Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 9உ

“எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்”

“எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்”

அப்போஸ்தலர் 3:21

ராஜாவாக கிறிஸ்து ஆனதிலிருந்து, அவருடைய ஆயிர வருஷ ஆட்சியின் முடிவுவரை நீடிக்கும் அருமையான காலப்பகுதியைத்தான், “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு தீர்க்கதரிசனமாகச் சொன்னார்.

  1. 1914​—இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக ஆகிறார். 1919-ல் கடவுளுடைய மக்கள் ஆன்மீக விதத்தில் திரும்ப நிலைநாட்டப்படுவது ஆரம்பமாகிறது

    கடைசி நாட்கள்

  2. அர்மகெதோன்​—கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சி ஆரம்பிக்கிறது; ‘எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்களின்’ தொடர்ச்சியாக பூஞ்சோலை பூமியில் உண்மையுள்ள மனிதர்கள் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்

    ஆயிர வருஷ ஆட்சி

  3. ஆயிர வருஷ ஆட்சி முடிகிறது​—எல்லாவற்றையும் புதுப்பிக்கும் வேலையை இயேசு முடிக்கிறார்; அரசாங்கத்தைத் தன் அப்பாவிடம் ஒப்படைக்கிறார்

    என்றென்றும் பூஞ்சோலை

இயேசுவின் ஆட்சியில் . . .

  • கடவுளுடைய பெயர் மகிமைப்படும்

  • உடம்பு சரியில்லாதவர்கள் குணமாவார்கள்

  • வயதானவர்கள் வாலிபர்களாக ஆவார்கள்

  • இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்

  • உண்மையுள்ள மனிதர்கள் பரிபூரணர்களாக ஆவார்கள்

  • பூமி பூஞ்சோலையாக மாறும்