Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 14அ

ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து பாடங்கள்

ஆலயத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்திலிருந்து பாடங்கள்

தூய வணக்கம் உயர்த்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டது

தரிசனத்தில் காட்டப்பட்ட ஆலயம் “மிகவும் உயரமான ஒரு மலைமேல்” உயர்த்தப்பட்டிருக்கிறது (1). தூய வணக்கத்துக்கு நம் வாழ்க்கையில் முதல் இடம் கொடுத்து அதை உயர்த்தியிருக்கிறோமா?

சுற்றுச் சுவர் (2), ஆலய வளாகத்தையும் அதைச் சுற்றியிருந்த பரந்து விரிந்த பகுதியையும் (3) உள்ளடக்கியது. யெகோவாவுக்கு நாம் செலுத்தும் வணக்கத்தைக் கறைபடுத்த எதையுமே அனுமதிக்கக் கூடாது என்பதை இது நமக்கு ஞாபகப்படுத்துகிறது. “பொது உபயோகத்துக்கான” விஷயங்களையே தூய வணக்கத்திலிருந்து தூரமாக விலக்கி வைக்க வேண்டுமென்றால், இன்று யெகோவாவை வணங்குகிற ஒருவர் அசுத்தமான அல்லது ஒழுக்கங்கெட்ட விஷயங்களை முற்றிலுமாக விட்டொழிப்பது இன்னும் எந்தளவு முக்கியம்!—எசே. 42:20.

முடிவில்லாத ஆசீர்வாதங்கள்

பரிசுத்த இடத்திலிருந்து லேசாக ஓடிய தண்ணீர், போகப் போக ஒரு ஆறாக (4) பெருக்கெடுத்து ஓடியது. அது, தேசத்துக்கு வாழ்வையும் செழுமையையும் கொண்டுவருகிறது. இதைப் பற்றி இந்தப் புத்தகத்தின் 19-ஆம் அதிகாரத்தில் பார்ப்போம்.

எல்லாருக்கும் ஒரே விதமான நெறிமுறைகள்

தூய வணக்கத்தில் ஈடுபடும் எல்லாருமே யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உயரமான வெளிவாசல்களும் (5) உள்வாசல்களும் (9) நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. வெளிவாசல்களும் உள்வாசல்களும் ஒரே அளவில் இருந்தன. இது ரொம்பவே பொருத்தமானது. ஏனென்றால், தன்னுடைய ஊழியர்கள் எந்தப் பொறுப்பை வகித்தாலும் சரி, எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாருக்கும் ஒரே விதமான சட்டதிட்டங்களைத்தான் யெகோவா கொடுத்திருக்கிறார்.

யெகோவாவின் மேஜையில் சாப்பிடுவது

பூர்வ காலத்தில், மக்கள் தாங்கள் கொண்டுவந்த பலிகளிலிருந்து கொஞ்சத்தை ஆலயத்தின் சாப்பாட்டு அறைகளில் (8) சாப்பிட்டார்கள். அது யெகோவாவோடு சாப்பிடுவதைப் போல இருந்தது. இன்று, கிறிஸ்தவர்கள் வணங்கும் ஆன்மீக ஆலயத்தில் அப்படிப் பலிகள் செலுத்தப்படுவது இல்லை. ஏனென்றால், ‘எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுக்கப்பட்டுவிட்டது.’ (எபி. 10:12) ஆனாலும், நாம் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துகிறோம்.—எபி. 13:15.

கடவுள் கொடுத்த வாக்குறுதி

தரிசனத்திலுள்ள நுணுக்கமான அளவுகளைப் பற்றி வாசிக்கும்போது நீங்கள் திணறிப்போகலாம். ஆனால், அவை முக்கியமான ஒரு விஷயத்தைக் கற்றுத்தருகின்றன: எல்லா அளவுகளும் துல்லியமாக, மாற்ற முடியாதவையாக இருப்பதுபோல், தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டுமென்ற யெகோவாவின் நோக்கமும் துல்லியமாக நிறைவேறும். அதில் மாற்றம் இருக்காது. தரிசனத்தில் மனிதர்களைப் பார்த்ததாக எசேக்கியேல் சொல்லாவிட்டாலும், குருமார்களுக்கும், தலைவர்களுக்கும், மக்களுக்கும் யெகோவா கொடுத்த கடுமையான ஆலோசனையை அவர் பதிவு செய்கிறார். கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே அவருடைய நீதியான நெறிமுறைகளின்படி வாழ வேண்டும்.