பிட்டால், நீங்கள் சாகவே மாட்டீர்கள், கடவுள் மாதிரி ஆகிவிடுவீர்கள்’ என்று சொன்னான். அது சுத்தப் பொய்.—ஆதியாகமம் 3:1-5.