Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 8

யோசியா நல்லவர்களோடு பழகினான்

யோசியா நல்லவர்களோடு பழகினான்

நல்ல பிள்ளையா இருக்கிறது கஷ்டமா?— நிறைய பேர் அப்படித்தான் சொல்றாங்க. யோசியா-னு ஒரு பையனுக்கும் நல்ல பிள்ளையா இருக்கிறது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா, யோசியாவுக்கு நல்ல நண்பர்கள் இருந்தாங்க. நல்ல பிள்ளையா இருக்க உதவி செய்தாங்க. யோசியாவையும் அவரோட நண்பர்களையும் பத்தி இப்போ படிக்கலாமா?

யோசியாவோட அப்பா பேரு ஆமோன். அவர் யூதா நாட்டுக்கு ராஜாவா இருந்தார். ஆமோன் ரொம்ப கெட்டவர். சிலைகளை வணங்கினார். ஆமோன் செத்ததுக்கு அப்புறம், யோசியா ராஜாவா ஆனார். அப்போ அவருக்கு எட்டு வயசுதான். அப்பா மாதிரி அவரும் கெட்டவரா இருந்தாரா?— இல்லவே இல்லை!

சிலைகளை வணங்கக் கூடாதுனு மக்கள்கிட்ட செப்பனியா சொன்னார்

சின்னப் பையனா இருக்கும்போதே, யெகோவாவுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்க யோசியா ஆசைப்பட்டார். அதனால யெகோவாவுக்குப் பிடிச்சத செய்ற ஆட்களோட மட்டும் பழகுனாரு. அவங்க அவருக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க யார்?

ஒரு நண்பர் பேரு செப்பனியா. அவர் ஒரு தீர்க்கதரிசி. யெகோவா சொல்றத மக்கள்கிட்ட சொல்றவர்தான் தீர்க்கதரிசி. ‘சிலைகளை வணங்கினா உங்களுக்குக் கெட்டது நடக்கும்’னு யூதா நாட்டு மக்கள்கிட்ட செப்பனியா சொன்னார். யோசியா அவர் பேச்சைக் கேட்டார். சிலைகளை வணங்காம யெகோவாவை வணங்கினார்.

இன்னொரு நண்பர் பேரு எரேமியா. அவருக்கும் யோசியாவுக்கும் ஒரே வயசுதான் இருக்கும். சின்ன வயசுல இருந்தே ஒரே ஊர்ல இருந்தாங்க. எரேமியாவும் யோசியாவும் நல்ல நண்பர்கள். ரெண்டு பேரும் யெகோவா பேச்சை கேட்டாங்க, நல்ல பிள்ளையா இருந்தாங்க. யோசியா செத்ததுக்கு அப்புறம், அவரை நினைச்சு நினைச்சு எரேமியா ஒரு சோகப் பாட்டை எழுதினார்.

யோசியாவும் எரேமியாவும் நல்ல பிள்ளைகளா இருந்தாங்க

யோசியாகிட்ட நீ என்ன கத்துக்கிட்ட?— யோசியா சின்ன பையனா இருந்தப்பவே, நல்ல பிள்ளையா நடந்துக்க ஆசைப்பட்டாரு. அதனால, யெகோவாவுக்குப் பிடிச்சத செய்த ஆட்களோட மட்டும் பழகினாரு. நீயும் நல்ல நண்பர்களோட பழகு. அப்பதான் நல்ல பிள்ளையா இருக்க முடியும்.

பைபிளில் படிங்க